MEENA BAZAAR - OFFICIAL MOGHUL`S FEMALE FLESH -SLAVE MARKET
மீனா பஜார் – பெண்கள் அடிமையாக்குதல், விற்றல், வாங்கல் –
மொகலாயருக்கு கப்பம் கட்டும் நிலையில் உள்ள சிற்றரசர்களின் பெண்கள் ,மொகலாயருக்கு கப்பம் கட்டும் நிலையில் உள்ள சிற்றரசர்களின் பெண்கள்
மொகலாய அதிகாரிகளின் மனைவிகள் ,பெண்கள் ( ஆண்களுக்கு அனுமதி இல்லை )ஹேரத்தில் இருக்கும் பெண்கள் நடத்தும் மீனாபஜார்:
“குஷ் ரோஜ்” / மகிழ்ச்சியான தினம் என்று முகலாயர் காலத்தில் “மீனா பஜார்” என்று சந்தை நடத்தப்பட்டது. இதில் அரசவை அதிகாரிகளின் மனைவி-மகள்கள்-சகோதரிகள், ராஜபுதன மகளிர்-பெண்கள், ஹேரத்தில் இருக்கும் பெண்கள் பெண்கள் மட்டும் தான் கலந்துகொள்ள முடியும். இவர்கள் அச்சந்தையில் கடைகள் வைத்து, பொருட்களை விற்பர்.
ஆனால், சுல்தான் / பாதுஷா மற்றும் அவனது மகன்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபுக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். அவர்கள் அப்பெண்களிடமிருந்து தங்களுக்கு வேண்டியவற்றை தேந்தெடுத்து மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். தம்மிடத்தில் அடிமையாக, காமக்கிழத்திகளாக ஹேரத்தில் இருக்கும் பெண்கள் விற்கும் பொருட்கள் என்றால், அவர்களுக்கு சொந்தமான பொருட்கள் எது, அவற்றை அவர்கள் விற்கமுடியும் என்று வியப்பு ஏற்படுகிறது. “ராஜபுதன மகளிர்-பெண்கள்” மட்டும் தான் கலந்துகொள்ள முடியும் என்றால் என்ன அர்த்தம்?
மகிழ்ச்சியாக, திருப்தியாக, ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜபுதன பெண்கள் இங்கு எதற்காக வரவேண்டும்? அவர்கள் எப்படி அவ்வாறு தனியாக வந்து கடைகள் வைத்து, முகலாயர்களுக்கு விற்பனை செய்யும் அளவிற்கு தாழ்ந்து விட்டனரா அல்லது தள்ளப்பட்டனரா என்று யோசிக்க வேண்டும். எனவே ஒன்று அவர்களும் கடத்திக் கொண்டு வரப்பட்ட அல்லது போலித் திருமணங்கள் செய்து வலுக்கட்டாயமாகக் கூட்டி வரப்பட்ட பெண்களே என்று அறிந்து கொள்ளலாம்.
இங்கு உருவகமாகக் கூறப்படும் இப்பஜாரில், புதியதாக வரும் பெண்களை சுல்தான் / பாதுஷா மற்றும் அவனது மகன்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபுக்கள் வாங்குவர். அதாவது, புதியதாகக் கொண்டு வரப்பட்ட மெண்கள் விற்கப்படுவர். ஹேரத்தில் இருக்கும் பெண்கள் மாற்றிவிடுவர் என்பதும் அறிந்ததே. அதாவது, மீனாபஜார் என்பது, பெண்கள் வாங்கி-விற்கப்படும் பஜார் என்பது மறைமுகமாகக் கூறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இவ்வாறு கிடைத்த பெண்கள் சித்திர, வரையும் ஓவியர்களுக்கும் மாதிரிகளாகக் கிடைத்ததில் வியப்பில்லை. இதனால், கொக்கோக நூல்கள் உருவாகியதில் வியப்பில்லை.
