Monday 5 October 2020

INTERVIEW WITH CATHERINE TERESA

 

INTERVIEW WITH 

CATHERINE TERESA




.``டிவிட்டர்ல கருத்து சொன்னதோடு நிற்கலையே சித்தார்த்!" - கேத்ரின் தெரசா

மா.பாண்டியராஜன்

‘மெட்ராஸ்’ படத்துக்கு அப்பறம் 5 வருடம் கழிச்சு இப்போதான் `அருவம்’ படம் மூலமா கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற படம் வந்திருக்கு.


’நீதான் வேணும், கல்யாணம் பண்ணிக்கிறியா’ என ’மெட்ராஸ்’ படத்தில் கேத்ரின் பேசிய வசனம்தான், பல இளைஞர்களுக்கு இவரைப் பிடிக்கச் செய்தது. அடுத்தடுத்து நடித்த படங்களில், இவர் ஆடிய குத்தாட்டம் மேலும் பல ரசிகர்களைச் சம்பாதித்தது என்றே சொல்லலாம். தற்போது ’அருவம்’ படம் மூலம், தான் ஒரு நல்ல நடிகை என நிரூபிக்கக் காத்திருக்கிறார். அவருடன் ஒரு குட்டி உரையாடல்!


" ’அருவம்’ படத்தைப் பற்றிச் சொல்லுங்க?"



’’ ‘அருவம்’ படம் என் கரியருக்கு மட்டுமல்ல, ஆடியன்ஸுக்கும் ரொம்ப முக்கியமான படமா இருக்கும். நம்ம நாட்டுல இருக்கிற ரொம்ப முக்கியமான பிரச்னையான உணவுக் கலப்படத்தைப் பற்றிப் பேசுற படம் இது. உணவு இல்லாம நாம யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்னையைப் படத்தில் சொல்லியிருக்கோம். உணவோட தரம் எப்படி இருக்கணும்; பள்ளிகளில் கொடுக்கிற சத்துணவு எப்படி இருக்கணும்னு பல விஷயங்களை இந்தப் படம் மூலமா நானும் தெரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படத்தில் நான் ஸ்கூல் டீச்சரா நடிச்சிருக்கேன். படம் ஒரு சீரியஸான கதைக்களத்தில் இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட் செம்ம ஜாலியா இருந்தது. ஸ்கூல்ல ஷூட்டிங் பண்ணும்போது, அந்தப் பசங்களோட ரொம்ப ஜாலியா விளையாடிக்கிட்டு இருந்தேன்.’’


"சித்தார்த்தோடு நடித்த அனுபவம்?"


’’எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், அது சம்பந்தமா தன்னோட கருத்தை ட்விட்டரில் பதிவு செய்திடுவார், சித்தார்த். ஆனால், அவர் ட்விட்டரில் மட்டும் கருத்து சொல்லாம, சமூகப் பிரச்னைகள் சம்பந்தமான படத்திலும் நடிச்சிருக்கார். மக்கள்கிட்ட ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு நினைக்கிறார். அவருக்கு இந்தப் படத்தில் ரொம்ப சூப்பரான ஒரு கேரக்டர். அதை அவரும் ரொம்ப சூப்பரா பண்ணியிருக்கார்.’’


" ’மெட்ராஸ்’ படத்துக்கு பிறகு உங்க கரியர், கமர்ஷியல் படங்கள் மட்டும் நோக்கிப் போகுதே ஏன்...?"



’’ஒரு நடிகைக்கு வர்ற எல்லாப் படங்களுமே கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரிதான் வரும்னு சொல்ல முடியாது, அப்படி வரவும் வராது. எல்லா ஜானர் படங்களும் வரும். அப்படித்தான் எனக்கு கமர்ஷியல் ஹீரோயின் கேரக்டர்ஸ் வந்துச்சு. அதையும் நான் ரொம்ப என்ஜாய் பண்ணித்தான் நடிச்சேன். எனக்கு டான்ஸ் ஆட ரொம்பப் பிடிக்கும். அதனால கமர்ஷியல் படங்கள் வந்தப்போ ஜாலியா பண்ணினேன்.


கமர்ஷியல் படமாக இருந்தாலும், அதில் என் கேரக்டர் சும்மா வந்துபோற மாதிரி இருந்தா நான் ஓகே சொல்லமாட்டேன். அந்தப் படத்தில் என் கேரக்டருக்கு ஏதாவது ஒரு வேலை இருக்கணும். அதுமட்டுமல்லாம, சினிமா ஒரு டீம் வொர்க். அதனால, ஒரு நல்ல டீம் இருக்கிற படத்துல நான் இருக்கணும்னு நினைப்பேன். ‘மெட்ராஸ்’ படத்துக்கு அப்பறம் 5 வருடம் கழிச்சு இப்போதான் ’அருவம்’ படம் மூலமா கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற படம் வந்திருக்கு. அந்தப் படத்தில் என் கேரக்டர் ரொம்ப முக்கியமானதா இருக்கும்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு!’’


"விஜய் தேவரகொண்டாவோடு நீங்க நடிக்கிற படத்தில் மொத்தம் நான்கு ஹீரோயினாமே?"


‘’ஆமா. ’வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ ரொம்ப சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட். படத்துல நாலு போர்ஷன். ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒவ்வொரு ஹீரோயின். நான், ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, இஸபெல்லான்னு நாலு ஹீரோயின்களுக்கும் நல்ல ரோல். எல்லா போர்ஷனுமே படத்துக்கு ரொம்ப முக்கியமானதா இருக்கும்.’’


Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment