Saturday, 14 October 2017

ROGER MOORE , LEGEND OF JAMES BOND BORN 1927 OCTOBER 14



ROGER MOORE , LEGEND OF JAMES BOND BORN 1927 OCTOBER 14




சர் ரோஜர் ஜார்ஜ் மூர் என்றறியப்படும் இந்த நபர் (பிறப்பு 14 அக்டோபர் 1927) ஒரு ஆங்கில நடிகர் மற்றும் மனிதாபிமானவர் ஆவார். மூர் பிரிட்டிஷ் இரகசிய முகவரான ஜேம்ஸ் பாண்டுடன் 1973 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏழு திரைப்படங்களில் நடித்தார். மூர் ஒரு மாடலாகப் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐவானோ (1958-1959), தி அலாஸ்கன்ஸ் (1960-1961) மற்றும் மேவர்ரிக் (1961)நடித்துள்ளார் . தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார்.

பிறப்பும் இளமை பருவமும்[மூலத்தைத் தொகு]

ரோஜர் மூர் 1927 அக்டோபர் 14 ம் தேதி லண்டனில் உள்ள லம்பேத்தின் லண்டன் பெருநகரத்தின் ஒரு பகுதியாக ஸ்டாக்வெல்லில் பிறந்தார். அவர் லில்லியன் 'லில்லி' என்ற ஒரு இல்லத்தரசி இந்தியாவில் கல்கத்தாவில் பிறந்தவர்மற்றும் ஜார்ஜ் ஆல்ஃபிரட் மூர், ஒரு போலீஸ்காரர் ஆகியோரின் ஒரே ஆங்கிலோ இந்திய குழந்தை. அவர் பாட்டர்ஸீய இலக்கணப் பள்ளியில் பயின்றார், ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது ஹொல்வொரொர்த்தி, டெவோனிற்கு இடம் பெயர்ந்தார் .. பின்னர் அவர் பர்கிங்ஹாம்ஷையர், அமர்ஸாமில் உள்ள டாக்டர் சோனோனரின் இலக்கணப் பள்ளியில் பயின்றார். பின்னர் அவர் துர்ஹாம் பல்கலைக் கழகத்தின் வெனரபிள் பெடீ கல்லூரிக்குச் சென்றார், ஆனால் பட்டம் பெறவில்லை .

ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் இரண்டு கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தார், இதற்கு உதவியவர் இயக்குனர் பிரையன் டெஸ்மோண்ட் ஹர்ஸ்ட் . அத்துடன் சிறுசிறு பாத்திரங்களிலும் தோன்றினார் .அப்போது ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மனிபென்னி யாக வரும் லோயிஸ் மாஸ்வ்ல் இவருடன் படித்தார்

18 வயதில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், மூர் தேசிய சேவையில் சேர்ந்தார். 21 செப்டம்பர் 1946 அன்று, ராயல் ராணுவ சேவை கார்ப்ஸில் இரண்டாம் லெப்டினண்ட் ஆக நியமிக்கப்பட்டார். அவருக்கு சேவை எண் 372394 வழங்கப்பட்டது. [4] இறுதியில் அவர் ஒரு கேப்டனாக ஆனார். மூர் மேற்கு ஜெர்மனியில் ஒரு சிறு துறையை நிர்வகித்து வந்தார் .

அப்பா போல போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே அவரின் லட்சியம். ஆனால் கடைசியில் ஓவியராகி பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார் ரோஜர் மூர். அதுவும் சிறிது காலமே நிலைத்தது. பின்னர் புகைப்படக் கலைஞரான தனது நண்பரின் உதவியால் மாடலிங் செய்தார். ஆனால் அதிலும் பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள். மாடலிங் செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை வந்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார் ரோஜர். 


முதலில் வீதி நாடகங்கள், டிவி தொடர்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் 1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். 'டிராயிங் ரூம் டிடெக்டிவ்', 'தி செயின்ட்' ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின டிவி சீரியல்கள். ஒருவழியாக 46 வயதில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்து.

திரைப்பட வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
1973-ல் வெளிவந்த 'லிவ் அண்ட் லெட் டை' திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட்டாக அவதரித்தார் ரோஜர் மூர்.1985 வரை 'ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி', 'ஏ வியூ டு எ கில்' உட்பட ஏழு படங்களில் 12 ஆண்டுகள் ஜேம்ஸ்பாண்ட் எடுத்த ஆக்ஷன் அவதாரங்கள் உலகை திரும்பிப் பார்க்கச் செய்தன. அதிக ஆண்டு காலம் 007 ஆக கோலோச்சிய ஒரே சாம்பவான் என்ற பெயர் எடுத்தார் ரோஜர்.

சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
1946 ஆம் ஆண்டில், 18 வயதான மூர் ஒரு ராடா மாணவரை மணந்தார்; நடிகை மற்றும் ஐஸ் ஸ்கேட்டர் டோர்ன் வான் ஸ்டெயின் ,அவர் மூரை விட ஆறு வயது மூத்தவர் . [21] மூர் மற்றும் வான் ஸ்டெயன் ஸ்ட்ராத்தாமில் அவருடைய குடும்பத்தாருடன் வசித்தனர், ஆனால் பணத்திற்கான பதட்டங்கள், அவரது நடிப்புத் திறனில் நம்பிக்கை இல்லாததால் அவர்களது உறவை பாதித்தது. [22] ஒரு சந்தர்ப்பத்தில் அவர் மேல் தேநீர் கோப்பையை தூக்கி எறிந்தார் . அதன் பிறகே ராணுவ சேவைக்கு சென்றார் .

மூர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார், அவற்றில் வெல்ஷ் பாடகர் டோரதி ஸ்கைர்ஸ் ,மற்றும் இத்தாலிய நடிகை லுயிசா மாட்டோலி, முக்கியமானவர்கள் .நடிகை லுயிசா மாட்டோலி ,அவருடன் மூன்று குழந்தைகள் பிறந்தனர் . டெபோரா மூர் மற்றும் ஜெஃப்ரி மூர் . மூர் 2008 இல் " மை வேர்ட் இஸ் மை பாண்ட் "என்ற சுயசரிதையை வெளியிட்டார்; அவர் தன்னுடைய வாழ்க்கையின் சினிமா பற்றி பிற புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். எல்லாவற்றையும்விட இந்த பணியே மிகுந்த மனநிறைவு அளிப்பதாக கூறுகிறார். யூனிசெப் அமைப்பின் நலத்தூதராகவும் பணியாற்றியுள்ள ரோஜர், சுகாதாரப் பணிகளுக்காக அதிக அளவு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளார்.

இறப்பு[மூலத்தைத் தொகு]

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரான ரோஜர் மூர் 
2017  மே 23  அன்று காலமானார். அவருக்கு வயது 89. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த  ஸ்விட்சர்லாந்தில் காலமானார்.



பிற செய்திகள்[மூலத்தைத் தொகு]
படப்பிடிப்பில் துப்பாக்கியும் கையுமாக திரிபவருக்கு உண்மையில் துப்பாக்கி, வெடிபொருட்களைக் கண்டால் பயம். ஆமாம், அவருக்கு ஹோலோஃபோபியா நோய் இருந்தது.
86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இந்த முன்னாள் 007, தான் நடித்தது உட்பட எந்த ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தையும் முழுமையாக பார்த்ததில்லை

ஜூனியர் ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரெய்க் நடித்த படத்தில் வில்லனாக நடிப்பது இவரது தீராத ஆசை.
டிவி நிகழ்ச்சிகள், புத்தகம் எழுதுவது என்று என்று கூறுவது வியப்புக்குரியது.
நான் நிஜத்திலும் பாண்ட் மாதிரிதான். படு ஜாலியான பேர்வழி. என்னை மாற்றிக் கொள்ள நான் முயற்சித்ததே இல்லை. அதற்காக நான் வில்லனும் கிடையாது. ஹீரோதான். மேலும் நான் பாண்ட் போல வீராதி வீரனும் இல்லை என்று அவரே கூறியுள்ளார்.
சீன் கானரி அடைந்த பெரும் வெற்றிக்குப் பிறகு ரோஜர் மூர் தனது கதாபாத்திரத்தைத் தனித்துவமுள்ளதாக எப்படி மாற்றிக் காட்டினார் என்பது

 ஒரு ஆச்சர்யம் .. சீன் கானரிக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்று ரோஜரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. 
 ரோஜர் சொன்னார்: “சீன் கானரி கில்லர்… நான் லவ்வர்”.
நடித்த சில படங்கள்[மூலத்தைத் தொகு]
Live and Let Die (1973), The Man With the Golden Gun (1974), The Spy Who Loved Me (1977), Moonraker (1979), For Your Eyes Only (1981), Octopussy (1983), A View to a Kill (1985),

No comments:

Post a Comment