Sunday, 9 August 2020

RANDI KI MASJID - DELHI AMAZING HISTORY




RANDI KI MASJID -
DELHI  AMAZING HISTORY


.பாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன?
அம்ருதா, நம்தேவ் அஞ்சனா
பிபிசி மராத்தி
22 ஜூலை 2020
.

புனேவை சேர்ந்த ஒரு பிராமணப் பெண், 1800களில் டெல்லியில் அதிகாரம் மிக்க பதவியிலிருந்த வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டு 'முபாரக் பேகம்' என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

இது சற்று விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் நடந்த விஷயம். கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் ஒரு மசூதியின் குவிமாடம் உடைந்து விழுந்ததால், இந்த பெண்ணின் வரலாறு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை( ஜூலை 19) டெல்லியில் பெய்த கனமழையால், பழைய டெல்லி பகுதியில் உள்ள ஒரு மசூதியின் குவிமாடம் சேதமடைந்து கீழே விழுந்தது.

டெல்லியின் சாவ்ரி பஜார் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் 'ரண்டி கி மஸ்ஜித்' என இந்த மசூதி அழைக்கப்பட்டது. இப்போதும் பலருக்கு இந்த பெயர் பிரபலம்.

ரண்டி என்ற சொல் பாலியல் தொழிலாளிகளை தரக்குறைவாக அழைக்க, இந்தியில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஒரு பாலியல் தொழிலாளியின் பெயரில் மசூதி கட்டப்பட்டுள்ளதா எனப் பலரும் வியப்படையலாம்.

ஆனால், இந்த மசூதியின் உண்மையான பெயர் 'முபாரக் பேகம் கி மஸ்ஜித்' என இருந்தாலும், காலப்போக்கில் 'ரண்டி கி மஸ்ஜித்' என்றே அழைக்கப்படுகிறது.

history delhiபட மூலாதாரம்,TWITTER/@DALRYMPLEWILL
1823-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதியை, முபாரக் பேகம் என்ற பெண் கட்டினாரா அல்லது அவரின் நினைவாகக் கட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. ''முபாரக் பேகம்தான் இந்த மசூதியைக் கட்டினார். அவர் ஒரு நல்ல பெண்மணி'' என்கிறார் இந்த மசூதியின் மௌலவி.

இந்த மசூதியைக் கட்டியவர் யார் என்பதில் குழப்பம் இருந்தாலும், இந்த மசூதி ஒரு பாலியல் தொழிலாளியால் அல்லது அவரது நினைவாகக் கட்டப்பட்டது என்பதே உண்மை.

ஒரு பெண்ணின் பெயரில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றால், அந்த காலத்தில் எவ்வளவு அதிகாரம் மிக்கவராக அவர் இருந்திருப்பார் என்பதை அறியமுடிகிறது. அந்த அதிகாரம் படைத்த பெண்ணின் பெயர் முபாரக் பேகம். டெல்லியில் வாழ்ந்த அப்பெண் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர்.

முகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா? புகழா?
ஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தது உண்மையா?
சில வரலாற்றுப் பதிவுகளில் இவரது உண்மையான பெயர் சம்பா என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பா, முபாரக் பேகமாக மாறியது எப்படி?
இந்துவாகப் பிறந்த முபாரக் பேகம், பின்னர் முஸ்லிமாக மாறினார். பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஜெனரல் டேவிட் ஓக்டர்லோனியை திருமணம் செய்துகொண்டார்.

அக்பர் ஷா-2 காலத்தில், டெல்லியில் அதிகாரியாக டேவிட் பணியாற்றினார். டேவிட்டின் 13 மனைவிகளில் முபாரக் பேகமும் ஒருவர். டேவிட்டைவிட வயதில் குறைந்தவராக இருந்தபோதிலும், திருமண உறவில் அதிகாரம் செலுத்துபவராகப் பேகம் இருந்தார்.

''முபாரக் பேகம், பிரிட்டிஷ் மற்றும் முகலாயர்கள் என இரண்டு தரப்பினாலும் வெறுக்கப்பட்டார். தன்னை லேடி டேவிட் ஓக்டர்லோனி என பேகம் அழைத்துக்கொண்டதைப் பிரிட்டிஷ் விரும்பவில்லை. அதே போல 'ஒரு பேரரசரின் தாய்' என அழைத்துக்கொண்டதை முகலாயர்கள் விரும்பவில்லை'' என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் அனிருத்தா தேஷ்பாண்டே.

’முபாரக் பேகம் கி மஸ்ஜித்பட மூலாதாரம்,NAMDEV ANJANA
பேகம் தனது சொந்த விருப்பப்படி வாழ்ந்தார். பாலியல் தொழிலாளிகளைக் குறிக்கும் ரண்டி போன்ற வார்த்தைகள், முகலாயர்கள் காலத்தில் வழக்கமான ஒன்றாகவே இருந்துள்ளது. பாலியல் தொழிலாளிகள் இப்போது இருப்பதைப் போல மிகவும் மோசமாகப் பார்க்கப்படவில்லை என்கிறார் அவர்.

