Wednesday, 13 May 2020

R.K.NARAYAN , WRITER BORN 1906 OCTOBER 10 - 2001 MAY 3



R.K.NARAYAN , WRITER BORN
 1906 OCTOBER 10 - 2001 MAY 3


..ஆர். கே. நாராயணன் (ஆர். கே. நாராயண்) என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி (10 அக்டோபர் 1906 – 13 மே 2001) உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.

இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்[1
பிறப்பு
தந்தையின் பெயர் வி.ஆர்.கிருஷ்ணசாமி ஐயர். தாய் ஞானாம்பாள். ஆர்.கே.நாராயணன் இந்தியாவில் மைசூரில் இலக்கம் 1 வெள்ளா வீதியில் 1906 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்த எண்மருள் இவர் மூன்றாமவர். இவரது முழுப்பெயர் (இ)ராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் நாராயணசுவாமி. தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் வழக்கப் படி முதற்பெயரானது பெற்றோரின் பெயரே வருவதால் இவரது சகோதரர்களும் முதற்பெயராக ஆர்.கே என்பதையே கொண்டிருந்தனர் (உதாரணமாக ஆர். கே. லக்ஷ்மண்). இவரது முதற் பதிப்பாளரான ஹமிஷ் ஹமில்ரன் (Hamish Hamilton இவரது பெயர் பெரிது எனக்கருதி அதைக் குறுக்கும் ஆலோசனைப் படி ஆர்.கே. நாராயணசுவாமி என அழைக்கப்பட்டார்.

குழந்தைப் பருவம்
நாராயணனின் தாயாரான ஞானாம்பாள் இவரது பிறப்பை அடுத்து உடல் நலங்குன்றினார். எனவே இவர் ஓர் மருத்துவத் தாதியினால் பராமரிக்கப் பட்டார். தாயார் மீண்டும் தாய்மையடைந்ததால் இவர் சென்னையிலுள்ள அம்மணி என்றழைக்கப்படும் அம்மம்மாவின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இவர் தனது பதின்ம வயதுவரை அம்மம்மாவுடனும் மாமாவான ரீ.என்.சேஷாச்சலத்துடனும் வாழ்ந்து வந்தார். இவர் தனது சகோதரர்களையும் பெற்றோரையும் சந்திக்க ஒரு சில வாரங்களையே செலவழிப்பார். நாராயண் தமிழ் மொழியையும் பாடசாலையில் ஆங்கிலத்தையும் கற்று வந்தார். நாராயணினின் சுயசரிதையான எனது நாட்கள் (My Days) என்ற பொருள்படும் ஆங்கில நாவலில் பெற்றோரைப் பார்ப்பதற்காக மைசூர் வந்த போது கன்னட மொழிபேசும் கடைக்காரர்கள் உரையாடல்களைப் புரிந்து கொள்ள முடியாதிருந்ததையும் பின்னரே இம்மொழியை அறிந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி

8 வருடக்கல்வியை சென்னையில் அம்மம்மாவின் வீட்டிற்கு அருகில் உள்ள லூத்தரன் மிஷன் பள்ளியில் (Lutheran Mission School) படித்தார். சிறிது காலம் CRC உயர் பாடசாலையிலும் படித்தார். சென்னை புரசைவாக்கம் ஈ.எல்.எம்.பெப்ரிஷியஸ் பள்ளி, மைசூர் மன்னர் கல்லூரி உயர் நிலைப்பள்ளி, மன்னர் கல்லூரி ஆகியவற்றில் படிப்பு. இவரது தகப்பனாரான ராசிபுரம் வெங்கட்ராம கிருஷ்ணசுவாமி ஐயர் மைசூரில் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்ட பின்னர் பெற்றோரிடமே சென்றுவிட்டார். ஆரம்பத்தில் பிரதான் புத்தகமானது களைப்பளிக்கக் கூடியதாக இருந்ததால் ஆங்கிலத்தில் எழுதும் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றியடையவில்லை எனினும் மீண்டும் முயற்சி செய்து மைசூர் பல்கலைக் கழகத்தில் பட்டதாரியானார்.

எழுத்தாளராக
நாராயணனின் ஆரம்ப வாழ்க்கை
அநேகமாக நாரயணனின் எழுத்துக்கள் சுவாமியும் அவரது நண்பர்களும் என்று ஆங்கிலத்திலேயே (Swami and friends) ஆரம்பித்தது. இது மால்குடி என்னும் கற்பனைக் கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டது என்றாலும் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.

