Friday 2 October 2020

LAL BAHADUR SHASTRY ,FREEDOM FIGHTER BORN 1904 OCTOBER 2 - 1966 JANUARY 11

 

LAL BAHADUR SHASTRY,FREEDOM FIGHTER ,PRIME MINISTER BORN 1904 OCTOBER 2 - 1966 JANUARY 11




சமுதாயத்தின் மிக எளிய நிலையிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்கள் மிகச் சிலரே. அவர்களில் முதன்மையானவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியதாக இருந்தாலும் சரி, 1965இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் பிரதமராக அவர் ஆற்றிய பணியாக இருந்தாலும்சரி, அவரால் முழங்கப்பட்ட 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் தலைமைப்பண்பையும், நிர்வாகப் பண்பையும் சரியாக வெளிப்படுத்தி தனது ஆளுமையை நிரூபித்த நாயகர்களின் உதாரணங்கள் சரித்திரத்தில் மிகக் குறைவாகவே காணக்கிடைக்கிறது. விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில், ஏழை எளிய பின்னணியில் இருந்து வந்து பங்கேற்கும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, லாலா லஜ்பத் ராய், இந்திய சமூக ஊழியர்கள் அமைப்பை (Servants of India Society) ஏற்படுத்தினார்.இந்த உதவித்தொகையை பெற்றவர் லால் பகதூர் சாஸ்திரி என்ற தகவலில் இருந்து அவரது ஏழ்மையான குடும்பச்சூழலை தெரிந்துக்கொள்ளலாம்.


லலிதா சாஸ்திரியின் பதில்





சாஸ்திரியின் குடும்பச் செலவுகளுக்காக மாதந்தோறும் 50 ரூபாய் வழங்கப்பட்டது. சிறையில் இருந்த சாஸ்திரி தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைக்கிறதா? 50 ரூபாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை பராமரிக்க முடிகிறதா என்று கேட்டிருந்தார்.

ணவரின் கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய லலிதா சாஸ்திரி, 50 ரூபாய் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இருப்பதாகவும், 40 ரூபாய்க்குள் செலவுகளை முடித்துக் கொண்டு மாதம் 10 ரூபாய் சேமிப்பதாகவும் தெரிவித்தார்.மனைவியின் கடிதத்தை படித்த சாஸ்திரி என்ன செய்தார் தெரியுமா? உடனே இந்திய சமூக ஊழியர்கள் அமைப்புக்கு கடிதம் எழுதிய அவர், தனது குடும்பத்தின் செலவுகளுக்கு 40 ரூபாய் போதும், மீதமுள்ள 10 ரூபாயை தேவைப்படும் பிறருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்!


அனில் சாஸ்திரியின் தவறு





சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி கூறுகிறார், "ஒருநாள் இரவு உணவுக்கு பின் என்னை அழைத்த அப்பா என்னை கண்டித்தார், எதற்கு தெரியுமா? பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கும்போது அவர்களின் முழங்கால் வரையே கைகள் செல்கிறது, அவர்களின் பாதத்தை தொடவில்லை".இந்திய சமுதாயத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பெரியவர்களை பார்த்ததும் அவர்களின் காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெறுவது என்பது இன்றும் வழக்கமாக தொடர்கிற ஒன்று. இன்று நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம், ஹலோ என்று முகமண் கூறுவது போன்ற பாரம்பரியமான பழக்கம்.அனில் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. தான் சரியாகத்தான் பெரியவர்களின் காலைத் தொடுவதாகவும், தனது சகோதரர்களில் யாராவது அவ்வாறு செய்திருப்பார்கள் என்றும் வாதிட்டார்.


உடனே சாஸ்திரி குனிந்து, தனது 13 வயது மகனின் பாதங்களைத் தொட்டு காண்பித்து, இப்படித்தான் பெரியவர்களின் கால்களைத் தொட்டு வணங்கவேண்டும் என்று சொன்னார்.தந்தை தனது கால்களை தொட்டதும் அவமானத்தால் குறுகிப்போன அனில் அழத் தொடங்கினார்.அன்று முதல் இன்று வரை தந்தை சொன்னது போலவே பெரியவர்களின் காலைத்தொட்டு வணங்குவதாக கூறும் அனில், இந்த சம்பவம் மனதில் நீங்கா வடுவாக பதிந்துவிட்டதாக நினைவுகூர்கிறார்.


இந்திய உள்துறை அமைச்சர்





இந்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றபோது, பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யர் அவரது பத்திரிகை செயலாளராக பணிபுரிந்தார்..டெல்லியில் மெஹ்ரோலியில் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு சாஸ்திரியுடன் வந்தபோது, ரயில்வே கிராசிங் மூடப்பட்டிருந்தது என்று பழைய நினைவுகளை நினைவு கூர்கிறார் நய்யர்.அருகில் கரும்புச்சாறு பிழிந்து கொண்டிருந்ததை பார்த்தார் சாஸ்திரி. ரயில்வே கிராசிங் திறப்பதற்குள் கரும்புச்சாறு குடித்துவிட்டு வந்துவிடலாம் என்று சொன்னார்.குல்தீப் பதிலளிக்க வாயை திறப்பதற்கு முன்பே வண்டியில் இருந்து கீழே இறங்கி, குல்தீப், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டிக்கு என அனைவருக்கும் கரும்புச்சாறு தேவை என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டார்.இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், கரும்புச்சாறு பிழிபவர் உட்பட அங்கு இருந்த யாருக்கும் உள்துறை அமைச்சரை அடையாளம் தெரியவில்லை.சாஸ்திரியை ஓரளவு அடையாளம் தெரிந்திருந்தாலும்கூட, உள்துறை அமைச்சர் இப்படி சாதாரண நபர்போல் கரும்புச்சாறு வாங்க வருவாரா, அதுவும் இந்த ரயில்வே கிராசிங்கில் என்றுதானே நினைத்திருப்பார்கள்?


தவணைக்கடனில் கார் வாங்கிய சாஸ்திரி





பிரதமராகும் வரை லால் பகதூர் சாஸ்திரிக்கு சொந்த வீடு மட்டுமல்ல, சொந்தக் கார் கூட கிடையாது. நாட்டின் பிரதமரான பிறகு, அப்பாவிடம் கார் இருக்கவேண்டும் என்று பிள்ளைகள் சொன்னதால் கார் வாங்க முடிவெடுத்தார் பிரதமர் சாஸ்திரி.அந்த காலகட்டத்தில் பியட் கார் 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. அவரது வங்கிக்கணக்கில் இருந்ததோ ஏழாயிரம் ரூபாய் மட்டுமே! தந்தையிடம் கார் வாங்க போதுமான பணம் இல்லை என்பதை தெரிந்துக் கொண்ட பிள்ளைகள் கார் வாங்காவிட்டால் பரவாயில்லை என்று சொன்னார்கள்.பரவாயில்லை என்று சொன்ன சாஸ்திரி, பற்றாக்குறையான பணத்திற்கு வங்கியில் இருந்து கடன் வாங்கலாம் என்று சொன்னார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி, கார் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்பே இயற்கை எய்திவிட்டார் பிரதமர் சாஸ்திரி.


