.PANDIYAS KILLED SAMANARS
BY IMPALMENT
சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.[1][2] ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.[சான்று தேவை]
அந்நூலில் எட்டு குன்றுகளில் வசித்த எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினார்கள் என்றும் செய்தியுள்ளது.[3] இந்நிகழ்வின் உண்மைத் தன்மை குறித்துப் பல்வேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன. நன்றி...
“
மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற
”
[4] எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது.[5] மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.[6]
கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை. மதுரைக்கு மேற்கில் உள்ள சமணப் பள்ளிகளில் கழுவேற்றம் நடந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு எக்கல்வெட்டும் எழுதப்படவில்லை. இந்த இடைவெளி இப்பகுதியில் சமண ஆதிக்கத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், கழுவேற்றம் பற்றிய செய்தி இவ்வீழ்ச்சியின் குறியீடாக இருக்கலாம் என்றும் சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[5][6][7]
பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள சமணர் கழுவேற்றம்
தமிழில் இயற்றப்பட்ட பெரியபுராணத்தின் படி நின்றசீர்நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது சமண மதத்தினை ஆதரித்தார். அதனால் மக்களும், அரசவை அறிஞர்களும் சமண மதத்திற்கு மாறினார்கள். அப்பொழுது, பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியாரும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைபிடித்தார்கள்.
மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தினால் நெருப்பு வைத்தார்கள். அதிலிருந்து தப்பித்த திருஞான சம்மந்தர், இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டியன் மீது கோபமுற்றார். அக்கோபம் வெப்பு நோயாக பாண்டியன் மன்னனைத் தாக்கியது. மருத்துவர்களும், சமணர்களும் முயன்றும் வெப்பு நோய் தீரவில்லை.
பாண்டிய மகாராணி மங்கையற்கரசியார் திருஞான சம்மந்தரிடம் மன்னனின் வெப்புநோய் தீர்க்க வேண்டினார். அதனையடுத்து திருஞான சம்மந்தர் திருநீற்றை தந்து மன்னனின் நோயை குணமாக்கியதால் மன்னன் சைவமதத்தை தழுவினான். இதனால் கோபம் கொண்ட சமணர்கள், திருஞான சம்மந்தரை வாதத்திற்கு அழைத்தனர்.
அனல் வாதம் எனப்படும் நெருப்பில் ஏடுகளை இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. அதனையடுத்து புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சமணர்கள் அழைத்தார்கள். இந்த வாதத்திலும் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் என்றார்கள். அதனையடுத்து நிகழ்ந்த புனல் வாதத்தில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்மந்தரின் ஏடு நீரின் எதிர்திசையில் மிதந்தது வந்தது. திருஞான சம்மந்தர் வென்றார்.
இந்நிகழ்வினை அடுத்து சமணர்கள் கழுவேறியதாக பெரியபுராணம் கூறுகிறது.
விமர்சனங்கள்
பெரிய புராணத்துக்கு உரை எழுதிய சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார், மேற்குறிப்பிட்ட பாடலைப் பற்றி “இனி ஒருசார் நவீன ஆராய்ச்சியாளர் இக்கழுவேற்றிய அரசதண்டம் நிகழ்ந்ததே இல்லை என்று முடிக்கவும் துணிந்தனர்; அவர் கூற்றுக்கள் சிலரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில பேசவேண்டியது அவசியமாகின்றது.” என்று சொல்லி சமணர் கழுவேற்றத்தை நிறுவும் விதமாகச் சில ஆதாரங்களைத் தந்துள்ளார்.[8] தனது சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலில் திரு.வி.க போதிய அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.[9]
கழுவேற்றம்(Impalement) என்பது மரண தண்டயிலேயே கொடுமையான ஒன்று. வலிமையான மரத்தினை செதுக்கி அதன் முனையை கூறாக்கி அதில் எண்ணையை தடவி கழுமரம் உருவாகிறது. உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கழுமரத்தின் மீது அமர வைப்பதால் ஆசனவாய் வழியாக அது உடலில் ஏறி வாய் வழியாக துடிதுடிக்கச் செய்து வெளியேறும்.
