SAI PALLAVI ,SOUTH INDIAN ACTRESS/ DANCER,/ DOCTOR BORN 1992 MAY 9
சாய் பல்லவி செந்தாமரை (Sai Pallavi Senthamarai) என்பவர் திரைப்பட நடிகை பொதுவாக சாய் பல்லவி என்ற பெயரால் அறியப்படுகிறார்.[1] இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது.[2][3]
சாய் பல்லவி தன்னுடைய தொழில் மூலம் சுகாதாரத்துறையுடன் தொடர்பில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு, சியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.[4]
தொடக்கக்கால வாழ்க்கை
தமிழ் நாட்டிலுள்ள கோத்தகிரியில் [5] செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா கண்ணன் ஆகியோருக்கு மகளாக சாய் பல்லவி பிறந்தார். இவருடைய இளைய சகோதரி பூசா கண்ணன் ஆவார். இவரும் ஒரு திரைப்பட நடிகையாவார்.[6] சாய் பல்லவி வளர்ந்தது கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூர் ஆகும். சாய் பல்லவி 2016 இல் சியார்ச்சியா நாட்டில் டிபிலிசு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார்.[7].
வாழ்க்கைப் பணி
சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த தீராத ஆசை காரணமாக இவர் 2008 ஆம் ஆண்டு விசய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்நேர நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார். 2009 இல் இ.டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டேன்சு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
திரைப்பட வாழ்க்கை
தொடக்கத்தில் சாய் தாம் தூம், கசுத்தூரி மான் போன்ற சில திரைப்படங்களில் தோன்றினார்.[8][9] 2014 ஆம் ஆண்டில் சியார்ச்சியாவிலுள்ள டிப்லிசியில் சாய் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் அல்போன்சு புத்தாரென் தன்னுடைய பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். கல்லூரியின் விடுமுறை நாட்களில் மட்டும் சாய் படத்தில் நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் சாய் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பிவிடுவார்.[10][11] அந்த ஆண்டில் சாய் பிலிம்பேரின் சிறந்த அறிமுக பெண் நடிகை உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.
2015 ஆம் ஆண்டில் சாய் பல்லவி தன்னுடைய இரண்டாவது திரைப்படமான கலியில் நடித்தார். இப்படம் 2016 இல் வெளியிடப்பட்டது.[12][13][14].
ஒரு கணவனின் பொல்லாத கோபத்திற்கு ஆளாகும் அஞ்சலி என்ற இளம் மனைவியாக சாய் இப்படத்தில் நடித்தார், மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதிற்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.[15][16].
2017 ஆம் ஆண்டு தெலுங்கில் சேகர் கம்முலாவின் பிடே என்ற திரைப்படத்தில் தெலுங்காணாவிலிருந்து வரும் பானுமதி என்ற சுதந்திரமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.[17][18][19].
இயக்குநர் ஏ.எல். விசயின் கரு என்ற திரைப்படம் இவருக்கு அடுத்த படமாக அமைந்தது.[20] தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
மாரி என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்படும் மாரி 2 என்ற திரைப்படத்தில் தனுசுக்கு எதிரான நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரு மொழித் திரைப்படமாக எடுக்கப்படும் இப்படத்தை பாலாசி மோகன் இயக்குகிறார்.[21][22]
சமீபத்தில் சாய் பல்லவியின் நடத்தையைப் பற்றி சில வதந்திகள் கூறப்பட்டன. படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதாகவும் தளத்தில் அநாகரிமாக நடந்து கொள்ளுவதாகவும் அண்மையில் ஒரு நேர்காணலில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்கும் நாகசூரியா தெரிவித்துள்ளார். இப்பேட்டி சாய் பல்லவியின் திரை வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.[23]
நாகசூரியாவின் கருத்துக்களை தான் பெரிதும் மதிப்பதாகவும், ஆனால் அந்த வதந்திகள் எங்கிருந்து வந்தன என்பது தெரியாது என்றும் பல்லவி தெரிவித்துள்ளார்.[24][25] சர்வானந்த் உடன் படிபடி லெச்ச மனசு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க, 2018 பிப்ரவரியில் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி தான் சாய் பல்லவி. இவர் முதன்முதலில் தனியார் தொலைக்காட்சியில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார். தனது வாழ்க்கையில் மருத்துவப் படிப்பை குறிக்கோளாக வைத்து படித்து வந்த இவர் இன்று பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார். இது போன்ற மாற்றங்களை தந்து நமக்கு பிடித்தால் எந்த துறைக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் அதற்கு முயற்சி மட்டும் போதுமென்று எல்லோருக்கும் புரிய வைத்துள்ளார்.
