Tuesday 6 October 2020

C.VASANTHA , IRAVUM PAGALUM ACTRESS

 

C.VASANTHA , IRAVUM PAGALUM ACTRESS 



.வசந்தா– 1965-இல் ஜோசப் தயாரித்து இயக்கி வெளிவந்த ”இரவும் பகலும்” என்ற ஜெய்சங்கர் கதாநாயனாக அறிமுகமான படத்தில் அவரது ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர். கணவன், அந்த 7 நாட்கள், இராணுவ வீரன் உள்ளிட்ட பல படங்களில் துணைக்கதாபாத்திரங்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.


அமைதியான அலட்டல் இல்லாத நடிப்பது இவரது சிறப்பு. 1965-இல் துவங்கிய இவரது திரை வாழ்க்கை ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நீடித்தது. இவர் பிறப்பால் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். இவர் இந்து விஸ்வகர்மா பிரிவைச் சார்ந்த சந்திரன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.


1970-இல் வெளிவந்த கவிஞர் ஆலங்குடி சோமு தயாரித்து கே.பாலசந்தர் இயக்கிய ‘பத்தாம் பசலி’ படத்தில் எஸ்.ஏ.அசோகனின் மனைவியாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தவர் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். இவர் பிரபல நாடக மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகக்குழுவால் நடத்தப்பட்ட மேடை நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.





இவர் நடித்த மேலும் சில படங்கள்:


‘ஓசை’ [1984], ராணித்தேனீ [1982], பத்தாம் பசலி [1970], மாம்பழத்து வண்டு [1979], சக்கரம் [1968], நங்கூரம் [1979], ‘எச்சில் இரவுகள்’ [1982]

No comments:

Post a Comment