Tuesday, 5 May 2020

NEPOLEON BONAPARTE , THE EMPEROR OF FRANCE BORN 1769 AUGUST 15 - 1821 MAY 5




NEPOLEON BONAPARTE ,
THE EMPEROR OF FRANCE 
BORN 1769 AUGUST 15 - 1821 MAY 5


.வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம் நாட்டில் இருக்கின்றது, 1815ல் ஜூன் 18ல் அங்குதான் நெப்போலியனின் இறுதி யுத்தம் தொடங்கிற்று. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி.. எல்லோரும் பயந்த எதிரணிக்கு வெலிங்டன் தலைவர் ஆனார் , பெரும் களம் கண்டவன் அல்ல எனினும் நெப்போலியனின் சமீபத்ய தோல்வி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது .நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி நின்றான், வெற்றி என்பது அவனுக்கு வாடிக்கை என்பதால் நம்பிக்கையோடு நின்றான்

கொடும் யுத்தம் தொடங்கியது, இருபக்கமும் அணல் பறந்தது, திடீரென யுத்த வியூகத்தை மாற்றினான் வெலிங்டன் .நெப்போலியனின் தளபதிகள் முடக்கபட்டனர், முன்னேறிகொண்டிருந்த நெப்போலியனின் தளபதி மைக்கேல் நொய் என்பவனும் முடக்கபட்டான். எல்லா படைக்கும் பலவீனமான பக்கம் இருக்கும், அதை வெளிதெரியாமல் காத்துகொள்வது யுத்த தந்திரம், ஆனால் நெப்போலியன் படை பலவீனம் அவன் மனைவி வழியாக எதிரி கைகளுக்கு போயிருந்தது .அவசரத்தில் திரட்டிய படை என்பதால் அவனின் வீரர்களும் அவ்வளவு திறமையாக இல்லை.தான் பின்னடையும் நேரத்தில் பெரும் படை வரவேண்டும் என ஒரு பிரிவிஒரு பிரிவினை ரிசர்வாக வைத்திருந்தான், அது வர உத்தரவும் கொடுத்தான்.ஆனால் படை வரவில்லை, ஏதோ உள்சதியால் அப்படைபிரிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை

படை வராமல் போனது, சில தளபதிகள் நடிப்பு, தன் பலவீனத்திலே அடிப்பது, அவனுக்கு அப்பொழுது தொடங்கியிருந்த வயிற்று வலி எல்லாம் சேர்ந்து அவனை தோற்கடித்தது .பல சக்திகள் தனக்கு எதிராய் இருப்பதை கண்டுகொண்ட நெப்போலியன் “எல்லாம் முயற்சித்துவிட்டேன் இனி செய்ய ஒன்றுமில்லை” என குதிரையினை விட்டு இறங்கினான்.கிட்டதட்ட பெண் மோகத்தில் தன் ரகசியத்தை சொல்லி மாட்டிகொண்ட பெரும் வீரன் சாம்சன் எனும் பைபிள் பாத்திரத்தில் நின்றான் நெப்போலியன்

பிரிட்டானியர் அவனை இங்கிலாந்து அருகில் இருந்த ஹெலனா தீவில் சிறை வைத்தார்கள். தனக்கு நிகழ்ந்த துரோகங்களை நினைத்தபடியே அங்கு சுற்றினான் அந்த சிங்கம்.பிரான்சில் நிலமை மாறியது, நெப்போலியனின் தளபதிகள் மைக்கேல் நொய் உட்பட எல்லோரும் கொல்லபட்டார்கள், ஆஸ்திரிய மனைவியும் அங்கு சென்றுவிட்டாள்.நெப்போலியன் வழக்கம் போல படிப்பதில் மனதை செலுத்தினான், ஜூலியஸ் சீசர் என்ற புத்தகத்தையும் எழுதினான்

