ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா 🙏🙏
.
.ஒருமுறை ஆதிசங்கரர் ஒரு ஊர் வழியாக சென்று கொண்டிருந்தார்.
ஒரு சின்னக் குட்டையில் தண்ணீர் குறைவாக இருந்ததினால் அதிலிருந்த மீன்கள் தண்ணீருக்காகப் பரிதவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.
அந்த வழியாக தண்ணீர் எடுத்துக் கொண்டு போன கிராமத்து ஜனங்களிடம் மீன்களுக்காக கொஞ்சம் தண்ணீர் கேட்டார்.
அதற்கு ஊர்மக்கள் சாமி உனக்கு வேறு வேலை வெட்டி இல்லை என்று நினைக்கிறோம்.
பத்து வருடமாக எங்கள் ஊரில் தண்ணீரே இல்லை.
நாங்கள் குடிப்பதற்காக எவ்வளவோ மைல் நடந்து போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறோம்.
நீ மீன்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறாயே?
அதெல்லாம் தர முடியாது என்றார்கள்.
தண்ணீர் எங்கே கிடைக்கும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டு பத்து மைல் நடந்து போய் தன் கமண்டலத்தில் தண்ணீர் கொண்டு வந்து குட்டையில் கொட்டினார். அங்கே இருந்த மீன்கள் எல்லாம் தண்ணீரில் சந்தோஷமாக நீந்தின.
உடனே இடி இடித்து மழை பெய்தது.
இந்த மாதிரி ஒரு சிறிய தர்மத்திற்கே மழையை வரவழைக்க முடிகிறதே பத்து வருடமாக தண்ணீரே இல்லை என்றால், நீங்கள் எவ்வளவு தானதர்மம் செய்யத் தவறி விட்டீர்கள்! என்றார்.
எங்கு தான தர்மங்கள் சரியாக செய்யப்படுகறதோ,
அங்கு
தண்ணீர் பஞ்சம்
உணவு பஞ்சம் வராது.
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா 🙏🙏
.
.
No comments:
Post a Comment