இந்திராவின் சலுகை


சாஸ்திரியின் மறைவுக்கு பின் பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.




ஆனால் அதை மறுதளித்த லலிதா சாஸ்திரி தனது ஓய்வூதியத்தில் இருந்து கடனை அடைத்தார்.சாஸ்திரி இறந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகே அவரது காருக்கான கடன் அடைக்கப்பட்டது.அந்தக் கார் தற்போதும் டெல்லி லால் பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார் அனில் சாஸ்திரி.ரஷ்யாவில் லெனின்கிராடுக்கு சென்றிருந்தபோது, போல்ஷியோ திரையரங்கின் ஸ்வான் ஏரி பாலே காட்சியைப் பார்த்த சாஸ்திரி, அசெளகரியமாக உணர்ந்ததாக குல்தீப் நய்யர் கூறுகிறார்.


மகனின் ரிப்போர்ட் கார்ட்


பாலே நடனம் பிடித்திருக்கிறதா என்று நிகழ்ச்சியின் இடைவேளையில் சாஸ்திரிக்கு அருகில் அமர்ந்திருந்த குல்தீப் கேட்டதற்கு அவர் அப்பாவித்தனமாக அளித்த பதில் என்ன தெரியுமா?இந்த நடனப் பெண்களின் கால்கள் ஆடையில்லாமல் இருக்கிறது, மறுபுறத்தில் அம்மா (மனைவி லலிதாவை அம்மா என்று அழைப்பார் சாஸ்திரி) அமர்ந்திருக்கிறார், எனவே நடனத்தை பார்க்கவே வெட்கமாக இருப்பதாக சாஸ்திரி சொன்னார்.1964இல் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, அவரது மகன் அனில், டெல்லி செயிண்ட் கொலம்பஸ் பள்ளியில் பயின்றார். ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு போன்ற நடைமுறைகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில், ரிப்போர்ட் கார்டை பெறுவதற்கு மட்டுமே பெற்றோர்கள் பள்ளிக்கு செல்வார்கள்.தனது மகனின் ரிப்போர்ட் கார்டை வாங்க சாஸ்திரி சென்றார். பள்ளிக்கு சென்ற அவர் நுழைவாயிலிலேயே இறங்கிக்கொண்டார். அவர் பள்ளிக்குள் காரிலேயே செல்லலாம் என்று பாதுகாவலர்கள் சொன்னபோது, அதை மறுத்த பிரதமர், பிற தந்தைகளைப் போலவே பள்ளியின் நுழைவாயிலில் இருந்து நடந்து சென்றார்.


தாஷ்கண்ட் ஒப்பந்தம்


"முதல் தளத்தில் இருந்த 11ஆம் வகுப்பு பி பிரிவுக்கு வந்த அப்பாவைப் பார்த்த வகுப்பு ஆசிரியர் ரெவார்ட் டையன் வியப்படைந்தார். சார், நீங்கள் ரிப்போர்ட் கார்டை வாங்க வரவேண்டிய அவசியம் இல்லை என்று ஆச்சரியப்பட்டார். அதற்கு பதிலளித்த அப்பா, 'நான் கடந்த பல ஆண்டுகளாக பிள்ளைகளின் பள்ளிக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன், இனியும் அவ்வாறே செய்வேன்' என்று சொன்னார்" என்று தந்தையின் நினைவுகளில் மனம் கரைகிறார் அனில் சாஸ்திரி."ஆனால் நீங்கள் நாட்டின் பிரதமர்" என்று ஆசிரியர் சொல்ல, அதற்கு புன்முறுவலுடன் பதிலளித்த சாஸ்திரி, 'பிரதர் டையன் , நான் பிரதமரான பிறகும் மாறவில்லை, ஆனால் நீங்கள்தான் மாறிவிட்டீர்கள்' என்று சொன்னார்."


சாஸ்திரிக்கு அழுத்தம்


1966இல் தாஷ்கண்டில் இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சாஸ்திரிக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன.பாகிஸ்தானுக்கு ஹாஜி பீர் மற்றும் டீத்வால் ஆகிய பகுதிகளை திரும்பி அளிக்க வேண்டும் என்பது குறித்து இந்தியாவில் பலவிதமான சர்ச்சைகளும் எழுந்தன.இரவு வெகுநேரம் வரை தாஷ்கண்டில் இருந்து டெல்லியில் இருந்த பலருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.


இதுபற்றி குல்தீப் நய்யர் கூறுகிறார் "நான் போன் எடுத்ததும் அம்மாவிடம் போனைக் கொடு என்று சொன்னார். போனில் பேசிய சாஸ்திரியின் மூத்த மகள், அம்மா போனில் பேச மாட்டார்கள் என்று சொன்னார்.ஏன் என்று சாஸ்திரி கேட்டதற்கு, ஹாஜி பீர் மற்றும் டீத்வாலை பாகிஸ்தானுக்கு கொடுக்க நீங்கள் ஒப்புக் கொண்டதால் அம்மாவுக்கு கோபம் என்று பதில் கிடைத்தது.மனைவிக்கு தன்மேல் வருத்தம் என்பதைக் கேட்ட சாஸ்திரி அதிர்ச்சியடைந்தார்.

அறைக்குள்ளே சிறிது நேரம் யோசனையுடன் நடைபயின்றார். பிறகு தன்னுடைய செயலாளர் வெங்கட்ராமனுக்கு போன் செய்த சாஸ்திரி இந்தியாவின் எதிர்வினைகளை கேட்டார்.தாஷ்கண்ட் ஒப்பந்தத்தைப் பற்றி, இருவர் மட்டுமே அதுவரை கருத்து வெளியிட்டிருப்பதாக கூறினார் வெங்கட்ராமன்.

அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ண மேனன் இருவருமே எதிர்மறையான விமர்சனங்களை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.


சாஸ்திரியின் அகால மரணம்


குல்தீப் நய்யார் கூறுகிறார், "அந்த நேரத்தில் இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தம் உருவானதை கொண்டாடும் வகையில் தாஷ்கண்ட் ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் மது அருந்துவதில்லை என்பதால், என்னுடைய அறைக்கு வந்து படுத்துவிட்டேன். அடுத்த நாள் காலை சாஸ்திரியுடன் நான் ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டியிருந்தது. சாஸ்திரி இறந்துவிட்டதாக நான் கனவு கண்டேன். சற்று நேரத்தில் என் அறைக் கதவு தட்டப்பட்டது. நான் கதவைத்திறந்து வெளியே வந்தபோது, அங்கே நின்று கொண்டிருந்த ரஷ்ய பெண் சொன்னார், உங்கள் பிரதம மந்திரி இறந்துவிட்டார்.".

