Monday, 11 May 2020

NAGAMMAI OF ERODE,FREEDOM FIGHTER LOST HER LIFE 1933 MAY 11





NAGAMMAI OF ERODE,FREEDOM FIGHTER
  LOST HER LIFE 1933 MAY 11



.பெரியார் மட்டுமல்ல அவரின் மனைவி நாகம்மையார் கூட கடவுள் மறுப்புக் கொள்ளை கொண்டவர்தான். இவரும் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

"நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ"நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன்" தன் மனைவி நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள் இவை. அவர் அப்படி சொன்னதற்குக் காரணம் தான் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல் தன் கொள்கை வழித்துணையாகவும் நாகம்மையார்

சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் 1885-ம் ஆண்டு பிறந்தவர் நாக ரத்தினம் என்கின்ற நாகம்மையார். தனது 13-வது வயதில், தந்தை பெரியாரை மணந்துகொண்ட இவர் பெரியாருடைய தாயாரின் ஒன்று விட்ட தம்பி மகளாவார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த இவரை தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முதலில் எதிர்ப்பு தெரிவித்தார் பெரியாரின் தாயார். "மணந்தால் ராமசாமியைத்தான் மணப்பேன், இல்லையென்றால் இறந்துவிடுவேன்" என அடம்பிடித்து பெரியாரை 1898-ம் ஆண்டு மணம் புரிந்தார் நாகம்மையார்.
1919-ம் ஆண்டு பெரியார், காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, காந்தியின் 'ஒத்துழையாமை இயக்கத்தில்' தீவிரமாக ஈடுபட்டபோது, ஆடம்பரமிக்க ஆடை, அணிகலன்களை ஒதுக்கி எளிமையை ஏற்றுக்கொண்டார் நாகம்மையார்.1921-ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கள்ளுக்கடை மறியலின் போது ஆங்கிலேய அரசால் பெரியார் கைது செய்யப்பட்டார். அப்போது நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்களுடன் சேர்ந்து மறியலைத் தொடர்ந்தனர். அப்போது பெரியார் தன் தோப்பில் இருந்த 500-க்கும்
மேற்பட்டதென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி போராட்டத்தைத் தீவிரமாக்கினார். ஆங்கிலேயே அரசு அப்போது 144 தடை உத்தரவுபோட்டும் அதனை மீறிப் பெரியார் கைது செய்யப்பட்டார்.


அதன் பின்னர் அந்தப் போராட்டத்தினை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் முன்னின்று நடத்தினர். பெண்கள் விடுதலைப் போரில் கலந்துகொண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டது இந்திய வரலாற்றிலேயே அதுதான் முதல்முறை. அரசு விதித்திருந்த 144 தடை உத்தரவை மீறியதால் ஈரோடு நகரம் முழுவதுமே கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்ட அரசு கைது நடவடிக்கையைத் தொடர அஞ்சி, சமரசத்துக்கு முன்வந்தது. மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு காந்தியைச் சிலர் வேண்டினார்கள். அதற்கு காந்தி "போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்" என்றார். ஜாதி மத வேறுபாடுகளை நீக்கவும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் மேடைகளில் முழக்கமிட்டார் நாகம்மை.

Vikatan
Also Read
பின் நின்று அல்ல; பெரியார் உடனே போராட்டத்தில் பயணித்த நாகம்மையார் #NagammaiMemories

பெண் கல்வியின் இன்றியமையாமை, கலப்பு மணம், விதவைகள் மறுமணம், சுயமரியாதைத் திருமணம் போன்ற கருத்துகளைத் தமது பிரசாரங்களில் வலியுறுத்தினார். 4.12.1923 அன்று திருச்சியில், மதராஸ் (தமிழ்நாடு) மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டியில், அனைத்திந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார் நாகம்மை. தமிழ்நாட்டில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாகம்மை ஆவார். 1924-ம் ஆண்டு ஏப்ரலில் கேரள மாநிலம் வைக்கத்தில் அன்றைய மதராஸின் ஒரு பகுதியில் ஈழவர் எனப்படும் தீயர், புலையர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க நடைபெற்றதே வைக்கம் போராட்டம். இந்தப் போராட்டத்தினால் இரண்டு முறை சிறைப்பட்டார் பெரியார். அப்போது நாகம்மையார், தமிழகத்துப் பெண்களைச் அழைத்துக்கொண்டு ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்து சேர்ந்தார்.

ராஜாஜி
ராஜாஜி
தமிழகம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நாகம்மையாரின் தலைமையில் வைக்கம் போராட்டத்தில் அணிவகுத்து நின்றனர். போராட்டத்தினை முன்னெடுப்பதால் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அறிந்தும் அதற்கு அஞ்சாமல் துணிவுடன் போராட்டக் களத்தில் நாகம்மையார் உறுதியுடன் நின்றார். பெரியார் சிறை சென்ற காலத்தில் நாகம்மை "குடிஅரசு, ரிவோல்ட்" ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். விருந்தோம்பலில் நாகம்மையாருக்கு இணையானவர் எவருமில்லை என்பார்கள். தம் இல்லத்திற்கு வரும் யாவர்க்கும் இன்முகத்துடனும் இன்சொல்லுடனும் விருந்து படைப்பதைக் கண்டு அனைவரும் நெகிழ்வார்கள்.


