Saturday, 8 August 2020

Thyagaraja Bagavadhar







Thyagaraja Bagavadhar

எம்.கே.டி. பற்றி பிரபலங்களின் கருத்து

பாலா (பாலா கிருஷ்ணன்) வேண்டுகோள்:-


பாகவதருடைய பாடல்களான "பவளக்கொடி", "நவீன சாரங்கதாரா", "சத்ய சீலன்", "ராஜமுக்தி", வெளிவருதற்கும் பாகவதருடைய இசைக்கச்சேரி ஒலிநாடா யாரிடமாவது இருந்தார் அதை வெளிக்கொணரவும் தமிழிசைச் சங்கம் பாகவதருக்கு இசைப் பேரறிஞர் பட்டம் கொடுக்கவும் பாகவதர் சமுதாயத்தினர் ஆவண செய்ய வேண்டும் என்பது தான் பிரார்த்தனை.


முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரசித்த பாடல்:-


திரு. தியாகராஜ பாகவதர் அவர்களுடனேயே கடைசி காலம் வரை இருந்த திரு.கோபால் (எம்.கே.டி யுடன் இருந்தால் தன்னையும் எம்.கே.டி கோபால் என்றே பெயரை மாற்றிக் கொண்டவர்)


ஒரு முறை என்னிடம் கூறிய ஒரு தகவலை இங்கு நான் கூற விரும்புகிறேன். எம்.கே.டி. கோபால் அவர்களுக்கு பாகவதர் மறைந்த பிறகு விழாக்காலங்களிலும் மற்ற அரசியல் கட்சி கூட்டங்களிலும் மைக் செட் ஏற்பாடு செய்யும் பணி கிடைத்தது. அதை இன்றும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் "ஏழிசை சவுண்ட் சர்வீஸ்" என்று பெயர் வைத்து இதை நடத்தி வருகிறார். ஒரு முறை திருச்சியில் ஒரு விழாவிற்க்கு இவர் மைக் செட் ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு தலைமை தாங்க முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர், பொன்மனச் செம்மல் வருகை தந்தார். அவர் வருவதற்கு சற்று முன் எம்.கே.டி கோபால் பாகவதர் பாடல்களை மைக் மூலம் எல்லோரும் கேட்கும் படி போட்டுக் கொண்டிருந்தார். "வதனமே சந்திர பிம்பமோ" என்ற பாகவதரின் பாடல் போடுவதற்கும் முதல்வர் புரட்சித் தலைவர் வருவதற்கும் சரியாக இருந்தது. பதறிப்போன விழா ஏற்பாடு செய்தவர்கள் எம்.கே.டி. கோபாலிடம் வந்து பாட்டை நிறுத்தி விடுமாறு கட்டளை இட்டனர். இதை கவனித்த புரட்சித் தலைவர் கோபாலிடம் வந்து பாட்டை நிறுத்த வேண்டாம் பாட்டு மிக நன்றாக இருப்பது மட்டுமில்லை. பாகவதர் என்னை வர்ணித்துதான் அப்படி பாடியிருக்கிறார் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு பாட்டு முடிந்தவுடன் தான் மேடைக்கு சென்றார். பாகவதர் படத்தில் கதாநாயகியைப் பார்த்து பாடி இருந்தாலும் பாகவதர் வர்ணித்த அந்த சந்திர பிம்பமான வசீகரமான தோற்றம் புரட்சித் தலைவருக்கும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

தகவல் - பாலா.

பெருந்தன்மையும் மனிதாபிமானமும் கொண்டவர் பாகவதர்:-


பாகவதர் திரை உலகத்திற்கு பவளக்கொடி மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இந்தப் படத்தை மானகிரி லேனா செட்டியாரும் அவருடன் கூட்டு சேர்ந்து மற்றொருவரும் இந்தப் படத்தை தயாரித்தார்கள். படத் தயாரிப்பில் இருக்கும் போது பாகஸ்தர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மானகிரிலேனாவுடன் கூட்டு சேர்ந்தவர்கள் போட்ட முதலை திருப்பி கேட்டார்கள். மானகிரி லேனா அவர்கள் படம் முடிந்து வெளி வந்தவுடன் தான் அதை தரமுடியும் என்று கூறிவிட்டார். இதை ஏற்க மறுத்த பாகஸ்தர்கள் பாலவாரும் இடையூறு செய்ய ஆரப்பித்தார்கள். பாகஸ்தர்களுக்குள் உண்டான விரிசலை சரி செய்ய பாகவதர் அந்த பாகஸ்தர் போட்ட முதலை தானே கொடுப்பதாக ஏற்றுக் கொண்டு தயாரிப்பாளர்களிடையே உருவான கருத்து வேறுபாட்டை சரி செய்தார். பாகவதரின் இந்த பெருந்தன்மை மானகிரிலேனாவை மிகவும் கவர்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக பாகவதர் சிறை சென்ற போது மானகிரிலேனா முன் பணமாக பாகவதருக்குக் கொடுத்த தொகையை வாங்க மறுத்துவிட்டார்.


சேலம் பொருட்காட்சி சாலையில் பாகவதரின் கச்சேரி நடந்த கொண்டிருந்தது. கட்டடுக் கடங்காத கூட்டம் ஆபத்தை சற்றும் உணராமல் பாகவதரைப் பார்க்கும் ஆவலில் 3 இளைஞர்கள் மின்சாரக் கம்பத்தில் ஏறிவிட்டனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிர்விட்டு விட்டனர். அப்போது அங்கு இருந்த சிலர் பாகவதரை இறந்தவர்களின் வீட்டிற்கு பண உதவி செய்து பத்திரிக்கை மூலமாக புகழ்சூடிக் கொள்ளச் சொன்னார்கள்.


பாகவதர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பொருள் உதவி செய்தார். ஆனால், பத்திரிகைகளில் தான் செய்த உதவி வராதவாறு பார்த்துக் கொண்டார். எந்த ஒரு நேரத்திலும் புகழுக்கு அவர் விரும்பியதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இதே கச்சேரிக்கு கட்டுங்கடங்காமல் கூட்டம் வந்தது. இது காந்தி சேலம் வந்த போது வந்த கூட்டத்தைவிட அதிகம் என்று சிலர் பாகவதரிடம் கூறினார்கள் காந்தி அடிகளிடம் மிருந்த மரியாதை வைத்திருந்த பாகவதர் அடக்கமாக கலைஞர்கள் எல்லா காட்சிப் பொருள்கள் கூட்டம் கூடத்தான் செய்யும். "காந்திஜி ஒரு மகான்". அவரை தன்னுடன் ஒப்பிடுவது முறையாகாது என்று அடக்கத்துடன் கூறிவிட்டார். 1939 ல் திருச்சி வானொலி இயக்குனராக இருந்த திரு டி.என். சங்கரன் அவர்கள் பாகவதரின் இன்னிசை கச்சேரி திருச்சி வானொலியில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார். இரவு 7.30 முதல் இரவு 9 மணி வரை கலைஞர்கள் முன்னேர வானொலி நிலையத்திற்கு வருவது வழக்கம். ஆனால் அன்று சுமார் 7.25க்கு பாகவதர் ஒரு சைக்களில் வானொலி நிலையத்தை வந்தடைந்தார். வரும் வழியில்தான் கார் ரயில்வே கேட் மூடப்பட்டதால் அதைத் தாண்டிவர முடியாமல் போனதையும் உடனே அங்கு ஒருவரிடம் சைக்கிளை இரவல் வாங்கி கொண்டு வந்ததாகவும் பாகவதர் சொன்னார். டி.என்.சங்கரன் பாகவதர்ன் கடமை உணர்ச்சிக் கண்டு நெகிழ்ந்து போய்விட்டார். கச்சேரியும் குறித்த நேரத்தில் தொடங்கியது. இவ்வளவு கஷ்டத்திலும் அன்றைய கச்சேரியை பாகவதர் சோடை போக விடாமல் அற்புதமாக நிகழ்த்தினார்.







கன்னத்தில் தழும்பு:- ( குண்டூசி பி.ஆர்.எஸ். கோபால் சொன்னது. )


கந்தர்வ கான ரத்ன பாகவதருடன் அவரது பங்களாவில் பேசிக் கொண்டுந்தேன்.