ஆரம்பம்
ஒரு சில குறிப்பிடத்தக்க இந்திய ஆங்கில எழுத்தாளர்களே இந்தியாவில் ஏறத்தாழத் தொடர்ந்து வசித்து வந்தனர். 1956 இல் ரொக்ஃபெல்லர் அமைப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். தி இந்து ஆங்கில செய்தித்தாளில் குறுங்கதைகளை எழுதினார். அத்துடன் நியாயம் (Justice) என்னும் சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் மைசூர் ஆசிரியராகவும் சிறிதுகாலம் கடமையாற்றினார்.

இலக்கிய வடிவம்
இவரது படைப்புகள் எளிய நடையும், இழைந்தோடும் நகைச்சுவை உணர்வும் கொண்டவை. இவரது கதாபாத்திரங்கள் யாவும் சிற்றூர்களைச் சார்ந்தவை. சுவாமியும் நண்பர்களும் என்பதிலிருந்தே அவரது எழுத்தாக்கங்கள் ஆரம்பித்தன. முதலில் இவரது நாவல்களை வெளியிட எந்த பதிப்பகமும் முன்வரவில்லை. இறுதியாக நண்பரிடம் கிரகாம் கிறீனியிடம் ஆரம்ப வரைதலைக் காட்டினார். கிறீனி இதை மிகவும் பாராட்டியதுடன் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைப் பின்பற்றி பல நாவல்களைப் பிரசுரித்தார். சில நாவல்கள் இவரது சுயசரிதையைப் பின்பற்றியவை. உதாரணமாக ஆங்கில ஆசிரியர் (The English Teacher) என்னும் நாவல் இவரது இளம் மனைவியின் மரணத்தைப் தழுவியெழுதப் பட்டதாகும்.

நாராயணனின் ஆக்கங்கள் ஒவ்வொரு நாளும் சமுதாயத்தில் நடைபெறுவதைத் தழுவியதாகும். இவர் இந்துப் புராணக் கதைகளையும், நாட்டுப்புறக் கதைகளையும் கூறத் தயங்கவில்லை இவரது இத்தன்மையானது விமர்சிக்கப்பட்டபோதும் சிறந்த ஓர் எழுத்தாளராகவே கருதப் பட்டார்.

எழுத்துப்பணி

எழுத்தில் மால்குடி என்ற கற்பனை நகரை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள வாசகர்களை ரசிக்க வைத்தவர். கிரஹாம் கிரீன், ஈ.எம். பாஸ்டர், சோமர் செட் மாம், மால்கம் முகரிட்ஜ் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இவரது ரசிகர்கள். பல சிறு கதைகளும், புதினங்களில் உள்ள பகுதிகளும் தொலைக்காட்சி நாடகங்களாக நடிக்கப்பட்டன.

பள்ளி ஆசிரியர், பத்திரிகை நிருபர் பணிகளோடு மாநிலங்கலவை நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார். ராக்கிங் கொடுமை, குழந்தைகள் சுமக்கும் புத்தக மூட்டை ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

மால்குடி விரைவுத் தொடருந்து
மால்குடி என்பது இவர் கதைகளில் பயன்படுத்திய கற்பனை ஊர் ஆகும். இந்திய அரசு இவரை சிறப்பிக்கும் விதத்தில் மைசூரிலிருந்து யஷ்வந்பூர் வரை செல்லும் விரைவுத் தொடருந்துக்கு மாகுகுடி விரைவுத் தொடருந்து என்று பெயரிட்டு சிறப்பித்துள்ளது. இந்தியாவில் கற்பனை ஊரின் பெயர் கொண்ட ஒரே தொடருந்து இதுவாகும்.[2]

விருதுகள்

கைடு (வழிகாட்டி) புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவ்விருது பெற்ற முதல் ஆங்கில நூல் இதுதான். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டவர்.லீட்ஸ் பல்கலைக்கழகம் (1967) மைசூர் பல்கலைக்கழகம்(1976) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் (1973) ஆகியவை இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின .2001 ஆம் ஆண்டில் (இறப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு) இவருக்கு பத்ம விபூஷண் பட்டமும் வழங்கப்பட்டது.[3].

படைப்புகள்
1935 - சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்
1937 - பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ்
1938 - தி டார்க் ரூம்
1939 - மைசூர்
1945 - தி இங்கிலீஷ் டீச்சர்
1947 - அன் அஸ்ட்ரால்ஜர்ஸ் டே, அண்ட் அதர் ஸ்டோரிஸ்
ஆர். கே. லக்ஷ்மன்
நாராயணனின் இளைய சகோதரரான ஆர். கே. லக்ஷ்மன் இந்தியாவில் பிரபல கேலிச் சித்திரக்கலை ஓவியர்