பொதுவாக மரணித்தவர்களை எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். ஆனால் கழுமரத்தில் ஏற்றியவர்களை அப்படியே விட்டுவிடுவார்கள். கழுகுகளும் நரிகளுமே அந்த உடல்களை கொத்தி தின்னும். இத்தனை பெரிய தண்டனை யாருக்கு கொடுப்பார்கள் என்ற கேள்வி எழலாம்.
திருடர்கள்,கொலையாளிகள் முக்கியமாக அரசிற்கு எதிராக குற்றம் செய்தவர்களுக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்து சமயத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் பல்வேறு கலாச்சாரத்தில் இந்த கழுவேற்ற சம்பவம் சிறு சிறு பரிணாம வேறுபாடுகளோடு அரங்கேறியிருக்கிறது.
உடன்கட்டை ஏறுதல், நவகண்டம் என மறுக்கபட்ட வழக்கங்கள் போல கழுவேற்றமும் காலாப்போக்கில் காலாவதியானது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கழுமரங்கள் காணக்கிடைக்கும். திருப்புல்லாணி என்கிற இடத்தில் 5 இரும்பாலான கழுமரங்களை வணக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் போன்ற அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது ராமநாதபுரம், ஈரோடு என தமிழகத்தின் மற்ற சில இடங்களில் கழுவேற்றம் தொடர்பான பழங்கால ஓவியங்களும் சிற்பங்களும் அங்காங்கே காணக்கிடைக்கின்றன.
குற்றம் புரிந்தவர்கள் எனினும் கழுமரத்தில் இறந்தவர்களின் ஆன்மா அதில் இருக்கிறது என்ற ஐதிகத்தில் கழுமரங்கள் இன்றளவும் வணங்கப்படுகின்றன. வேதனையில் உயிர்துடித்து ரத்த கறை படிந்த மரத்தால் ஆனா கழுமரங்கள் இன்னனும் உயிர்பெற்று இருக்கவில்லை.
அதனால் வெங்கழு எனப்படும் இரும்பாலான கழுமரங்களை உருவாக்கி அதனை மக்கள் வழிபடுகின்றனர். பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஈரோடு பகுதியில் மிச்சமிருக்கும் ஒரேயொரு பனை மரத்தால் ஆன கழுமரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சித்திரை திருவிழாவில் ஆறாம் நாள் சமயத்தில் சுந்தரரும் மீனாட்சியும் சிவகங்கை குளத்தில் ஜமீன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்கள். அப்போது அங்கே சைவ சமய ஸ்தாபித வரலாறு பாடலாக ஓதப்பட்டது. கழுவேற்றம் எனப்படும் இந்த நிகழ்வில் சைவத்தின் புகழை பற்றி நிறைய பாடல்கள் படிக்கப்படும்.
இந்த வழக்கம் மதுரையில் நின்றசீர் நெடும் பாண்டியன் ஆட்சியின் போது 8000 சமணர்களை(Jains) கழுவேற்றியதன் தொடர்ச்சியாக கடைபிடிக்க படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இவ்வாறான ஒரு தண்டனையை சைவ சமயம் பெருமை கொண்டு எதற்காக கொண்டாடுகிறது? யார் அந்த சமணர்கள்?
பன்னெடுங்காலமாகவே தென்னாட்சியில் புத்த/சமண மதங்கள் தங்களது பங்கை ஆற்றியுள்ளன. ஜெயின் எனப்படும் சமண மதத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கென தனி வழிபட்டு முறையை கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் சமணம் தழைந்தோங்க அவர்களை கட்டுப்படுத்த சைவ சமய காவலர்கள் பல ஒழிப்பு நடவடிக்களில் ஈடுபட்டனர்.
அப்படி ஒரு புராண சம்பவம் தான் இன்றும்கூட விவாதத்திற்கு ஆளாகி கொண்டே இருக்கும் சமணர் கழுவேற்றம் நிகழ்வு. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் அற்புதங்களில் ஒன்றாக சமண கழுவேற்றம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
அன்றைய மதுரையை ஆண்ட கூண் பாண்டியன் சமண மதத்தை ஆதரித்து போற்றியதால் அமைச்சர்களும் ஏனைய மக்களும் அதன் ஏற்றக்கொள்ள வேண்டிப்பட்டது. மகாராணியான மங்கையற்கரசியாரும் மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைபிடித்தார்கள். மனச்சோர்வடைந்த அரசி திருஞானசம்பந்தரை மதுரை விஜயத்துக்கு அழைத்தார்.