எங்கள் சம்பாஷனை எங்கெல்லாமோ சென்று, கடைசியில் ஆமாம், உங்கள் வலது கண்ணுக்கு அடியில், கன்னத்தில் ஒரு தழும்பு இருக்கிறதே அது எப்படி வந்தது? என்ற கேள்வியில் போய் முடிந்தது.


பாகவதர் சொன்ன பதில் ரஸமாக இருந்தது மட்டுமல்லாமல் சுவாரஸ்யமாகவும் இருந்தது.


பாகவதருக்கு ஒன்பது வயதிருக்கும். அப்போது திருச்சிக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்தது.


பாகவதருக்கு சர்க்கஸ் பார்ப்பதென்றால் ரொம்பவும் பிரியம். சிறு வயதில் யாருக்குத்தான் இப்படி இராது?


ஒரு நாள் பாகவதரும் மற்றும சிலரும் சர்க்கஸ் கம்பெனி இருந்த இடத்திற்குப் போயிருந்தார்கள். அப்போது மிருகங்களுக்கெல்லாம் ஆகாரம் போட்டு வந்தார்கள்.


மிருகங்கள் ஆகாரம் சாப்பிடுவதைப் பார்க்க பாகவதருக்கு ஆவலாக இருந்தது. ஆகவே மற்றவர்களைப் போல் அவரும் கூண்டினருகில் சென்றார்.


ஆனால், அங்கிருந்த ஆள் யாரையும் அருகில் அண்டவிடாமல் துரத்திக் கொண்டிருந்தான். சிலர் அவன் வாய் மிரட்டலுக்கு மசியவில்லை. இந்த கோஷ்டியோடு பாகவதரும் சேர்ந்து தைரியமாக நின்று கொண்டிருந்தார்.


அந்த சர்க்கஸ் வேலையாளுக்கு கோபம் வந்து விட்டது. தன் கையிலிருந்த குரங்கை அங்கிருந்தோர்மீது ஏவ ஆரம்பித்தான். ஆளுக்கு பயப்படாத அவர்கள் அந்த ஆதி மனுஷசந்ததிக்குப் பயந்து, பறந்து ஓடி வந்தார்கள்.


பாகவதரும் பயந்து போய் வேகமாக ஓடினார். வழியில் ஒரு முள்வேலி, அதையடுத்து பக்கத்தில் ரயில் தண்டவாளம். அந்த இடத்தில் முள் வேலியைத் தாண்டித்தான் வெளியே செல்ல முடியும்.


பாகவதர், பயந்து ஓடி வந்ததில் வேலியைத் தாண்ட முடியவில்லை. கால் தடுக்கவே வேலியின் முள் அவர் கன்னத்தில் கண்ணுக்கு சிறிது கீழே கிழிந்து விட்டது.


உடனே ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது- பாகவதருடன், வந்த சில நண்பர்களுக்கு ஒரே திகிலாகி விட்டது. என்ன செய்வதென்று திகைத்துக் கொண்டிருந்த அவர்கள் கண்களுக்கு, அருகில் இருந்த ரயில் பாதைக் கிடையில் கிடந்த ஒரு பெரிய நிலக்கரித் துண்டு கம்பீரமாக் காட்சி தந்தது.


"நண்பர் ஓடிச்சென்று அதை எடுத்து, பொடி செய்து என் கன்னத்தில் அப்பிவிட்டார். நிலக்கரிக்கு நிகரான மருந்து காயங்களுக்குக் கிடையாது! என் காயம் குணமாகிவிட்டது! ஆனால் அந்தக் கரியின் கருமை மட்டும் போகவேயில்லை" என்று பாகவதர் என் கேள்விக்கான பதிலை முடித்து விட்டு, கன்னத்தில் அந்தத் தழும்பையும் தடவி விட்டுக் கொண்டார்.


 பாகவதரின் அரும்பெரும் குணங்கள்:-சொன்னவர்: பி.எஸ்.கந்தசாமி (திரைப்பட நாடக நகைச்சுவை நடிகர்)


1959 வது வருடம் பாகவதர் அவர்களை சேலத்தில் உள்ள சுவர்ண புரியில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது.


1937 வது வருடம் எனது 5வது வயதில் "சிந்தாமணி" படத்தை பார்த்தேன் எனது 9வது வயதில் கோயம்புத்தூரில் ஒரு கச்சேரி நடைபெற்றது. அந்த கச்சேரி முடிந்தவுடன் வருந்து நடைபெற்றது. அந்த விருந்தில் எனது எதிரில் உணவு அருந்தி கொண்டிருக்கும் பாகவதரை சந்தித்தவுடன் என்னுடன் வந்த என் தந்தையாரிடம் " அப்பா அதோ பில்வ மங்கள்" என்று பாகவதர் சிந்தாமணியில் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயரைச் சொன்னவுடன் சட்டென்று நிமிர்ந்து பார்த்துச் சிரித்தார்.


22 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் அவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது இந்த விஷயத்தை அவரிடமே சொன்னேன். எனது சாதுரியத்தையும் ஞாபகசக்தியையும் பாகவதர் பாராட்டினார். அந்த சம்பவம் இன்னும் என் மனதில் நீங்கா இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. பாகவதர் அவர்களை நான் சந்திக்கும் போதுதெல்லாம் குரல் வளத்தை வைத்தே யார் எனபதை தெரிந்து கொள்வார். நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் நாகை நாகராஜனிடம் "சேலத்தில் இருக்கும் சிறு சிறு ஆலயங்களில் தினசரி ஒரு முறையாவது பாடவேண்டும். கோயிலில் பாடுவதற்கு காரணம் அங்கு வருபவர்கள் தன் குறைகளை மறையிட வருவார்கள். அப்படி கோயிலுக்கு வருபவர்கள் புனிதமானவர்கள். வருபவர்கள் தன் வருத்தத்தை ஆண்டவனிடம் முறையிடு வரும் பக்தர்கள். நாம் அந்த ஆண்டவனைப் பற்றி பாடிக்கொண்டிருக்கும் போது தம் குறைகளை முறையிட வந்தததைக் கூட மறந்து நம் பாட்டை கேட்பார்கள்."


"உனக்கு ஏன் இதை நான் சொல்கிறேன் என்றார், சில பக்தர்கள் நான் பாடுவதை கேட்டு, இந்த சிறுவயதில் நீ நன்றாக பாடுகிறாயே நீ யாருடைய பிள்ளை, நீ எங்கே இருக்கிறாய், ஏதாவது விசேஷங்களுக்கு பாடுவதற்கு அழைத்தால் நீ வந்து பாடுவாயா, என்று கேட்பார்கள். இந்த பாடல்களை கோயிலில் வந்து பாடாமல், வேறு தனிமையான இடத்தில் பாடியிருந்தால் இந்த ஆதரவும் பாராட்டும் கிடைத்திருக்குமா, அதனால் தான் உனக்கு நான் சொல்கிறேன்" என்றார் பாகவதர். இதைக் கேட்ட நாகை நடராஜன், பாகவதர் சொன்னதை மறுநாள் முதல் சேலத்தில் இருந்த அத்தனை கோயில்களிலும் பாட ஆரம்பித்தார். இதை என்னால் அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாது. அவரது சீடர்களுக்கு பாகவதர் அவர்கள் சொன்ன அறிவுரையை இன்றும் நான் நினைத்து பார்க்கிறேன்.


நன்றாகப் பாடக்கூடியவர்கள் சிலருக்கு இதையே தான் நானும் ஆலோசனையாகக் கூறிவருகிறேன்.


