Monday, 18 May 2020

MURALI , TAMIL ACTOR BORN 1964 MAY 19 - SEPTEMBER 8,2010



MURALI , TAMIL ACTOR BORN 
1964 MAY 19 - SEPTEMBER 8,2010


.முரளி (மே 19, 1964 - செப்டம்பர் 8, 2010) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[1] கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். [2]

வாழ்க்கைக் குறிப்பு
சொந்த வாழ்க்கை
முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.

அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார.[சான்று தேவை]

திரை வாழ்க்கை
இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.[3]

அரசியல் வாழ்க்கை
இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.

நடிகர் முரளி ‘இதயம் முரளி’யாகி 25  வருடம் கம்ப்ளீட்டட். அதாங்க  தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இதயம் படம்  ரிலீஸாகி 25 வருடம் முடிகிறது. அப்போது அந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடி, அதேபோல கதையம்சம் கொண்டு புற்றீசல் போல் படங்கள் வந்தது தனிக்கதை. இருக்கட்டும் , காலையில் பிக்கப் மாலையில் ப்ரேக் அப் என்றாகிவிட்ட இன்றைய இணையக் காதலுடன் அந்தப் படத்தை ரீவைண்ட் செய்கையில் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்கிறது. 

* டைட்டில் கார்டு போடுவதிலிருந்து ஆரம்பிக்கலாம். இதயம் என்றாலே உங்கள் இதயத்தில் ஒலிக்கும் ஓசை என்ன? தட்ஸ் இட். அதே டுப் டுப் ட்ரம்ஸ் இசைதான். இசைஞானியும் இதற்கு விதிவிலக்கல்ல.  மென்மையாய் புல்லாங்குழல், வயலின், கிடார், பியானோ என்று தொடங்கும் டைட்டில் இசை சட்டென்று டுப் டுப்புக்கு மாறும். நாம் பார்ப்பதுஇதயம் சம்பந்தப்பட்ட படமாம். ஞாபகப்படுத்துகிறதாம் இசை. ராஜா நீங்களுமா?

* நல்லா இருக்கிற ஹீரோவை  வில்லனாக்கிப் பின் லவ் பண்றது 2016 ஸ்டைல். ஆனா பாவம் , ஹீரோ ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவர்னு நிரூபிக்க டைரக்டர் படாதபாடுபட்டிருப்பார். ஹீரோயின் தலையிலிருந்து பூ கீழே விழ, அதை ஹீரோ எடுத்துக் கொடுத்தாலே லவ் வந்திடணும்னு எதிர்பார்க்கிறது ரொம்பத் தப்பான ஜட்ஜ்மென்ட் சார்.
  

* ஹீரோ காதலைச் சொல்ல வர்றப்போல்லாம் ஏதாவது இடையூறு வரும். அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் க்ராஸ் பண்ணிட்டுப் போகாம அப்படியே அதே இடத்தில் ஃப்ரீஸ் ஆகி நின்னு குறுந்தொகையிலிருந்தோ பிரபல கவிதையிலிருந்தோ சில வரிகள் உருவி அதை ஹீரோவின் மைண்ட் வாய்ஸில் ஒலிக்கவிட்டு டைரக்டர் ரசிகர்களைக் கிச்சுகிச்சு மூட்டியிருப்பார்.

* ஓப்பனிங் சாங். அதுவும் ஹீரோவுக்கு இல்லை. அப்படி இருந்தும்  அந்த சாங்குக்கே ஒரு இன்ட்ரோ கொடுக்கிறதெல்லாம் அடேங்கப்பா அதகளம் இயக்குநரே.


* ஹீரோயின் அக்கம்பக்கம் ஒழுங்கா பார்க்காம வந்து ஹீரோ நெற்றியில் முட்டியதும் ஹீரோவுக்கு ஹார்மோன் கலாட்டா ஆரம்பிப்பதுகூட ஓகே. யார், என்ன, ஏதுன்னே தெரியாம  ஹீரோயின் நடந்துபோற பாதையின் செருப்பு அச்சில் தன் காலையும் பதித்து ஹீரோ நடக்க ஆரம்பிப்பது... எப்படி சார் இப்படியெல்லாம்?

*  காதல் முரளி, படத்தில் காய்ச்சல் வந்த முரளி மாதிரிதான் பேசுவார். நடப்பார். மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட்  மெடிக்கல் காலேஜ் பேஷன்ட் மாதிரியே இருப்பது மெடிக்கல் மிராக்கிள் ப்ரோ.


* டூயல் ரோலுக்கு வித்தியாசம் காட்ட கன்னத்தில் மரு ஒட்டுற மாதிரியே டைரக்டர் இதில் பக்கா வித்தியாசம் காட்டியிருப்பார். ஆனால் டூயல் ரோலுக்கு இல்லை. காதலுக்கு முன்... காதலுக்குப் பின்... கா. மு முரளி தலையை வகிடு எடுத்து சீவி இருப்பார். காதல் வந்ததும் வகிடுத் தலையை கலைத்துவிட்டு மேல்நோக்கி சீவி இருப்பார். லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு டோய்.

*   எவ்வளவு ஈவ் டீஸிங் பார்த்திருப்போம். ஆனா இந்தப் படத்தில்தாங்க ஈவ் டான்ஸிங் காண்பிச்சார் டைரக்டர். பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஹீரோயினை ஒரு ரெளடிக் கும்பல் கிண்டல் செய்யும். விலகி நடக்கும் ஹீரோயினை வழி மறித்து பன்ச் பேசி கையைப் பிடித்து முறுக்கி அந்தச் சமயத்தில் ஹீரோ என்ட்ரியாகி அடித்து உதைத்து... பாஸ் பாஸ்... இது சுத்தமான காதல் கதை பாஸ். ஸோ நாம நினைக்கிற மாதிரி நடக்க கூடாதுங்கிறதில் டைரக்டர் ஸ்ட்ராங்கா இருந்திருக்கார். கேலி பேசிய கும்பல் ' ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ' என்று செம பாட்டுக்கு செம டான்ஸ் ஆட, ஹீரோயின் நடக்க ஹீரோ தனியா நின்னு பழத்தைப் பிழிவார். நிஜமாவே  ஆரஞ்சுப் பழத்தைப் பிழிவார் பாஸ். கேட்டால், பிழியணும்தான்டா நெனச்சேன்பார். அதான் பிழிஞ்சிட்டீங்களே. அப்புறம் என்ன?


* ஹீரோயின் காலையோ அவர் என்ன பிராண்ட் செருப்பு போடுறார்னு பார்க்கவோ ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆனா இந்தப் படத்து ஹீரோ என்ன காரியம் பண்ணுவார்னா 50 ரூபாய்க்கு ஒரு ரூபாய் காயின் சில்லறையா மாற்றி சட்டை மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பஸ்ஸில் ட்ராவல் பண்ணுவார். என்ன டிசைன் இதுனு கேட்கிறீங்களா? அப்போதானே கீழே குனியும்போது எல்லா சில்லறையும் கொட்டும். அதை எடுக்கிற சாக்கில் காலையும் செருப்பையும் பார்க்கலாம். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் சிந்திச்சிருக்காங்கப்பா.

* பேரும் தெரியாது. ஊரும் தெரியாது. ஏன் ஆம்பளையா பொம்பளையான்னே தெரியாது.  இப்போ லவ் பண்ற காலத்துல இருக்கோம். ஆனா 25 வருஷத்துக்கு முன்னாடி லவ்வை லெட்டர்ல எழுதி ஒரே ஒரு ரோஜாப்பூவோட சேர்த்து வெச்சு ஹீரோயின்கிட்ட கொடுக்க பிள்ளையார் கோயிலுக்குப் போய் அர்ச்சனையெல்லாம் பண்ணுவார் ஹீரோ. 'வெள்ளப்பூவே வந்துருக்கு. போற காரியம் சக்சஸ்' னு பூசாரி வாழ்த்தி வழியனுப்பி வைப்பார். ஆனா முரளி நடந்துபோய் லெட்டர் தர்றதுக்கு முன்னாடியே கார்ல ஒருத்தர் ஹீரோயினை கூட்டிட்டுப் போய்டுவார். அப்புறமென்ன  சோகப் பாட்டு பாடுவார் ஹீரோ. ஆனா படம் இன்னும் முடியலையே ப்ரோ.

* ராஜான்னு பேர் ஊருக்கு 100, தெருவுக்கு 10 இருக்கும். ஆனா ஹீரோயின் ராஜான்னு ஹீரோவைப் பார்த்துக் கூப்பிட்டதும் ' நீ அழைத்தபின்புதான் தெரிந்தது. என் பெயர் இத்தனை அழகா என்று' ஸ்டாப் பளாக்கில் கவிதை சொல்றதெல்லாம் நாயமாரே.