இந்தியர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாது என்ற வெளிநாட்டினரின் எண்ணத்தை முறியடித்தவர்! அப்படி எழுதினாலும் புராண இதிகாசங்களை மட்டுமே எழுத முடியும் என்றும் ஆங்கில எழுத்தாளர்களைப் போல் கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் ஒருங்கே இணைந்த இலக்கியத்தை ஆங்கிலத்தில் படைக்க இயலாது என்றும் இருந்த நிலையை மாற்றியவர்! 
படைப்பாற்றலும், கற்பனைத்திறனும் ஒருங்கே இணைந்த தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் ஆர்.கே.நாராயண்! இவர் கற்பனையில் உருவாக்கிய ஊரின் பெயர் இந்திய வரைபடத்தில் இடம் பெற்றிருக்கிறதா? எனத் தேடினர் வெளிநாட்டினர்!!
"ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி அய்யர் நாராயண்' என்ற ஆர்,கே.நாராயண் 10-10-1906 அன்று சென்னையில் பிறந்தார். தந்தை கிருஷ்ணாசாமி அய்யரின் மூன்று புதல்வர்களில் மூத்தவர் ஆவார். 
இன்னொரு விசேஷமான செய்தி என்னவென்றால் இவரது இளைய சகோதரரும் உலகப் புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்ட் "ஆர்,கே.லக்ஷ்மண்' ஆவார். (இவரைப் பற்றி பிறகு பார்ப்போம்)
ஆர்,கே.நாராயணின் தந்தை தலைமை ஆசிரியர். தந்தை பணிபுரிந்த அதே பள்ளியில் கல்வி பயின்றார். தந்தைக்கு அடிக்கடி பணியிட மாற்றம் நிகழ்ந்தது. எனவே தன் தாய்வழிப் பாட்டியிடம் வளர்ந்தார். பாட்டி அவருக்கு புராணங்கள், கர்நாடக சங்கீதம், சமஸ்கிருதம் போன்றவற்றைக் கற்பித்தார்!தனது சிறுவயதிலேயே இவர் சார்லஸ் டிக்கன்ஸ், வுட் ஹவுஸ், ஆர்தர் கோனன் டாயில் மற்றும் தாமஸ் ஹார்டி போன்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தீவிரமாக வாசித்தார். தந்தை மைசூருக்குப் பணி மாற்றம் செய்யப்படவே இவரும் அங்கு சென்றார். பள்ளி நூலகத்தில் பெரும்பாலான புத்தகங்களை வாசித்தபடியே இருந்ததால் பாடநூல்களை இவர் வாசிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் பள்ளி இறுதித் தேர்வில் இவர் தோல்வி அடைந்தார். அந்த ஓர் ஆண்டு முழுவதும் மேலும் அதிகக் கதை புத்தகங்களைப் படிப்பதிலும் தமக்குத் தோன்றிய எண்ணங்களை எழுதுவதிலும் நேரத்தைச் செலவிட்டார். பிறகு பள்ளிப் படிப்பை முடித்து இளங்கலை ஆங்கிலம் மற்றும் முதுகலை ஆங்கிலத்தையும் முடித்தார். தந்தை பணிபுரிந்த பள்ளியிலேயே இவருக்கு ஆசிரியப்பணி கிட்டியது. அப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால் அந்தப் பணியையும் சேர்ந்து பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை விரும்பாத நாராயண் தமது வேலையை ராஜினாமா செய்தார். எழுத்தையே தன் முழு நேரத் தொழிலாக மேற்கொள்ள முடிவு செய்தார். 
இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டில் "கடல் வாணிபச் சட்டம்' என்ற நூலை வெளியிட்டது. அதைப் படித்த நாராயண் அந்த புத்தகதைதப் பற்றிய விமர்சன பகுப்பாய்வு நூலை எழுதினார். இதுதான் நாராயண் எழுதிய முதல் நூல்! 
1930 ஆம் ஆண்டு இவரது முதல் நாவல் "ஸ்வாமியும் அவனது நண்பர்களும்' (SWAMY AND FRIENDS) வெளிவந்தது. "மால்குடி' என்ற கற்பனை கிராமத்தை அதில் உருவாக்கியிருந்தார்.
தான் எழுதிய நாவலின் பிரதியை ஆக்ஸ்ஃபோர்டில் வசித்த நண்பருக்கு அனுப்பினார். அதைப் படித்து கவரப்பட்ட அவர் "கிரஹாம் கிரீன்' என்ற தன் நண்பருக்கு அனுப்பினார். அவர் தனது பதிப்பாளரிடம் அதை நூலாகப் பதிக்குமாறு வேண்டினார். 1935 ஆம் ஆண்டு அந்நூல் வெளியானது. 1937 இல் "இளங்கலைப் பட்டதாரி' (THE BACHILOR OF ARTS) என்ற நூலையும் 1938 ஆம் ஆண்டு "இருண்ட அறை' (THE DARK ROOM) என்ற நூலையும் எழுதினார். 