"உடைகளை மாற்றிக் கொண்டு நான் ஓடினேன். சாஸ்திரி இருந்த இடத்திற்குச் சென்றேன், அங்கு ரஷ்ய பிரதமர் கோசிகின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்தார். சாஸ்திரி இறந்துவிட்டார் என்பதை எனக்கு சைகை மூலம் அவர் சொன்னார். அறைக்குள் சென்றுபார்த்தபோது, பெரிய படுக்கையில் சிறிய உருவம் கொண்ட சாஸ்திரி படுத்திருந்தார். இரவு இரண்டரை மணிக்கு பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் வந்து துக்கத்துடன் சொன்ன வார்த்தைகள் இவை, "இந்தியாவையும் பாகிஸ்தானையும் நெருக்கமாக்கியவர் இவர்'' என்று.


உயர்ந்த குடிமகன் விருது

தாஷ்கண்ட் உடன்படிக்கைகளுக்குப் பிறகு, எளிமையான ஒரு பெரிய தலைவரின் தலைமையை இந்தியா இழந்தது நாட்டிற்கே துன்பகரமான சம்பவம்.

மரணத்திற்கு பிந்தைய விருதாக இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது பாரத ரத்னா 1966ஆம் ஆண்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் முடிவுக்கு வந்து அதற்கான உடன்படிக்கையில் பிரதமராக இறுதி கையெழுத்திட்ட பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தனது இன்னுயிரையும் தாஷ்கண்டிலேயே நீத்தார்.


.முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா?


புதுடெல்லி: முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ரஷ்யாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், இறந்த பிறகு அவரின் உடல் நீல நிறத்தில் இருந்ததது என்றும் கூறியுள்ள அவரின் மகன் அனில் சாஸ்திரி, இது தொடர்பான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் மரணம் குறித்த மர்மங்கள்  இன்னும் விலகாத நிலையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் இறப்புக் குறித்தும் மர்மங்கள் நிலவுகிறது.இந்நிலையில், லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி தனது தந்தையின் மரணத்தில் மர்மங்கள் உள்ளதென்றும், அவற்றை மத்திய அரசு வெளியிட்டு உண்மையை நாட்டிற்கு தெரியப்படுத்தவேண்டும் என்றும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தார்.


இது தொடர்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, அனில் சாஸ்திரி 3 முறை கோரிக்கை விடுத்திருந்தும் முறையான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதால், தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசிடமும் அவர் முறையிட்டுள்ளார்.இங்கிலாந்திடமிருந்து  விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு,  1964 ஆம் ஆண்டு மே மாதம் மறைந்தார். அதன் பிறகு இந்திய பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றார். பிரதமர் பதவியில் அவர் அமர்ந்து 2 ஆண்டுகள் முடிவடைதற்கு முன்பாகவே, முன்னாள் சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்ட்டில் மரணமடைந்தார். தாஷ்கண்ட்டில் அப்போது நடந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சாஸ்திரி சென்று இருந்தார்.


அவரின் மரணத்தால் இந்தியாவில்  கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. பாகிஸ்தானுடனான பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க,  அப்போதைய சோவியத் ரஷ்யா விடுத்த அழைப்பின்பேரில் சாஸ்திரி தாஷ்கண்ட் சென்று இருந்தார்.இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து, சாஸ்திரியின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவருவதற்கான உரிய ஆவணங்களை பாஜக அரசு  வெளியிடவேண்டும் என்று அவரின் மகன் அனில் சாஸ்திரி கோரிக்கை விடுத்திருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   




இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். 1962 இல் சீனாவுக்கு எதிரான தோல்வியின் பின்னர் நாட்டின் உடைந்த தன்னம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் மற்றும் 1965 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றவர் மேதகு லால் பகதூர் சாஸ்திரி ஆவார். போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றிற்கு வழிவகுத்ததும் இவர்தான். லால் பகதூர் சாஸ்திரி பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களைப் பார்க்கலாம். 


. 1 லால் பகதூர் என்பதுதான் இவரின் பெயராகும். இவரின் புலமையின் காரணமாக 1926 இல் காஷி வித்யாபீத் பல்கலைக்கழகம் இவருக்கு சாஸ்திரி என்ற பட்டத்தை அளித்தது. உண்மையில் சாஸ்திரி என்பது பட்டமாகும். 

தகவல் 2 சாஸ்திரியின் தாய் அவருக்கு 3 மாதமாக இருக்கும் போது கங்கையில் குளிக்கும்போது அவரை தொலைத்துவிட்டார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததைத் தொடர்ந்து, குழந்தையில்லாத ஒருவர் அவரை மீண்டும் அவருடைய தாயிடம் ஒப்படைத்தார். 

தகவல் 3 பள்ளி நாட்களில் சாஸ்திரி அவர்கள் தினமும் தலையின் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு கங்கையை நீந்தி கடந்தே பள்ளிக்கு செல்வார். காரணம் அவரின் குடும்ப வறுமை ஆகும். 


. தகவல் 4 உத்திர பிரதேசத்தில் காவல்துறை மந்திரியாக இவர் இருந்த போது கூட்டத்தை கலைக்க மக்களை லத்தியை கொண்டு அடித்து விரட்டுவதற்குப் பதிலாக தண்ணீரை கொண்டு மக்களை விரட்டிய முதல் அரசியல்வாதி இவர்தான். மக்களின் மேல் இவருக்கு இருந்த அக்கறைக்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 

தகவல் 5 திருமணத்தின் போது, சாஸ்திரி வரதட்சணையின் ஒரு பகுதியாக ஒரு காதி துணியையும் ஒரு ராட்டை சக்கரத்தையும் எடுத்துக் கொண்டார். .

.தகவல் 6 ஜவஹர்லால் நேரு ஒருமுறை இவரை பாதி நாகரிகம் அற்றவர் என்று கூறினார். ஏனெனில் லால் பகதூர் சாஸ்திரி எப்போதும் வேஷ்டியும், குர்தாவும் தான் அணிவார். 

தகவல் 7 சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக லால் பகதூர் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சாஸ்திரியின் மனைவி மாதம் 50 ரூபாய் ஓய்வூதியமாக பெற்றுவந்தார். ஒருமுறை அவர் மனைவி அதிலிருந்து மாதம் 10 ருபாய் சேகரித்து வைத்ததாகக் கூறினார். இதனால் கோபமுற்ற சாஸ்திரி தனது ஓய்வூதியத்தை குறைத்து, சில ஏழைகளுக்கு ரூ .10 கொடுக்குமாறு மக்கள் சங்கத்தின் ஊழியர்களிடம் கூறினார். 

.தகவல் 8 சாஸ்திரி 11 ஜனவரி 1966 அன்று அப்போதைய யு.எஸ்.எஸ்.ஆரின் தாஷ்கண்டில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார், ஆனால் அவரது மரணம் .