கொக்கோக கவிதைகள் புனைந்தது, செயற்குறைக்கு மருந்துகளை நாடியது: முகலாயர் காலத்தில் செக்ஸை ஊக்குவிக்க, காக்க, பலமுறைகள் கையாளப்பட்டன. மதரீதியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுன்னத் என்ற உறுப்பின் நுனியறுப்பு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இது உடலுறவு கொள்ளும் போது, நேரத்தை நீட்டிக்க உதவும் என்று அவர்களே ஒப்புக்கொண்டு செய்யப்படும் முறையாகும். இதனால், அரசில், ஆட்சியில் உள்ளவர்களுக்கு, எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு திருப்தி படுத்த பெண்கள் தேவைப்பட்டனர். இதனால், அடிமைவியாபாரம் மூலம் பலநாட்டு பெண்ணடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, வாங்கப்பட்டு ஹேரங்களில் சேர்க்கப்பட்டனர். இதில் தான் போர்ச்சுகீசியர்களும், அரேபிய முகமதியர்-முகலாயர்கள் கூட்டாக செயல்பட்டனர்[1].
சிருங்கார மஞ்சரி, லஜாத் அல்-நிஸ்ஸா (பெண்களின் இன்பம்), தத்கீரட் அல்-ஷாவத் (காமத்தைத் தூண்டும் மருந்துகள்), நவ்ரஸ் ஷாஹி (உடலுறவை நீட்டிக்க உபயோகப்படுத்தப்படும் முறைகள்), போன்ற கொக்கோக நூல்கள் எழுதப்பட்டன. உடலுறவு இன்பத்தை நீட்டிக்க மருந்துகள் முதலியவற்றைப் பற்றிய நூல்களும், தயாரிப்புகளும் பெருகின. இதனுடன் “ரசவாதமும்” சேர்ந்து கொண்டது. தங்கம் இல்லாத உலோகத்தை தங்கமாக மாற்றுவது மட்டுமில்லாமல், உடலின் இளமையை மீட்டுப்பெறக்கூடிய மருந்தையும் ரசவாதத்தில் வைக்கப்பட்டது. இதிலும் சூபிக்களின் பங்கு அதிகமாக இருந்தது. இவ்வளவு விவகாரங்கள் இருந்ததினால், தப்தர் அர்பப்-இ-நிஸாத் (இன்பங்கள் துய்க்க தலைமை அலுவலகம்) என்ற பிரிவு இவற்றை கவனித்து, நிர்வகித்து வந்தது[2]. ஆக எல்லாமே நிர்வாகத்துடன், முறையாகத்தான் செயல்பட்டு வந்தன.
முகலாயத் தோட்டங்களும், சல்லாபங்களும்: முகலாயத் தோட்டங்களும் உண்மையில் காமக்களியாட்டங்களுக்கு உபயோகப்படுத்தப் பட்டன. பாதுஷா / சுல்தான் தனக்குப் பிடித்த பெண்களுடன் சந்தோஷமாக சல்லாபம் செய்ய அங்கு செல்வான்; குளங்களில் ஜலக்கிரீடையில் ஈடுபடுவான்; ஆடுவாநாட்டம் போடுவான். அப்பொழுது மற்றவர்கள் செல்லக்கூடாது. இங்குதான் அவரவர்கள் பல பெண்களுடன் சரசலீலைகளில் ஈடுபட்டார்கள். எரிக் பெபின்ஸ்கி[3] என்பவர் முகலாய தோட்டங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “இந்து கொக்கோக கவிதைகள்” பற்றிக் குறிப்பிடுகின்றார், “நான் என்னுடைய இரக்கத்தை அதற்கு [“இந்து கொக்கோக கவிதைகள்”] எந்தவித வெட்கமும் இல்லாமல் தெரிவிக்கிறேன் மற்றும் என்னுடைய இன்பங்களை, இங்கு பெர்லினில் கிடந்து சோர்வடைவதை விட, தாமர்லின் / தைமூர் அல்லது முகலாயர்களின் அரசவைகளில் இருந்து முழுமையாக அனுபவித்து இருப்பேன்”, என்கிறார். “இந்து கொக்கோக கவிதைகள்” என்று மேலடைப்புக் குறிகளில் குறிப்பிடுகின்றார்!