சாய்பல்லவி யின் வாழ்க்கை தொடக்கம்
செந்தாமரைக் கண்ணன் மற்றும் ராதா இருவருக்கும் 9 மே 1992 ஆம் ஆண்டு கோத்தகிரியில் பிறந்தார். இரட்டை சகோதரிகளாக பிறந்த இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள அவிலா பள்ளியில் படித்தார்கள். சாய்பல்லவி ஜார்ஜியாவில் உள்ள பில்லிசி மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை பயின்று வந்தார்.
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை
நடனம் ஆடுவதில் அதிக ஆர்வத்தைக் கொண்ட இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக “கஸ்தூரிமான்” என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சின்னத்திரையில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றார். இவர் நடந்ததற்கான எந்த பயிற்சியும் பெறாமல் தன் தாய் நடனம் ஆடுவதை பார்த்து பள்ளி, கல்லூரிகளில் நடனப் போட்டியில் கலந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் இந்த விருதை தட்டிச் சென்றார். தெலுகிலும் சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். 2008 ஜீவா இயக்கத்தில் வெளிவந்த “தாம்தூம்” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்திருந்தார்.
வாழ்க்கையை மாற்றிய படம்
2018 ஆம் ஆண்டு தான் எதிர்பார்க்காத நேரத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் அழைப்பு வந்ததுள்ளது அவரின் அடுத்த படத்தில் சாய் பல்லவியை கதா நாயகியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் விளையாட்டாக அழைக்கிறார்கள் என்று எண்ணி தயங்கிய சாய்பல்லவி நடிக்க ஒப்புக்கொண்டார். அதுதான் இன்றளவும் பேசப்படும் மிகப்பெரிய வெற்றிப்படமான “பிரேமம்”. இந்த படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றார்.தமிழ் மற்றும் தெலுங்கு
இதைத் தொடர்ந்து மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் “காளி” என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான “பீடா” என்ற படத்தில் நடித்திருந்தார். அதை தமிழில் பானுமதி என மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள். இத்திரைப்படம் குடும்பத்தினர் அதிகமாக பார்த்த படம் என்ற பெருமையைப் பெற்றது.
தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் “தியா” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தனுஷுடன் “மாரி”, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் “என் ஜி கே” போன்ற படங்களில் நாயகியாக வலம் வந்தார்.
சமீபத்தில் சாய் பல்லவியின் நடத்தையைப் பற்றி சில வதந்திகள் கூறப்பட்டன. படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதாகவும் தளத்தில் அநாகரிமாக நடந்து கொள்ளுவதாகவும் அண்மையில் ஒரு நேர்காணலில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்கும் நாகசூரியா தெரிவித்துள்ளார். இப்பேட்டி சாய் பல்லவியின் திரை வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.[23]
நாகசூரியாவின் கருத்துக்களை தான் பெரிதும் மதிப்பதாகவும், ஆனால் அந்த வதந்திகள் எங்கிருந்து வந்தன என்பது தெரியாது என்றும் பல்லவி தெரிவித்துள்ளார்.[24][25] சர்வானந்த் உடன் படிபடி லெச்ச மனசு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க, 2018 பிப்ரவரியில் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.
லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை, நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். #SaiPallaviசூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்து பகத் பாசிலுடன் ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். காதல், திருமணம், லிவிங் டூகெதர் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
‘நான் காதலித்திருக்கிறேனா, இல்லையா? லிவிங் டூ கெதர் உறவில் வாழ்வீர்களா என்று கேட்கிறார்கள். எனது கல்லூரி நாட்களில் நான் புத்தகங்களை காதலித்தேன். தற்போது சினிமாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை. இப்படி சொல்வதால் அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல.
இது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனக்கு அத்தகைய உறவு தேவையில்லை. நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SaiPallaviதமது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நமக்கும் இப்படி ஒரு டீச்சர் அமையாவில்லையே என்று பலரும் ஏக்கம் கொண்டனர்.ஆனால் சமீபத்தில் வெளியான சாய் பல்லவியின் உண்மையான சமீபத்தில் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.
தமிழ் சினிமாவையும் தாண்டி நம்மை கேரள சினிமாவை பார்க்க வைத்த காரணம் பிரேமம் மலர் டீச்சேர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சாய் பல்லவி.
