Monday, 18 May 2020

REKHA ,MALAYALAM ACTRESS , BORN 1970 MAY 18



REKHA ,MALAYALAM ACTRESS ,
BORN 1970 MAY 18



ஜோஸ்பின், அல்லது ரேகா என தமிழ், மலையாளத் திரைப்படங்களில் பரவலாக அறியப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், யே ஆட்டோ, சகரம் சாக்சி உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] கேரளாவில் பிறந்த இவர் தமிழகத்தின் உதகையில் தனது படிப்பை முடித்தார்.[2] இவர் தற்போது
தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.[3] இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் திரைப்படத்திற்காக பெற்றார்.இவர் கடலுணவு ஏற்றுமதியாளரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[என்ன மொழி
சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருந்த இவர் மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிக்கும் 100% காதல் படத்தில் நடிகை ரேகா நடித்து உள்ளார். இதன் மூலம் தமிழில் மீண்டும் அதிக படங்களை நடிக்க ரேகா முடிவு செய்துள்ளார்.என்ன மரணம்
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரேகா சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டார். அதில், நான் இங்கு இருப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நான் இறந்துவிட்டதாக சில யூ டியூப் சேனல்களில் செய்திகள் வருகிறது. என்னை வைத்து வதந்தி பரப்புகிறார்கள். அடிக்கடி நிறைய வீடியோ வெளியாகிறது.

பொறுப்பு இல்லை
கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் அவர் இப்படி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் சிலர் போன் செய்து செத்து போய்ட்டியா நீ என்று கேட்டார்கள். அவர்களிடம் சிரித்துக் கொண்டே, ஆம், செத்துட்டேன்.. இப்போ பேய் தான் பேசுகிறேன் என்று கிண்டலாக குறிப்பிட்டேன்.இப்படியா நான் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்' என்று விஜய் சார் சொன்னதை கேட்டு, அதை போலவே அமைதியாக இருக்கிறேன்.

.அண்மையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார் நடிகை ரேகா. தான் இறந்த பின் உடலை தன்னுடைய தந்தையாரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை நான் வாழும்போதே செய்துவிட்டேன் என்று கூறினார் ரேகா. 

இயக்குநர் பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் அறிமுகமான ரேகா தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிறமொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். கமலுடன் நடித்த புன்னகை மன்னன் மிகப் பெரிய வெற்றியையும் ரசிகர்களையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. 

அண்மையில் படங்களில் நடிக்காமல் இருந்த ரேகா, தற்போது சில குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் தன் மனதில் உள்ளவற்றை பகிர்ந்துள்ளார். தான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும்தான் தனது தந்தை பார்த்துள்ளார் என்றும் சினிமாவில் நடிப்பது தந்தைக்கு பிடிக்காது என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அதற்குக் காரணம் தன் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும் அக்கறையும்தான் என்றார் ரேகா.

தந்தையின் மறைவுக்குப் பின் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவருக்கு ஒரு கல்லறை எழுப்பியதாகவும், அவரை அடக்கம் செய்த இடத்தில் மற்றவர்கள் யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டிருக்கிறார். இறந்த பின், தந்தையார் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று ரேகா விருப்பம் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

"வெளியுலகத்துல புகழுடன் இருந்தாலும், சொந்த வீட்டுல என்னவோ பலருக்கும் மரியாதை இருக்காது. அப்படித்தான் எங்க வீட்டுலயும். எங்கப்பா மட்டுமல்ல, என் வீட்டில் ஒருத்தர்கூட என்னை சினிமா பிரபலமா மதிக்கவே மாட்டாங்க."