* லவ் ஃபெயிலியரானா இப்போ என்ன பண்றாங்க ஹீரோ? சரக்கடிச்சிட்டு 'அடியே அடியே இவளே' னு கண்டமேனிக்கி திட்டிப் பாட்டுப்பாடி நடுரோட்ல வெறித்தனமா ஆடுறாங்க. இதயம் ஹீரோ தாங்க முடியாத சோகத்தில் அழறார். ஏன்டா அழறேன்னு நண்பன் கேட்டா, நடந்த கதையைச் சொல்லணுமா இல்லையா... ஆனா. ரொம்ப கூலா 'இதயத்தில் இடி கண்ணில் மழை' னு கவிதை சொல்றதெல்லாம் அடுக்கவே அடுக்காது ஜி.


*  ஒரு பக்க, லவ் லெட்டர் கொடுக்க யோசிச்ச ஹீரோ ,தான் நான்கு வருசமா எழுதின டைரியை எல்லாத்தையும் கொடுத்து ஹீரோயினைப் படிச்சுப் பார்த்து நல்ல பதிலா சொல்லச் சொல்வார். இதுதானாய்யா லவ் ப்ரபோஸ் பண்ற டக்கு. அதெல்லாம் படிச்சுப் பார்த்து வந்து பதில் சொல்றதுக்குள்ள அந்தம்மாவுக்கு 60 வயசாகிடும். அப்போ இதயம் மட்டும் இல்ல. ஆல் பார்ட்ஸும் டேமேஜிங்லதான் இருக்கும். அந்த மாதிரி சமூகத்திலையா வாழ்ந்தோம்?

* படம் ஆரம்பிச்சு இரண்டு மணி நேரம் கழிச்சுதான் முரளிக்கு இதயத்தில் ப்ரச்னைனே தெரியவரும். ஆனா படம் ஆரம்பித்ததிலிருந்து இதயத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் கோளாறுகள் இருக்கிற மாதிரியேதான் இருப்பார். கைநடுக்கம், கோர்வையா பேச முடியாதது, ஹீரோயின் பார்வையையே எதிர்கொள்ள முடியாமல் எதற்கெடுத்தாலும் தலையைக் குனிவது என்று வித்தியாசமான வியாதிகளை டைரக்டரே கவனிக்கவில்லை போல.
* இதயத்தில் ஏற்பட்டிருக்கும் அவ்வளவு பெரிய டிசீஸுக்கு ஹீரோயினின் ஒற்றைத்துளி கன்ணீரே மருந்துனு டைரக்டர் முடித்திருக்கும் க்ளைமாக்ஸ் ஆசம் ஆசம். எவ்ளோ பெரிய வியாதி. எவ்ளோ சின்ன மருந்து.


* கடைசியா ஒண்ணே ஒண்ணுதான் பாஸ். 25 வருசமா விடை தெரியாம அலைஞ்சிக்கிட்டுருக்கேன். முரளிக்குக் காதல் தோல்வி, காதலின் விரகத்தில்தான் படம் முழுவதும் இருக்கிறார், ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை விரும்பினாலும் அவரிடம் காதலை வெளிப்படுத்த முடியாத ஏக்கமே அவரை நோய்மைக்குத் தள்ளுகிறது. ஆனால் படம் முழுவதும் ஒரு ஃப்ரேமில்கூட அவர் தாடியுடன் திரிவதுபோல் இல்லை. ஃபுல் க்ளீன் ஷேவிங்கில்தான் இருக்கிறார். அது எப்படி பாஸ் அவ்ளோ துக்கத்திலும் உங்களால் பளபள கன்னத்தோட இருக்க முடிஞ்சுது?

நடித்த திரைப்படங்கள்[தொகு]