.தற்போது தெலுகில் அ.ல் விஜய் இயக்கி வரும் கரு படத்தில் நடித்து வருகிறார் அவருடன் தெலுங்கு இளம் நடிகர் நாகா செளரியாவும் நடித்து வருகிறார்.தன்னுடன் நடித்து வரும் சாய் பல்லவி ஷூட்டிங் போது நிறைய கோவப்படுவர் சில சமயங்களில் அவர் செய்யும் செயல் எரிச்சலை அளிக்கும் என்று கூரியுள்ளார்.ரொம்ப கடுமையாகவும், முரட்டு தனமாகவும் நடந்துகொள்கிறார் சாய் பல்லவி. அவரால்தான் படம் ஹிட் ஆகப் போகிறது என நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அது உண்மையல்ல. அதனால் கொண்டிருக்கிறார். செய்வது எல்லாம் மிக இரிடேட்டிங்காக உள்ளது. மேலும் அவர் கூறுகயில் சாய் பல்லவி நடித்த ஃபிடா படம் கூட தன்னால் தான் என்று சாய் பல்லவி நினைப்பதாகவும், ஆனால் அது உண்மை இல்லை என்று நாகா செளரியா கூறினார். சாய் பல்லவி பல்லவி இதற்கு முன்னால் நானி உடன் நடிக்கும் போதும் இவ்வாறு நடந்து கொண்டதால் தான் சாய் பல்லவ்வியுடன் கருத்து மோதல் ஏற்ப்பட்டு அந்த பல்லவ்வியுடன் பாதியிலேயே கை விடப்பட்டது என்பது குறுப்பிட தக்கது.
தல் அறிமுக திரைப்படமான பிரேமம் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தனுஷுடன் மாரி2 திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டார். அந்த நடிகை சாய் பல்லவிதான் தான் தேம்பி தேம்பி அழுததாக தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அனைவரும் டிவி, திரைப்படங்கள், வெப் சீரிஸ் என வீட்டிலேயே தங்கள் நேரத்திற்கு கழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் சில்லுக்கருப்பட்டி படத்தை அவர் பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு அதிகம் எமோஷ்னல் ஆகி தேம்பி தேம்பி அழுதுவிட்டதாக கூறியுள்ளார்.
ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறிய சாய் பல்லவி. மேலும் படத்தை இயக்கிய ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறியுள்ளார் சாய் பல்லவி. அதில் அவர் கூறியிருப்ப தாவது.. “ஹெலோ ஹலிதா.. படத்தை பார்த்துவிட்டு நானும் என் பெற்றோரும் அதிகம் எமோஷ்னல் ஆகி தேம்பி தேம்பி அழுதுவிட்டோம். உங்களுக்காக நான் அதிகம் சந்தோஷப் படுகிறேன். இப்படி ஒரு உணர்வை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. நீங்க இது போன்ற பல ரத்தினங்களை உருவாக்க வேண்டும். எங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனை எப்போதும் உங்களுக்கு உண்டு” என கூறியுள்ளார் சாய் பல்லவி.
நின்ற நிலையில் தலை தரையில் படும்படி மந்திரிகளை வணக்கம் போட வைத்த யோகா மாஸ்டர் சசிகலா .உடலை எட்டுக்கோணல்களாக மடக்கிப் பெட்டிக்குள் போட்டுக்கொண்டு வந்த உலக சாதனையை செய்தவர் .அம்மாவும் சின்னம்மாவும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தின் விளைவு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் தவநிலையில் வைத்திருக்கிறது. ஏஎல் .விஜய் எடுக்கப்போவதாக முன்னர்
அறிவிக்கப்பட்ட ஜெ.வரலாறு படத்தில் சசி வேடத்தில் சாய் பல்லவி நடிக்கப்போவதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வலம் வருகின்றன. நடிப்பாரா என்ன? .
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ஆந்தாலஜி படம் 'லஸ்டு ஸ்டோரிஸ்'. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான விக்கி கவுஷல், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடிக்க கரண் ஜோஹர், ஜோயா அக்தர், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட இயக்குநர்கள் இயக்கி இருந்தனர். நெட்ஃபிளிக்ஸ் இணையத்தில் இந்தப் படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதையடுத்து, தமிழில் உருவாகும் ஆந்தாலஜி படம் ஒன்றை வெற்றி மாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நான்கு இயக்குநர்களும் ஒவ்வொரு கதையை எழுதி இயக்கவிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் ஆணவக் கொலையை மையமாக வைத்துதான் இந்த ஆந்தாலஜி படத்தை இயக்கவிருக்கின்றனர். அதில் விக்னேஷ் சிவன் இயக்கும் போர்ஷனில் அஞ்சலி, பாலிவுட் நடிகையும் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவியுமான கல்கி கோச்லின் ஆகியோர் நடிக்கின்றனர் என்ற செய்தி ஏற்கெனவே வெளியானது. இதைத் தொடர்ந்து, வெற்றி மாறன் இயக்கும் போர்ஷனில் பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். சாய் பல்லவி தற்போது ராணாவுடன் 'விரட்டபர்வம்' படத்திலும் நாகசைதன்யாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். பிரகாஷ் ராஜ் கைவசம் பல படங்கள் உள்ளன. தவிர, 'அசுரன்' வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன் சூரியை வைத்து காமெடி படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அந்தப் படம் நா.முத்துக்குமாரின் 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பில் உள்ள 20 வரி கவிதையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் மேனன் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது விரைவில் வெளியாகும்.
.
No comments:
Post a Comment