அவன் அங்கிருந்து அமெரிக்கா தப்பியதாகவும், படை திரட்டியதாகவும் வதந்தி உண்டு ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை .வயிற்றுவலி அதிகரித்தது, உடல் வலுவிழந்தது, கிட்டதட்ட 25 வருடம் இடைவிடாத யுத்தம் நடத்தியவன் அவன், அந்த இளம் வயதில் அவன் சரியாக உண்ணவில்லை, உறங்கவில்லை அது 40 வயதிற்கு மேல் வயிற்று கோளாறு எனும் எமனாய் வந்ந்தது, மிக மோசமானது உடல்நிலை ஜோசப்பின் பிரான்ஸ் ராணுவம் என அதனையே நேசித்த நெப்போலியன் அந்த மூன்று வார்த்தைகளையும் உச்சரித்துகொண்டே தன் 51ம் வயதில் இறந்தான்

அவன் அங்கு அடக்கம் செய்யபட்டாலும் 1840ல் அவன் எலும்புகள் பிரான்ஸ் கொண்டுவரபட்டு அவனுக்கு அங்கு நினைவாலயம் எழுப்பபட்டது.
பெரும் படை நடத்தும் ராணுவ ஜெனரல் தனி தீவில் சாவார் என நாஸ்ட்ரோடாமஸ் எழுதியது அப்படி நிறைவேறிற்று .எல்பா தீவிலிருந்து தப்பி தான் நாஸ்டர்டோமஸை வென்றதாக சொன்னான் நெப்போலியன், ஆனால் நாஸ்டர்டோமஸ்தான் வென்றார்

நெப்போலியனின் வாழ்வும், போரும், வீரமும், ஆட்சியும் பெரும் ஆச்சரியங்கள்.டிவோலன், ஜிகா,டிவோலி, ஆட்ல்ட்ராலிஸ் என அவன் நடத்திய போர்கள் பெரும் நுட்பமானவை, இன்றும் ராணுவ பாடமாக வைக்கபடுபவை .அவன் முதலில் கடலில் தோற்றான், பின் ரஷ்யாவில் குளிரில் தோற்றான் அந்த குளிரினால் ஏற்பட்ட சேதத்தில் லீஸ்மெக்கில் தோற்றான்.கடைசியாக வஞ்சகமாக தோற்கடிக்கபட்டான்

தகுந்த ஒத்துழைப்பும், முறையான போரும் கிடைத்தபட்சத்தில் எல்லாம் அவனை வெல்ல யாருமே இல்லை. எத்தனையோ களங்களில் சாவின் விளிம்புவரை சென்று திரும்பியவன் அவன்.எதிரிகள் சுற்றி நின்று சுட்டபொழுது அருகிலிருந்த பிணக்களை கவசமாக கொண்டு தப்பி வந்த சாகசககரன்.திறமையான ராணுவ கமாண்டருக்கு அவனே பெரும் எடுத்துகாட்டு.நல்ல நிர்வாகிக்கும் அவனே உதாரணம், இன்றும் பிரான்ஸ் அவன் உருவாக்கிய சட்டதிட்டங்களிலே பயணிக்கின்றது, நெப்போலியன் கோட் என்பது இன்றும் உண்டு. அவன் ஏற்படுத்திய வரிவசூல் முறை இன்றும் பின்பற்றபடுகின்றது .ஷேக்ஸ்பியர் மட்டும் நெப்போலியன் காலத்திற்கு பின் பிறந்திருந்தால் ஆண்டனி கிளியோபாட்ரா, ரோமியோ ஜூலியட் வரிசையில் நெப்போலியன் ஜோசப்பின் காதலும் காவியமாகி இருக்கும், அப்படி காதல் ரசம் சொட்டும் வாழ்வு அவனது அவனின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை சொல்வார்கள், ஜோசப்பின் ஜாதகம் ராஜயோகம் கொண்டவது, அவளை கொள்பவர்கள் பெரும் உச்சம் அடைவார்கள் என்பது அவளின் ஜாதக பலன், அதுதான் நெப்போலியனை வழிநடத்திற்று, அவளை பிரிந்தபின் அவன் வீழ்ந்தான் என்பார்கள் சிலர்