''ஒரு சமயம் நானும், பெரியாரும் திருநெல்வேலிக்குப் பிரசார நிமித்தம் சென்றுவிட்டு ஈரோட்டுக்கு இரவு 12.30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அய்யப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது நாகம்மை அம்மையார் அன்புடன் வரவேற்று, உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்" என்று திரு.வி.க எழுதியிருக்கிறார்.

ராஜாஜியும் கூடப் பெரியார் வீட்டு விருந்தோம்பல் குறித்து 1953-இல், "நான் ஈ.வெ.ராமசாமியின் வீட்டுத் தோசையை விரும்பிச் சாப்பிடுவேன். அதன் பக்குவம் என்ன என்று நான் கேட்பதுண்டு" என்று பொதுக்கூட்ட மேடையிலேயே பேசியிருக்கிறார். பெரியாருடன் மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, இந்தியாவிற்குத் திரும்பும்போது, தங்களுக்கு விருப்பமான, தேவையான மலாய் நாட்டுப் பொருள்கள் எவை என்று கேட்ட தமிழர்களிடம், "நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்" என்று உள்ளம் நிறைந்து பாராட்டினாராம் நாகம்மையார். தந்தை பெரியாருக்கும் அவர் கொள்கைக்கும் தொண்டாற்றிய நாகம்மையார் 1933-ம் ஆண்டு, இதே நாளில் காலமானார்.

நாகம்மையாரின் பெயர் என்றும் நிலைத்திடும் வகையிலும் நாகம்மையின் சமூகப் பணியின் நினைவாகவும் 'நாகம்மையார் இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லம், தந்தை பெரியாரால் 1959-ம் ஆண்டு திருச்சியில் உருவாக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு தனது பொன்விழாவினை இந்த இல்லம் கொண்டாடியுள்ளது. இந்த இல்லம் இன்னும் எத்தனையோ பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.


நாகம்மை
நாகம்மை
நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் எழுதிய இரங்கல் கட்டுரையில் சில வரிகள்!

"நாகம்மாள் மறைந்தது, எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே!"

தந்தை பெரியாருக்கு உற்ற தோழமையாக விளங்கிய நாகம்மையாரை, "அன்னை நாகம்மையார்" என்றே அழைக்கின்றனர் திராவிட இயக்க உணர்வாளர்கள்.

.நாகம்மை (Nagammai) (1885–1933) ஒரு இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் பெண் உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் இந்தியாவில் இயங்கி வந்த புலனடக்க இயக்கம் மற்றும் வைக்கம் சத்யாக்கிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டமைக்காக நன்கு அறியப்பட்டவர் ஆவார். இவர் சுய மரியாதை இயக்கத்தை தலைமை தாங்கிய ஈ. வெ. ரா. பெரியாரின் மனைவியாவார்.
தொடக்க கால வாழ்க்கை
நாகம்மை சென்னை மாகாணத்தில் இருந்த சேலம் மாவட்டத்தில் தாதம்பட்டி என்ற ஊரில் ரெங்கசாமி மற்றும் பொன்னுத்தாய் என்ற பெற்றோருக்கு 1885 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். நாகம்மை முறையான கல்வி பயின்றதில்லை. 1898 ஆம் ஆண்டு தனது 13 ஆம் வயதில் தனது மைத்துனர் இராமசாமியை மணந்தார்.[1] இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்து ஐந்து மாத காலத்தில் இறந்து விட்டது.[2]

செயற்பாடுகள்
1919 ஆம் ஆண்டில், இராமசாமி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். நாகம்மை இவரது அரசியல் வாழ்க்கைக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்கான அழைப்பு விடுத்த போது, ஈரோட்டில் பெண்களைக் கொண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.[3][4] இந்த இயக்கமானது நாட்டின் பிற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த போது மற்ற காங்கிரஸ் தலைவர்கள் காந்தியை போராட்டங்களைக் கைவிட வேண்டினர். காந்தி இந்தப் போராட்டத்தின் முடிவு என் கைகளில் இல்லை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் உள்ளது என்றார். அந்த இரண்டு பெண்கள் நாகம்மை மற்றும் நாகம்மையின் மைத்துனி கண்ணம்மாள் ஆகியோர் ஆவர்.[1][3]

திருவாங்கூர் மாகாணத்தில் தீண்டாமையானது ஆதிக்கம் செலுத்திய காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைவதையும், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடப்பதற்கும் தடை இருந்தது.[2] காங்கிரசு தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் மற்றும் தெருக்களுக்குள் நுழைவதைத் தடை செய்வதை எதிர்த்து வைக்கம் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கியது. நாகம்மை மற்றும் இராமசாமி ஆகியோர் 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நாகம்மை போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை முன்னின்று நடத்தி மே 1924 இல் கைது செய்யப்பட்டார்.[5]

1925 ஆம் ஆண்டில் இராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது இயக்கத்தில் பெண்கள் பங்குபெறுவதை ஊக்கப்படுத்தினார். இவர் பல விதவை மறுமணங்கள் மற்றும் சுயமரியாதைத் திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.[1] இராமசாமி ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த போது குடியரசு இதழின் ஆசிரியராக இருந்தார்.[1]

பெருமைகள்
நாகம்மை 1933 ஆம் ஆண்டு மே 11 ஆம் நாள் ஈரோட்டில் மறைந்தார்.[1] தமிழ்நாட்டில் பல பள்ளிகள் நாகம்மையின் பெயரைத் தாங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கு தமிழக அரசாங்கம் பெரியார் ஈ. வெ. ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.[6]

No comments:

Post a Comment