ACTOR MADHAVAN , HINDI /TAMIL
BORN 1970 JUNE 1
ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1] திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார்.[2] சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.[3] மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அலைப்பாயுதே. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் ஹீரோவாக மாறி பெண்களின் கனவுநாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவருக்கெனவே ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அப்பொழுதே அவருக்கு திருமணமாகிவிட்டது என கேள்விபட்டதும் பெண் ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளானர். மேலும் அவருக்கு தற்போது தோலுக்கு மேல் வளர்ந்த பெரிய மகன் உள்ளார்.மேலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த படம் இறுதி சுற்று. அப்படத்தில் தலைமுடி, தாடி எல்லாம் நரைத்த பின்பும் அவரது சாக்லேட் ஹீரோ தன்மை மட்டும் குறையாமல் பெண்களை கட்டி இழுத்தது.இவ்வாறு தற்போதும் லேட்டஸ்ட் ஹீரோக்களுக்கு போட்டிக்கொடுக்கும் வகையில் மாதவன் இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் வருண் தேஜிற்கு அப்பாவாக மாதவன் நடிக்கின்றார் என்ற செய்தி பரவி வந்தது.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் இது உண்மையா என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதனை கண்ட மாதவன் இது முற்றிலும் பொய், நான் இன்னும் சிறிய பையன்தான் என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார். இதன் பின்னரே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிலையில், இந்துக்கள் ஆவணி அவிட்டத்தையும் சேர்த்தே கொண்டாடினார்கள். வட இந்தியர்கள் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்களை சுதந்திர தின வாழ்த்துக்களுடன் பரிமாறிக் கொண்டார்கள்.
நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிலையில், இந்துக்கள் ஆவணி அவிட்டத்தையும் சேர்த்தே கொண்டாடினார்கள். வட இந்தியர்கள் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்களை சுதந்திர தின வாழ்த்துக்களுடன் பரிமாறிக் கொண்டார்கள். இந்நிலையில், நடிகர் மாதவன், தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சார்.
madhavan
ரசிகர்களுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்த மாதவன், ரக்ஷாபந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களையும் கூறி, தான் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றிய குடும்ப புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். நடிகர் மாதவன் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர், மாதவனின் வீட்டுப் பூஜையறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அதுயென்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து விட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம் தான்” எனப் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு காட்டமாக பதிலடியை கொடுத்துள்ள மாதவன், ”உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. விரைவில் நீங்கள் உங்களுக்கு பிடித்துள்ள நோயிலிருந்து குணம் அடைவீர்கள். உங்களது நோய்க்கு இடையே நீங்கள் அங்கிருந்த பொற்கோயில் படத்தைப் பார்க்கவில்லை,
இல்லையெனில் சீக்கிய மதத்துக்கு மாறினேனா? என கேள்வியை கேட்பீர்கள். எனக்கு தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது.
உலகில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களில் இருந்தும் எனக்கு ஆசிர்வாதம் உள்ளது. அங்கிருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்துள்ளது; சிலவற்றை நானே வாங்கி உள்ளேன். என்னுடைய வீட்டில் எல்லா மத நம்பிக்கையை சேர்ந்தவர்களும் பணி செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். அனைத்து படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர். எனது சிறு வயதியிலிருந்தே இது எனக்கு கற்பிக்கப்பட்டது. ஆம், எனது அடையாளத்தை பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில், எல்லா
மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்று கொடுக்கப்பட்டுள்ளது.
எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனை பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்கு செல்வேன், குருத்வாராவுக்கு செல்வேன். தேவாலயத்துக்கு செல்வேன். அருகில் கோவில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படி திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துப்பட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்று கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லி கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும் எனக் குறிப்பிட்டிருக்கார்
ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1] திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித்
தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார்.[2] சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.[3] மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அலைப்பாயுதே. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் ஹீரோவாக மாறி பெண்களின் கனவுநாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவருக்கெனவே ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அப்பொழுதே அவருக்கு திருமணமாகிவிட்டது என கேள்விபட்டதும் பெண் ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளானர். மேலும் அவருக்கு தற்போது தோலுக்கு மேல் வளர்ந்த பெரிய மகன் உள்ளார்.மேலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த படம் இறுதி சுற்று. அப்படத்தில் தலைமுடி, தாடி எல்லாம் நரைத்த பின்பும் அவரது சாக்லேட் ஹீரோ தன்மை மட்டும் குறையாமல் பெண்களை கட்டி இழுத்தது.இவ்வாறு தற்போதும் லேட்டஸ்ட் ஹீரோக்களுக்கு போட்டிக்கொடுக்கும் வகையில் மாதவன் இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் வருண் தேஜிற்கு அப்பாவாக மாதவன் நடிக்கின்றார் என்ற செய்தி பரவி வந்தது.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் இது உண்மையா என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதனை கண்ட மாதவன் இது முற்றிலும் பொய், நான் இன்னும் சிறிய பையன்தான் என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார். இதன் பின்னரே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிலையில், இந்துக்கள் ஆவணி அவிட்டத்தையும் சேர்த்தே கொண்டாடினார்கள். வட இந்தியர்கள் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்களை சுதந்திர தின வாழ்த்துக்களுடன் பரிமாறிக் கொண்டார்கள்.
நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிலையில், இந்துக்கள் ஆவணி அவிட்டத்தையும் சேர்த்தே கொண்டாடினார்கள். வட இந்தியர்கள் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்களை சுதந்திர தின வாழ்த்துக்களுடன் பரிமாறிக் கொண்டார்கள். இந்நிலையில், நடிகர் மாதவன், தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சார்.
madhavan
ரசிகர்களுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்த மாதவன், ரக்ஷாபந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களையும் கூறி, தான் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றிய குடும்ப புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். நடிகர் மாதவன் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர், மாதவனின் வீட்டுப் பூஜையறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அதுயென்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து விட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம் தான்” எனப் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு காட்டமாக பதிலடியை கொடுத்துள்ள மாதவன், ”உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. விரைவில் நீங்கள் உங்களுக்கு பிடித்துள்ள நோயிலிருந்து குணம் அடைவீர்கள். உங்களது நோய்க்கு இடையே நீங்கள் அங்கிருந்த பொற்கோயில் படத்தைப் பார்க்கவில்லை, இல்லையெனில் சீக்கிய மதத்துக்கு மாறினேனா? என கேள்வியை கேட்பீர்கள். எனக்கு தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது.
உலகில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களில் இருந்தும் எனக்கு ஆசிர்வாதம் உள்ளது. அங்கிருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்துள்ளது; சிலவற்றை நானே வாங்கி உள்ளேன். என்னுடைய வீட்டில் எல்லா மத நம்பிக்கையை சேர்ந்தவர்களும் பணி செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். அனைத்து படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர். எனது சிறு வயதியிலிருந்தே இது எனக்கு கற்பிக்கப்பட்டது. ஆம், எனது அடையாளத்தை பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில், எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்று கொடுக்கப்பட்டுள்ளது.
எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனை பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்கு செல்வேன், குருத்வாராவுக்கு செல்வேன். தேவாலயத்துக்கு செல்வேன். அருகில் கோவில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படி திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துப்பட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்று கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லி கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும் எனக் குறிப்பிட்டிருக்கார்
.
சென்னை: கொடைக்கானலில், நடிகர் மாதவனுக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், நடிகர் மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த என்.கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கொடைக்கானலில் தொடங்கும் ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி வழியாக பாலாறு அணையில் முடிவடைகிறது. ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி கிராமங்களின் முக்கிய நீராதாரமாகும். பாலசமுத்திரத்தில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தை, நடிகர் மாதவன் வாங்கினார். அந்த நிலம் வழியாக செல்லும் ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை நடிகர் ஆர். மாதவன் ஆக்கிரமித்துள்ளார். இவருக்காக வாய்க்காலில் மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றியுள்ளனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தபோது, மின்வாரிய செயற்பொறியாளர் ஆய்வு நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். ராஜவாய்க்கால் பயன்பாடு இல்லாமல் இருப்பதாக ஆட்சியரிடம் செயற்பொறியாளர் அறிக்கை அளித்தார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடர்ந்து புகார் அளித்ததால், நடிகர் மாதவன் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளது. இதனால் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் வெள்ளப்பாதிப்பு ஏற்படும். இதனால் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றவும், மின் கம்பங்களை அகற்றவும் உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு நடிகர் ஆர்.மாதவன், திண்டுக்கல் ஆட்சியர், மின்வாரிய செயற் பொறியாளர் மற்றும் பழநி வட்டாட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற ஜூலை 11-க்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment