Saturday 3 October 2020

HUMANITY MEANS WHAT ?

 

HUMANITY MEANS WHAT ?


கிட்டு மாமாவை யாருக்கெல்லாம் தெரியும், 



அவரை தெரியணும்னா திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் தாண்டி தெப்பக்குளம் பக்கம் காலேஜ், பின்புற ரோட்டில் பார்க்கலாம், 


அதுவும் ஆறு மணிக்கு மேல் தான்


 ஒரு தள்ளு வண்டி, மூணு மடக்கு டேபிள், ஸ்டூல் 

ஒரு தண்ணி கேன், கூட மாமி, சின்ன பையன் உதவிக்கு, 


இவருக்கும் 65வயசு இருக்கும், 


காவி வேஷ்டி, மேல துண்டு போட்டுனு பம்பரமா தோசை, கல்லில் தோசை போடுவார், பக்கத்துல இட்லி வேகும், 


சாப்பிடுவதும் போவதுமா இருப்பார்கள்,, 


வேலை முடிந்து போகும் ஹாஸ்டல் பெண்கள் டிபன் வாங்கி போவார்கள், 


வீட்ல சாப்பிட்ட திருப்தி வரும்,, 


மூணு சட்னி, மிளகாய் பொடி எண்ணெய் குழப்பி 

இருக்கும், 20ரூ இருந்தா நிம்மதியா சாப்பிடலாம்,, 


11மணிக்கு முடியும்,, ஏன்னா.. அந்த பக்கம் உள்ள, பஸ் டிரைவர், கண்டக்டர், லாரி, ஆட்டோ காரர், கை வண்டி காரர்கள் என தினம் சாப்பிடுபவர்கள் உண்டு,, 


பேசவே மாட்டார்.. ஆனா பேசினா எல்லா பாஷையும் பேசுவார்,


எங்கோ வட நாட்டில் வேலை பார்த்தாராம், 


திருச்சி பொன்மலை தான் பூர்வீகம், 


லீவுல ஊருக்கு வந்தவர், அப்பா இறந்து, அம்மாவும் இறந்ததால,, அவர் அப்பா கேன்டீன்ல வேலை பார்த்த இடத்தில், 300ரூ கடன், 


அவர் கடனை அடைக்க, வேலை பார்த்தார்,, 


ஹோட்டல் நஷ்டம் வந்ததால், ஓனர், அவரின் பையன் சென்னைல இருந்ததால்,, அங்கேயே போய்ட்டாரு, 


போகும் போது,, கொஞ்சம் பாத்திரம், கரண்டி,அடுப்பு  எல்லாம் கொடுத்து,,

 இதை நீ வச்சுக்க,, 

உங்க அப்பா ரொம்ப நாள் உழைப்பு,, கடை ஓடினா, உன்னை விட மாட்டேன்,, 



கடனுக்கு உன்னை வச்சுருக்கேன்னு நினைச்சியா,, உங்க அப்பா,, என்கிட்ட சொல்வார், எனக்கு சொந்த பந்தம் இல்லை,, 


என் பையன் கஷ்டம்னா நீங்க உதவணும்,, அதுக்கு தான் உன்னை நிறுத்தி வச்சேன், 


அவர்  சொன்னார்னு சொல்லி கொஞ்சம் 

பணமும் தந்தார், 


அது முதல், இந்த ரோட்டில் கடை,, 

இந்த இடம், நாக நாதர் கோவிலுக்கு சொந்தம்,


கோவிலுக்கு கொஞ்சம் வாடகை தந்து, வியாபாரம், 


அந்த மாமியும் அவரும், பக்கதில், ஸ்டோர் 

வீட்டில், வாடகைக்கு உள்ளனர்,


எல்லோரும் ரொம்ப மரியாதையா நடந்தப்ப

கண் த்ருஷ்டி போல், அந்த சம்பவம், 


"  என்ன ஐயரே... டிபன் தருவியா.." என்றார், 

அந்த பகுதி கவுன்சிலர்.. பாண்டியன், 


நல்ல குடி, நெடி..மாமி,, கன்னத்தில் போட்டு கொண்டாள்.