சேலத்தில் பாகவதர அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு அருகில் சித்தி விநாயகர் கோயில் ஒன்று இருந்தது. அந்த கோயிலில் வேங்கடச்சார் என்பவர் அர்ச்சராக இருந்தார். வேங்கடாச்சார் அவர்கள், அந்த காலத்தில் பாகவதரின் வாத்திய குழுவில் தம்பூரா மீட்டுபவராக இருந்தவர். ஒருநாள் திடீரென்று வேங்கடாச்சாரி அவர்கள் வீட்டிக்கு காரை அனுப்பி ரத்னா ஸ்டுடியோவிற்கு அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார். அவரும உடனே புறப்பட்டு சென்றார். அங்கு போனவுடன் கச்சேரி செய்வது போலவும் பாகவதர் அவர்கள் பாடுவதாகவும் காட்சி ஏற்படுத்தி அதில் தம்பூரா வாசிப்பவராக அவரையே நடிக்க வைத்தார். இது எம்.ஏ. வேணு அவர்கள் தயாரித்த சிவகாமி என்ற படத்தில் இந்த காட்சி இடம் பெற்றது. இந்த காட்சி முடிந்த மறுநாள், இந்த கோயிலில் பாகவதர் அவர்கள் உட்கார்ந்த போது வெங்கடாச்சாரி அவர்கள் பாகவதரின் உயர்ந்த எண்ணத்தையும், நண்பர்களை மறக்காத சுபாவத்தையும் நினைத்து, இந்த சம்பவங்களையும் சொல்லி பாகவதர் அவர்களை பாராட்டினார். எப்போதே தன்னிடம் இருந்த ஒருவரை மறக்காமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவரை அழைத்து, தன்னுடன் நடிக்க வைத்திருக்கிறாரே, பாகவதர் எவ்வளவு அரும் பெரும் குணம் உடையவர் என்பதை அறிந்து நான் வியப்படைந்தேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எவ்வளவோ இருக்கின்றன அவர் வாழ்க்கையில்!


இந்த இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி இந்த கட்டுரையை முடிக்கிறேன். இந்த என் நினைவுகளை பாகவதர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்த ஆசிரியர்.ஜெயபாபு அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்வதோடு நமது நட்புகள் வளர ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.


1|2|3|4|5|6|7


அபாரமான இசைத்திறமை அதனால் அடைந்த புகழ்:-


பாகவதருக்கு மிக உன்னதமான தோற்றப் பொலிவும் அதி அற்புதமான குரலினிமையும், இசைப்புலமையும் கடவுள் அவருக்கு கொடுத்த வரப்பிரசாதம். பாகவதர் பாட்டில் மயங்காதவர்கள் அந்த நாட்களில் எவரும் இல்லை. இன்னும் அது இளைய தலைமுறையிலும் தொடர்ந்து கொண்டுக்கிறது. பாகவதர் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படி என்பதை சற்று பார்ப்போம். பாகவதர் ஒரு முறை மன்னார்குடிக்கு நாடகம் போட சென்றிருந்தார். அப்போது ஒரு ரசிகர் உடைந்து போன ஒரு சீப்புடன் பாகவதரைக் காண பலமணி நேரம் காத்து கிடந்தார். அந்த அன்பர் பலமணி நேரம் ஒரே இடத்தில் நின்று கோண்டிருந்ததைக் கண்ட திருமதி எஸ்.டி.சுப்புலட்சுமி அவர்கள் அவர் அங்கு நிற்கும் விபரம் அறிந்து பாகவதரிடம் சென்று அனபர் வெளியே வந்து ரசிகரிடம் அவர் அங்கு நிற்பதர்கான காரணம் கேட்டார். அந்த ரசிகர் தன் பையில் வைத்திருந்த ஒரு புதிய சீப்பை எடுத்துக் கொடுத்து பாகவதர் வாரிக்கொண்டதும் திரும்பிப் பெற்றுக்கொண்டார். பாகவதர் வாரிக் கொண்ட அந்த சீப்பை ஒரு தங்க சரிகை பேப்பரில் வாங்கிக் கொண்டு தான் முன்னம் ஒரு முறை பாகவதரிடம் இருந்து பெற்றுதாகக் கூறினார். பாகவதர் உண்மையிலே அந்த ரசிகரின் அன்பைக்கண்டு நெகிழ்ந்து போனார். பாகவதர் இசைக்கு மனிதர்கள் தான் கட்டுப்பட்டார்கள் என்பது இல்லை. ஒருமுறை சென்னை புரசைவாக்கத்தில் பாகவதர் வீட்டில் பாகவதரும் , விளாத்திக்குளம் சாமியாரும் மாறி மாறிப் பாடிக் கொண்டிருந்தனர். பாகவதர் புன்னாகவராளி ராகத்தை மெய்மறந்து அற்புதமாகப் பாடிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஒரு நாகம் வந்து படமெடுத்தபடி பாகவதர் முன் நின்றது. இதைப் பார்த்த விளாத்திக்குளம் சாமியார் பிரமித்து விட்டார். தான் கிராமத்தில் பலமுறை இந்த புன்னாகவராளி ராகத்தைப் பாடியும் கூட இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை. ஆனால் பாகவதர் பாட்டிற்கு பட்டணத்தில் பாம்பு வந்திருக்கிறது என்றால் பாகவதரின் இசை இனிமையை எப்படி வர்ணிப்பது என்றார். இதே போல திருமூலாரண்யம் என்னும் ஊரில் ஒரு மடத்தில் பாகவதர் தங்கிஇருக்கும் போது காலையில் பாகவதர் பாடிய பாட்டைக் கேட்டு தொழுவத்தில் இருந்த பசு பாகவதர் பக்கத்தில் நின்று பாட்டைக் கேட்ட அதிசயம் நடந்தேறியது. ஒரு முறை பாகவதர் எர்ணகுளத்தில் கச்சேரி செய்து விட்டு கொச்சி எக்ஸ்பிரஸ் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். விபரம் அறிந்த பாகவதர் ரசிகர்கள் ரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் பாகவதர் வெளியே வந்து காட்சி அளித்தால் தான் வண்டி நகரும் என்று சொல்லிவிட்டார்கள். விளைவு கொச்சி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு 5 மணி நேரம் தாமதமாக வந்தது. ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் ரசிகர்களுக்கு பாகவதர் காட்சி அளித்த பின்பு தான் ரயில் புறப்பட வேண்டி இருந்தது. பாகவதர் கச்சேரி என்றால் கூட்டம் கட்டு கடங்காது. போலீஸ் தடி அடி அன்றாட நிகழ்ச்சி. அப்படி அடிபட்டும் பாகவதரின் நிகழ்ச்சியை கேட்காமல் கூட்டம் கலைந்ததில்லை. அப்படி ஒரு வசீகரம் பாகவதரிடம் இருந்தது. பாகவதர் ரயிலில் போகிறார் என்றால் பிளாட்பாரம் டிக்கெட் அனைத்தும் விற்றுப் போகும்.


நாகர் கோயிலில் என்.எஸ்.கே. வீட்டு புதுமனை புகுவிழாவிலும் கோட்டையூர் அழகப்பா செட்டியார் இல்லத் திருமணத்திலும் அன்று விஜயம் செய்த மிகப் பிரபலங்களான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் சர்.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், திரு.சி.பி.ராமசாமி ஐயர், கல்கி, கவிமணிதேசிய வினாயகம் பிள்ளை, திரு. ராஜரத்னம் பிள்ளை போன்றோர் பாகவதர் கச்சேரி முடியும் வரை சாப்பிடக் கூட போகவில்லை. இதில் டி.என். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் பாகவதரின் பிரபலமான சினிமா பாட்டுக்களை விரும்பிக் கேட்டு அதை பாகவதர் பாட மிகவும் ரசித்துக் கேட்டார். டி.என்.ஆர். ஒருமுறை திருநெல்வேலியில் ரயில் வருவதற்காக ரயில்வே கேட்மூடப்பட்டிருந்தது. அங்கு கேட் திறப்பதற்காக காரில் காத்திருந்தார் பாகவதர். இதைப் பார்த்து விட்ட ஒரு பெட்டிக்கடைக்காரன் பாகவதர் பாட்டைப் பாடிக் கொண்டே சோடா ஒன்றைக் கொடுத்து குடிக்கும் மாறு அன்பு கட்டளை இட்டான். பாகவதரும் மறுக்கவில்லை காரிலிருந்து வெளியே இறங்கி சோடா குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்த கார்ட் இதைப் பார்த்து விட்டார். பார்த்தது தான் தாமதம் கார்ட் உடனே ரயிலை நிறுத்தி இறங்கி வந்து பாகவதரை கண்டு அவருடைய பாடல்களின் சிறப்பைச் சொல்லி வாழ்த்தி விட்டு போனார் பாகவதரின் பாட்டின் ஆகர்ஷண சக்தி அபாரம். அவர் பாடிய பூமியில் மானிட என்ற பாடலை எலிபென்ட்வாக் என்ற ஆங்கில படத்தில் எடுத்துக் கொண்டார்கள். இரண்டாம் உலகப்போரின் போது அகதிகளாக வந்த பல பேர் பாகவதர் பாடிய இசைத்தட்டுக்களை கிராமபோன் பெட்டியை எடுத்து வர மறக்கவில்லை. அந்த கால கட்டத்தில் பல குழந்தைகளுக்கு பூமியில் மானிட பாட்டு தாலாட்டாகவே அமைந்திருந்தது. அந்த நாட்களில் பாகவதர் கிராமப் பாகவதர் செண்ட், ஜவ்வாது, அத்தர், மிகப்பிரபலம், பாகவதர் பாட்டை முணு முணுத்துக்கொண்டு தான் தொழிலாளர்கள் தங்கள் பணிகளைச் செய்தனர். இன்னும் கேட்டால் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கூட பெண்ணை பாகவதர் பாட்டைப் பாடும் படி கேட்ட காலம் அது.


