P.A.SANGMA ,POLITICIAN BORN
1947 SEPTEMBER 1
.1947 செப்டம்பர் 1
பி.ஏ.சங்மா, மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில்,
1947 செப்., 1ல் பிறந்தார். திப்ரூகர் பல்கலையில், சர்வதேச உறவு களில், எம்.ஏ., முதுகலை படிப்பும், எல்.எல்.பி., பட்டமும் பெற்றார்.அரசியலில் நுழைந்த இவர், 1973ல் இளைஞர் காங்கிரசில் துணைத் தலைவர் மற்றும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்; 1975 -- 1980 வரை, மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின், பொதுச் செயலராக பதவி வகித்தார்; 1988 - -1990 வரை, மேகாலயா மாநில முதல்வராக இருந்தார்.எட்டு முறை, லோக்சபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அரசில், நிலக்கரி, -தொழிலாளர், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 1996 -- 1998 - லோக்சபா சபாநாயகராக இருந்தார்.காங்கிரஸ் கட்சியுடன் எழுந்த கருத்து வேறுபாட்டால், தேசியவாத காங்கிரஸ் எனும் கட்சியை துவக்கினார். பின், திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார். அக்கட்சியில் இருந்து விலகி, மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2012ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் பிறந்த நாள், இன்று.
No comments:
Post a Comment