மன்னரை மனம் மாற்ற வந்த சம்பந்தரை தடுக்கும் விதமாக சமணர்கள் அவர் இருந்த மாளிக்கைக்கு தீவைத்ததாகவும் இதனால் கோபமுற்ற சைவ பெரியவர் சமணருக்கு ஆதரவு தந்த மன்னர் மீது சினமடைந்தார். இது சாப நோயாக பாண்டியனை தாக்கியது.
சமண முனிகள் எவ்வளவு முயன்றும் அரசனின் நோயை தீர்க்க முடியவில்லை. பின்னர் மங்கையர்க்கரசியின் வேண்டுக்கோளுக்கு இணைய திருஞானசம்பந்தர் திருநீற்றை தந்து நோயை குணப்படுத்தினார். மன்னரும் தான் சைவத்திற்கு திரும்பவதாக ஒப்புக்கொண்டார். இப்போது சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் நேரடியாக போர் மூண்டது.
அக்கால முறைப்படி சம்பந்தரை வாதத்திற்கு அழைத்தனர் சமணர்கள். வாதத்தில் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் எனவும் சபதமிட்டனர். முதல் போட்டி அனல் வாதல் – ஏடுகளை நெருப்பில் இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. பனை ஓலைக்களுக்கு பதிலாக பிராய் போன்ற மரப்பட்டைகளை பயன்படுத்தி சூழ்ச்சி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இரண்டாவது போட்டி புனல் வாதம் – ஏடுகளை ஆற்றில் வீசி எறிந்த போது சம்பந்தரின் ஏடுகள் மட்டும் நீரோட்டத்திற்கு எதிர் திசையில் அடித்துக் கொண்டு வந்தன. ஆனால் சம்பந்தர் இதில் சூட்சமமாக ஓடும் நீரில் எதிர்திசையில் நகரும் கருட சஞ்சீவி வேரை சுவடிகளோடு மலர் போல கட்டிவிட்டிருக்கிறார். இயற்கையில் இப்படி ஓர் அதிசய வேர் இருப்பதே சமணர்கள் அறியாதிருந்தனர்.
போட்டியில் தோற்றதால் சாமணத்தம் என்ற இடத்தில் எண்ணாயிரம் சமணர்கள் வரிசையாக கழுவேற்றப் பட்டதாக சொல்கிறது பெரிய புராணம்.
மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
“துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க” வென்று கூற
இதற்கு சைவ ஆதரவாளர்கள் சார்பாக பல்வேறு சான்றுகள் சமர்பிக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கழுகுமலை சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் தொடர்பான ஓவியங்கள் இருக்கின்றன. மேலும் ஆவுடையார் கோயில், சிதம்பரம் நடராஜர் போன்ற இடங்களில் கழுவேற்ற சிலைகள் கிடைக்கின்றன.பிற்கால புலவரான ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப்பரணி, திருவிளையாடல் புராணம் இதனை வழிமொழிகின்றன. ஆரம்பத்தில் எல்லோராலும் ஏற்றக்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் இதன் நம்பகத்தன்மை குறித்த விவாதம் அதிகரிக்க தொடங்கியது.
என்னதான் சைவ புராணங்கள் மாற்றி மாற்றி இதைப் பற்றி குறிப்புகளை தந்தாலும் எந்த சமண நூல் இலக்கியமும் கல்வெட்டும் இந்த நிகழ்வினை குறிப்பிடவில்லை. மதுரைக்கு மேற்கில் உள்ள சமணப் பள்ளிகளில் கழுவேற்றம் நடந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு எவ்வித கல்வெட்டும் இல்லை.
இது அந்த சமயத்தில் நடந்த சமண வீழ்ச்சியை குறிப்பதாக எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னர் வந்த சமண கல்வெட்டுகள் ஏன் இதனை குறிக்கவில்லை என தெரிவில்லை. அதன் பின் வந்த பல்வேறு அறிஞர்கள் வெவ்வேறு விதமான கருத்துகளை வெளிப்படுத்தினர்.
இதனை சந்தேகிக்க காரணம் பல உண்டு. தமிழ் மரபில் உடன் கட்டை ஏறுதல், தோற்றவர்களை கழுவேற்றுதல் போன்ற கொடுரமான பலியிடல் முறைகள் இருந்தபோதும் சமணர்களுக்கு அவ்வாறில்லை. வடக்கு நோம்பிருந்து உயிர்விடல் எனும் முறையே இருந்தது. மேலும் புத்த பிட்சு, சமண முனி ஆகியோரை கொன்றால் ஜென்ம சாபம் வந்து சேரும் என இந்து மன்னர்கள் நம்பினர் என்பது யாவரும் அறிந்ததே.
அப்படிப்பட்ட ஒரு சமூகம் ஒரு சமண குழுவை பலியிட்டதா எனும் போது கேள்விகள் எழமால் இல்லை. போட்டியில் தோற்றதால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம். காலப்போக்கில் அது சைவத்தின் வெற்றியை போற்றும் விதமாக மருவியிருக்கலாம்.
முக்கியமாக எண்ணாயிரம் என்பது 8000 சமண முனிகளை குறிப்பிடவில்லை, அது ஒரு குறுப்பிட்ட குழுவினரையோ ஊரையோ பற்றி சொல்கிறது என முன்மொழியப்பட்டது. முனைவர் கொடுமுடி ச.சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.பிற்காலத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வில் எண்ணாயிரம் என்பது ஒரு இடத்தை குறிக்கிறது என ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே 8000 சமணர்கள் கொல்லப்படவில்லை. ஒரு குழுவினர் மட்டுமே என தெரியவந்தது. அதன்பின்னர் இது தொடர்பான உண்மை அறியும் வேட்கையும் அதிகரித்தது.
திரு.வி.க தான் எழுதிய இளமை விருந்து நூலில் போதிய சான்றுகள் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தை ஏற்க மறுத்தார். ஜெயமோகன் தனது வலைப்பதிவு ஒன்றில் சமணர் கழுவேற்றம் என்பது ஆதாரங்கள் அற்ற ஒரு புராண கதை மட்டுமே என எழுதியுள்ளார். 2017 ல் கோ.செங்குட்டுவன் எழுதிய சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் என்ற புத்தகம் இதன் மொத்த சரித்திரத்தையும் அலசி ஆராய்கிறது.
இன்று நாம் அறிந்திருக்கும் பழமை தமிழ் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியம் எல்லாமே சங்க தமிழ் நூல்களில் இருந்து பெறப்பட்டதே. திருமண முறைகள், உணவு பழக்கம், குடும்ப சடங்குகள், போர் கலாச்சாரம் என யாவுமே நம்மிடம் கடத்தப்பட்டது இவ்வழியே. எனவே புராணங்களை அப்படியே ஒதுக்கிவிடலாகாது.
ஓவியங்களும் சிற்பங்களும் சில நேரம் கற்பனை கலந்து இருப்பது தான் யதார்த்தம். உதாரணமாக கோவில்களில் காணப்படும் யாளி யை முழவதும் நிஜமென கருதமுடியாது. முறையான தொல்லியல் ஆராய்ச்சியும் கலாச்சார வரலாற்று கட்டமைப்பையும் செய்து அறிஞர் சபையில் என்றுமே விவாதிக்க பட வேண்டியது சமணர் கழுவேற்றம்.
அன்புள்ள ஆனந்த்,
உபயோகமான இணைப்பு.
நான் எப்போதுமே இந்த சமணர் கழுவேற்றம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதே என்னுடைய எண்ணம். அது ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்றுத்தகவல் அல்ல, ஓரு தொன்மம் மட்டுமே. அதை அரசியல் காரணங்களுக்காக வரலாற்றுத்தகவலாக ஆக்குகிறார்கள்.
எந்த ஒரு வரலாற்றுத்தகவலுக்கும் அதை மறுக்கிறவர்களிடம் அதை நிரூபிக்க ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக வரலாற்றில் பெரும்பாலான விஷயங்களைப்போலவே இதிலும் தொன்மம் அப்படியே வரலாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய ஆராய்ச்சி கூடச் செய்யப்படவில்லை.
சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு இருக்கும் ஆதாரம் என்பது சைவசமயப்பாடல்களுக்கு பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் தொன்மம் மட்டுமே. அந்தப்பாடல்களை எடுத்துப்பார்த்தால் சைவக்குரவர்களின் மூல வரிகளில் கழுவேற்றம் குறித்த தெளிவான குறிப்புகள் ஏதுமில்லை. சமணர்களை வாதில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே உள்ளது.