தமிழகத்துக்கு வந்த காந்தி, இங்குள்ள விவசயிகளின் நிலை கண்டு மேல் சட்டையில்லாமல் தான் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இருந்தார். அதற்காக அரை நிர்வாண மனிதர் என்ற விமர்சனத்தையும் எதிர்கொண்டார். ஆடையில் மட்டுமல்ல அனைத்திலும் எளிமையை கடைபிடித்து அதன் அடையாளமாக திகழ்ந்த மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தாள் கொண்டாடப்படும் இதே நேரத்தில் தான் ’அமைதியின் மனிதர்’ என்றழைக்கப்படும் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் 2ஆவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, காந்தியின் எளிமையை தனது கடைசி தருணம் வரை கடைபிடித்தார். தலைமைப்பண்பையும், நிர்வாகத்தண்மையையும் சரியாக வெளிப்படுத்திய சில உதராணங்களில் ஒருவராக திகழும் சாஸ்திரி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்குகிறார்.





லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.


வரலாறு[மூலத்தைத் தொகு]

லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் [1]. மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்குக் குழந்தை கிடையாது, எனவே இது தனக்குக் கடவுளின் பரிசு எனக் கருதி லால்பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். குழந்தையைக் காணாத லால்பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால்பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர் [2]..


லால்பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டார் [3]. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையைப் பார்க்க போனார். திரும்பும் போது படகுக்குக் கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்திக் கடந்தார் [4]. நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார்.[5]


மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குரு நானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் [6]. சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் [1]. 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரைக் கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது [7]. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது[3]. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார்[8]. பின் அவ்வமைப்பின் தலைவரானார்.


1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் [9]. அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்குத் திரும்பிவிட்டார் [10]. அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்குத் திரும்பினார்[10].


1937 ல் உத்திரப் பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணிக்கமர்ந்தார் [11]. 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாகத் தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார் [12]. 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்துக்கு பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளையும் ஆணைகளையும் ஒரு வார காலத்திற்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்[12]. இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்[13]. சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களைப் படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரட்சியாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்[9].


அமைச்சராக அரசில்[மூலத்தைத் தொகு]

இந்திய விடுதலைக்கு பிறகு சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குக் கம்பால் அடிப்பதற்குப் பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார் [14].


1951 ல் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும்.


1951 ல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை [15]. 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார் [3]. அப்போது அத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஓ.வி.அளகேசன். அடுத்து வந்த பொதுத்தேர்தலில் இவ்விபத்து பற்றிய பிரச்சாரம் செய்தே ஓ.வி.அளகேசன் தோற்கடிக்கப்பட்டார்.[16]


1957 ஆண்டு நடந்த பொது தேர்தலைத் தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்[3]. இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார் [17].


இலக்கிய ஆர்வம்[மூலத்தைத் தொகு]

லால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவர் எழுதிய நூலை முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்.[18]

பிரதமராக[மூலத்தைத் தொகு]

ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு காரணமாக இருந்தார். நேருவின் கொள்கையுடையரும் சமதர்மவாதியான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலதுசாரியான மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கு செலுத்தியது.


மாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார்[17]. இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது.


பாகிஸ்தான் போர்[மூலத்தைத் தொகு]

இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் [19].


“ நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்... ”

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார்.[20]. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.


இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் [21]. சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.


மரணம்[மூலத்தைத் தொகு]

போர் நிறுத்த சாற்றுதலுக்குப் பின் அதனை அமல்படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும்.


அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிர் பிரிந்து விட்டது. மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. பதவியில் உள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.[22]


ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்தார்.


சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள்.


எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.


கல்லறை[மூலத்தைத் தொகு]

காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. [18

Image may contain: 1 person, sitting

Image may contain: 3 people, people smiling, people sitting, indoor and closeup

Image may contain: 1 person

Image may contain: 1 person, smiling




இந்தியாவின் 2 வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 1904 அக்டோபர் 2 இல் பிறந்தார்


லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.

லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய் துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்தார் [1]. மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்கு குழந்தை கிடையாது, எனவே இது தனக்கு கடவுளின் பரிசு என கருதி லால் பகதூரை தன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். குழந்தையை காணாத லால் பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால் பகதூரை கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்பித்தனர் [2]..


லால் பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்கு சென்று தங்கிவிட்டார் [3]. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையை பார்க்க போனார். திரும்பும் போது படகுக்கு கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்கு பதிலாக ஆற்றை நீந்தி கடந்தார் [4].


மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குரு நானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் [5]. சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் [1]. 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரை கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது [6]. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 ல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது[3]. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார்[7]. பின் அவ்வமைப்பின் தலைவரானார்.


1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் [8]. அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்கு திரும்பிவிட்டார் [9]. அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்கு திரும்பினார்[9].


1937 ல் உத்திர பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணிக்கமர்ந்தார் [10]. 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்றார் [11]. 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்துக்கு பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளை\ஆணைகளை ஒரு வார காலத்திற்கு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்[11]. இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்[12]. சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களை படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரச்சியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்[8].


அமைச்சராக அரசில்[தொகு]

இந்திய விடுதலைக்கு பிறகு சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந் பல்ல பண்ட் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்து துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தை கலைப்பதற்கு கம்பால் அடிப்பதற்கு பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும் படி காவல் துறைக்கு உத்தரவிட்டார் [13].


1951 ல் காங்கிரஸ் செயற்குழுவுக்கு பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பானரவாக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும்.


1951 ல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை [14]. 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார் [3]. அப்போது அத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஓ.வி.அளகேசன். அடுத்து வந்த பொதுத்தேர்தலில் இவ்விபத்து பற்றிய பிரச்சாரம் செய்தே ஓ.வி.அளகேசன் தோற்கடிக்கப்பட்டார்.[15]


1957 ஆண்டு நடந்த பொது தேர்தலை தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராக பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்[3]. இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்கு காரணமாகவிருந்தார் [16].


இலக்கிய ஆர்வம்[தொகு]

லால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவர் எழுதிய நூலை முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்.[17]

பிரதமராக[தொகு]

ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு காரணமாக இருந்தார். நேருவின் கொள்கையுடையரும் சமதர்மவாதியான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலதுசாரியான மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கு செலுத்தியது.


மாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார்[16]. இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது.


பாகிஸ்தான் போர்[தொகு]

இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் [18].


“ நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்... ”

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார்.[19]. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.


இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் [20]. சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.


மரணம்[தொகு]

போர் நிறுத்த சாற்றுதலுக்கு பின் அதனை அமல் படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும்.


அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிரே பிரிந்து விட்டது.மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப் பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இவரே பதவியில் உள்ள போது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.[21]


இந்தியாவை உலுக்கிய நம்ப இயலாத செய்தியாக இருந்தது அது. உலகமும் கொஞ்சம் ஆடிப் போனது. ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்திருக்கிறார்.


சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள் என்பது சிலிர்க்க வைக்கும் செய்தி.


எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனைத் தான் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.


காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. [17]


இந்த அக்டோபர் 2ம் தேதியன்று தேசம் காந்தியினை வணங்கும், காமராஜரை நினைத்து கண்ணீர் சிந்தும். ஆனால் இந்த வரிசையில் வணங்கவேண்டிய பாரத முனிவர் ஒருவர் உண்டு


அவர் வாழ்க்கையும், அவர் மரணமும் ஏன் அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்கானது.


லால் பகதூர் சாஸ்திரி. இந்திய வரலாற்றில் எளிமைக்கும் நாட்டுபற்றிற்கும் தியாகத்திற்கும் பெரும் எடுத்துகாட்டனா மனிதர்.


அவர் வாழ்வினை படித்தால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், அந்த மனிதனை தேடிபிடித்து கட்டி அழ தோன்றும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றான் அந்த மாமனிதன்.


காமராஜர் போலவே அவரும் நம்ப முடியாத அதிசயம். அப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருக்கின்றான், ஆண்டிருக்கின்றான் என்பதில் நிச்சயம் கண்ணீரை துடைத்துவிட்டு பெருமை கொள்ளவேண்டும்.


அவர் பிறந்தது மகா ஏழ்மையான குடும்பம், ஆனாலும் கல்விக்காக போராடினார். கங்கையின் கிளைநதியினை நீந்தி கடந்தே பள்ளிக்கு சென்றார். புத்தகம் வாங்க பணமில்லா நிலையில் நண்பனின் புத்தகத்தை இரவல் வாங்கி அதையும் தெருவிளக்கில் படித்து வளர்ந்தவர். அந்த காட்சியினை கண்ட அவரின் ஆசிரியர் அவரை படிக்க வைத்தார். படித்து “சாஸ்திரி” பட்டம் வாங்கினார் லாஸ்பகதூர்.


சாஸ்திரி என்பது அவர் வாங்கிய பட்டம், குடும்ப பெயர் அல்ல‌


திலகரும் காந்தியும் அவரை அரசியலுக்கு உணர்ச்சியால் அழைக்கின்றார்கள். கதர் உடுத்தி காங்கிரஸ்காரர் ஆனார். கதரை விற்று சம்பாதித்த காசில்தான் தன் தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு போராட வந்தார்.


அது ஒரு மணிகூண்டில் சுதந்திர கொடியேற்றும் போராட்டம், கடும் போலிஸ் நெருக்கடியிலும் தந்திரமாக அந்த கூண்டில் ஏறி கொடியேற்றுகின்றார் சாஸ்திரி, அங்கே மகளிர் அணியில் கொடிபிடித்த அந்த லலிதாமணி அதனை கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றார். நாட்டுபற்றோரிடையே காதல் அந்த தருணத்தில் உருவானது, அவரை திருமணமும் செய்தார் சாஸ்திரி


இந்தியன் படத்தில் கமல் சுகன்யா காதல் இங்கிருந்துதான் திருடபட்டது. கதரை தவிர வேறு ஆடை அணியமாட்டோம் எனும் சத்தியத்துடன் அந்த திருமணம் நடந்தது.


நாட்டுக்காக சிறையெல்லம் சென்றுவிட்டு பின் சுதந்திர இந்தியாவில் ரயில்வே மந்திரியாக அமர்ந்தார் சாஸ்திரி


அவர்தான் ரயில்வே மந்திரி, ஒருமுறை கூட ஏசி கோச்சிலோ, கூபேயிலோ அவர் பயணித்தவரி ல்லை, மக்களோடு மக்களாக அமர்ந்திருந்தார். ஒருமுறை அவர் சற்றுதாமதமாக வர ரயில் அவருக்காக நிறுத்தபட்டிருந்தது. ஆத்திரமுற்ற சாஸ்திரி என் தவறுக்காக‌ மொத்த மக்களையும் காக்க வைத்த அந்த ஸ்டேஷன் மாஸ்டரை சஸ்பெண்ட் செய்கின்றேன் என அறிவித்துவிட்டு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ரயிலில் ஏறினார்.


தன் உதவியாளர் கார் வாங்கியதை காண்கின்றார், என் சம்பளமே கார் வாங்க போதாது எனும்பொழுது நீ எப்படி வாங்க முடியும்? முறைகேடு செய்தி ருப்பாய் உனக்கு இனி என்னிடம் வேலை இல்லை என விரட்டிவிட்டவர் சாஸ்திரி. வால்டர் வெற்றிவேல் விஜயகுமார் பாத்திரம் இப்படித்தான் உருவாக்கபட்டது.


அவர் பிரதமராக இருந்தபொழுது ஒரு பியட் கார் வாங்கினார், அவர் இறந்த பின் மாதாந்திர கட்டணம் செலுத்தமுடியாமல் அந்த கார் அவர் குடும்பத் தாரால் திருப்பி அனுப்பபட்டது.


அப்படியும் ஒரு பிரதமர் நம் நாட்டில் இருந்திருக்கின்றார், அவர் குடும்பமும் அப்படி இருந்திருக்கின்றது.


இப்படி ஒரு மனிதனை பார்க்க முடியுமா?


கல்லூரி விண்ணப்பம் சென்று வரிசையில் நின்று மயங்கி விழுகின்றான் அந்த இளைஞர், மயக்கம் தெளிவித்து கேட்கின்றார்கள், உன் முகவரி என்ன? அவன் சொன்னான் நான் லால்பகதூர் சாஸ்திரியின் மகன். அந்த கல்லூரி முதல்வரே கேட்கின்றார், ஒரு வார்த்தை சொன்னால் வீட்டுக்கே பாரம் அனுப்புவோமே?


அந்த இளைஞன் சொன்னான். என் தந்தையின் பெயருக்காக அப்படி நடந்தால் அவர் என்னை கல்லூரியில் சேர அனுமதிக்கவே மாட்டார்.


இவரை பற்றி நன்கு அறிந்த நேருவின் சகோதரி அவரின் இளைய மகனை சொந்த செலவில் லண்டனில் படிக்க வைத்தார். படித்து வந்த மகன் பெரிய கம்பெனியில் சேர்ந்தான். சந்தோஷமாக தந்தையிடன் விஷயத்தை சொன்னபொழுது கலங்கினார் சாஸ்திரி


“நீ படித்து வேலையில் சேர்ந்திருக்கின்றாய், ஆனால் உலகம் நானே உனக்கு உதவியதாக சொல்லும், இந்த வேலையினை விட்டுவிடு”


இப்படிபட்ட சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபொழுதுதான் தமிழகத்தில் அரியலூர் ரயில் விபத்து நிகழ்ந்தது. அண்ணா கும்பல் ஆர்பரித்தது, கலைஞரோ “அரியலூர் அழகேசா நீ அண்டு நாங்கள் மாண்டது போதும்” என கடுமையாக முரசொலியில் சாடினார்.


