Friday, 8 May 2020

SANCHITA SHETTY ,KANNADA ACTRESS BORN 1989 APRIL 7


SANCHITA SHETTY ,KANNADA
 ACTRESS BORN 1989 APRIL 7




நடிகை சஞ்சிதா ஷெட்டி ‘சூது கவ்வும்‘ படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.
இவர் நடித்த ‘எங்கிட்ட மோதாதே’ படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால், இந்த சந்தோஷத்தை கூட, கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார் அவர். காரணம் சமீபத்தில், சமூக வலைதளங்களில், வெளியிடப்பட்ட அவரது ஆபாச புகைப்படங்கள்தான். இப்போது தான், என்னைத் தேடி பல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அதை சீர்குலைப்பது போல், இப்படி, யாரோ சில சதிகாரர்கள் செய்த சூழ்ச்சியால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்’ என புலம்பு வருகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.



சீசன் 2 ஆட்டத்துக்குத் தயாராகிவிட்டார், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா. ‘‘யார் பேச்சையும் கேட்காமல் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் பசங்களைக் ‘குட்டிச்சுவர்’ என்று செல்லமாகத் திட்டுவோம் இல்லையா... அதையே கன்னடத்தில் ‘பட்மாஸ்’ என்று சொல்லுவோம்.அங்கே நான் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பும் அதுதான். கொஞ்சம் எசகுபிசகான தலைப்பு கொண்ட படங்களில் நான் நடித்தால் அது ஹிட் என்ற செண்டிமெண்ட் எனக்கு ராசியாகிவிட்டது. என்று இமைகள் படபடக்கப் பேசும் சஞ்சிதாவிடம் தமிழ் இன்னும் கெஞ்சவே செய்கிறது. என்றாலும் கொஞ்சம் தமிழ் கொஞ்சம் ஆங்கிலம் என்று கலந்து கட்டியதிலிருந்து…

திகில் பட நாயகிகளின் பட்டியலில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு. அது போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதைக் கவனித்தீர்களா?



‘பீட்சா 2’ படத்தில் எனக்கு முக்கியக் கதாபாத்திரம் அமைந்தது. தற்போது காஞ்சனா 2 வெற்றி அடைந்திருக்கிறது. நானும் படத்தைப் பார்த்தேன். அடுத்து ‘முனி 4’ வரவிருப்பதாகப் படத்தின் முடிவில் இயக்குநர் கூறியிருக்கிறார். அந்தப் படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

‘சூது கவ்வும்’ படத்துக்குப் பிறகு உங்களை இங்கே பார்க்க முடியவில்லையே?

ஆடியன்ஸ் மனதில் இடம் கிடைப்பது மாதிரி யான கதைகளின் தேர்வுக்காகக் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வேன். நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் அமையும்வரை பிரேக் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. தற்போது அருண் குமாரசாமி சொன்ன கதையில் என் கேரக்டர் மிரட்டலாக இருந்தது. உடனே ஒத்துக் கொண்டேன்.

அவர் இயக்கத் தமிழில் பரத் நாயகனாக நடித்துவரும் ‘என்னோடு விளையாடு’ படத்துக்கு கால்ஷீட்டை வாரி வழங்கியிருக்கிறேன். முதல் கட்டப் படப்பிடிப்பும் தொடங்கியாச்சு. இனிமே என்னை ஆப்செண்ட் ஹீரோயின் என்று நீங்கள் சொல்லமுடியாது’’

முதல்படமே வெற்றியாக அமைந்தும் பெரிய இயக்குநர்கள் யாரும் அழைக்கவில்லையா?



இன்று நலன் குமரசாமி மிகப்பெரிய இயக்குநராக மாறிவிட்டாரே அது உங்களுக்குத் தெரியாதா? புதிய இயக்குநரோ பெரிய இயக்குநரோ முடிந்தவரை யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தத் தெரிந்தால் நல்ல வாய்ப்புகள் நாம் எங்கே இருந்தாலும் அங்கே தேடிவரும். எனக்கும் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்,முருகதாஸ் என்று ஒரு பெரிய பட்டியல் உண்டு. அதுவும் நடக்க வேண்டும்.

