Tuesday 4 August 2020

HINDI LANGUAGE



HINDI LANGUAGE



.ஹிந்தி என்பது கிபி 7ம் நூற்றாண்டுக்கு பிறகு மொகலாய படையெடுப்பால் சமஸ்கிருத்துடன், அரபி, பராசீகம் போன்ற மொழிகளை கலந்த கலப்பின மொழி.

இந்தியா சுதந்திரம் அடையும் வரை இந்திக்கு எழுத்துரு அரபியாகும், பாகிஷ்தான் பிரிந்த பிறகு உருதுவாகவும், தேவநகரி எழுத்துக்களை கொண்ட இந்தியாகவும் பிரிந்தது.

இந்தியில் எந்தவிதமான இலக்கியமோ, புராணங்களோ, இதிகாசங்களோ, வரலாற்று சின்னங்களோ இல்லை. அது மலையாளம் போன்ற ஒரு கலப்பின மொழி மட்டுமே.

இந்தியில் எந்தவிதமான அறிவியல் ஆராய்ச்சியோ, மொழிபுலமையோ இல்லை, இந்தியாவை தவிர வேறெங்கும் அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இல்லை.

இந்தி இந்தியா முழுதும் பேசப்படும் மொழியும் இல்லை, வெறும் எட்டு மாநிலங்களில் மட்டுமே பேசப்படும் மொழி. இந்தியை அவன் உயர்வான மொழிகள் மீதம் 21 மாநிலங்களில் பேசப்படுகிறது.

.இந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று [5]. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[6]. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

பரவல்
இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான்[7], அரியானா , உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது


பேச்சு இந்தி
எண்கள்
- ஏக் (एक) = ஒன்று
- 'தோ (दो) = இரண்டு
- தீன் (तीन) = மூன்று
- சார் (चार) = நான்கு
- பாஞ்ச் (पांच) = ஐந்து
- சே (छः) = ஆறு
- சாத் (सात) = ஏழு
- ஆட் (आठ) = எட்டு
- நௌ (नौ) = ஒன்பது
- தஸ் (दस) = பத்து
100 - சௌ (सौ) = நூறு



1000 - ஹசார் (हजार) = ஆயிரம்

பொதுவானவை
நமஸ்தே = வணக்கம்
கித்னா = எத்தனை ?
ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).

ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
கத்தம் ஹோகயா = முடிவடைந்து விட்டது.
கல் - நேற்று (அல்லது) நாளை
ஆப்கா நாம் க்யா ஹை = உங்கள் பெயர் என்ன?
மேரா நாம் ராம் ஹை = என் பெயர் ராம்.
மே தும்ஸே ப்யார் கர்தா/கர்தீ ஹூ = நான் உன்னை காதலிக்கிறேன்.
டீக் ஹை = சரி
தன்யவாத் = நன்றி
எழுத்துக்கள்
முதன்மைக் கட்டுரை: தேவநாகரி
இந்தி மொழி தேவநாகரி (देवनागरी लिपि தேவநாகரி லிபி) எழுத்துக்களில் எழுதப்படுகிறது. தேவநாகரி உயிரொலிகளையும், 33 மெய்யொலிகளையும் கொண்டுள்ளது. இது இடது பக்கத்தில் இருந்து வலமாக எழுதப்படுகிறது.

No comments:

Post a Comment