Sunday, 10 May 2020

K.P.KESAVAN AND MGR




K.P.KESAVAN  AND MGR


.1936 இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். 
NEW ELPINSTONE THEATRE IN FIRST FLOOR

அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண் டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரை யரங்கில் வெளியானது. அந்த தியேட்ட ரெல்லாம் இப்போது இல்லை. படத்தைப் பார்க்க கே.பி.கேச வனும் எம்.ஜி.ஆரும் சென்றனர். இடைவேளையின்போது கே.பி.கேச வனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., இவ்வளவு ஆதரவும் செல்வாக்கும் உள்ளவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமே என்று மனதுக்குள் பெருமைப்பட்டார்.

ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க, எம்.ஜி.ஆரும் கே.பி.கேச வனும் படம் முடிவதற்குள் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் புறப் படுவதை அறிந்து மக்களும் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர். பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது, அந்தப் படத்தில் சிறிய வேடத் தில் நடித்திருந்த தன்னை மக் களுக்கு அடையாளம் தெரிய வில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.




சில ஆண்டுகள் கழிந்தன. எம்.ஜி.ஆர். கதாநாயக னாகி புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்த ‘மர்மயோகி’ படம் சென்னையில் ‘நியூ குளோப்’ திரையரங்கில் திரை யிடப்பட்டது. படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும் சென்றனர். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். எம்.ஜி.ஆருக்கு பக்கத்திலேயே கே.பி.கேசவன் அமர்ந் திருந்தார். அவரை யார் என்று கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார் கேசவன்.

காரில் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் செல்லும்போது மக்களோடு ஒருவராக கேசவனும் நின்று கொண்டிருந்தார்.!

No comments:

Post a Comment