Sunday, 10 May 2020

ANDIMUTHU RAJA ,M.P ,REPUTED FOR 2G CASE WITH KANIMOZHI BORN 1963 MAY 10


ANDIMUTHU RAJA ,M.P ,REPUTED FOR 2G CASE 
WITH KANIMOZHI BORN 1963 MAY 10



.ஆ. ராசா (Andimuthu Raja, பிறப்பு: 10 மே 1963) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தார். 16 ஆவது இந்திய மக்களவையின் உறுப்பினர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் ஆவார். இறுதியாக 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 16 நவம்பர், 2010 வரை பொறுப்பு வகித்தார். மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

14 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் 17 அக்டோபர், 2008 அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை திராவிட முன்னைற்றக் கழகத் தலைவர் திரு. மு. கருணாநிதியிடம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார்[2]. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும் உள்ளார்.


பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3

2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு
முதன்மைக் கட்டுரை: இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் "2 ஆம் தலைமுறை அலைவரிசை" ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் நடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரும் முறைகேடு வெளியான பின்னும் இவருக்கு தி.மு.கவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் ஆதரவு பெருமளவு உள்ளது, இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர்க்கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது [5] சிபிஐ விசாரணைக்குப் பின் 2011, பெப்ரவரி 2, அன்று சிபிஐ இவரைக் கைது செய்தது[6]

2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) தீர்ப்பு
இந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.[7]

சொத்து குவிப்பு வழக்கு
முதன்மைக் கட்டுரை: ஆ. ராசா சொத்து குவிப்பு வழக்கு
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக ஆ. ராசா மீது சிபிஐ 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.[8][9]

No comments:

Post a Comment