Kalidasan; LYRICS இறப்பு: 29 மே 2016
Kalidasan; LYRICS இறப்பு: 29 மே 2016 காளிதாசன் ( Kalidasan ; இறப்பு: 29 மே 2016) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் வைகாசி பொறந்தாச்சு, தெற்கு தெரு மச்சான் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியுள்ளார். ஆரம்ப காலத்தில் திருப்பத்தூரான் ௭ன்ற பெயரிலும் பின்னாளில் காளிதாசன் ௭ன்ற பெயரிலும் பாடல்கள் இயற்றினார். [1] அறிமுகம் [ தொகு ] 1969-இல் தாலாட்டு என்ற படத்தில், மலையாக இருப்பதெல்லாம் ஆசைவடிவம் அது மண்ணாகும் போது ஞானிவடிவம் என்ற பாடல் மூலம் அறிமுகமானார். [2] அப்போது இவர் பெயர் திருப்பத்தூர் ராசு. தாலாட்டு படத்திற்குப் பிறகு திருப்பத்தூரான் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், "கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா' என்ற பிரபலமான பாடலை எழுதினார். எல். ஆர். ஈஸ்வரி பாடிய இப்பாடல் கோயில் விழாக்களில் அதிகம் ஒலிக்கிறது. தேவாவுடன் கூட்டணி [ தொகு ] காளிதாசன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு பாடல் எழுதத் தொடங்கியதும் வாய்ப்புகள் இவரைத் து...