தமிழ் கற்றுக்கொள்ளாமல் இருந்தால் படப்பிடிப்புத் தளத்தில் ஹீரோக்கள் உங்களைக் கிண்டல் செய்தால்கூடக் கண்டுபிடிக்க முடியாதே?

எனக்குத் தமிழ் சரளமாகப் பேசத் தெரியாதே தவிர, மற்றவர்கள் பேசும் தமிழை நான் நன்றாகவே புரிந்து கொள்வேன். அப்படி யாரும் என்னை ஏமாற்றிவிட முடியாது.

உங்களை அதிர்ச்சியடையச் செய்த நாயகன் யார்?

விஷால்! ஒரு தொலைக்காட்சிப் பேட்டிக்காக நானும் அவரும் கெஸ்டாக சென்றிருந்தோம். நான் அதிர்ச்சியடைகிற மாதிரி ஏதாவது செய்ய முடியுமா என்று எங்களைப் பேட்டியெடுத்த ஆங்கர் விஷாலிடம் கேட்டார். விஷால் கொஞ்சம்கூட யோசிக்காமல் “உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...” என்று என் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னார். அது நடிப்பு மாதிரியே தெரியவில்லை. நான் ஆடிப்போய்விட்டேன்.

உங்கள் மீது க்ளாமர் நாயகி என்ற இமேஜ் ஒட்டிக்கொண்டுவிட்டதே?

நாம கடைசியாக என்ன மாதிரியான படத்தில் நடிக்கிறோமோ, அதிலிருந்து வேறொரு கதாபாத்திரம் கொடுக்கும் வரைக்கும் அதே பெயர்தான் இங்கே சுற்றி வரும். ‘சூது கவ்வும்’ மாதியான படங்கள் எல்லாம் என் வாழ்நாளில் இனி இன்னொரு முறை கிடைக்குமா என்று தெரியவில்லை. மாடர்ன், தாவணிப் பாவாடை எல்லாவற்றுக்கும் நான் தயார்தான். நான் நடித்து இனி வெளியாகும் படங்கள் இந்த இமேஜை மாற்றும் என்று நினைக்கிறேன்.

ஐஸ்வர்யா ராயின் ஊரைச் சேர்ந்த பலரும் சினிமா உலகை நோக்கி படையெடுக்க என்ன காரணம்?

என்னுடைய ஊரைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வியை மாற்றிக் கேட்கமாட்டீர்களா? சரி பரவாயில்லை.. எனக்கு ராயை ரொம்பப் பிடிக்கும். மங்களூருக்கு அப்படியொரு புகழ் கிடைத்துவிட்டதற்கு காரணம், என்னைப் போன்ற அழகான பெண்கள்தான்.

இது என்னோடு நிற்கப்போவதில்லை. சினிமா என்பது புரொஃபெஷனலாக மாறிவிட்டது. இதை நம்பும் பெற்றோர்கள் தைரியமாக நடிக்க அனுப்பினால் எங்கள் ஊர் மட்டுமல்ல எல்லா ஊரும் மங்களூர்மாதிரி ஹீரோயின்கள் நிறைந்த ஊராகிவிடும்.





YearTitleRoleLanguageNotes
2006Mungaru MaleNandini's friendKannada
2007MilanaKannada
2009UdaKannada
2009Bhaya.comViniKannada
2010Azhukkan AzhagakiranReemaTamil
2010ThillalangadiAmmuTamil
2010OrangeSoniTelugu
2012KollaikaranKrishnaveniTamil
2013Soodhu KavvumShalu / Shalini GuptaTamil
2013Pizza II: VillaAarthiTamil
2016BadmaashPriyaKannada
2017Ennodu VilayaduInbaTamil
2017RumRiyaTamil
2017Enkitta MothatheMaragadhamTamil
2018Yenda Thalaiyila Yenna VekkalaRamyaTamil
2018JohnnyRamyaTamil
2019PartyTamilFilming
2019Devdas BrothersFilms that have not yet been releasedTamilFilming[12]






.

No comments:

Post a Comment