'முகலாய' டேவிட் ஓக்டர்லோனி
டேவிட் ஓக்டர்லோனி 1758-ம் ஆண்டு பாஸ்டனில் பிறந்தார் என பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா கூறுகிறது.

1777-ம் ஆண்டு இந்தியா வந்த அவர், லார்ட் லேக் என்பவரின் தலைமையின் கீழ் அலிகர், டெல்லி போன்ற இடங்களில் நடந்த போரில் பங்கேற்றுள்ளார். 1803ஆம் ஆண்டில் அவர் டெல்லியில் ரெசிடண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அடுத்த வருடமே மேஜர் ஜென்ரல் ஆனார்.

திப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா?
நூர் ஜஹான்: சாதாரண குடும்பத்தில் பிறந்து முகலாய பேரரசையே ஆண்ட பெண்
நேபாளத்துக்கு எதிரான போரில், பிரிட்டிஷ் படைகளுக்கு இவர் தலைமை தாங்கினார். 1825-ம் ஆண்டு உயிரிழந்தார்.

டெல்லியில் வாழ்ந்தபோது, முகலாயர்களின் இந்தோ-பாரசீக கலாசாரத்தை டேவிட் ஓக்டர்லோனி முழுமையாக ஏற்றுக்கொண்டார். எனவே அவர் 'வெள்ளை முகலாயர்' என்று அழைக்கப்பட்டதாக அனிருத்தா தேஷ்பாண்டே கூறுகிறார்.

வாழ்க்கையில் மாற்றம்
ஜியா உஸ் சலாம் தனது 'பெண்கள் மஸ்ஜித்' புத்தகத்தில் முபாரக் பேகம் பற்றி சில தகவல்களைத் தருகிறார்.

''முன்பு பாலியல் தொழிலாளியாக இருந்த பேகம், தனது முந்தைய வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சமூகத்தின் மேல் அடுக்குக்கு வரக் கடுமையாக முயன்றார். இதற்காகத்தான் முதலில் பிரிட்டிஷ் ஜென்ரல் டேவிட்டை அவர் திருமணம் செய்துகொண்டார். டேவிட் இறப்புக்குப் பின் ஒரு முஸ்லிம் சர்தாரைத் திருமணம் செய்துகொண்டார்,'' என்கிறார் ஜியா உஸ் சலாம்.

''சமூகத்தில் மேல்தட்டில் இருப்பவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியாகவே மசூதியை அவர் கட்டினார். மசூதியை யார் கட்டியது என்பது தொடர்பான பல குழப்பங்கள் இருக்கின்றன. ஆனால், உண்மையில், முபாரக் பேகம்தான் மசூதியைக் கட்டினார். டேவிட் அதற்கு நிதி வழங்கினார்'' என்கிறார் அவர்.

வரலாறுபட மூலாதாரம்,NAMDEV ANJANA/BBC
''அந்தக் காலகட்டத்தில் பல மசூதிகளைப் பெண்கள் கட்டினர். அவர்கள் மதராசாக்களையும் உருவாக்கினார். டெல்லியில் உள்ள ஃபதேபுரி மஸ்ஜித் ஷாஜகானின் மனைவியால் கட்டப்பட்டது. அவர் மன்னரின் மனைவி. ஆனால் முபாரக் பேகம் ஒரு பாலியல் தொழிலாளி. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்'' என்று ஜியா கூறுகிறது.

மசூதி தற்போது எப்படி உள்ளது?
மஸ்ஜித் முபாரக் பேகம் என்று எழுதப்பட்ட பெயர்ப் பலகை மசூதியின் நுழைவு வாயிலில் உள்ளது.

மசூதியில் தரைத் தளத்தில் சில கடைகள் உள்ளன. முதல் தளத்தில் தொழுகை பகுதியும், மூன்று குவிமாடங்களும் உள்ளன. அதில் ஒன்றுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்தது.

1823-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி இன்னும் சில ஆண்டுகளில் 200 ஆண்டுகளை எட்டிவிடும். தற்போது குவிமாடம் விழுந்தாலும், மசூதியில் மற்ற பகுதிகளில் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

பழைய டெல்லியின் ஹவுஸ் காஸி பகுதி மக்கள் இப்போது இந்த மசூதியை 'ரண்டி கி மஸ்ஜித்' என்றே அழைத்து வருகின்றனர். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதற்காக யாரும் வெட்கப்படவில்லை. அந்த காலத்திலிருந்தே இந்த பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார் அனிருத்தா தேஷ்பாண்டே.



No comments:

Post a Comment