மற்றும் ஒரு சுவையான நிகழ்ச்சி பாகவதருக்கு ஓர் முஸ்லீம் நண்பர் இருந்தார். தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் பெரும் செல்வந்தரானார். அவருக்கும் அவருடைய இரு மகன்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வர அந்த முஸ்லிம் தான் சம்பாதித்தை எல்லாம் பாகவதர் பேரில் எழுதி பத்திரத்தையும் பாகவதர் பெயரில் பதிவு செய்து விட்டார். ஆத்திரத்தில் முன் பின் தெரியாமல் செய்த தவறு என்பதை நன்கு புரிந்துகொண்ட பாகவதர் அந்த முஸ்லிம் இரு மகன்களையும் கூப்பிட்டு அறிவுரை கூறி அவர்களுடைய தகப்பனார் செய்த பத்திரமாற்று சிலகாலம் அப்படியே இருக்கட்டும் என்று கூறி அந்த முஸ்லிம் நண்பர் மறைந்த உடன் அவருடைய மகன்கள் பேரில் சொத்துக்களை சரிசமமாக பகிரிந்து அளித்துவிட்டார். இப்படி பிறர் பொருளுக்கு ஆசை படாமல் வாழ்ந்தவர் பாகவதர். தனக்கு சற்று சிரமமான நேரங்களில் கூட எந்த ஒன்றையும் தர்ம நியாயங்களுக்கு எதிராக அடைய விரும்பியதில்லை.


  பிறருக்கு கொடுத்துதவும் குணம்:-


பாகவதரிடம் இருந்த மிகப் பெருந்தன்மையான குணம் அவருடைய கச்சேரிக்கு வாசிக்கும் சக கலைஞர்களை கௌரவிப்பது தான். ஒரு முறை பெங்களூருக்கு சிவாஜி நகரில் பாகவதரின் கச்சேரி திரளான கூட்டம். நல்ல வசூல். கச்சேரி இரவு 12.30 மணிக்கு முடிந்தது. வசூலைக் கண்டு மகிழ்ந்த நிர்வாகம் கணிசமான தொகையை பாகவதருக்குச் சன்மானமாக வழங்கினர். பெற்றுக் கொண்டு சக கலைஞர்களுடன் தங்கி இருக்கும் விடுதிக்குத் திரும்பியவுடன் ரூபா 250 /- மட்டும் எடுத்துக் கொண்டு மீத மிருந்த சில ஆயீரம் ரூபாய்களை சக கலைஞர்களுக்கு கொடுத்து விட்டார். இப்படி அவர் பலமுறை கடம் வித்வான் ஆலங்குடி ராமச்சந்திரனை பாராட்டி அன்பளிப்பு அளித்திருக்கிறார். கச்சேரி முடிந்து மக்கள் மத்தியில் உரையாடும் போது கூட தன் கச்சேரிக்கு சோபித்ததற்கு பக்கவாத்யம் காரர்கள் தான் காரணம் என்று பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார்கள். ராஜன் மஹாராஜன் என்ற பாடல் ஒலிப்பதிவு செய்த போது கூட வீணை வாசித்த திரு.ராகவன் பேர் இசைத்தட்டில் வந்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லி இசைத்தட்டில் அவருடைய பெயரும் இடம் பெற்ம் படி பார்த்துக் கொண்டார். செட்டி நாட்டில் ஒரு கல்யாணத்தில் பட ஒப்புக் கொண்ட அதே தேதியில் சகநடிகர் பி.பி.ரங்காசாரியார் மகள் கல்யாணத்தில் பாடுவதற்காக செட்டி நாட்டுத் திருமணத்திற்கு வர இயலாது என்று கூறி பி.பி.ரங்கச்சாரியார் இல்ல திருமணத்தில் இலவசமாகக் கச்சேரி செய்து கொடுத்தார். ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களின் ஆற்றலைக் கண்டு அவர் எழுதிய பில்ஹணன் நாடகத்தை வானொலியில் ஒரு மணி நேர நாடகமாக அதை நடத்தி கௌரவித்தார். ஏ.எஸ்.ஏ சாமி அவர்களின் திரை உலகப் பிரவேசத்திற்கும் பாகவதர் வழிவகுத்தார்.






எம்.கே.டி. பற்றி பிரபலங்களின் கருத்து


நண்பருக்கும் தங்கதட்டில் சாப்பாடு :-


எம்.கே.டி பாகவதர் நடித்த அமரகவி படத்துக்கு வசனமும் பாடல்களும் நான்தான். பாகவதர் தங்கதட்டில் தான் சாப்பிடுவார் என்று கேள்விப்ட்டிருக்கிறேன். பட விஷயமாக நான் அவருடன் தங்க நேர்ந்தது அன்று, சாப்பாட்டு நேரத்தில் பாகவதரின் அறைக்கு சென்றேன். அப்போது நிஜமாகவே தங்கத்தட்டில் பாகவதருக்கு சாப்பாடு வைக்கப்பட்டு அருகே ஒரு வாழை இலையில் எனக்கு சாப்பாடு பரிமாறப்பட்டு இருந்தது.


அப்போது சாப்பிட வந்த பாகவதர் தன் உதவியாளரிடம் என்னை அறிமுகப்படுத்தி, 'இவர் எனது பட வேலையாக என்னுடனே இருக்கும் நண்பர். இவர் இங்கிருக்கும் வரை எனக்கு தங்கத்தட்டில் சாப்பாடு போடுகிற மாதிரி இவருக்கும் தங்கத்தட்டிலேயே பரிமாற வேண்டும்' என்று உத்தரவு போட்டார்.


அதன் பிறகு எனக்கும் தங்கத்தட்டில்தான் சாப்பாடு. அவரிடம் விசாரிச்சேன் தங்கத்தட்டு 110 பவுனில் செய்ததாம்.


- கவிஞர் சுரதா கூறியது.


 தங்கம் வெள்ளி பாகவதர் கூறிய கருத்து :-


பாகவதர் கச்சேரி செய்வதற்கு கல்வி நிலையங்களிடமிருந்தும், கோயில்களிலும் பணம் பெறுவதில்லை. ஒரு முறை சென்னை புரசைவாக்கதிலுள்ள ஒரு கல்விக் கூடத்தின் வளர்ச்சிக்கு பாகவதர் கச்சேரி செய்தார். கல்வி நிறுவனத்திற்கு நல்ல வசூல் கிடைத்ததால் பள்ளி நிர்வாகம் பாகவதருக்கு ஒரு கணிசமான தொகையை வழங்க முன் வந்தது. பாகவதர் இதை நிராகரித்து விட்டார். பள்ளியின் நினைவாக ஒரு வெள்ளி தட்டையும் பரிசாகக் கொடுக்க பள்ளி முன் வந்த போது அதையும் பாகவதர் நிராகரித்து விட்டு "நான் வாழ்க்கையில் தங்கமும் வெள்ளியும் நிறைய பார்த்து விட்டேன். அவ்வளவும் நான் அரசாங்க விருந்தாளியாக 30 மாதம் சிறையில் இருந்த போது என்னிடமிருந்து போய் விட்டது. அதற்குப் பிறகு தங்கத்திலும் வெள்ளியிலும் இருந்த ஆர்வம் போய் விட்டது" என்று சொல்லி விட்டு காரில் ஏறிப் போயி விட்டார். வாழ்க்கையின் வசதிகளை அந்தக் காலத்திலேயே வெறுக்கத் தொடங்கினார்.