கழுவேற்றம் நடந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் போன்ற அக்காலத்தைய ஆதாரங்கள் ஏதுமில்லை. மறுபக்கம் சமணர்களின் நூல்களில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தமைக்கான சான்றுகள் இல்லை. சமணர்களின் தென்னகத்தலைநகரமான சிரவணபெளகொளாவில் உள்ள சமண ஆவணங்களில் ஏதேனும் சான்று உள்ளதா என இன்றுவரை எவரும் ஆராய்ந்ததில்லை.
அந்த தொன்மத்தை அப்படியே வரலாறாக எடுப்பதற்கான தடை என்ன? இச்சம்பவம் நடந்தபின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணர்கள் தமிழ்நாட்டில் மிக வலுவாக இருந்திருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில்கூட பாண்டியநாட்டில் அவர்கள் நிறையபேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எங்குமே எதையுமே சொல்லவில்லை.
இரண்டாவதாக, இந்தக்கதையை நம்புவதாக இருந்தால் சைவக்குரவர்களை சமணர்கள் கொடூரமாக துன்புறுத்திய கதைகளையும் நம்பவேண்டும். சுண்ணாம்பு காளவாயில் அப்பரை போட்டதும் தந்திரங்கள் மூலம் சம்பந்தரை கொல்ல முயன்றதும், பதினாறாயிரம் சைவர்களை கொல்ல சதிசெய்ததும், கோயில்களை அழித்ததும் எல்லாம் உண்மையாகிவிடும். இந்தியாவில் எங்குமே சமணம் அப்படி நடந்துகொண்டது என்பதற்கான ஒரு சான்றுகூட இல்லை. அப்படி சமணத்தை அவதூறு செய்ய எவருக்குமே உரிமை இல்லை.
மூன்றாவதாக, சமணர்களுக்கும் சைவர்களுக்கும் நடந்த விவாதத்தில் ஏடுகளை நீரிலும் தீயிலும் போட்டுத்தான் எது புனிதமானது என நிரூபித்தார்கள் என்று நம்ப வேண்டியிருக்கும். பகுத்தறிவாலார் அபப்டி நினைக்கிறார்கள், எனக்கு அது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது.
சமணமும் சைவமும் தத்துவ மோதல்களில் ஈடுபட்டது ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில். சைவம் பெரிய இயக்கமாக வளர்ந்தது மேலும் மூன்று நான்கு நூற்றாண்டு கழித்துத்தான். சைவப்பெருமதம் உருவானபோது அதற்கே உரிய தொன்மக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. நாயன்மார்களின் தொன்மங்கள் அவ்வாறு உருவாக்கப்பட்டன. ஆகமங்கள் உருவாக்கப்பட்டன. சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்டன.
இக்காலகட்டத்தில்தான் சைவக்குரவர்களைப் பற்றியும் உக்கிரமான தொன்மங்கள் பல உருவாயின. வெள்ளெலும்பை பெண்ணாக்கியது. கோயில் கருவறை கதவு திறக்கவும் மூடவும் பாடியது இவைபோல. இவை நூல்களில் உரைக்குறிப்பாகவும் இடைச்செருகல்களாகவும் சேர்க்கப்பட்டன. அப்பர் கல்லைக்கட்டி கடலில் போடப்பட்டது, சம்பந்தர் சமணரை கழுவேற்றியது எல்லாம் அப்போது உருவாக்கப்பட்ட தொன்மங்களே. சைவக்குரவர்களை தெய்வங்களின் தளத்துக்குக் கொண்டுசெல்வதற்காக உருவாக்கப்பட்ட மிகையான தொன்மங்கள் இவை.