1942 ஆம் ஆண்டில் "மால்குடி நாட்கள்' (MALGUDI DAYS) சிறுகதைத் தொகுப்பும் 1945 ஆம் ஆண்டு "ஆங்கில ஆசிரியர்' (THE ENGLISH 
TEACHER) என்ற நூலும் வெளியாயின. 
இவர் சொந்தமாக "இந்தியன் தாட் பப்ளிகேஷன்ஸ்' (INDIAN THOUGHT PUBLICATIONS) என்ற பதிப்பகத்தைதை தொடங்கினார். தற்போது வெற்றிகரமாக நிர்வகிக்கப்படுகிறது. 
1951 ஆம் ஆண்டு வெளிவந்த "பொருளாதார மேதை' (THE FINANCIAL EXPERT) என்ற இவரது நாவல் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்காவில் உள்ள "மிக்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடி பிரஸ்' இவரது படைப்புகளை 1953 ஆம் ஆண்டு பதிப்பித்தது. 1956 ஆம் ஆண்டு இவர் அமெரிக்கா சென்றபோது "வழிகாட்டி' (THE GUIDE) என்ற நூலை எழுதினார். 
அமெரிக்காவில் தான் இருந்த ஒவ்வொரு நாளைப் பற்றியும் எழுதி வைத்தார். அதுவே பின்னாளில், "எனது தேதியில்லா நாட்குறிப்பு' (MY
DATELESS DIARY) என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்றார். தனது நூல்களை வெளியிட உதவிகரமாக இருந்த திரு "கிரஹாம் கிரீன்' அவர்களை அப்பொழுதுதான் முதன்முதலாக சந்தித்தார். 
இந்தியா திரும்பிய பிறகு இவரது "வழிகாட்டி' நாவல் வெளியானது. இவரது மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இதற்காக 1958 ஆம் ஆண்டின் "சாகித்ய அகாடமி விருது' இவருக்கு வழங்கப்பட்டது. இவர் நிறைய கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "அடுத்த ஞாயிறு' (NEXT SUNDAY) என்ற தலைப்பில் 1960 ஆம் ஆண்டு "தி ஹிந்து' ..., "தி அட்லாண்டிக்' போன்ற நாளிதழ்களில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார். 
1964 ஆம் ஆண்டு இவர் முதல் முறையாக புராண இதிகாச நாவல் ஒன்றை "கடவுளர்கள், அரக்கர்கள் மற்றும் பலர்' (GODS, DEMONS AND OTHERS) என்ற பெயரில் எழுதினார். ஓவிய உலகில் புகழ் பெற்ற இவரது சகோதரர் திரு ஆர்.கே.லக்ஷ்மண் இவரது பல படைப்புகளுக்குப் படம் வரைந்துள்ளார்.
1967 ஆம் ஆண்டு இவருக்கு இங்கிலாந்தில் உள்ள "லீட்ஸ் பல்கலைக் கழகம்' (UNIVERSITY OF LEADS) கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 
1938 ஆம் ஆண்டு இவரது உறவினர் ஒருவர் இராமாயணத்தை ஆங்கிலத்தை மொழி பெயர்க்குமாறு வேண்டினார். 1973ஆம் ஆண்டு அதை எழுதி வெளியிட்டார். 1978 ஆம் ஆண்டு மஹாபாரதத்தை சுருக்கமான வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 
1980 ஆம் ஆண்டு "தி ராயல் சொசைடி ஆஃப் லிட்ரேச்சர்' (THE ROYAL SOCIETY OF 
LITERATURE) என்ற அமைப்பு "ஏசி பென்சன் மெடல்' (AC BENSON MEDAL) என்ற பெருமை மிகு விருதை வழங்கியது. கர்நாடக அரசு மாநில சுற்றுலாத் துறையை வளர்க்கவும், அதன் பெருமைகளை உலகுக்கு உணர்த்தவும் கர்நாடக மாநில சுற்றுலா இடங்கள் பற்றிய நூலை எழுதித் தருமாறு இவரிடம் வேண்டியது. அதன்படி, "(THE EMERALD
ROUTE) என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதித் தந்தார். 
1964 ஆம் ஆண்டு இவருக்கு "பத்ம பூஷண்' விருதும் வழங்கப்பட்டது! 
1980 ஆம் ஆண்டு கர்நாடக மாநில ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். 
இச்சாதனையாளர் 2001 ஆம் ஆண்டு தமது 94 ஆவது வயதில் காலமானார்.

-என். லக்ஷ்மி பாலசுப்பிரமணியன்


No comments:

Post a Comment