நெப்போலியனை பிரிந்தபின்பும் ஜோசப்பின் வாழ்ந்தாள், அவளின் வம்சமே இன்றிருக்கும் பல ஐரோப்பிய அரசகுடும்ப ராணிகள் (பிரிட்டன் தவிர), ஐரோப்பாவை அவர்கள் ஆள்கின்றார்கள் > ஆனால் நெப்போலியன் அவளை பிரிந்தபின் வீழ்ந்தான்.போப்பாண்டவரை பாடாய் படுத்திய சாபம் என்றோரு பக்கம் சொல்வார்கள். நெப்போலியனுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தது, தன் ஜோசியன் கணிப்பை மீறி ரஷ்யா மீது படை எடுத்ததே காரணம் என்பார்கள்
ஆனால் உண்மை காரணம் மிக எளிதானது.நெப்போலியன் பிரான்சின் மன்னனாக இருந்து அதை காத்த்திருந்தால் ஒரு சிக்கலும் வந்திருக்காது, அவன் மக்களாட்சியின் தலைவனாக இருந்தால் கூட சிக்கல் இல்லை.ஆனால் ஐரோபாவில் பிரான்ஸ் தலமையில் வல்லரசு, ஒரே அரசு என்ற குறிக்கோளில் இறங்கினான், அதுதான் தவறு

பிரான்சில் மதவாதிகளையும், பணக்காரர்களையும் பகைத்து அவன் அரசியல் செய்தது இன்னொரு தவறு.பல தேசிய இனமக்களை தன் ராணுவ பலத்தால் ஒரே குடையில் கொண்டுவர விரும்பினான், அது ஒருகாலமும் நடக்காது என காலம் காட்டிற்று .நெப்போலியன் வாழ்வு சொல்வது அதுதான் .தேசிய இனங்களை ஒரே நாடாக இணைத்து செல்ல பெரும் நுட்பம் வேண்டும். பல இனம் ஒரே நாடு என்பது எளிதில் சாத்தியமில்லை, மதவாதிகளையும் பணக்காரர்களையும் எதிர்த்து நிலைப்பதும் சாத்தியமில்லை.ஐரோப்பாவில் நெப்போலியனுக்கு அதுதான் நடந்தது .பின் ஹிட்லர் காலமும் அப்படியே நடந்தது, உலகெல்லாம் மிரட்டி பெரும் சாம்ராஜ்யம் அமைத்த பிரிட்டனின் சாம்ராஜ்யமும் அப்படியே உடைந்தது .இன்று பல நாடுகளில் இந்த சிக்கலை நீங்கள் காணலாம், இந்தியினை டெல்லி திணித்தபொழுது தமிழகம் வெகுண்டு எழுந்த காலமும் அப்படித்தான். பெரியார் போன்றவர்கள் திராவிட நாடு கேட்டதும் இப்படித்தான்

பல தேசிய இனங்களை அடக்கி ஆள்வது என்பது முடியவே முடியா காரியம், உரிமைகள் கொடுக்காமல் ஒருமித்து வாழவே முடியாது.அதுவும் மதவாதிகளை எதிர்த்தால் எப்படி எல்லாமோ அடிப்பார்கள், மதம் இருக்கும் வரை மன்னன் தனி ஒருவனாக வரமுடியாது