தமிழுக்கு பெருமை:-


பாகவதரின் எட்டாவது படம் "சிவகவி" தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற பொய்யா மொழி புலவரின் வாழ்க்கை வரலாற்றுக்குத்தான் அதை திரைக்கதையாக்கி, வசனம் எழுதிய திரு.இளங்கோவன் 'சிவகவி' என்று பெயர் வைத்திருந்தார். ஏற்கனவே பல வெற்றிப் படங்களை எடுத்து வெளியிட்டிருந்த கோவை பட்சி ராஜா பிக்சர்ஸ் இதையும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். பாகவதரின் வாழ்விலும் தாழ்விலும் பங்கு கொண்ட திரு.எஸ்.எம்.ஸ்ரீ ராமுலு நாயுடு இதை டைரக்ட் செய்திருந்தார்கள். அந்த திரை உலகத் தாரகையான டி.ஆர்.ராஜகுமாரி பாகவதருடன் முதன் முதலாக நடித்த படம் இதுவே. ஆனால் கதாநாயகியாக அல்ல, சோழ நாட்டுப் புலவர் பெரு மக்கள் குழுவை சேர்ந்த வஞ்சியாக ராஜா சர்.அண்ணாமலை செட்டியார் திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார், திரு.டி.கே.சிதம்பரநாதா முதலியார், திரு.கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தி, திருமதி.எம்.எஸ். சுப்பு லட்சுமி, ஆகியோருடன் சேர்ந்து அப்போது தமிழிசையை வளர்ர்துக் கொண்டிருந்த பாகவதர் இந்தப் படத்தில்


"தமியேன் பைந்தமிழ்

அன்னையின் பாலருந்தித்
தவழ் பாலன்
உயிர் வாழும்
ஊழியனேன் றுலகறியும்"

என்று பாடித் தமிழுக்கு பெருமை சேர்ந்தார்.





சிவனை ஒப்பந்தம் செய்யுங்கள்:-


எம்.கே.டி. நடித்த படமான 'சிவகவி' அப்படி ஒரு அபார வெற்றி பெற்றது. வசனம் இளங்கோவன், பாடல்கள் பாபநாசம் சிவன். இந்த சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, எம்.கே.டி. தன்னை யார் நடிக்க ஓப்பந்தம் செய்ய வந்தாலும், முதலில் வசனத்துக்கு இளங்கோவனையும், பாட்டெழுத பாபநாசம் சிவனையும் ஒப்பந்தம் செய்து விட்டு வாருங்கள் என்றே கண்டிஷன் போடுவராம். சிவகவியில் மொத்தம் 29 பாட்டுக்கள் இதில் பாகவதர் பாடியவை 19 பாட்டுகள் ஆகும்.


 வெட்டு :-


டைரக்டர் கே.சுப்பிரமணியம் "நவீன சாரங்கதாரா" படம் எடுத்தார். மேலோட்டமாகப் பார்த்தால் அது ராஜா ராணிக்கதை. கொஞ்சம் உற்று நோக்கினால் ஆட்சியாளர்களின் அராஜகத்தைக் தட்டிக்கேட்ட, மக்கள் திரண்டு எழுந்து, பொது ஒத்துழையாமை இயக்கத்தை ஆயுதமாகக் கைக்கொள்கிற விஷயம் சொல்லப்பட்டிருப்பது புரியும்.


தணிக்கையாளர்கள் இதை புரிந்து கொள்ளாமல் படத்துக்கு அனுமதி தந்து விட்டார்கள்.


இதை பார்த்த தியாகராஜ பாகவதர் சற்று தைரியம் கொண்டு, இதே போன்று ஒரு விஷயத்தை மேலும் கொஞ்சம் வெளிப்படையாகக் சொல்லும் விதமாக ஒரு படத்தை 1936-ல் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து சென்சாருக்கு அனுப்ப, தீட்டி விட்டார்கள் தீட்டி! வெட்டு என்றால் அப்படியொரு வெட்டு!


நன்றி : கல்கி பொன்விழாமலர்.



பாகவதர் போட்ட பிச்சை:-


"பாகவதரின் பாட்டை நான் பைத்தியம் பிடிச்ச மாதிரி ரசிச்சிருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் சின்னப்பையன். மதுரை தெற்கு மாடவீதியில் ராத்திரி 9 1/2 மணிக்கு பாகவதரின் கச்சேரி. 8 மணிக்கு பாகவதரை முன் வரிசையில் அமர்ந்து பார்க்க ஒரு கூட்டம் இடம் பிடித்திருக்கிறது. அதில் நானும் ஒருவன். 9 1/2 மணிக்கு ஜவ்வாது வாசனை அதைத்தொடர்ந்து மகாவிஷ்ணு நடந்து வருகிற மாதிரி பாகவதர் வாரர். கூட்டமே ஆர்வமாய் அவரது முகத்தை உற்று நோக்குகிறது. அவர் கொடுத்த பாடல்களால் கிறங்கிபோன மக்கள் வியப்பு மாறாமல் பார்க்கும் பார்வை அது."


அவரது பாட்டு கேட்டுக்கேட்டு அதை மதுரைத்தெருக்களில் பாடிப்பாடி எனக்குப் புகழ் வந்தது. பாகவதரின் பாணியில் ஆரம்பித்த எனது பாட்டு நடையை பிறகு எனக்கென்று ஒரு தனி பாணிக்கு மாற்றிக்கொண்டேன். இன்று எனக்கு ஏதாவது பாராட்டு கிடைக்கிற தென்றால் கூட அந்த பாராட்டுக்கு பின்னணியில் பாகவதர் தான் இருக்கிறார். இது பாகவதர் எனக்கு போட்ட பிச்சை.


- டி.எம்.எஸ். சொன்னது.


"என்வழி தனிவழி"


ஒரு துறையில் பெயரும் புகழும் பெற்று விளங்கும் ஒருவன் அதே துறையைச் சேர்ந்த இன்னொருவன் தன்னை மிஞ்சப் பார்க்கும் போது அதனைத் தன்னால் முடிந்த வரை மட்டிந்தட்டி வைக்க முயல்வது இயற்கை.


ஆனால் பாகவதர் தம்முடைய வழியைக் பின்பற்றி யாராவது பாடினாலோ, நடித்தாலோ, அவர் பரம சந்தோஷப்படுவார். இது பிடிக்காத சிலர் "உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக் கொள்கிறீர்கள்!" என்று பாகவதரை எச்சரிப்பார்கள். பாகவதரோ அதை மறுத்து "இல்லை எனக்கு நானே பெருமை தேடிக் கொள்கிறேன்!" என்பார் எங்களுக்கு அப்படித் தோன்றவில்லை. நீங்கள் தேடிக்கொண்ட பெருமையை இன்னொரு வருக்காக அப்படித் தோன்றவில்லை. நீங்கள் தேடிக்கொண்ட பெருமையை இன்னொரு வருக்காக விட்டுக்கொடுப்பதாக இருப்பதாகவே தோன்றுகிறது என்பார்கள் அவர்கள். கிடையவே கிடையாது. என்னுடைய வழியைப் பின்பற்றி ஒருவன் பாடுகிறான் என்றால் என்னுடைய வழியைப் பின்பற்றி நடிக்கிறான் என்றால், அது எனக்கு தான் பெருமை தருவதாக இருக்குமே தவிர, அவனுக்கு ஒரு நாளும் பெருமை தருவதாக இருக்காது என்பார் பாகவதர். ஆம் ஒவ்வொருவருக்கும் ஒரு "தனி வழி" இருக்க வேண்டும் என்பது அவருடைய அபிப்பிராயம்.


- விந்தன் சொன்னது.தார்.





