Friday, 15 May 2020

ALLADI KRISHNASWAMY IYER, INDIAN CONSTITUTION MEMBER BORN 1883 MAY 14 -1953 OCTOBER 3



ALLADI KRISHNASWAMY IYER,
INDIAN CONSTITUTION MEMBER 
BORN 1883 MAY 14 -1953 OCTOBER 3


..அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (Alladi Krishnaswamy Iyer; 14 மே 1883 – 3 அக்டோபர் 1953), வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.
இளமை வாழ்க்கை
சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார்.

1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர்.[1] பின்னர் வெங்கலட்சுமியை மணந்தார்.

1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2][3][4]

அல்லாடி நினைவு அறக்கட்டளை
அல்லாடி கிருஷ்ணசாமியின் மகன் அல்லாடி குப்புசாமி, தன் தந்தையின் நினைவாக, சென்னையில் 1983இல் அல்லாடி நினைவு அறக்கட்டளையை நிறுவினார்.[5]

ஒருவருடைய தந்தையாருக்கு ஓரிரு நாட்களில் ஸ்ரார்த்தம்.  ஏதோ ஒரு காரணத்தினால் ஸ்ரார்த்தம் பண்ணி
வைக்க வாத்யார் கிடைக்கவில்லை. என்ன பண்ணுவது என்று கவலையுடன் சென்று
கொண்டிருந்தவர் கண்களில் ஆற்றங்
கரையில் வெள்ளை வெளேரென்று 
தனது வேஷ்டியை துவைத்துக் கொண்டிருந்த ஒரு புரோகிதர் கண்ணில் படுகிறார். 


உடனே அவரிடம் ஓடோடி தனது தந்தையின் 
ஸ்ரார்த்த நாளைக் கூறி அவரால் அதை நடத்தித் தரமுடியுமா என்று கேட்கிறார். அந்த புரோகிதரும்  "பேஷா நடத்தி தருகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன்" என்று கூறுகிறார். 

என்னவென்று இவர் வினவ அதற்கு அந்த புரோகிதர்  "அன்று சரியாக  11 மணிக்கு நான் உங்கள் வீட்டை விட்டு கிளம்பவேண்டும் அதற்கு தகுந்தாற்போல் உங்களால் தயாராக இருக்கமுடியுமா" என்று கேட்க இவரும்  அதற்கு ஒப்புக்கொள்கிறார்.

ஸ்ரார்த்த நாளன்று நேரத்தில் வந்த அந்த புரோகிதர்  ஸ்ரார்த்த காரியங்களை சிறப்பாக நடத்திக்கொடுத்து  சரியாக  11 மணிக்கு அவர் வீட்டைவிட்டு கிளம்பவும்  வீட்டின்முன்  அந்த காலத்தில் பிரபுக்கள் பயணம் செய்யும்   குதிரை பூட்டிய கோச் வண்டி வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது. அந்த வண்டியில் ஏறி புரோகிதர் சிட்டாக பறந்து விடுகிறார்.

க்ருஹஸ்தருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும். "யார் இவர்? மிகவும் முக்கியஸ்தவராக இருப்பார் போலிருக்கிறதே. அவரை 
புரோகிதராக கூப்பிட்டு தவறிழைத்து விட்டோமோ?"  என்று பயம் அதிகரிக்க அவரைப்பற்றி விஜாரித்ததில் தெரிந்து கொள்கிறார்  புரோஹிதராக வந்தவர் பிரபல வக்கீல்  திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்று.


இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்கும்  குழுவில் இவர் அங்கம் வகித்தார்.  அந்த குழுவிற்கு திரு அம்பேத்கர் தலைவராக நியமனைம் செய்யப்பட்டார். இதைப்பற்றி திரு அம்பேத்கர் குறிப்பிடும்பொழுது  "என்னைவிட பெரிய, சிறந்த, திரு அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரைப்போன்று ஆற்றல்மிக்கவர்கள் இருக்க என்னை தலைவராக நியமனம் செய்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது" என்று கூறியிருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு "திவான் பகதூர்" மற்றும்  "சர்"பட்டம் கொடுத்து கௌரவித்தது  
இவருடைய சட்டப்  புலமை, வாதத்  திறமை  அபரிமிதமானது. இதை கௌரவிக்கும் வகையில் இவரைத்தேடி நீதிபதி பதவி வந்தது. ஆனால் இவர் அதை ஏற்றுக்
கொள்ளவில்லை.  

இவரது வாதத் திறமைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு.

வெள்ளையர் ஆட்சியில்  வெள்ளைக்
காரர்களும் வெள்ளைக்காரர்களால் கௌரவிக்கப்  பட்டவர்களும்தான்  குதிரை பூட்டிய சொகுசு கோச்  வண்டியில் 
பிரயாணம் செய்யலாம். மீறினால் சிறை தண்டனை.  