இவற்றில் ஏதேனும் உண்மை இருக்குமா? சமணர்கள் கழுவேற்றப்பட்டிருக்கலாமா? ஆ. ஈசுவரமூர்த்திப்பிள்ளை சொல்வதைப்போல சமண-சைவ பூசலில் சமணர்கள் சிலர் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை வாது வைத்திருக்கலாம், அப்படி ஒரு வழக்கம் முன்னும் பின்னும் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. எண்ணாயிரம் என்பது குலப்பெயராக இருக்கலாம். வணிகர்கள் எண்ணாயிரம் கூட்டம் நாலாயிரம் கூட்டம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறார்கள்
ஆனால் அதற்குள் எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற அதிகொடூரச் சித்திரம் உருவாக்கப்பட்டுவிட்டது. அதை தமிழ்ச் சமூகம் குற்றவுணர்ச்சி இல்லாமல் ஏற்றது என்கிறார்கள். அஞ்சினான் புகலிடம் அமைத்து மன்னர்களையே உள்ளே வரவிடாமல் தார்மீக தடை விதித்தவர்கள் சமணர்கள். ஒரு சமணமுனி இறந்தால்கூட அந்த பாவம் பலநூற்றாண்டுகள் பின்னால் வரும் என நம்பிய தமிழ்ச்சமூகம் இது. ஆனால் அந்த மாபெரும் கொலை வேறு எங்குமே பதிவாகவில்லை என்றும் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
மேலே உள்ள கழுவேற்ற சிலையை பாருங்கள். இதை ஒருவர் சமணார் கழுவேற்றத்துக்கான ஆதாரம் என்கிறார். என்ன ஒரு ஆதாரம்! சமணர் எக்காலத்தில் முடிவளர்த்தார்கள்? அது சமணக் கோட்பாட்டுக்கே எதிரானது. நீள்குடுமியும் அரைக்கச்சையும் அவனை ஒரு படைவீரனாகவே காட்டுகின்றன. மீசைவேறு.
இப்படி போலி ஆதாரம் கொடுத்தாவது ஒரு தொன்மத்தை உண்மையாக்கவேண்டும் என்பது யாருடைய கட்டாயம்? அப்படி சமணர்களை, சைவர்களை, தமிழ்ச்சமூகத்தை ஒட்டுமொத்தமாக சித்தரிப்பதன் மூலம் யார் என்ன அடைகிறார்கள்?
ஆ.ஈசுவரமூர்த்திப்பிள்ளை அக்காலகட்டத்து சைவ அடிப்படைவாதிகளில் ஒருவர். செந்தமிழ்ச்செல்வியில் நிறைய எழுதியிருக்கிறார். சமணர்களை அவர் சைவர்களை கொடுமைப்படுத்திய கொடூரர்களாகவே சித்தரிக்கிறார். ஆனால் சம்பந்தரை கொல்ல முயன்ற சில சமணர்களே மன்னரால் கழுவேற்றப்பட்டார்கள் என்கிறார் . அக்டோபர் 2009 ‘ரசனை’ மாத இதழில் ஈசுவரமூர்த்திப்பிள்ளை அவர்கள் எழுதிய சமனர் குறித்த கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர்.
சமணர் கழுவேற்றம் :
சமணம் தழைத்தோங்கி இருந்த காலகட்டம் அது , வைதீக மதம் நலிந்து வேதத் தொழில் பாதிப்புக்கு உள்ளானது , சோழ நாடான சீர்காழியில் சிவபாத விருதையர்-பகவதி ஆகிய ‘பிராமண’ வைதிக தம்பதிகளுக்குப் பிறந்தவர் சம்பந்தர் , தனது தந்தையாரின் கலக்கத்தை தமிழ் கற்ற மகன் தேற்றுகிறான் , "அப்பா அழாதே, எவ்வாறாயினும் இந்த சமணப் பூண்டை வேரறுக்க நமது குடும்பம் தியாகம் செய்ய வேண்டுமே தவிர, புலம்புவதால் பயனில்லை" என்று தேற்றினார் , அவர் இவ்வாறு சூளுரைத்து வீட்டை விட்டு கிளம்புகிறார் ….
சம்பந்தர் தனது மதுரைப்பாடல்களில் :
"வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."
"அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே..."
"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."
மேலே உள்ள வரிகள் மூலம் திருஞானசம்பந்தர் சமணர்களை வெறுத்தார் என்று தெரிய வருகிறது. ஆனால் எதற்கு அவர்களை வெறுத்தார் என்பதே நாம் அறிய வேண்டியது. சமணர்கள் வேத வேள்விகளை மதிப்பதில்லையாம்... அந்தணர்கள் சொல்லையும் கேட்பதில்லையாம்...அதனாலே திருஞானசம்பந்தர் அவர்களைச் சாடுகின்றார். அதனாலையே சாடுகின்றாரே தவிர அவர்கள் சைவத்தினை மதிப்பதில்லை என்பதற்காக சாடவில்லை.
வேதத்தையும் வேள்வியையும் திட்டிக் கொண்டு திரியும் பயனற்றவர்களான சமணர்களையும் பௌத்தர்களையும் நான் வாதத்தில் வென்று அழிக்க விரும்புகிறேன் என்கிறார்.
