VELANKANNI MATHA TEMPLE
வேளாங்கண்ணி கிறித்துவ தேவாலயமானது தென்னிந்தியாவில் உள்ள புண்ணிய திருத் தலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்த ஆலயத்திற்கு வருடந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருத்துவர் மட்டுமின்றி பிற மதத்தினரும் சுற்றுலாவாக வந்து செல்வது வழக்கம். குறிப்பாக, திருவிழாக் காலங்களில் வேளாங்கண்ணி ஆலயத்தின் ஜொலிக்கும் அழகைக் காணவும், சிறப்பு வழிபாட்டைக் காண வேண்டியே லட்சக் கணக்கான பயணிகள் இங்க வருகின்றனர். தற்போது துவங்கியுள்ள பேராலயத் திருவிழாவில் பங்கேற்க நாமும் பயணிக்கலாம் வாங்க
திருச்சி - வேளாங்கண்ணி திருச்சியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் வங்கங்கடல் ஓரம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேளாங்கண்ணி தேவாலயம். தஞ்சாவூர், மன்னார்குடி வழியாக திருத்துறைப்பூண்டி வந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சில கிலோ மீட்டர் பயணித்தால் இத்திருத்தலத்தை அடையலாம். திருச்சியில் இருந்து பேருந்து வசதிகளும் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
மதுரை - வேளாங்கண்ணி மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டியை அடைந்துள் அங்கிருந்து வங்கங் கடலை ஒட்டிய மணமேல்குடி- அதிராம்பட்டினம்- திருத்துறைப்பூண்டி வழியாக 264 கிலோ மீட்டர் பயணித்தால் வேளாங்கண்ணியை அடைந்துவிடலாம். அல்லது, மதுரை- கோதாரி வழியாக 242 கிலோ மீட்டரும், மதுரை- புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி வழியாக 263 கிலோ மீட்டர் பயணித்தும் இத்தலத்தை அடைய முடியும்.
சென்னை - வேளாங்கண்ணி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்டு அண்டை மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு பயணிப்போர் சென்னை வந்து வருவதால் இங்கிருந்து ஏராளமான பேருந்து வசதிகளும், ரயில் சேவையும் வேளாங்கண்ணி செல்ல உள்ளது. அல்லது, நீங்கள் கார் அல்லது இருசகர்ர வாகனத்தில் பயணம் செய்வதாக இருந்தால் மாமல்லபுரம், பாய்டிச்சேரி, சிதம்பரம், வழியாக 315 கிலோ மீட்டர் பயணித்தும் இப்பகுதியை அடையலாம்.
வேளாங்கண்ணி தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த பேராலயம் மடோனா ஆப் வேளாங்கன்னிக்கு அர்ப்பனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பேராலயத்தில் குடிகொண்டிருக்கும் அன்னை மரியா, ஆரோக்கிய அன்னை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
வழிகாட்டிய மேரி அன்னை இப்பேராலயத்தின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நீள்கிறது. ஒருமுறை போர்த்துகீசிய வணிகர்கள் சிலர் வங்கக் கடலில் பயணித்துக் கொண்டிருக்கையில் புயலில் சிக்கித் தவித்துள்ளனர். அப்போது, தொலைவில் ஒளி ஒன்றைக் கண்ட அவர்கள் அதனை நோக்கி பயணித்துள்ளனர். அந்த ஒளி நாகப்பட்டினத்தில் உள்ள இக்கடந்கரைக்கு அவர்களை கொண்டு சேர்த்திருக்கிறது. தங்களை கொடும் புயலில் இருந்து மீட்ட அந்த ஒளியானது மேரி அன்னையின் வழிகாட்டல் தான் என எண்ணிய வணிகர்கள் கரை ஒதுங்கிய இடத்திலேயே ஒரு தேவாலயத்தைக் கட்டி வழிபட்டுள்ளனர்.
சிறிய ஆலயம் வேளாங்கண்ணியில் அன்னை மேரி தனது குழந்தையான இயேசுவோடு, ஒரு பால் வணிகர் முன் தோன்றி, தனது மகனின் பசியைப் போக்க அவரிடம் பால் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக வேளாங்கண்ணி பேராலய வளாகத்திலேயே ஒரு சிறிய ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழா வேளாங்கண்ணியில் கொண்டாடப்படும் பேராலயத் திருவிழா உலக அளவில் மிகவும் பிரசிதமான ஒன்று. பசிலிக்கா என்ற பிரம்மாண்டக் கட்டிடத்தில் குடிகொண்டுள்ள ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவினை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவாக வருடம்தோறும் 11 நாட்களுக்கு கொண்டாடுவது வழக்கம். அதன்படி தற்போது திருவிழா துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 7ம் தேதியன்று ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவணியும், 8ம் தேதியன்று மாதாவின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுகிறது.
வேளாங்கண்ணி கடற்கரை வேளாங்கண்ணி பேராளயத்திற்கு மட்டுமின்றி கடற்கரைக்காகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. தவாலயத்திற்குப் பயணிப்போர் தவறாமல் சென்று வரவேண்டிய இடம் இக்கடற்கரை. கிருத்துவ பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கடற்கரையை ஒட்டிய கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment