Sunday 4 October 2020

WORLD ANIMALS DAY

 

WORLD ANIMALS DAY


உலக பிராணிகள் நாள் அக்டோபர் 4



செல்லப் பிராணிகளை விற்கும் கடைகளில் நடக்கும் விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தனியாக சட்டம் கொண்டு வந்தும், தமிழக அரசு அதை அமல்படுத்தாமல் இருப்பதால், முறையான பராமரிப்பின்றி 40 சதவீத விலங்குகள் இறப்பதாக புகார் எழுந்துள்ளது. வளர்ப்புப் பிராணி அல்லது செல்லப் பிராணி என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்லான ‘Pet animals’ என்பது, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் புழக்கத்தில் இருந்த சொல். இதற்குப் ‘பழக்கப்பட்ட மிருகம்’ என்று பொருள். கழுதை, ஓணான், ஆமை, கீரி, நண்டு, பாம்பு, எலி, முயல், பலவகை பறவைகள், வண்ண மீன்கள், நாய் என்று வளர்ப்புப் பிராணிகளின் பட்டியல் மிகப் பெரியது. மேற்கண்ட மிருகங்கள் மனிதர்களுடன் நெருங்கி பழகும் என்பதால், சில ஆர்வலர்கள் இவற்றை வீட்டில் வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், நகர்புறங்களில் செல்லப் பிராணிகள் கிடைப்பது அரிது. அதுவும்


விரும்பிய ரகங்களில் செல்லப் பிராணிகள் கிடைக்காததால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய செல்லப் பிராணிகள் விற்பனை கடைகள் (பெட் ஷாப்ஸ்) ஆங்காங்காகே முளைத்துள்ளன. இந்த கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள செல்லப் பிராணிகளை முறையாக பராமரிப்பதில்லை என்ற புகார், மத்திய விலங்குகள் நலவாரியத்துக்கு சென்றது.


அதனால், செல்லப் பிராணிகள் விற்பனையகங்களை கட்டுப்படுத்த, செல்லப் பிராணிகள் கொடுமை தடுத்தல் சட்டம், 2018 என்ற சட்டத்தை, மத்திய அரசின் சுற்றுசூழல், வனத்துறை, பருவநிலை தொடர்பான அமைச்சகங்கள் கொண்டு வந்துள்ளன. இதில், செல்லப் பிராணிகளை வளர்த்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள், உரிமம் பெறுதல், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் விதிமீறல்களுக்கான தண்டனை விபரங்களும் அடங்கியுள்ளது. மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்த, மாநில அரசுகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் செயல்படும் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்துக்கு, செல்லப் பிராணிகள் வளர்ப்பு மற்றும் விற்பனை கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கான அமலாக்க அதிகாரிகளை நியமிக்காததால் ஏராளமான விதிமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மட்டும், 400க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகள் விற்பனையகங்கள் உள்ளன. இவை, முறையாக உரிமமோ பதிவோ செய்யவில்லை.


அங்குள்ள பிராணிகளை முறையாக பராமரிப்பதில்லை. அவர்கள் முறையான உரிமம் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டும், மாநில விலங்குகள் நலவாரியத்துக்கு அமலாக்க அதிகாரிகள் நியமிக்காததால், மாநிலம் முழுவதும் விதிமீறல்கள் அதிகமாக நடக்கின்றன.



சென்னையில் மட்டும், ஆண்டுக்கு ரூ. 10 கோடி அளவுக்கு ‘பிஸ்னஸ்’ நடக்கிறது. செல்லப் பிராணிகள் கடைகளில் விற்கப்படும் விலங்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், அவற்றில் 40 சதவீதம் அளவிற்கு இறந்துவிடுகின்றன. எனவே, தமிழக அரசு விலங்குள் நலவாரியத்துக்கு, போலீஸ் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து புதிய அமலாக்க பிரிவு அதிகாரிகளை நியமித்து, அனைத்து செல்லப் பிராணிகள் கடைகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


.


No photo description available.

No comments:

Post a Comment