எண்ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
11984பிரேம பர்வாகன்னடம்
2பூவிலங்குபாண்டியன்தமிழ்
3இங்கேயும் ஒரு கங்கைகாத்தமுத்துதமிழ்
4புதியவன்மனோகர்தமிழ்
51985பகல் நிலவுசெல்வம்தமிழ்
6கீதாஞ்சலிஜேம்ஸ்தமிழ்
7அந்தஸ்துதமிழ்
8அஜேயாகன்னடம்
9இளங்கன்றுதமிழ்
101986புதிர்தமிழ்முதல் இரட்டை வேடம்
11ஒரு மலரின் பயணம்தமிழ்
12மண்ணுக்குள் வைரம்தமிழ்
13காலமெல்லாம் உன் மடியில்தமிழ்
141987வண்ணக்கனவுகள்மூர்த்திதமிழ்
15வளையல் சத்தம்தமிழ்
16துளசிசிவாதமிழ்
17அவள் மெல்ல சிரித்தால்தமிழ்
18மீண்டும் மகான்தமிழ்
191988புயல் பாடும் பாட்டுதமிழ்
20குடும்பம் ஒரு கோவில்தமிழ்
21தப்புக்கணக்குதமிழ்
221989தங்கமணி ரங்கமணிரங்கமணிதமிழ்
23கைவீசம்மா கைவீசுதமிழ்
24நினைவுச்சின்னம்தமிழ்
251990புது வசந்தம்பாலுதமிழ்
26பாலம்தமிழ்
27வெற்றிமாலைதமிழ்
28சிலம்புதமிழ்
29நானும் இந்த ஊருதான்தமிழ்
30நாங்கள் புதியவர்கள்தமிழ்
31சிறையில் சில ராகங்கள்தமிழ்
32புதியக்காற்றுதமிழ்
33நம்ம ஊரு பூவாத்தாதமிழ்
341991சாமி போட்ட முடிச்சுதமிழ்
35இதயம்ராஜாதமிழ்
36குறும்புக்காரன்தமிழ்
37இரவுச்சூரியன்தமிழ்
381992தங்க மனசுக்காரன்முருகேஷ் (முருகன்)தமிழ்
39சின்ன பசங்க நாங்கமுத்துக்காளைதமிழ்
40தங்கராசுதங்கராசுதமிழ்
41என்றும் அன்புடன்தமிழ்
42தாலி கட்டிய ராசாதமிழ்
431993மணிக்குயில்தமிழ்
44தங்கக்கிளிமூர்த்திதமிழ்
451994மஞ்சுவிரட்டுதமிழ்
46அதர்மம்தமிழ்
47என் ஆசை மச்சான்சுப்ரமணிதமிழ்
48சத்யவான்தமிழ்
491995ஆகாயப் பூக்கள்தமிழ்
50தொண்டன்தமிழ்
511996பூவே உனக்காகஅவராகவேதமிழ்சிறப்புத் தோற்றம்
52பூமணிதமிழ்
531997காலமெல்லாம் காதல் வாழ்கதமிழ்
54பொற்காலம்மாணிக்கம்தமிழ்
55ரோஜா மலரேகண்ணன்தமிழ்
561998காதலே நிம்மதிமோகன்தமிழ்
57தினம்தோறும்தமிழ்
58வீரத்தாலாட்டுதமிழ்
59ரத்னாரத்னா, முத்துவேல்தமிழ்
60பூந்தோட்டம்தமிழ்
61என் ஆச ராசாவேதமிழ்
62உன்னுடன்சந்தோஷ்தமிழ்
63தேசியகீதம்தமிழ்
641999கனவே கலையாதேஆனந்த்தமிழ்
65ஊட்டிபாலுதமிழ்
66பூவாசம்தமிழ்
67இரணியன்இரணியன்தமிழ்
682000வெற்றிக் கொடி கட்டுசேகர்தமிழ்
69மனுநீதிமுரளிதர்மா
702001கண்ணுக்கு கண்ணாகதர்மாதமிழ்
71சொன்னால் தான் காதலாமுரளிதமிழ்
72ஆனந்தம்மாதவன்தமிழ்
73சமுத்திரம்தங்கராசுதமிழ்
74அள்ளித்தந்த வானம்மாதவன்தமிழ்
75கடல் பூக்கள்கருத்தையாதமிழ்சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
762002சுந்தரா டிராவல்ஸ்கோபிகிருஷ்ணாதமிழ்
77காமராசுகாமராசுதமிழ்
78நம்ம வீட்டு கல்யாணம்ரவிதமிழ்
792003காதலுடன்கல்யாதமிழ்
802004அறிவுமணிஅறிவுமணிதமிழ்
812006பாசக்கிளிகள்செவத்தய்யாதமிழ்
822009எங்கள் ராசி நல்ல ராசிவிஜய்தமிழ்
83நீ உன்னை அறிந்தால்கோபால்தமிழ்
842010பாணா காத்தாடி'இதயம்' ராஜாதமிழ்சிறப்புத் தோற்றம்

மறைவு[தொகு]

இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.[4]

No comments:

Post a Comment