எம்.ஏ.கணபதி பட்
FORMER HUSBAND OF V.N.JANAKI
BORN 1923 NOV 30
வி.என்.ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்த பொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம். ஜி. ஆர். நடித்தார். எம்.ஜி.ஆருக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், எம்.ஜி.ஆருக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோஹினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் வி.என்.ஜானகியும் எம்.ஜி.ஆரும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் வி.என்.ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் வி.என்.ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. வி.என்.ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். எம்.ஜி.ஆர் அவரை தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். வி.என்.ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்.ஜி.ஆர் தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். [தகவல்: விக்கிப்பீடியா]
வளையாபதி [1952], ஜமீன்தார் [1952], ஷியாமளா [1952], என்.மகள் [1954], பெண்ணரசி [1955], மாமன் மகள் [1955], கோடீஸ்வரன் [1955], மாதர்குல மாணிக்கம் [1956], தங்கமலை ரகசியம் [1957], சபாஷ் மீனா [1957], நல்லதீர்ப்பு [1959], தலை கொடுத்தான் தம்பி [1959], பொம்மை [1964],ஆயிரம் ரூபாய் [1964], “தாயின் கருணை” [1965], மாடி வீட்டு மாப்பிள்ளை [1967], ஏன் [1974], ராஜாத்தி [1965] போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.
No comments:
Post a Comment