இந்த விஷ பரிட்சையினை அன்றே பரிசீலித்து , முயற்சித்து பார்த்து பின் உண்மையினை ஒப்புகொண்டு தனி தீவில் இறந்தவன் நெப்போலியன்.அவன் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது.சாதாரண சிப்பாயாக இருந்து படிபடியாக முன்னேறி பெரும் வியத்தகு யுத்தங்களை புரிந்து, மன்னனாகி ஐரோப்பா மொத்தமும் அலற வைத்து, சர்வ சக்தி மிக போப்பாண்டவரையே நிற்க வைத்து கேள்வி கேட்டு , மிக எளிய மன்னனாய் வாழ்ந்து, வரலாற்றில் மிகபெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டு சென்ற நெப்போலியனின் பாதிப்பு கொஞ்சம் அல்ல‌.இவ்வுலகில் ராணுவம் , அரச நிர்வாகம் , காதல் , நாட்டுபற்று, வீரம் என்ற விஷயங்கள் பேசபடும்பொழுதெல்லாம் நிச்சயம் நெப்போலியனும் பேசபடுவான், அதனால் கால காலத்திற்கும் நிலைத்திருப்பான்.எனினும் பல தேசிய இனங்களை அடக்கி பெரும் வல்லரசு, ஓரரசு என முயற்சித்தால் என்னாகும் என்பதற்கும், மதவாதிகளும் பணக்காரர்களும் சொந்த நாட்டு வீரனையே எப்படி கொல்வார்கள் என்பதற்கும் கல்லறையே சாட்சி, அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்து பல தடங்களை பதித்துவிட்டு இன்று அதில்தான் அடங்கி கிடக்கின்றான்

முற்றும்




.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரா ன்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெ ளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கி யமான வேற்றுமை இருந்தது. ஒரு மன் னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்க த்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிற ந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல் முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற அடைமொழியும் அவரு க்கு உண்டு. ஒரு ‘சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்‘

1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள் ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றா ல் என்னவென்று அறியாத வனாக வளர்ந்தார் நெப்போ லியன். அரசின் சலுகை பெ ற்று வியந்நாவிலும் பாரிசி லும் உள்ள இராணுவப் பள் ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியி யல் ஆகியவை அவ ருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போ லியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படை த்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினி யப் படைகளை வெற்றிகரமாக முறியடித் தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அள வில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இரு வருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றி னார்.

1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதி ல் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற் குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந் தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடு த்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப் பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர் த்தகமும் புரியக்கூடாது என்று கட்ட ளையிட் டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததா ல் சினம்கொண்டெழுந்த நெப்போலி யன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812.

நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண் டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளி ரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித் துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கு ம் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியா யினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளை யிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீர ர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயி ரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வர லா ற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்ட ன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய வற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வி யைச் சந்தித்தார் நெப்போலியன்.

கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வை க்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறை யிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண் டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போ லியன். புதிய படை யை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல் ஜியத்தி ன் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலி யன். அவரை சிறைப் பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்மு றை ஆப்பிரிக்கா வுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என் ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலி யனுக்கு வயிற்று புற்று நோய் ஏற்பட் டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப் போலியன் என்ற வீர சகாப்தம் முடிவு க்கு வந்தது.

பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தி னால் உருவானவர்தான் நெப் போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அ மைதி நிலவியது. பொருளா தார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயி ண்ட் ஆற்றுக்கு மேல் பாலங் கள் கட்டினார். வீதிகளை திரு த்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண் ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெ ருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உரு வாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனி ன் மிகப் பெரிய பங்களிப்பு அவ ர் வகுத்துத் தந்த Civil Code என் ற புதிய சட்டங்கள். அந்தச் சட் டங்கள் Code of Napoleon என் றும் அழைக்கப் படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச் சட்டங்கள் மூலம் நெப்போலி யனுக்கு கிடைத்த து.

சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்ற ன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளி ல் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாரா ம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச் செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச் சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது. “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பி க்கையின் மீதி” இதுதான் நெப்போ லியன் என்ற மாவீரனின் தாரக மந் திரமாக இருந்தது. அந்த மந்திரம் தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

“முடியாது என்ற சொல் என் அகரா தியில் கிடையாது” என்பது நெப் போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடி கொ ண்டிருந்த துணிவு, நம்பிக்கை மட்டும் தான் “

No comments:

Post a Comment