HEMAMALINI,ACTRESS
BORN 1948 OCTOBER 16
ஹேம மாலினி ("Hema Malini Chakravarty") (பிறப்பு 16 அக்டோபர் 1948, அம்மன்குடி (ஒரத்தநாடு), தமிழ்நாடு, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகையும், இயக்குநரும், தயாரிப்பாளரும், நடனக் கலைஞரும் அரசியல்வாதியும் ஆவார்.[2] 1963 இல் நடனப் பெண்மணியாக இது சத்தியம் என்ற திரைப்படத்திலும் 1965இல் நடனப் பெண்மணியாக பாண்டவர் வனவாசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இவர் கதைநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்த சப்னோ கா சௌதாகர் ஆகும்; இதனைத் தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில், முன்னணி நாயகியாக நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் தனது கணவரும் திரைப்பட நடிகருமான தர்மேந்திராவுடன் நடித்துள்ளார்; ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாகவும் நடித்துள்ளார்.[3]
துவக்க காலத்தில் "கனவுக் கன்னி" என அறிமுகப்படுத்தப்பட்ட ஹேம மாலினி, 1977இல் அதே பெயருள்ள (டிரீம் கேர்ள்) திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3] நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஹேம மாலினி சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.[4][5][6][7] 150 திரைப்படங்களுக்கும் கூடுதலாக நடித்துள்ளார்.[5] தனது திரைப்பட வாழ்க்கையில், ஹேம மாலினிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பதினோரு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்; 1972இல் ஒருமுறை வென்றுள்ளார். 2000இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் இந்திய அரசின் பத்மசிறீ விருதையும் பெற்றுள்ளார்.[8] 2012இல் சேர் பதம்பத் சிங்கானியா பல்கலைக்கழகம் ஹேம மாலினிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.[9] இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் அவைத்தலைவராக பணியாற்றியுள்ளார். 2006இல் சோபோரி இசை மற்றும் நிகழ்த்து கலை அகாதமியிலிருந்து விடாஸ்டா விருது பெற்றுள்ளார்.
2003 முதல் 2009 வரை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[10] 2014இல் மதுரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல அறக்கட்டளைகள் மற்றும் சமூகத் தாபனங்களுடன் ஈடுபாடு கொண்டுள்ளார்.
இளமையும் குடும்பமும்
தனது மகள் ஈஷா தியோலுடன் (வலது)
ஹேம மாலினி தமிழ்நாட்டின் திருச்சி மாவட்ட ஒரத்தநாடு வட்டத்தில் அம்மன்குடி என்னுமிடத்தில் தமிழ்-பேசும் ஐயங்கார் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் [11] பிறந்தார். தந்தை V.S.R. சக்கரவர்த்தி, தாயார் ஜெயா சக்கரவர்த்தி. இவரது அன்னை திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
சென்னையின் ஆந்திர மகிள சபாவில் வரலாற்றுப் பிரிவில் கல்வி கற்றார்.[12] பின்னர் பள்ளியிறுதிக் கல்வியை தில்லியின் மந்திர் மார்கிலுள்ள பள்ளியில் முடித்தார்.[13]
அரசியல் பணிவாழ்வு
1999இல் ஹேம மாலினி பஞ்சாபின் குர்தாசுபூர் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் இந்திப்பட நடிகர் வினோத் கண்ணாவிற்காக பரப்புரையில் ஈடுபட்டார்.[14] 2004ஆம் ஆண்டு பெப்ரவரியில் அலுவல்முறையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[14] 2003 முதல் 2009 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 2010இல் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[15] 2014இல் மக்களவை பொதுத் தேர்தலில் மதுராவிலிருந்து 3,30,743 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார்.[14][15][16][17]
சமூக இயக்கங்களில் பங்கேற்பு
ஹேம மாலினி விலங்குரிமை அமைப்பான விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் இந்தியக் குழுவின் ஆதரவாளர். 2009இல் மும்பையின் நெருக்கடிமிக்க சாலைகளில் குதிரை வண்டிகள் இயக்கப்படுவதை தடை செய்ய மும்பை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதினார்.[18] 2011இல் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு காளையை அடக்கும் போட்டிகளை (ஏறுதழுவல்) தடை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதினார்.[19][20] அவ்வாண்டின் "வருடத்து பீட்டா நபராகத்" தேர்ந்தெடுக்கப்பட்டார்.[21] தாவர உணவாளராக "எனது உணவு விருப்பங்கள் புவிக்கும் விலங்குகளுக்கும் உதவுவதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது" எனக் கூறியுள்ளார்.[2
No comments:
Post a Comment