SOUNDRA KAILASAM,A POET
முன்னாள் நீதிபதி கைலாசத்தின் மனைவியான சௌந்தரா கைலாசம்,மிகச் சிறந்த கவிதைகளைப் படைத்த கவிதாயினி ஆவார்.
சிலேடைகளை கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர்.
முன்னாள் நீதிபதி கைலாசத்தின் மனைவியான சௌந்தரா கைலாசம், தன் கணவரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் எழுதும் கடிதங்களில் ”நாதன் தாள் வாழ்க” என்றே முத்திரையிடுவார். இவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தாயார்
மிகச் சிறந்த கவிதைகளைப் படைத்த கவிதாயினி இவர். சிலேடைகளை கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர்.
சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர். தமிழைச் சொந்த முயற்சியில் படித்து மரபுச் செய்யுள்கள் பாடும் ஆற்றல் பெற்றவர். நல்ல சொற்பொழிவாளர்.
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அமைந்துள்ள நிலங்கள் இவரது பாட்டனார் ரத்தினசபாபதி கவுண்டர் அளித்த தர்மம். கல்கி முதலில் பணிக்கு இருந்த இடம்.
அருளாளன் வடபழநி ஆண்டி!
காணிக்கை கேளாமல், என்ற னுக்குக்
கடவுள்திருச் சந்நிதியின் பெருமை சொல்லி
கோணிச்சென் றிடாமல் உள்ளம் நன்கு
குவிந்துதொழ வடபழநிக் கோயில் காட்டி
ஊணிற்கென் றாக்காமல் செவ்வாய் தோறும்
உள்ளுருக்க உயர்வுக்கென் றழைத்த அந்த
மாணிக்கக் குரலுக்குள் குருவின் நாத
மகிமையினை நான்கண்டு மகிழ லானேன்!
ஞாயிற்றின் பின்னாலே திரியும் திங்கள்;
நடந்துவரும் திங்களுக்குப் பின்னே செவ்வாய்;
ஆயிற்று வடபழநிக் கோயி லில்தான்
அடியேன்நான் கண் விழிப்பேன்; அலறிஓடிப்
போயிற்று உலகநினை வென்கின் றாற்போல்
பொங்கிவரும் கண்ணீரில் எனையி ழப்பேன்!
வாயற்று நின்றுவட பழநிக் குள்ளே
வாழ்வெல்லாம் நானாக வளங்கொ ழிப்பேன்!
பாகாக உருகுகின்ற கிளியென் றென்னைப்
பதமாக இள்முருகன் வருடி விட்டான்;
சாகாத கவலையினைச் சாக வைத்தான்;
சந்ததமும் மெய்ப்பொருளைக் காண வைத்தான்;
போகாத ஊருக்குப் போக வைத்து
புகழ்மலையின் உச்சியிலே வாழ வைத்தான்;
ஆகாத தென்னவெனக் காட்டி விட்டான்
அருளாளன் வடபழநி ஆண்டி தானே!
நான்என்ற மமதைக்கே வழிவி டாமல்
நடக்கின்ற தெதுவாக இருந்த போதும்
ஏன்என்ற கேள்விக்கே இடங்கொ டாமல்
எடைபோட்டுப் பார்க்கின்ற மனம்வ ராமல்
கோன்என்ற திருக்குமரன் அளந்தெ டுத்துக்
கொடுப்பதெலாம் அமுதமென்னும் கொள்கை யோடு
தான்இன்று வரை வாழ்ந்து வருகின் றேன்நான்
தனியாக ஓரின்பம் பெறுகின் றேனே!
தண்டத்தை ஏந்துகிறான்; உலகம் போற்றும்
தவக்கோலம் தாங்குகிறான்; தனியே நின்றிவ்
வண்டத்தை ஆளுகிறான்; நம்பி னோர்க்கிங்(கு)
ஆனந்தம் அருளுகிறான்; அனுப வித்துக்
கண்டத்தை எழுதுகிறேன்; அவனை விட்டால்
கதியில்லை நிம்மதியைக் காண! திங்கள்
துண்டத்தை அணிந்தவனின் மைந்த னைநீர்
தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!
- ஆக்கம் திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள்
No comments:
Post a Comment