சிரஞ்ஜீவி :-


பாகவதர் மறைவுக்கு ஒரு வாரம் முன் பொள்ளாச்சியில் பாகவதர் ஒரு கச்சேரி செய்தார். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போல் அன்று பாகவதரின் கச்சேரி மிக அருமையாக அமைந்தது. கச்சேரி முடிந்ததும் சிகிச்சைக்காக திரும்ப ரயில் ஏறிய போது ஸ்டேஷனில் விளக்குகள் அணைந்து விட்டன. இது சகுனத்தடை என்று கருதிய பாகவதரின் நண்பர்கள் பாகவதர் பிரயாணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். வாழ்க்கையில் பல சித்தர்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியாலும் ஏறத்தாழ ஒரு சித்தராக இருந்த பாகவதர் உலகில் விதியைக் காட்டிலும் சக்தி மிகுந்தது எதுவும் இல்லை. விதியை விட்டு தப்பிக்க முயன்றாலும்

அது தானாகவே எதிரில் வந்து விடும் என்று கூறிவிட்டு ரயிலேரிப் போய்விட்டார். பாகவதர், மேலும் உயிருக்கு ஒரு நிரந்தரமான வீடு கிடையாது என்பது பாகவதரின் அபிப்பிராயம் வாழ்க்கையில் அவருக்கி ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் வாழ்வையும் தாழ்வையும் சமமாகப் பார்க்கும் பக்குவத்தை பாகவதருக்கு அளித்திருந்தது. வெளிப்பார்வைக்கு நல்லநண்பராக தெரிந்த பலர் அந்தரங்கத்தில் அழுக்குடனே தன்னிடம் பழகியதை பாகவதர் கண்டார். செல்வம் சேரும் போது பழகி அது குறையும் போது தூர விலகிச் சென்றவர்களைத் தான் பாகவதர் அனுபவத்தில் கண்டார். இதற்கு விதி விலக்கு திரு ஹரிராம் சேட். நட்பிற்குரிய சிறந்த நிலையை எப்போதும் உணர்த்தினார் ஹரிராம் சேட் முடிந்த போதெல்லாம் நண்பரை தாங்கி நிற்கத் துடித்தவர் அவர். வாழ்க்கையில் தாங்கி நிற்கத் துடித்தவர் அவர். வாழ்க்கையில் நல்லதையே செய்யவிரும்பியபடி பிறருக்குக்
கொடுக்கவும் செல்வம் குறைந்த காலத்திலும் தம்முடைய உயர்ந்த குணத்திலிருந்த விலகாமலும் பகவானை என்னாளும் மறவாமலும் இருந்த ஓர் ஒப்பற்ற கலைஞர் காலத்தால் அழிக்க முடியாதவர் அவர் ஒரு சிரஞ்ஜீவி அதற்கு மறு பெயர் திரு.எம்.கே. தியாகராஜ பாகவதர்.

 தர்ம நியாங்களை பெரிதும் மதித்த பாகவதர்:-


விதிவசத்தால் பாகவதர் சிறைசெல்ல வேண்டி வந்த நேரத்தில் ஏறத்தாழ 12 படங்களுக்கு பாகவதர் முன்பணம் வாங்கி இருந்தார். பாகவதர் சிறையிலிருந்து மீள்வது சிரமம் என்ற கருதிய படத்தயாரிப்பாளர்கள் தயங்கினார். கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டார்கள். அந்த கஷ்டமான நேரத்திலும் அவர்களுடைய முன் பணத்தைக் திருப்பிக் கொடுத்து தன்னுடைய உயர்ந்த பணிபினை பாகவதர் வெளிப்படுத்தினார். பாகவதர் மிகவும் வசதியாக வாழ்ந்த காலத்தில் அவருக்கு வேண்டியவர்கள தெரிவித்தார்கள். மற்ற சிரிய வீடுகளை வாங்க தன்னிடம் வசதி இருந்தாலும், ஏழைகளை நிராதரவாக்க பாகவதர் விரும்பாதால் மற்ற சிறிய வீடுகளை வாங்க மறுத்து விட்டார்.


கட்டணம் வசூல் :-


ஒரு முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு என்ற இடத்தில் பாகவதர் கச்சேரி ஏற்பாடுயிருந்தது. கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் கச்சேரி "இலவசம்" என்று அறிவித்திருந்தார்கள். அன்று கட்டுக் கடங்காத கூட்டம். கூட்டத்தைப் பார்த்த நிர்வாகிகள் கட்டணம் வசூலிக்கலாம் என்று பாகவதரை பலவாறு நிர்பந்தித்தார்கள். ஆனால், இலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வசூல் செய்யும் ஆலோசனையை பாகவதர் ஏற்கவில்லை. வசூல் செய்திருந்தால் பல ஆயிரம் பார்த்திருக்காம் என்ற நிலையிலும் தன்னுடைய உயர்ந்த பண்பை உணர்த்தியவர் பாகவதர்.


ரசிகர்கள் படம் பார்க்க ரெயிலில் வருவார்கள்:-


தியாகராஜ பாகவதர் நடித்த "சிந்தாமணி" படம் எங்களது தியேட்டரில் தொடர்ந்து 3 வருடங்கள் ஓடியது. "ஹரிதாஸ்" படத்தை விட அதிக நாட்கள் ஓடிய படம் "சிந்தாமணி " தான் அந்தக்காலத்தில் சென்னையில் எங்களது தியேட்டரில் மட்டும் தான் சிந்தாமணி ஓடியது. அக்கம் பக்கம் வேறு எந்த ஊர்களிலும் ஓடவில்லை.


தவிர அப்போது தியாகராஜ பாகவதருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதால் வெளியூரிலிருந்து ரெயில், பஸ் மூலம் வந்து படம் பார்த்து செல்வார்கள்.


தியாகராஜ பாகவதர் பற்றிச் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர். போல் நல்ல அழகு, செக்கச்செவேர் என்று இருப்பார். காதில் வைரக் கடுக்கன், கையில் வைர மோதிரம், கழுத்தில் வைரச் செயின் என்று வைரமாக ஜொலிப்பார். அவரது அழகைப் பார்த்து ரசிப்பதற்காகவே பல தடவை தொடர்ந்து அவரது படம் பார்க்க வந்த ரசிகைகளும் ஏராளம்.


தியாகராஜ பாகவதரும் தனது படம் இங்கே திரையிடப்படும் போது அடிக்கடி சினிமா பார்த்து செல்வார். 'போர்டு' காரில் கம்பீரமாக வந்து இறங்குவார். அப்போது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு உற்சாகத்துடன் வரவேற்பார்கள்.


- சென்னை முருகன் தியேட்டர் அதிபர்.

பரமசிவ முதலியார் சொன்னது.


இலவசமாக :-


பாகவதர் சிறுவனாக இருந்த நாடக உலகத்தில் பிரவேசித்த காலத்தில் குருவாக இருந்த நடராஜ வாத்தியாருக்காக அவர் நலத்திற்காக பிற்காலத்தில் இலவசமாக நாடகம் நடத்தி நாடகத்தில் வந்த பணத்தை அப்படியே நடிராஜ வாத்யாருக்குக் கொடுத்து உதவினார். பாகவதரின் குருபக்திக்கு இது மற்றும் ஓர் உதாரணம்.


 சிவன் எதிரில் அமரமாட்டார்:-


ஏழிசை மன்னர் எம்.கே.டி. அவர்கள் கால் பதித்த மூன்று துறையான "நாடகம்", "திரைஉலகம்", "சங்கீத உலகம்" ஆகியவற்றில் அழியாத புகழை அடைந்தவர். இதற்கு முக்கிய காரணம் அவருடைய குரு பக்திதான். திருவையாறு தியாகரஜ ஆராதனையில் பாடவேண்டும் என்கின்ற அவாவினால் அரும்பாடு பட்டு சந்தர்பம் வாங்கினார் பாகவதர். பாகவதர் பாடுவதை அந்தகால கட்டத்தில் விரும்பாத ஆராதனை நிர்வாகிகள் வேண்டா வெறுப்பாக கொடுத்த சந்தர்பத்தையும் நழுவிடாமல் ஆத்ம திருப்திக்காக பாடி தன்னுடைய குரு பக்தியை வெளிப்படுத்தியவர் பாகவதர். கவிஞனின் மனோபாவத்தை கண்டு உணர்ந்து பாடுவதில் சமர்த்தர் பாகவதர். ஹரி நேநெந்து வெதகுதுரா என்ற ஹரிகாம்போதி (தியாகராஜ இயற்றியது) கீர்த்தனைப் பாடும் போது அதிகமான சங்கதிகள் ஸ்வரங்கள் போட்டு பாட மாட்டார். கேட்டால் ராமர் சிலைகாணமல் போய் விட்டது. என்று தியாகராஜர் வருந்திப்பாடும் போது அங்கு சங்கதிகளுக்கும் ஸ்வரத்திற்கும் தியாகராஜர் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார் என்று கூறுவார். அதே போல தனக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்த ஆலந்தூர் வெங்கடேச ஐயர், ஆலந்தூர் சகோதரர்கள் பாபநாசம் சிவன் போன்றவர்களிடம் மிகுந்த மரியாதையும் பக்தியும் கொண்டிந்தார் பாகவதர் பாபநாசம் சிவனிடத்தில் பாட்டு கற்றுக்கொள்ளும் சமயம், சிவன் உத்தரவிடாமல் அவர் எதிரில் அமர்பதைக் கூட பாகவதர் செய்ததில்லை.