நின்றசீர் நெடுமாறன் என்கிற கூன் பாண்டியன் (கிபி 640–670) சமணத்தை தழுவியிருந்தான் அவனது மனைவி மங்கையற்கரசி மற்றும் மந்திரி குலச்சிறை தீவிர சைவர்களாக இருந்தனர் , எப்படியாவது பாண்டியனை சைவ மதத்திற்கு மாற்றும் பொருட்டு சம்பந்தரை அழைத்தனர் , கூன் பாண்டியனுக்கு சூலை நோய் (வயிற்று வலி) வரும்படி செய்து அதற்கான மாற்று மருந்தை ராணியின் கையால் கொடுக்க செய்தார் சற்று நேரத்தில் அவர் மீது திருநீறு பூசி அதன் காரணமாக வயிற்று வலி நீக்கியதாக நாடகமாடினார் , இந்த விவரம் தெரியாத சமணர்கள் அவரது வயிற்று வலியை இன்னதென்று புரியாமல் நீக்க முடியாமல் திணறினர்.
மந்திரமாவது நீறு! வானவர் மேலது நீறு!
சுந்தரமாவது நீறு! தந்திரமாவது நீறு! …
இந்த இடத்தில் சமணர்கள் குறுக்கிட்டதால் சமயத்தில் உதவுவது திருநீறு என்று சொல்லி அள்ளி பூசுகிறார் , மாற்று மருந்து ராணியார் கொடுத்ததால் வயிற்று வலி நீங்கப்பெற்றார்.
அடுத்து அனல்வாதம் செய்ய சமணர்களை அழைத்தார் , அதன் படி ஒரு ஓலையில் தங்கள் மதம் சார்ந்த குறிப்புகளை எழுதி அதை நெருப்பில் போட வேண்டும் , சமணர் இட்ட ஓலை எரிந்து கருகியது , சம்பந்தர் "போகமார்த்த .." என்ற பாடல் எழுதிய ஓலை எரியாமல் அப்படியே இருந்தது , கந்துசேனர் குறுக்கிட்டு அந்த அதிசயமான சைவ ஓலையை அனைவரிடமும் காட்டு என்கிறார் , சம்பந்தர் தயங்க கந்துசேனர் அதை தரையில் பிடுங்கி எறிகிறார் , அது இரும்பு தகடினால் எழுதப்பட்ட ஓலை , இதை வைத்து தான் "தகிடுதத்தம்" என்ற வழக்கு உண்டாயிற்று. இப்படி சமணர் ஓலைகளை அழித்து முடித்தார்.
அடுத்து புனல் வாதம் இது தான் இறுதி இதில் தோற்பவர் கழுவேற்றப்பட வேண்டும் என்கிறார் சம்பந்தர், சமணர் "அத்தி நாத்தி " என்றெழுதிய ஓலை தண்ணீரில் மூழ்கவே , சம்பந்தர் தன் "வாழ்க அந்தனர் .." என்று தொடங்கும் பாடல் ஓலையை இடுகிறார் அதுவும் மூழ்கவே , மந்திரி குலச்சிறை அந்த ஓலை தண்ணீரில் எதிர்த்து வேகமாக நீந்துவதாக சொல்லி அந்த ஓலையை பின்தொடர்வதாக சொல்லி தன் குதிரையில் கிளம்புகிறார் திரும்பி வந்து அதே பாடல் கொண்ட ஒரு பிரதி ஏட்டை காட்டி திருவேடகம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிக்கருகில் சென்று ஏடு அப்படியே நின்றுவிட்டது என்றும் கதை விடுகிறான். பாண்டியனும் நம்புகிறான் தன் சூலை நோய் தீர்ந்ததிலேயே சம்பந்தன் பக்கம் சாய்ந்திருந்த பாண்டியன் மந்திரி சொன்னதை உண்மை என்று ஏற்றான் , சமணர்கள் கண் முன்னே நடந்த மோசடியை நிரூபிக்க முடியாமல் திண்டாடினர் , கழுவேற்றம் நிகழ்ந்தது. சமணர் குடும்பங்களை ஆங்காங்கே அழிக்க உத்தரவு பறந்தது , மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த விவரம் தெரிந்த பலர் உத்திராட்ச கொட்டை திருநீறு அணிந்து சிவசிவா என்று சொல்லி தப்பினர், சிலர் சொக்கநாதர் கோயிலுக்குள் சென்று மதம் மாறி விட்டதாக அறிவித்தனர் , விசயம் தெரியாத சமணர்கள் ஏன் கொல்லப்படுகின்றோம் என்று தெரியாமலேயே கழுவேற்றப்பட்டனர்.