.பிள்ளையாரப்பா என்ன சோதனை,, 


அவன் அந்த பகுதியில் அடாவடி வசூல் செய்பவன், கூட இரண்டு தடியன்கள்,, 


எப்போதும் ஆடிகொண்டே, கத்தியவாறு, செல்வான், 


இன்று என்ன,, இங்க... 


சாப்பிட்டு.. எழுந்து சென்றான்,, 


இங்க ஏன் வந்தான்,, என

ஒரு நிமிஷம் யோசித்தார் கிட்டு மாமா,, 


வியாபாரம்.. யாரானா என்ன... 


"பணம் தராம போறேளே.. என்றாள்..மாமி. 


"ஏ மாமி,, என்கிட்டயே பணம் கேட்பியா,, "


தோசையை நிறுத்தி,, கிட்டு மாமா ஓடி வந்தார்,, 


"என்ன அண்ணா பணம் தராம போலாமா " என..

போதை உச்சி அவரை பிடித்து தள்ளினான்,, 


மாவு குண்டாவை தள்ளி விட்டான்,, 


பாவி.. பாவி,, பிள்ளயார் தண்டிப்பார் 

என கத்தி மாமாவை, தூக்க போனா,, 


"ஏன்யா, ஐயிரு நீ,, என்னையே,, குரல் குடுக்கரயா.. என பூணலை பிடித்து இழுக்க." வந்தான், 


வந்ததே கோபம்,, கிட்டு மாமாவுக்கு..


கையில் கிடைத்த மூங்கிலை ஒரு சுத்து சுத்தினார், 


ஒரு தள்ளில் விழுந்தான்,, 


"விட்டுடுங்க சாமி.." என

உடன் வந்த இருவரும் கெஞ்சினர், 


"பிராம்மணன் தாண்டா,, வேலையை  வச்சு சாதாரணமா நினைக்கலாம், ஆனா, இந்த பூணல் வேதஸ்வரூபம் டா... தொலைச்சுடுவேன்,, "


"நீ பண்ற ரவுடித் தனம் என்னாலயும் பண்ண முடியும்,, "

"உழைச்சு சாப்பிட்றேன்,,,


 சிலம்பம், குஸ்த்தி கத்தவன் தான்... பார்க்கிறாயா என மூங்கிலை ரெண்டு சுத்து சுத்தினார் மீண்டும்.. "


ஜனம்  பூரா வேடிக்கை பார்த்தது,,


"நாளைக்கு நீ காலி அய்யரே... என் ஆட்களுடன் வந்து என்ன பண்றேன்,, ஓடி போயிடு,, கட்சிக் காரன்.. நான்,, "என கூறி  சென்றான் கவுன்சிலர்.. 


வேறு மாவு எடுத்து,, வேலையைத் துவங்கினார், 


கேள்விப்பட்ட வாடிக்கையாளர்கள்,, சாமி கம்பளைண்ட் பண்ணுங்க,, 


"நாளைக்கு நாங்க உங்க கூட இருக்கோம்,, 

கவலைப்படாத சாமி என்றனர்,, கூலிக் காரர்கள், 


அந்த வேதனையில் கூட கிட்டு மாமாவுக்கு சந்தோசம்,, "நாம நல்லா தான்டா வாழ்ந்திருக்கோம் "என பட்டது மனதுள்.. 