இங்கு “இந்து கொக்கோக கவிதைகள்” என்பது, முகமதியர்கள் எழுதிய கொக்கோகக்-காமநூல்கள் ஆகும். மேலு, முகலாய அரசர்கள் செய்த காமலீலைகள், சசங்களை கிருஷ்ணர் மீது ஏற்றிச் சொல்ல ஆரம்பித்தனர். அதற்கேற்றபடி ஓவியங்களும் தயாரிக்கப்பட்டன. இதனால் தான், இக்காலத்தில், அத்தகைய கவிதைகளைப் படிக்கும் போது, சித்திரங்களைப் படிக்கும் போதும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். பாகவத புராணத்தில், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அத்தகைய இடைச்செருகல்கள் செய்தனர். முகலாயர் காலத்தில் மறுபடியும் எடுத்தாளப்பட்டு, ஓவியங்கள் மூலம் தோஷிக்கப்பட்டன. ஆனால், இக்காலத்து நாத்திகர்க மற்றும் இந்து-விரோத சக்திகள் இவற்றை உபயோகித்து, பொய் சரித்திரத்தை உண்டாக்குகின்றன. மற்றவர்களை திசைத்திருப்புகின்றன. ஆகவே இந்துக்கள், இதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள வேன்டும். அவர்களின் சதியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ராதா–கிருஷ்ண பக்தியைக் கொச்சைப் படுத்தியது, கவிதைகள் புனைந்தது, சித்திரங்கள் வரைந்தது: முகலாயர் காலத்தில் வேண்டுமென்றே, “ராதா-கிருஷ்ண” பக்தி இணைப்புகள் கொச்சைப்படுத்தப் பட்டு, கொக்கோக கவிதைகள் புனையப்பட்டன[4]. அவற்றில் ஆபாசமான படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டன. இன்னொரு பக்கம், ராதாவைப் பெரிய தெய்மாக்க இந்துக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இதில் அவர்கள் ஈடுபட்டிருக்க முடியாது. அதனால், முகமதியர்களே அத்தகைய, “இந்து கொக்கோக கவிதைகளை” உருவாக்கி புழக்கத்தில் விட்டிருக்கின்றனர்.
இதற்கான ஆதாரங்கள் சூபிக்களின் நூல்களில் காணப்படுகின்றன, ஏனெனில், அவர்கள் இதில் பெருமளவில் ஈடுபட்டனர். அலி முட்டாகியின் சீடன் ஒருவன் பிருந்தாவன் முதலிய இடங்களுக்குச் சென்று வந்தது விமர்சிக்கப்படுகிறது. ஷா ஹுஸைன் போன்ற சூபிக்கள் “ஹீர்-ராஞ்சா” என்று “ராதா-கிருஷ்ண” ஜோடி மாற்றப்பட்டு, தமதிச்சைகேற்றபடி, கொக்கோகத்தை அதில் ஏற்றிக்கொண்டனர். கிருஷ்ணரின் காமக்களியாட்டமான “ராஸலீலையை”, குரானில் காணப்படும் ஒரு உதாரணத்துடன் ஒப்பிட்டும், இது ஊக்குவிக்கப்பட்டது[5]. இது அக்பரின் “தீன்-இலாஹி”யைப்போன்றது. பிறகு இவை சித்திரங்களாக வரையப்பட்டன, அந்நூல்களில் மற்றும் கொக்கோக நூல்களில் சேர்க்கப்பட்டன.