நடிகை ரேகா, தன் இறப்புக்குப் பிறகான உடல் அடக்கத்துக்கான ஏற்பாடுகளை தற்போதே செய்து வைத்திருக்கிறார். தன் அப்பாவின் மீது கொண்ட அன்பால், அவரது கல்லறையிலேயே தன் உடல் அடக்கத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கான காரணம் மற்றும் அப்பாவின் நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசுகிறார், ரேகா.எங்கப்பாவின் பேச்சை மீறி நான் சினிமாவில் நடிச்சதால, அவர் ஒரு வருஷம் என்கிட்ட பேசவேயில்லை. அதனால, வருத்தப்பட்டேன். என் முதல் படம், `கடலோரக் கவிதைகள்'. அந்தப் படத்தை ஒருமுறை பார்த்த அப்பா, பிறகு என் எந்தப் படத்தையும் பார்க்கலை. என் சினிமா விஷயங்கள் பத்தி ஒருநாள்கூட அவர் என்கிட்ட பேசவேயில்லை. ஒரு வருட கோபத்துக்குப் பிறகு அவர் என்கிட்ட சகஜமா பேசினார். எனக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்தார். என் மகள் மீது அளவுகடந்த அன்பைக் காட்டினார். ஆனா, ஒருநாளும் சினிமா விஷயங்கள் பத்தி அவர் என்கிட்ட பேசியதேயில்லை. அவர்கிட்ட நானும் சகஜமா பேசினாலும், சினிமா விஷயங்களை நானே முன்வந்துபோய் அப்பாகிட்ட பகிர்ந்துக்கலை. அப்போ எந்தக் குற்ற உணர்வும் எனக்கு வரலை.

ஆனா, `நாமளாச்சும் அப்பாகிட்ட போய் சினிமா விஷயங்களை பேசியிருக்கணும். என் படங்களை ஏன் பார்க்கிறதில்லை, நான் தொடர்ந்து நடிக்கிறதில் உங்களுக்கு விருப்பமில்லையா?'னு கேட்டிருக்கணும்னு இப்போ தோணுது. எங்க குடும்பத்தில் யாரும் சினிமாவில் நடிக்கக்கூடாதுனு அவர் உறுதியா இருந்தார்" என்கிற ரேகா, இறப்புக்குப் பிறகான உடல் அடக்கம் குறித்த ஏற்பாடுகளைப் பற்றிப் பகிர்கிறார்."ஆரோக்கியமா இருந்த எங்கப்பாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போச்சு. 2003-ம் ஆண்டு, வேளாங்கண்ணிக்குப் போயிட்டு வந்தார். பிறகு திடீர்னு இறந்துட்டார். அவர் இருக்கும் வரை அவரோட அருமை எனக்குத் தெரியலை.எங்கப்பாவின் மறைவு, என் வாழ்க்கையில பெரிய இழப்பு. வாழ்நாளில் யார்கிட்டயும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகினார். என் சம்பாத்தியத்தில் அவர் ஒரு ரூபாய்கூட பயன்படுத்தலை. எங்கப்பா இயக்குநர் மகேந்திரன் சாரைப் போலவே இருப்பார். அப்பா மறைந்த பிறகு, அவருக்குச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கல்லறையை ஏற்படுத்தினேன். அதை முறையா பராமரிச்சுகிட்டு வர்றேன். மாதமானா அந்தக் கல்லறைக்குப்போய் வணங்கிட்டு வருவேன். எங்கப்பாவின் கல்லறை இருக்கும் இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம்னு கேட்டிருக்கேன்.


நான் இறந்த பிறகு, அந்தக் கல்லறையிலதான் என் உடலும் அடக்கம் செய்யப்படும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவெச்சிருக்கேன். பொதுவா, நம்ம வாழ்க்கையில இறப்பு எப்ப வேணா வரும். ஆனா, நான் இறந்த பிறகு, என் ஆசை நிச்சயம் நிறைவேறும்.சினிமா என் கரியரானதில் கடைசிவரை அப்பாவுக்கு விருப்பமில்லை. அவர் விருப்பப்படி நான் நடந்திருந்தால், அப்பாவின் அன்பு எனக்கு இன்னும் அதிகமா கிடைச்சிருக்கும். ஆனா, சினிமாவை என்னால விட்டுக்கொடுக்கவே முடியலை.வெளியுலகத்துல புகழுடன் இருந்தாலும், சொந்த வீட்டுல என்னவோ பலருக்கும் மரியாதை இருக்காது. அப்படித்தான் எங்க வீட்டுலயும். எங்கப்பா மட்டுமல்ல, என் வீட்டில் ஒருத்தர்கூட என்னை சினிமா பிரபலமா மதிக்கவே மாட்டாங்க. ஆனா, மனைவியா, அம்மாவா என்மேல அதிக அன்பு காட்டுவாங்க.நூறு படங்களுக்கு மேல, நடிச்சிருந்தாலும் இதுவரை சினிமா பயணத்துல துளிகூட திருப்தி கிடைக்கலை" என்கிறார், ரேகா.