தங்கத்தாலான உருவம்:-


"பொன் நிறமான மேனி பொன் நிறமுள்ள சட்டை, கழுத்தைச் சுற்றி சரிகை மட்டும் தெரியும் மேல் வேட்டி, காதுகளிலும் கைகளிலும் மின்னும் வைரங்கள் நெற்றியில் சவ்வாதுப்பொட்டு, தலையில் அழகான சுருண்ட முடி - இவை அணைத்தும் தங்கத்தால் வார்தெடுக்கப்பட்ட ஒரு உருவத்தில் வைரங்கள் பதித்தது போல் காட்சியளித்ததோடு சிரித்தபடி அவர் நடந்து வருவதைக் காணம் யாரும் தங்கத்தாலான உருவம் உயிர் பெற்று வருவது போலவே எண்ணுவார்கள் பாகவதர் ஒரு அற்புதமான இசை அரசர்"


- புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். சொன்னது.


பிறருக்கு உதவும் குணம்:-


பாகவதர் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் டி.கே.எஸ். ஷண்முகம் அவர்கள் டி.கே.எஸ். கம்பெனி என்று ஒன்றை நடத்தி வந்தார். எதிர் பார்த்த அளவு வசூல் ஆகாததால் டி.கே.எஸ். நாடகங்களை குத்தகை எடுத்திருந்த கோல்டன் கம்பெனி கோவிந்தசாமி என்பவர் பாகவதரை அணுகி நாடகத்தில் நடிக்க வேண்டினார் டி.கே.எஸ்.ன் நடிப்பிற்கு முன்னால் தன்னுடைய நடிப்பு மிகச் சராசரிதான் என்றும் ஏதாவது குற்றம் குறை கண்டால் மன்னிக்குமாறு வேண்டி வள்ளி திருமணம் நாடகம் போட இசைந்தார். அதில் டி.கே.எஸ். நாரதராக நடிக்கும் படியும் வேண்டிக்கொண்டார்.


பாகவதரின் பிறருக்கு உதவும் குணத்தையும், அடக்கத்தையும் கண்டு வியப்பும் பிரமிப்பும் அடைந்தார். டி.கே.எஸ். நாடகம் பிரமிப்பும் அடைந்தார். டி.கே.எஸ். நாடகம் அபார வெற்றியைக் கண்டது. கம்பெனியும் அதனால் தழைத்தது. அதே போல திண்டுக்கல் சக்தி நாடகசபைக்கு சரியாக வசூல் காணத நேரத்தில் நாடகங்களுக்கு தலைமை தாங்கிபெரும் பொருள் ஈட்டித் தந்தார். பாகவதர் பிறருக்கு உதவும் குணத்திற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு. கிட்டப்பாவிடம் மாறாத அன்பு கொண்டவர்.


பாகவதர் ஒரு முறை எஸ்.ஜி. கிட்டப்பாவின் நாடகத்தில் பாகவதர் நடிக்க ஏற்பாடாக இருந்தது. பாகவதருக்கு அன்று கிட்டப்பாவிற்கு இருந்த புகழ் இருந்தாலும் பிற கலைஞரை பெரிதும் மதிக்கும் பண்பு பாகவதரிடம் இருந்தது. இயற்கையின் சீற்றத்தால் தன்னுடைய நாடகத்திற்கு வசூல் பாதிக்கப்பட்டால் பாகவதர் காண்டிராக்டர்களிடம் பணம் வாங்குவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.


குருபக்தி :-


திருச்சி வானொலியில் பாகவதர் ஒரு நிரந்தர வித்வானாக இருந்த சமயம் நிகழ்ந்த ஒரு சம்பவம். பாகவதர் கச்சேரிக்கு அன்று ஏற்பாடு செய்திருந்த தம்பூராக்கலைஞரை பாகவதர் நிலையத்தாரிடம் மாற்றும்படி வேண்டிக் கொண்டார்.


ஏனென்று அறியாவிட்டாலும் பாகவதரின் வேண்டுகோள்படி தம்பூரா கலைஞர் மாற்றப்பட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் பாகவதரே அந்த நிகழ்ச்சிக்கு விளக்கம் அளித்தார். பாகவதருக்கு அன்று தம்பூரா போட ஏற்பாடு செய்திருந்த கலைஞர் ஒரு காலத்தில் பாகவதருக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்த குரு கால வெள்ளத்தில் வாழ்க்கைத் தரம் சரிந்து விட்ட நிலையில் அவர் பாகவதருக்கு தம்பூரா போடவந்திருந்தார். கால வெள்ளத்தில் அவர் தாழ்ந்தாலும் தனது குருவைத் தனக்கு பின்னால் அமர்ந்து தம்பூராபோடுவதை பாகவதர் விரும்பாததால் அவரை கௌரவிக்கும் வகையில் விரும்பாததால் அவரை கௌரவிக்கும் வகையில் அவர் தம்புரா போடமலேயே பாகவதர் வானொலி நிலையம் தனக்கு அளித்த சன்மானத்தை தன் குருவிடம் சேர்த்துவிட்டார். எப்படி பாகவதரின் குருபக்தி.


என்ன அழகு:-


எம்.கே.டி. பாகவதர் அவர்களைப் பற்றி சொல்ல ஒருநாள் போதாது, வருடம் முழுவதும் சொன்னாலும் அலுக்காது அவரது குணம் அப்படி ஒரு அற்புதம்.


அவரது அழகு, சாகித்யம், சரீரம் இதெல்லாம் யாருக்கும் கிடைக்காது. அதனால் தான் மறையாத புகழுக்கு பெயருக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். அவரோடு நடித்தவள் என்ற முறையில் அவரது குணம் இருக்கிறதே..... என்ன அனபு.... பரிவு.... பாகவதர் நினைவு புகழ் என்றும் மறையாது.


- நடிகை டி.வி.குமுதினி சொன்னது.


1|2|3|4|5|6|7


Back To Index







 


   




Image may contain: one or more people, fire and food

Image may contain: 1 person, sitting




சிவாஜி கணேசன் நடித்த பழைய படங்களான கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகாமியின் செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், பாசமலர் ஆகிய படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தன. இந்த வரிசையில் வசந்தமாளிகை படமும் டிஜிட்டலில் வெளியாகிறது.


இந்த படம் தெலுங்கில் நாகேஷ்வரராவ் நடித்து ‘பிரேம் நகர்’ என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு தமிழில் சிவாஜிகணேசன்-வாணிஸ்ரீ நடிக்க வசந்த மாளிகை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கே.எஸ்.பிரகாஷ் இயக்கினார். படம் 1972-ல் திரைக்கு வந்து 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இலங்கையிலும் அதிக நாட்கள் ஓடியது.


தமிழில் வந்த முதல் காதல் படம் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். காதலில் தோல்வி அடைந்தவர்கள் இந்த படத்தை பார்த்தபிறகுதான் தாடி வைக்க தொடங்கினர். வாணிஸ்ரீ கூந்தலும் பெண்கள் மத்தியில் பிரபலமானது. படத்தில் இடம்பெற்ற மயக்கமென்ன, யாருக்காக, குடி மகனே, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், கலைமகள் கை பொருளே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.







அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது.

சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்!

ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீரோ. அப்புறம் இரண்டு மர ஸ்டூல்கள். தலைக்கு மேல் ஒரே ஒரு மின் விசிறி. அவ்வளவுதான் அந்த சங்கீதமேதையின் நினைவாக மிஞ்சியிருக்கும் சொத்து.