மொஹம்மது ஜாய்ஷி [मलिक मोहम्मद जायसी) (1477–1542)] என்ற சூபி கவிஞன், கவிதைகளில் ராணி பத்மினிய அழகின் சின்னமாக உதாரணமாக உருவகமாக உபயோகித்தான். பத்மினி உருவகமாக பயன்படுத்தப்பட்டாள் என்பது குறிப்பிடப்பட்டது. அவ்வாறே “ராதா-கிருஷ்ண” பக்தியும் கொச்சைப்படுத்தப்பட்டது. அத்தகைய சித்திரங்கள் இன்றும் வரையப்பட்டு விற்கப்படுகின்றன.
முகமதிய–ராஜபுதன திருமண பந்தங்கள் ஏன் பரஸ்பர ரீதியில் இல்லை?: பாரசீக, முகலாயச் சித்திரங்கள் என்பவற்றில், எப்பொழுதுமே, ஒரு முகமதிய சுல்தான் ஒரு இந்து பெண்மணியுடன் ஏகாந்தமாக, அரைகுறை உடைகளுடன், நிர்வாணமாகவும், ஏன் உடலுறவு கொள்வது போன்ற காணப்படுகின்றன. “காமசூத்ரா” புத்தகத்தின் அட்டைகூட அவ்வாறுதான் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு சித்தரிக்கப்படவேண்டும் என்று பார்ப்பவர்களுக்கு கேள்வி எழும்.
ஒரு இந்து அரசனுடன், ஒரு முகமதிய பெண் இருப்பது போன்ற சித்திரங்கள் ஏன் இல்லை என்றும் கேட்கலாம். மேலும், அக்பர் பல ராஜபுதன பெண்களை திருமணம் செய்து கொண்டபோது, ஏன் அக்பரது சகோதரி, மகள் அல்லது வேறெந்த உறவு பெண்களும், ராஜபுதன அரசர்களுக்கு பதிலுக்கு திருமணம் செய்து கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பரஸ்பரம் இல்லாமல்,
இந்து-முஸ்லிம் ஒற்றுமை, உறவுகள் இப்படி ஒருவழியாகத்தான் உண்டாக்க, சிறப்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதாவது, அக்பரது ராஜபுதன பெண்களுடான திருமணங்கள் பரஸ்பர ரீதியில் இல்லாததனால், அவை வற்புறுத்தி செய்து கொண்ட கல்யாணங்களாக இருக்க வேண்டும் அல்லது வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படியென்றால், அவை போலித் திருமணங்கள் என்றாகின்றன, ஆனால், இஸ்லாம் ரீதியில் “மூத்தா” கல்யாணம் என்றாகிறது. அதனால்தான், அவர்கள் அனுபவிக்கப்பட்டு, ஹேரத்தில் தள்ளப்பட்ட்டனர்.
வேதபிரகாஷ்
©
[1] போர்ச்சுகீசியர்கள் வெள்ளைக்காரிகளை / ஐரோப்பியப் பெண்களை முகலாயர்களுக்கு விற்றுவந்தனர். அவர்கள் “வெள்ளை முகலாயர்” என்றே அழைக்கப்பட்டனர்.
[2] William Dalrymple, White Mughals: Love and Betrayal in Eighteenth-Century India, Penguin, USA, 2002, p.135.
[3] Erik Pepinski in 1922, entitled “Altindische Gartenkunst” (Ancent Indian Garden Art) makes reference “erotic Hindu poetry” in the contest of Mughal gardens: “I declare my sympathy to that [erotic Hindu literature] without any shame and I would have preferred to enjpy my many ecstasies to the full at the court of Tamerlan or of a Mughal prince – rather than to have had the, worn out in Berlin”!
[4] Allison Busch, Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India, Oxford University Press, 2011, USA, p.232.
[5] Scott A. Kugle, Sufis and Saints’ Bodies- Mysticism, Corporeality and Dacred Power in Islam, University of North Carolina Press, USA, p.207.
No comments:
Post a Comment