அந்த விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகினார் சாஸ்திரி, நேரு எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஆனால் மற்ற பொறுப்புகளை தொடர்ந்தார்.


(காமராஜரை மட்டுமல்ல, லால் பகதூர் சாஸ்திரியினையே திமுக படுத்திய பாடு கொஞ்சமல்ல..)


இந்நிலையில் காஷ்மீரில் கலவரம் அதிகரித்தது, சாஸ்திரியினை அழைத்த நேரு நிலமையினை அறிந்துவர சொன்னார், ஆனால் தயங்கி நின்றார் சாஸ்திரி


காரணம், அவரிடம் குளிருக்கு அணியும் ஆடை இல்லை. இதனை அறிந்த நேரு ஆச்சரிய படவில்லை, சாஸ்திரியின் குணம் அவருக்கு தெரியும். தன் குளிர் ஆடையினை கொடுத்தார்


குள்ளமான சாஸ்திரிக்கு அது நீளமாக இருந்தது, மனைவி அதனை வெட்டி தைத்து கொடுக்க காஷ்மீருகு கிளம்பினார் சாஸ்திரி


ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையோடு சென்ற காமராஜர், குளிர் உடை இல்லாமல் தவித்த சாஸ்திரி இருந்த மண்ணில்தான் மோடி பல்லாயிரம் மதிப்புள்ள உடைகளோடு வலம் வருகின்றார் என்பது வேறு விஷயம்.


காமராஜர் பதவி விலகி கட்சிக்கு வழிகாட்டியதையொட்டி கொஞ்சமும் யோசிக்காமல் அவ்வழி நடந்தார் சாஸ்திரி, அவர் பதவி விலகும் பொழுது சொன்னது இப்படித்தான்


“இருமுறை பதவி விலகியிருக்கின்றேன், அப்பொழுதெல்லாம் வறுமையினை சமாளிப்பது எப்படி என கற்றுகொண்டேன். இம்முறை அது கஷ்டமில்லை பாலும் காய்கறியும் கிடைத்துவிடுவதால் வாழ்வதில் சிரமமில்லை”


இப்படிபட்ட மனிதர்கள் இனி கிடைப்பார்களா?


அந்த மனிதன் கட்சிக்கு மகத்தான தொண்டாறறிய பொழுதுதுதான் நேருவின் மரணம் நிகழ்ந்தது, கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு எழுந்தது.


காமராஜரை அமர சொன்னார்கள். நானும் சாஸ்திரியும் வேறல்ல. நான் இருந்தால் என்ன செய்வேனோ அதனையே சாஸ்திரியும் செய்வார் என சொல்லி வழிவிட்டார் காமராஜர்.


ஜெய் கிசான் அதாவது உழவன் வாழ்க என்ற திட்டத்தை முன்னெடுத்து சென்றார் சாஸ்திரி, விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டமது.


அந்த 1965 மகா குழப்பமான வருடம்.


1962ல் சீன போரினை இந்தியா எதிர்பார்க்கவில்லை. இன்று ரோகிங்கியா அகதி போல வந்த திபெத்தியரையும் தலாய்லாமாவினையும் வரவேற்றதில் சீனா அடித்தது, கொஞ்சமும் யுத்தம் எதிர்பார்க்க சூழலில் பட்ட அடி அது. ஆனாலும் நேரு எனும் மாமனிதனுக்கு உலகில் இருந்த செல்வாக்கு காரணமாக சீனபோர் முடிவுக்கு வந்தது, ஆனாலும் இந்தியா பட்ட அடி அதிகம். அடியினை விட வலி அதிகம், எதிர்பாரா அடி.


நேரு வேறு இறந்துவிட்டார், இப்பொழுதுதான் சீனாவிடம் இந்தியா அடிவாங்கியிருக்கின்றது, இப்பொழுது இருக்கும் சாஸ்த்திரி சும்மா. இப்பொழுது அடித்தால் இந்தியா அலறும் என யுத்தம் தொடங்கியது பாகிஸ்தான். அதற்கு அமேரிக்கா ஒத்துழைப்பும் இருந்தது.


இந்தியாவில் சாஸ்திரி மகா உறுதியாக இருந்தார், ஜெய் கிசான் ஜெய் ஜவான் என்ற கோஷத்தில் அவர் இந்தியாவின் மகத்தான ஆளுமையாக மின்னினார்.


உலகம் அப்படி ஒரு தலைவன் உருவாகுவான் என நினைக்கவில்லை. கொஞ்சமும் அசரமால் துணிந்து நின்றார் சாஸ்திரி.


அமெரிக்கா பேட்டன் டாங்க் எனும் நவீன டாங்கிகளை பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்தது, அதுதான் பாகிஸ்தானின் துருப்பு சீட்டு. உடைக்க முடியாத டாங்கி என அதற்கு பெயர். தரைபடை வெற்றியினை அதுதான் தீர்மானிக்கும்


அந்த தைரியத்தில் இறங்கியது பாகிஸ்தான், பேட்டன் டாங்க் இந்தியாவிற்கு கடும் சோதனை கொடுத்தது, ஆரம்பத்தில் திணறிய இந்திய படை எப்படியோ ஒரு டேங்கினை பாகிஸ்தான் வீரரோடு சிறைபிடித்தது


மெதுவாக கேட்டார்கள், “அற்புதமான டாங்கி இதன் மூலம் நீங்கள் வெல்வீர்கள், இந்த பாதுகாப்புமிக்க பேட்டன் டாங்கிற்கு எந்த வழியாக டீசல் ஊற்றுவீர்கள்?”


நடிகர் செந்தில் பாணியில் பாகிஸ்தான் வீரன் சொன்னான் “இதோ இப்படித்தாணே”


அவ்வளவுதான் பேட்டன் டாங்கியினை அழிக்கும் முறையினை கண்டார்கள், இந்திய தாக்குதல் அதன் டீசல் டாங்கினை குறிவைத்தன, பேட்டர்ன் டாங்கிகள் எரிய தொடங்கின, தன் பெரும் ஆயுதம் அழிய தொடங்கியதில் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது.


இந்தியாவையே நடுநடுங்க வைத்த நீர்மூழ்கியையும் கொடுத்தது .அமெரிக்கா.அதற்கு காஸி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர் பாகிஸ்தானியர் ,அதையும் தந்திரமாக அந்த நாசக்காரியை ஏவ இந்திய கடற்படை இடம் கொடுக்கவில்லை . அதை

தந்திரமாய் விசாகபட்டினத்திற்கு ஆசை காட்டி வரச்செய்து அதை கன்னி வெடியில் சிக்கி

சுக்கு நூறாய் வெடிக்க செய்தது இந்திய கப்பல் படை . அதன் பின்னணியில் சாஸ்திரி சிரித்தார் .