சினிமா என் கரியரானதில் கடைசிவரை அப்பாவுக்கு விருப்பமில்லை. அவர் விருப்பப்படி நான் நடந்திருந்தால், அப்பாவின் அன்பு எனக்கு இன்னும் அதிகமா கிடைச்சிருக்கும்.
ரேகா

.80களில், இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு முதல் படத்திலேயே பிரபலம் ஆன நடிகைகளில் ரேகாவும் ஒருவர். இவர் 1970ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். இவருக்கு 16 ஆண்டு இருக்கும்போது சத்தியஜுடன் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரேகா.
இந்த படத்தில் நடிகை ரேகா ஜெனிபர் டீச்சர் என ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். இந்த டீச்சர் கேரக்டர் இன்று வரை பலரால் பேசப்படும் ஒரு கேரக்டராகும். வரை முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த ரேகா அதன்பின்னர் தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். தமிழில் புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, நினைவே ஒரு சங்கீதம், கதா நாயகன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் என பல ஹிட் படங்களில் நடித்தார். 1996ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரேகா. ரேகாவின் கணவர் ஜார்ஜ் மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 1998ல் செய்து என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அனுஷா தற்போது ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டியில் படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய ரேகா 2002ல் இருந்து நடிகர்களின் அம்மா கேரக்டரிலும், சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.மேலும்,கொடுமைகளுக்கு உள்ளாகும் பல பாமர மக்களுக்கு மலையாளத்தில் ஒரு பிரபல டீவியில் ஒரு ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். சென்னையில் 2015 வெள்ளத்தின் போது நுங்கம்பாக்கத்தில் சென்னையில் தனது வீட்டிற்கு அருகில் இருந்தவர்களுக்கு பெரிதும் உதவி செய்துள்ளார் ரேகா. கடைசியாக முத்துராமலிங்கம் படத்தில் நடித்த ரேகா தற்போது நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.



நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்குறிப்புகள்
1986கடலோரக் கவிதைகள்ஜெனீபர்
1986புன்னகை மன்னன்ரஞ்சனி
1987செண்பகமே செண்பகமே
1987உள்ளம் கவர்ந்த கள்வன்
1987கதாநாயகன்
1988என் பொம்முக்குட்டி அம்மாவுக்குமெர்சி
1988மேகம் கருத்திருக்கு
1988காவலன் அவன் கோவலன்
1988எங்க ஊரு பாட்டுக்காரன்காவேரி
1988ராசாவே உன்னை நம்பி
1988காலையும் நீயே மாலையும் நீயே
1989பாட்டுக்கு நான் அடிமை
1989வரவு நல்ல உறவு
1989நினைவே ஒரு சங்கீதம்
1989தம்பி தங்கக் கம்பி
1989பிள்ளைகாக
1987வேடிக்கை என் வாடிக்கை
1990மூடு மந்திரம்
1990புரியாத புதிர்
1990என் காதல் கண்மனி
1991குணாரோசி
1991இரும்பு பூக்கள்சிறப்புத் தோற்றம்
1991வைதேகி கல்யாணம்வசந்தி
1992இதுதாண்டா சட்டம்லட்சுமி
1992அண்ணாமலைகீதா
1992டேவிட் அங்கிள்மாலதி
1992திருமதி பழனிச்சாமிசிறப்புத் தோற்றம்
1996காலம் மாறிப்போச்சுலட்சுமி
2002ரோஜா கூட்டம்பூமிகாவின் தாயார் (காவல் ஆய்வாளர்)
2003கோவில்ஏஞ்சலின் தாயார்
2003வில்லன்சிவாவின் தாயார்
2008தசாவதாரம்மீனாட்சி
2010உத்தம புத்திரன்மீனாட்சி
2013யா யாவசந்தி
2013தலைவாகங்கா ராமதுரை

தெலுங்குத் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்குறிப்புகள்
2012மணி மணி மோர் மணிகீதா மாதுரி

பெற்ற விருதுகள்[தொகு]



.

No comments:

Post a Comment