மறுநாள் மாலை,, வழக்கம் போல், உச்சி பிள்ளையாரை வணங்கி,, வியாபாரம் ஆரம்பிச்சார்,, 


நேரம் ஓடியது,, 


கடை முடிந்தும்,, கவுன்சிலரை காணோம்,, 


அடுத்த நாள், மாலையும் காணோம்,, 


மூடும் அரை மணி முன் இருவர் சாப்பிட்டு கொண்டே பேசினர், 


 "உனக்கு விஷயம் தெரியுமா.. சண்டை போட்டானே, சாமிகிட்ட,, "

"போகும் போதே லாரி மோதி,, தலைல அடி,, "


"GH ல icu ல இருக்கான்,, ஏதோ,, கிடைக்காத

ரத்தமாம்,,, அதனால், ஆபரேஷன் பண்ண ரத்தம் வர காத்திருக்காங்கலாம்,, TV ல கூட 

வந்துது.. "


சாமி போல் நல்லவங்க மனம் நொந்தா,, 

தண்டனை கிடைக்காது போகுமா.. 


நான் ரெண்டு நாள் சம்பளம் வரல, பணம் இல்லைனு, இரவு சாப்பிட வரல,, 11மணிக்கு வந்து,, தூங்கின என்னை எழுப்பி,, இட்லி பொட்டலம் தந்தார்,, சாப்பிடு,, பணம்,, எங்க போகுதுன்னார்,, "


"எனக்கு அழுகை வந்துடுத்து... "


"ஆனா, சாமிக்கு வந்துது பார் கோபம் .கவுன்சிலர் மேல்..  "


சினிமா போல் இருந்தது என முணுமுணுத்து பேசினர், 


கிட்டு மாமா, கடையை மூடினார், 


மனைவியை வீட்டுக்கு போகச் சொல்லிட்டு,, 

ஹாஸ்பிடல் போனார்,, 


ICU ல கவுன்சிலர் பாண்டியனை பார்க்க.. 


"என்ன,..", என்ற டாக்டரிடம், 

அவர் தெலுங்கு என்றதும் தெலுங்கில், 

"sir என் blood எடுத்து பாருங்க,,, match ஆகும்.." என்றார், 


பெரியவரே,, உங்க வயசுல,, வேண்டாம், 

நிறைய பேர்க்கு பார்த்து ஒத்து வரல,, 


இல்லை sir கண்டிப்பா match ஆகும் என்றார், 


நர்ஸ், இவரை கூட்டிட்டு போங்க, லேப்க்கு,


 சிறிது நேரத்தில் check செய்து, ரத்தம் பொறுந்தி .. ஒரு மணியில்,,, 

ஆபரேஷன் முடிந்தது... 


அங்கேயே அமர்ந்திருந்தார்.. 


கவலை படாதம்மா.. நல்லாகிடுவார்..


குடும்பத்தினர் நன்றி என்றனர்,,


காலை, கண் விழித்ததும்,, டாக்டர் பெஞ்சில் உட்கார்ந்திருந்த கிட்டு மாமாவிடம் வந்து,, 

"Sorry பெரியவரே...உண்மையில் நல்ல மனசு.. "

"வாங்க.. "என கூட்டி சென்றார்,, 

ICU  விற்கு,, 


கட்டிலில், இருந்த கவுன்சிலர் பாண்டியன் கை கூப்பிட வணங்கினான், 


கண்ணீர் வழிந்தோடியது,, 

தட்டி கொடுத்தார். 


பூணல்ல கை வச்சதால டென்ஷன் ஆகிட்டேன், 

தர்மம்,,, அது 


இப்போ உனக்கு ரத்தம் குடுத்தது,, இதுவும் தர்மம் தான்,,


உனக்கும் ஒரு குடும்பம் இருக்கு, அதனால...  மனிதம் கூடியது, என்றார் கிட்டு மாமா, 


சீக்கிரம் சரியாகிடும்... எதையும் யோசிக்காம தூங்கு... 

வாழ்த்துக்கள்... என கூறி சென்ற கிட்டு மாமாவை எல்லோரும் பார்த்து கொண்டே இருந்தனர்,, 

நன்றியுடன்....


இது தான் உண்மை யாகவே  மனிதநேயம்


Seshadri Venkatesan

No comments:

Post a Comment