பாகிஸ்தான் தோல்வி முகம் காட்ட தந்திரமாக பேச்சுவார்த்தைக்கு வந்தது. பேச்சுவார்த்தை அன்றைய சோவியத் யூனியனும் இன்றைய உஸ்பெக்கு நகரமான தாஷ்கண்டில் நடந்தது


அன்றிரவுதான் சாஸ்திரி மர்ம மரணம் அடைந்தார்


தாஷ்கண்ட் ஒப்பந்தம் நிறைவேறியதாகவும், அதன் பின் சாஸ்திரி மாரடைப்பில் இறந்ததாகவும் செய்திகள் வந்தன.


உண்மையில் நடந்தது என்னவென்றால் சாஸ்திரி போரை நடத்தவே விரும்பினார், முழு காஷ்மீரையும் மீட்டெடுத்து அந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கவே விரும்பினார். இந்திய படைகளும் வெற்றிமுகத்தில் இருந்தன‌


அவர் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின்னர் தான் இறந்தார் என சோவியத் யூனியன் சொன்னதால் போர் நின்றது.


அவரின் விருப்பம் காஷ்மீரை முற்றாக விடுவிப்பது.

அந்த போர் மட்டும் சாஸ்திரி திட்டபடி தொடர்ந்தி ருக்குமானால் காஷ்மீர் சிக்கல் என்றோ முடிந்தி ருக்கும்.


அந்த மனிதனின் வாழ்வினை நோக்கும் பொழுது , அதுவும் இந்நாளில் நோக்கும்பொழுது தெரிவது ஒன்றுதான். தெற்கே ஒரு காமராஜர் போல, வடக்கே சாஸ்திரி அப்பழுக்கற்ற தியாக வாழ்வினை வாழ்ந்திருக்கின்றார்.


மறக்க முடியாத மாமனிதன் சாஸ்திரி, இந்தியா கண்ட இரும்பு மனிதர்களில் நிச்சயம் அவரும் ஒருவர்.இன்று காந்திக்கு மட்டுமல்ல, சாஸ்திரிக்கும் பிறந்தநாள்


காந்தி, காமராஜர், சாஸ்திரி என்ற அந்த மகான்களை, தேசத்தின் பெரும் அடையாளங்களை வணங்கும் நாளிது. கட்சி கொள்கை பேதமின்றி இந்தியனாக அஞ்சலி செலுத்தவெண்டும்


இவர்களெல்லாம் இந்த தேசத்திற்காக வாழ்ந்தவர்கள்,

அதற்காகவே இறந்தவர்கள்.

ஒவ்வொரு நொடியும் இத்தேசத்திற்காகவே அவர்கள் இதயம் துடித்தது


அந்த இதயத்தினை ஒவ்வொரு இந்தியனும் இரவல் வாங்குவோம், தேசத்தை தாங்குவோம்


இந்த மாபெரும் தேசம் அந்த தியாகிகளை நன்றியோடு வணங்கி, அவர்கள் கண்ட வளமான அமைதியான இந்தியாவினை உருவாக்கி அவர்களுக்கு காணிக்கையாக்க சபதமெற்கும் நாளிது


காந்தி, இந்திரா, ராஜிவிவ் எல்லாம் நாட்டிற்காய் பகிரங்கமய் உயிரை கொடுத்தார்கள், ஆனால் சாஸ்திரி மறைமுகமாக ரஷ்யாவில் உயிரை விட்டார்.நாட்டிற்காய் உயிர்நீத்த அந்த தியாக தலைவனுக்கு ஆழ்ந்த அஞ்சலி. இத்தேசத்தின் ஒவ்வொரு வெற்றியிலும் சாஸ்திரி வாழ்துகொண்டேதான் இருப்பார்


இந்நாட்டின் மிக சிறந்த பிரதமர்களில் அவருக்கு எந்நாளும் முதலிடம் உண்டு, அதில் சந்தேகமில்லை


வந்தே மாதரம்.


சாஸ்திரி யுத்த நெருக்கடியின் போது நடிகை சாவித்திரி தன்னிடம் உள்ள நகைகள் அத்தனையும் கழட்டி கொடுத்தார் .ஜெயலலிதாவும் சில நகைகளை கழட்டி கொடுத்தார் .இப்படி தமிழக நடிகர்கள் ,நடிகைகள் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் .சாஸ்திரி கண்ணீரோடு விடைபெற்றார்


அந்த போரில் இந்தியா அட்டகாசமாக நொறுக்கிதள்ளிய பேட்டன் டாங்க் என்ன ஆனது? மிக நவீனமான டாங்க் என அமெரிக்கா மார்தட்டிய அந்த டாங்கினை இந்திய படைகள் டீசல் டேங்கில் ஒரு தீக்குச்சி மூலம் தகர்த்தெரிந்ததில் அமெரிக்காவிற்கு மிகுந்த அவமானமாயிற்று


அந்த டேங்கிகள் செய்வதையே நிறுத்திற்று அமெரிக்கா.


வந்தே மாதரம்.


Life story of the Prime-Minister of India, signing of Tashkent declaration and foundation of the monument

For most of the residents of Tashkent Shastri is a city landmark, however for any Indian, Shastri is a great figure belonging to the same level of political figures as Mahatma Gandhi and Javaharlal Nehru. Today there is a monument in the central part of the city on the crossroad dedicated to the person who had greatly contributed to the development of India and who had left a track in the history of not only India, but also Tashkent.


Lal Bahadur Shastri was born on 2 October 1904 in the family of civil servants. Thanks to belonging to the caste of Kayatskha, he had started his education at the age of 4. However, in his later years of form 7 at school, Lal Bahadur stopped using his non-obligatory last name “Varma”, thus refusing his caste origin. Few years later, in January of 1921 while studying in the 10th form, young Lal Bahadur attended a meeting with the participation of Mahatma Ghandi and was so much inspired with his challenge that made a decision to leave the state school and join the movement of nonviolent resistance. He was then firstly arrested and put into prison, later released though as he was still a minor. That same year there was opened a private University of Indian National Congress where Lal Bahadur was one of the first students and in 1925 became a bachelor in philosophy and ethics receiving a title “shastri” translated from Hindi as “scholar”. This is how his title became the part of his name.


After graduation, Shastri turns into an activist of the movement for Independence of India, and in the period of 1925-1946, he was arrested and put into prison where he spent 9 years in total. After independence was announced, Lal Bahadur was appointed the Minister of Internal Affairs in his home town. Later he worked in the position of the Minister of Railways and Transport of the entire India. And finally in year 1964, after the death of Javaharlal Nehru, the majority of the party of Indian National Congress made him the Prime-Minister of the country.


Shastri as a Prime-Minister tried to come to a compromise and withhold from severe reforms. His government faced economic crisis and food shortage, but he tried to find the key to the heart of his people and did a lot to make their lives better. First of all, he decided to fight hunger – new technologies were introduced in agriculture and economic conditions for farmers began to get better. Shastri addressed his nation with an urge to voluntarily give up one meal a week so that the food is saved and the majority of the country supported him: on Monday evening almost all restaurants and cafes in India were closed. He motivated the country to maximize the cultivation of food grains by planting himself wheat instead of lawn, at his official residence in New Delhi. It was during his two-year rule when the structure of the future agricultural corporations was formed.