“சம்பந்தர் : குழந்தை, குட்டிகள், பெண்டுகள், பெரியவர்கள் என்று பார்க்க வேண்டாம். சமணப் பூண்டு ஒன்றுகூட இருக்கக் கூடாது! நாங்கள் பார்க்க வருவோம்" என்று உத்தரவிடுகிறார்.
மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 8000 சமணர்களை கழுவேற்றியதாக பெரியபுராணம் கூறுகின்றது , அதோடு அல்லாமல் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் என்று பின்னர் வந்த சமய அறிஞர்கள் கழுவிலேற்றிய நிகழ்வு நடந்ததாகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.
மதுரை சித்திரை திருவிழா ஆறாம் நாளின் போது அங்கே கழுவேற்ற வரலாறு பாடலாக ஓதப்படுகிறது , திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழாவின் போதும் சைவ ஸ்தாபித வரலாறான கழுவேற்றம் ஓதப்படுகிறது, திருமங்கலம் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது, இதை கொண்டாட நியாயமான ஒரு கதை இருக்க வேண்டுமல்லவா ? சமணர்கள் கொடுமை செய்பவர்கள் அல்லவே அப்புறம் எப்படி ? , அதற்கு தான் , சமணர்கள் சம்பந்தரை தீயிட்டு கொளுத்த திட்டமிட்டதாகவும் , அதிலிருந்து தப்பி மன்னரின் சூலை நோயை தீர்த்து காத்ததாகவும் அதோடு திருநீற்றுப்பதிகமும் பாடி சமணரை அனல்-புனல் வாதில் வென்றதாக பெரியபுராணத்தில் கதையாக உள்ளது. பிற்காலத்தில் தனது பதினாறாவது அகவையில் அவருக்கு திருமணம் சீர்காழிக்கு அருகில் உள்ள ஆச்சாள்புர சிவ ஆலய மண்டபத்தில் நடந்த போது அக்கினியை வலம் வருகையில் ஏற்பட்ட தீயில் உண்மையில் சிக்கி மாண்டார் , அதையே சிவனோடு சோதியில் ஐக்கியமானார் என்று கூறி அந்த நிகழ்வை வைகாசி மூலத்தன்று சோதியில் ஐக்கியமான திருமண விழாவாக அவருக்கு நடத்துகின்றனர்.
வடக்கில் சமணத்தை அசோகர் அழித்தார், சமணர்களின் தலையை கொண்டு வருபவருக்கு வெள்ளி காசுகள் பரிசளித்தான். அவர் வழியில் மோரிய வம்சத்தின் கடைசி வாரிசை ராணுவ அணிவகுப்பின் போது கொன்று பதவிக்கு வந்த படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கா என்ற பிராமணர் பௌத்தர்களை அழிக்க அசோகர் வழியையே பின்பற்றினார், வைதீக மதம் இவர் காலத்தில் தான் வளர்ச்சியடைந்து நிலை பெற்றது. வடக்கில் அசோகரும் , சுங்கரும் சமண -பௌத்தத்தை அழித்தனர், தெற்கில் சம்பந்தர் அருள் பெற்ற கூன் பாண்டியன் அதே பணியை செய்து முடித்தார். 400 ஆண்டுகள் கழித்து 9, 10 ம் நூற்றாண்டில் அச்ச நந்தி போன்றவர்களால் மீண்டும் சமணம் எழுந்து பிறகு 13,14ம் நூற்றாண்டு வாக்கில் மீண்டும் வீழ்ச்சி அடைந்தது.
சிகையுடன் காட்சியளிக்கும் ஆசீவக/சாவக சமணரின் கழுவேற்றம் :
படம் : கூகுள்
ஜைன (அருகர்கள்) சமணர்கள் தான் தலையை மழித்து இருப்பர். ஆசீவகர்களும், சாவகர்களும் (இல்லற சமணர்கள்) நீண்ட சிகையுடன் இருப்பர்.
References:
No comments:
Post a Comment