இந்த சட்டத்தை மீறி ஒரு ஜமீன்தார் குதிரை வண்டியில் செல்ல அவர் கைது செய்யப்
பட்டார். வழக்கு  திரு அய்யரிடம் வந்தது. நீதிமன்றத்திற்கு சென்ற திரு அய்யர் தனது வாதத்தை தொடங்கினார்.

அவர் நீதிபதியைப் பார்த்து " கனம்  நீதிபதி அவர்களே ஜமீன்தார் பயணம் செய்த அந்த வண்டியையும் அதை இழுத்துச்சென்ற மிருகத்தையும் தாங்கள் பார்க்கவேண்டும் என்று வேண்டுகிறேன்" எனறார்.  

வண்டியும் குதிரையும் நீதிபதிமுன் ஆஜர்படுத்தப் பட்டது.அதை பார்த்த நீதிபதி  "சரி பார்த்துவிட்டேன் இப்பொழுது உங்களது வாதம் என்ன?" என்று வினவினார்.  

அடுத்த நிமிடம்  திரு அய்யர் அவர்கள் நீதிபதியைப் பார்த்து " கனம்  நீதிபதி அவர்களே சட்டத்தில்  ஆண் குதிரையால்  இழுக்கப்படும் வண்டி(horse driven vehicle)  என்றுதான் இருக்கிறதே தவிர பெண் குதிரையால்  இழுக்கப்படும்  வண்டி (mare driven vehicle) என்று இல்லை. தயவு செய்து இந்த வ ண்டியை இழுத்த மிருகத்தை 
பார்த்தீர்களானால் தெரியும் அது பெண் குதிரை என்று. இதில் எந்த சட்ட மீறலும் இல்லை. ஆகவே ஜமீன்தாரை உடனே விடுதலை செய்ய வேண்டும்"  என்றார்   

மூச்சு பேச்சற்றுப்போன நீதிபதி ஜமீன்தாரை அடுத்த நிமிடமே விடுவித்தார்.

இந்த வழக்கிற்குப் பிறகுதான் சட்டத்தில் "ஆண்பால் என்பது பெண்பாலையும் குறிக்கும்" என்ற மாற்றம் புகுத்தப்பட்டது . 

அந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கில் பீஸ் வாங்கும் பிரபல வக்கீலாக இருந்தாலும்  அதை வெளிக்காட்டிக்  கொள்ளாமல் மிகவும் எளிமையான தோற்றத்துடன் புரோகிதராக வந்து ஸ்ரார்தத்தை சிறப்பாக நடத்திக்
கொடுத்த  திரு அல்லாடி கிருஷ்ணசாமி  அய்யரின் பண்பை என்னவென்று சொல்வது?

14.5.1883 அன்று பிறந்த அந்த மாமேதையின்   பிறந்த தினம் இன்று.


இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்

வரலாறு காரணமாக இருந்த சட்டங்கள் --- ஒழுங்குமுறைச்சட்டம் ( 1778) --- பிட்ஸ் இந்தியச் சட்டம் (1784) –பட்டய சட்டங்கள் ( 1793, 1813, 1833, 1858) --- இந்திய அரசுச் சட்டம் ( 1858) --- இந்தியக் கவுன்சில் சட்டம் ( 1861, 1892) --- இந்திய கவுன்சில் சட்டம்( மிண்டோமார்லி 1909) --- இந்திய அரசுச்சட்டம் ( மாண்டேகு செம்ஸ்போர்டு ---1919) --- இந்திய அரசு சட்டம் ( 1935) --- மத்தியில் இரட்டை ஆட்சி, மாநிலங்களில் சுயாட்சி --- கூட்டாட்சி நீதிமன்றம்) --- அரசியலமைப்பை வலியுறுத்திய அறிக்கை --- நேரு அறிக்கை (1928) --- அரசியலமைப்பை அமைக்க பரிந்துரை செய்த குழு ---கேபினட் குழு( 1946)
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் --- டிசம்பர் 9, 1946 --- டாக்டர் சச்சிதானந்த சின்கா ( தற்காலிக தலைவர்) --- இரண்டாவது கூட்டம் --- டிசம்பர் 11, 1946 --- டாக்டர் இராஜேந்திர பிரசாத் ( நிரந்தர தலைவர்) --- வரைவுக்குழு உருவாக்கம் --- ஆகஸ்ட் 29,1947 --- தலைவர் டாக்டர் B.R. அம்பேத்கார் ( இந்திய அரசியலமைப்பின் சிற்பி) --- உறுப்பினர்கள் – (6+1) =7 அம்பேத்கார், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, பி.எல். மிட்டல் ( என்.மாதவராவ்), டி.டி. கிருஷ்ணமாச்சாரி ( கைத்தான்)
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட / முடிவுக்கு வந்த நாள் --- நவம்பர் 26, 1949 --- நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 26, 1950 ( பூரண சுயராஜ்யம் --- ஜனவரி 26,1930 ---1929 லாகூர் மாநாட்டின் படி) --- அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்ட போது உறுப்பினர்கள் 389 (1947க்கு பிறகு 299 பேர்) --- அரசியலமைப்பை எழுதிமுடிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் --- 2 ஆண்டுகள்,11 மாதம்,18 நாட்கள் ( 11 திட்டமிட்ட கூட்டங்கள், 114 நாட்கள் விவாதம்) – எழுதி முடிக்கப்பட்டபோது இருந்த( 1949ல்) சரத்துகள் , அட்டவணைகள், பாகங்கள் --- 395 Art., 8 22 --- 2013ல் --- 449, 12, 24 --- 2013 க்கு பிறகு --- 465 Articles, 12 schedule, 25 parts --- அரசியலமைப்பு வேண்டும் என்று அறிவுரை --- எம்.என்.ராய் --- நிர்ணய சபையின் ஆலோசகரக இருந்தவர் --- பீ.என். ராவ் --- நிர்ணய சபையின் நோக்கத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் --- ஜவஹர்லால்நேரு ( தயாரித்தது --- டிசம்பர் 13, 1946 --- அங்கமான நாள் --- அக்டோபர் 17,1947)
குழுக்கள் மற்றும் தலைவர் --- அடிப்படை உரிமைகள் ,சிறுபான்மையினர் குழு, மாகாண அரசியலமைப்பு குழு --- சர்தார் வல்லபாய் படேல் -- மத்திய அதிகாரகுழு மற்றும் மத்திய அரசியலமைபு குழு – ஜவஹர்லால்நேரு – கொடிக்குழு --- ஜே.பி, கிருபாளினி --- நெறிமுறைக்குழு --- கே.எம். முன்ஷி --- நடை முறைவிதிக்குழு ---இராஜேந்திர பிரசாத்
அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள் --- உலகிலேயே மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு --- பகுதி நெகிழும், பகுதி நெகிழா தன்மை ---- கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி --- நாடாளுமன்ற அமைப்பு கொண்ட அரசு --- அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள் --- அரசுக் கொள்கையை வழி செலுத்திச் செல்லும் நெறிமுறைகல்
நீதித்துறையின் சுதந்திரம் --- மதச்சார்பின்மை --- ஒற்றைக் குடியுரிமை --- வயது வந்தோர் வாக்குரிமை --- சுதந்திரமான அமைப்புகள் --- அவசர நிலை பிரகடனம்.

பிற நாடுகளிலிருந்து பெறப்பட்டவை --- இங்கிலாந்து --- பாராளுமன்ற முறை, ஒற்றைக்குடியுரிமை,கேபினட் முறை, சட்டமியற்றும் முறை, மத்திய அமைச்சரவை --- அமெரிக்கா --- அடிப்படை உரிமைகள், முகவுரை, நீதிப்புனராய்வு,, குடியரசுத் தலைவர் முப்படைத்தலைவராக செயல்படுதல், சுதந்திரமான நீதித்துறை,உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிகளின் நியமனம் மற்றும் பதவி நீக்கம் --- அயர்லாந்து – அரசு நெறிமுரையுறுத்தும் கோட்பாடுகள் ஜனாதிபதி தேர்தல் முறை --- கனடா – கூட்டாட்சி தத்துவம், எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் உள்ளது --- ஜெர்மனி ---அவசர நிலை பிரகடனம் மற்றும் அதனால் அடிப்படை உரிமைகள் மீது ஏற்படும் தாக்கம் --- ஆஸ்திரேலியா --- பொதுப்பட்டியல், வணிகம்,வியாபாரம் தொடர்பான வகை முறைகள் --- அடிப்படை கடமைகள் --- தென் ஆப்பிரிக்கா --- அரசியலமைப்பு சட்டத்திருத்த முறை --- பிரான்ஸ் ---- குடியரசு அரசாங்கம்.

அரசியலமைபின் முகவுரை --- வழங்கியவர் --- ஜவஹர்லால்நேரு --- இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் எனப் போற்றப்படுவது --- அரசியலமைப்பின் ஒரு அங்கம் அல்ல --- ஒரே ஒரு முறை திருத்தம் --- 42 வது 1976 --- இதன் படி மதசார்பற்ற என்ற வார்த்தை இணைப்பு..

No comments:

Post a Comment