ராஜம்மாளின் வயதான தம்பி மணியும், பாகவதரின் பெண் வயிற்றுப் பேரன் கணேஷும் அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள். மீளாத சோகமும், வறுமையும் அந்த குடும்பத்தையே புரட்டிப் போட்டுள்ளதால் ஒரு வித வெறுத்துப் போன நிலையில் அவர்கள் இருந்தது புரிந்தது!

``பாகவதர் 1959-ல் இறக்கும்போது என் அக்காவை கவனிச்சுக்க யாரும் இல்லை. அக்கா பாகவதருக்கு இரண்டாவது தாரம். இவர்களுக்குப் பிறந்தவர்கள் ஒரு பெண், ஒரு பிள்ளை. பெண் லட்சுமிக்குப் பிறந்தது மூன்று மகன்கள். அதில் இந்தப் பையன் கணேஷ் மட்டும் என்னோட இருந்து பாட்டிய பார்த்துக்கிறான். மற்ற இரண்டு பேரப் பசங்களும் வருவதும் இல்லை. அவங்களே எங்கேயோ ஜீவனத்துக்கு கஷ்டப்படு கிறார்கள். அக்காவை காப்பாற்றணும்னு நானும் கல்யாணமும் பண்ணிக் காம, அவ கூடவே இருந்து வாழ நல்ல வழியும் தெரியாம எங்கெங்கோ அலைஞ்சு எண்பது வயசை ஓட்டிட்டேன்'' சுவரில் சாய்ந்து கண்களை மூடிய மணியின் இமையோரத்தில் நீர் கசிந்தது.

ஏதேச்சையாக ராஜம்மாள் படுத்திருக்கும் கட்டிலின் எதிரே சிமெண்ட் அலமாரியை பார்த்தபோது மனசுக்குள் பட்டாம்பூச்சி! தன் மகள் மற்றும் மகன் இருபுறமும் இருக்க நடுவே புன்னகை தவழ ராஜ கம்பீரமாக அங்கவஸ்திரம் சுற்றிய பாகவதர். இன்னொன்றில் வய லின், மிருதங்கம், கடம், கஞ்சிரா என்று சுற்றிலும் ஜமாசேர்ந்திருக்க, நடுவே பாகவதர்! நாம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ``இதைப் பாருங்க... எத்தனை தடவை இதுல எங்க அக்கா ராணி மாதிரி போயிருக்கு. இன்னிக்கு பிழிந்து போட்ட துணி மாதிரி கிடக்கு...'' என்று கண் கலங்கினார் மணி. அவர் காட்டிய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அட்டகாசமான காரில் சாய்ந்து நிற்கிறார் எம்.கே.டி.! ‘‘Opel ஜெர்மன் கார் இது! அறுபது வருஷம் முன்ன மெட்ராஸில் இந்த கார் வச்சிருக்கிற பெரிய மனுஷர்களை விரல் விட்டு எண்ணிடலாம்!'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.

பின் எப்படித்தான் அத்தனையும் அழிந்தது?

``லட்சுமி காந்தன் கொலைவழக்கில் சிக்கியதில் பாதிப் பணம் அழிந்தது. ஒரு பக்கம் வக்கீலுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் அவரை வைத்து படமெடுக்க அட்வான்ஸ் கொடுத்தவர்கள் இவருக்கு ஆயுள் தண்டனை என்றவுடன் பணத்தை திருப்பிக் கேட்டார்கள். மெட்ராஸில் தி.நகர் தணிகாசலம் ரோட்டில் கடைசியாக வாங்கிய வீட்டையும் அடமானம் வைத்தார். இரண்டரை வருஷத்தில் நிரபராதி என்று வெளியே வந்தார். மீண்டும் சினிமா தயாரிப்பாளர்கள் மொய்த்தபோது `நன்றி மறந்து அட்வான்ஸை திருப்பிக் கேட்டார்களே' என்று அவருக்கு கோபம். அந்த வைராக்யத்தில் `ராஜமுக்தி' என்று சொந்தப் படம் எடுத்தார். பெரிய ஃப்ளாப். அப்புறம் வந்த `அமரகவி', `சியாமளா', `புதுவாழ்வு' என்று எதுவும் ஓடவில்லை. தீராத மனக்கவலையோடு சர்க்கரையும், ரத்த அழுத்தமும் சேர்ந்து கொண்டன.'' பாகவதரின் வீழ்ச்சியை கோர்வையாக அசைபோட்டார் மணி. 1959ல் பாகவதர் இறுதிச் சடங்கிற்கு திரையுலகிலிருந்து வந்தவர் எம்.ஆர்.ராதா மட்டும்தானாம்!

ஹரிதாஸ், சிவகவி என்று எத்தனையோ மெகா ஹிட்களை தந்த அந்த சூப்பர் ஸ்டாரின் குடும்பம் இன்று நடிகர் சிவகுமார் மாதந்தோறும் தரும் ஆயிரம் ரூபாயில் ஓடிக்கொண்டிருப்பதை மணி சொல்லும்போது மனதில் இனம் புரியாத பாரம்! அந்தப் பணம் வீட்டு வாடகைக்கே போய்விடு கிறதாம்! தினசரி ஐம்பது ரூபாய்க்கு பைண்டிங் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பேரன் கணேஷும் இப்போது பாட்டியின் உடல்நலம் கருதி போகவில்லையாம்!

``இப்போதைக்கு அவரின் நினைவாக நாலு போட்டோவும் எங்க மூணு பேர் உசிரும்தான் பாக்கியிருக்கு'' என்று மணி நிறுத்தியபோது, உடம்பு அனிச்சையாக சிலிர்த்தது!

இப்போதெல்லாம் சொப்பன வாழ்வையும், ஜெய கிருஷ்ணா முகுந்தாவை யும் கேட்கப்பிடிக்கவில்லை!.


தியாகராஜ பாகவதர் மசென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள் வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருகிறார்.

இதையடுத்து தனக்கு உதவக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து உடனடியாக ரூ. 1 லட்சம் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜாம்பாளிடம் அந்த நிதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழ்த் திரையுலகில் மிகுபுகழ் பெற்று விளங்கியவர் பழம்பெரும் நடிகர் மறைந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் வறுமை நிலையில் வாழ்வதறிந்து 1999ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் அவருக்கு முதல்வர் கருணாநிதி ரூ.50,000 நிதியுதவி வழங்கினார்.

தற்போது ராஜாம்பாள் மிகுந்த வறுமையுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மேலும் உதவி கோரி எழுதியுள்ள கடிதம் நேற்று வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக ரூ. 1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட கருணாநிதி ஆணையிட்டார்.

முதல்வரின் இந்த ஆணையின்படி, சென்னை மாவட்ட கலெக்டர் சூளைமேட்டில் உள்ள ராஜாம்பாள் அம்மையாரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நேற்றே வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளதுனைவிக்கு அரசு ரூ. 1 லட்சம் உதவி.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாடகர்களை பிடிக்கும் ஆனால் ஒரு உண்மை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் தமிழில் மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்கள் ஆண்களில் எம்.கே. தியாரராஜ பாகவதர் என்றும் பெண்களில் பி. சுசிலா என்றும் முடிவானது.

லட்சுமிகாந்தன் வழக்குத்தான் அவரை தலைகீழாக மாற்றியது. அவரோடு என்.எஸ் கிருஷ்ணனும் கைது செய்யப் பட்டார். பின்னர் இருவரும் நிரபராதிகள் என விடுவிக்கப் பட்டார்கள்.


கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனும் பாகவதரும் மிக நெருங்கிய நண்பர்கள். கலைவாணரோ கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி. பாகவதரோ பழுத்த ஆத்திகர். தனது நோயின் போதும் மருத்துவத்தை நாடாமல் தெய்வம் காப்பாற்றும் எனக் கூறி இறைவழிபாட்டில் கவனம் செலுத்தினார். இறுதியாக நோய் முற்றி 1959 நவம்பர் முதலாம் திகதி தனது 49 வது வயதில் இயற்கை எய்தினார். தமிழ்த் திரையுலகின் முடிசூடா வேந்தர் மிகப் பரிதாபமாக தன் வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் மறைந்தாலும் தனித் தன்மை வாய்ந்த அவரது குரல் இன்றைய இளைய தலைமுறையினரையும் கவர்ந்திழுக்கும் ஒன்றாக சாகவரம் பெற்று விளங்ககிறது.

No comments:

Post a Comment