In August-September 1965, Indo-Pak War took place. Even though they managed to get truce, the situation in the region was still tense. During this period, on 19 October, Shastri delivered his speech in Allahabad and said a phrase that have become a slogan of the Indian people for following years “Jai Jai Jawan Kishan” translated as “Hail the soldier, Hail the Farmer”. However, in order to completely end the resistance between India and Pakistan, the USSR called the two parties to start negotiations in Tashkent in January 1966. After a few days of hard discussions of general political dissents, on 10 January the Prime-Minister of India Shastri and the President of Pakistan Ayub Khan signed Tashkent declaration that served as a stop of war and beginning of the establishment of trade-economic relations between the sides.


That evening the diplomats of India, Pakistan and USSR celebrated the signature of the historic document. Later by 01.00 hrs local time, Shastri felt unwell and an hour later died from a heart attack. The personal assistant of Lal Bahadur remembered later that the Prime-Minister was feeling fine and was about to go to bed, but suddenly stood up and said “Mother, mother” in Hindi and fell. In the morning, the funeral train in Tashkent went until the airport and one of those people who carried the coffin was his former opponent – the president of Pakistan Mukhammed Ayub Khan.


During the short term as a Prime-Minister Shastri managed to firm the position of India on international arena, and was the first citizen of the country who was posthumously awarded the highest order “Bharat Ratna”. The memorial “Vidjai Gat” was opened in Deli in the memory of Shastri and 10 years later, in 1976, in Tashkent where his life path ended, the monument, work of an Uzbek sculptor Yakov Shapiro was unveiled. The monument is done in the shape of a bust on the base made from pink granite. Today it is practically visited by all guests from India. Besides, there is an Indian Cultural Center named after Shastri working in Tashkent, as well as a school teaching Hindi.

Image may contain: 1 person, smiling

Image may contain: 1 person














“பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.

காமராஜ்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.


பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.


ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் “காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?”, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.


“ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்றார்.


என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.


அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.


காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.


அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.


Image may contain: 1 person, wedding


சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக்காரில் திரும்பினார்.


சென்னையில் ஒரு வழிப்பாடை ஒன்றில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. எனவே உடனே காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார்.


“ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறார்? காரைத்திருப்பு” என டிரைவரிடனம் கண்டிப்புடன் சொன்னார். “ஐயா, இந்த ராத்திரி நேரத்தில் போக்குவரத்து ரொம்ப குறைவாகத்தானே இருக்குது. இந்தப்பாதை வழியே போனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார் டிரைவர்.


“இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்று இப்போது போனால் இது எப்போதும் பழக்கமாகிவிடும்.


சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என டிரைவரிடம் கூறிவிட்டு ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.


“சட்டம் இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும்” என்பது காமராஜரின் எண்ணமாகும்.


Image may contain: one or more people


“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது”

-காமராஜ் -சிவகிரியில்


காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார்.


காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.


‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?


பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?


வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.


“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர்

“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.


Image may contain: 1 person, standing and text


அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது”

-காமராஜர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்தணமுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என நான் வந்து பார்க்க வேண்டுமாம். வாருங்கள் படகில் போய்வருவோம்” என்றார்.


படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்கார்ர்களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச்சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.


ஆனால் படுபாவிங்க இங்கே மரத்தைக்கூட வெட்டிவிடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டுவிட்டால்பதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்ள் என்ற மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக்கொண்டே போனார்.


படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப்பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.


அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்துவிட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.


அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது” என்பது காமராஜரின் கொள்கையாகும்.


Image may contain: 1 person, closeup


தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது.

ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு

- காமராஜர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.


கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.


“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.


“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்


Image may contain: 2 people, indoor


வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.


“அஞ்சி அஞ்சி சாவார் – அவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே”


என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.


நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.


1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கருணாநிதியின் தூண்டுதலில் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.


மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.


உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.


Image may contain: 1 person, standing


“நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்”


எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.


மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.


வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.


தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.








வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும், இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ் ஜார்னல் கட்டுரை ஒன்று!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்ட உடன் அட்டையைத் துப்புவது போல,இந்தியா என்று சொன்ன உடனேயே, மகா ராஜாக்கள், பாம்பாட்டிகள், எக்கச் சக்கமாகக் குழந்தைகள், ஏகப்பட்ட பசு மாடுகள், தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்பது எல்லோருக்குமே இப்போது புரிகிறது.


காந்தியைப் பற்றி , அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூட, இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், மகாராஜாக்கள்,பிச்சைக்காரர்கள், கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம், நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.


போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்பு, அதில் சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள நேரு செய்த அசட்டுத்தனம் அப்புறம்,1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள் (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது.) நேருவின் பலவீனங்களை வைத்தே அப்படி எடைபோட்டார்கள் என்றும் சொல்லலாம்.


அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!


வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும், இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ் ஜார்னல் கட்டுரை ஒன்று!


Image may contain: 1 person






ப.நீலகண்டன்.BORN 1916 OCT 2


M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின், ‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’ என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.


முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.


அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து ‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’ என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.


அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி, ‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’ என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.


அந்த இளைஞர் சென்ற பிறகு, ‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’ என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து ‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’ என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.


முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம் ‘சக்கவர்த்தி திருமகள்.’ அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.


எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்


‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’


என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.


அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.


விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.


அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.


எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.


அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.


துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....


‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது


கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”


------------------------------------------------------------------------------

Image may contain: one or more people

Image may contain: 1 person, standing and beard


Charmila (born 2 October 1976) is a popular film actress in Malayalam cinema. Apart from movies in Malayalam, she acted in Tamil, Telugu and Kannada movies.[2][3] She completed almost 38 films in the Malayalam film industry, which is often referred to as Mollywood


Early life[edit source]


Charmila was born to veterinary doctor Manoharan, who was also working in S.B.I., and Haise, a homemaker, in a Malayali Syrian Catholic family settled in Chennai. She studied in Holy Angels Convent and Ethiraj College for Women.[5] She has a younger sister Angelina.


Personal life[edit source]


During the 1990s she was in love with actor Babu Antony. Later she married Kishor Satya in 1995 & was divorced in 1999. Subsequently she married Rajesh in 2006, an engineer working in Nokia but got divorced in 2016.[6]


Film career[edit source]


Charmila made her debut on the silver screen with Oyilattam and went on to act in a couple of movies including Kizhakke Varum Pattu. She was recommended in Tamil movies by veteran actor S.S.Rajendran .[7] She made her debut in the Malayalam film Dhanam, directed by Sibi Malayil.[8]


She hosted a show Jillunu Oru Sandhippu on Vijay TV,[9] and participated in Jodi Number One on the same channel.[5] She used to compère stage shows also. She is a talented dancer too.


.

.


.

No comments:

Post a Comment