சாக்லேட்... இந்த வார்த்தை இனிப்பு கலந்து ... உலக மக்களிடையே உறவோடு கலந்த ஒரு வார்த்தை.
குழந்தை பருவம் முதல் குடுகுடு தாத்தா வரை சாக்லேட் என்றாலே அலாதி பிரியம். உலகில் சாக்லேட் சாப்பிடதாவர்களே இருக்க முடியாது. குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலே சாப்பாடு கூட தேவை இருக்காது. விதம் விதமாய் கலர் கலராய் புது புது ஃபளேவர்களாய்
அழகான பேக்கிங் களில் தயாரித்து வெளி வருகிறது. பிறந்தநாள் விழா புத்தாண்டு விழா பண்டிகை காலங்கள் பரிட்சையில் வெற்றி பெறும் தருணங்கள்
விளையாட்டில் முதன்மை பெறும் நேரங்கள் இத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்த சாக்லேட் ஒன்றே போதும்.
ஒரு ரூபாய் சாக்லேட் உன்னதம்!!!!
தெருவோர பெட்டி கடை முதல் ஐந்து மாடி மால்கள் வரை சாக்லேட் முக்கிய இடம் பிடிக்கிறது. கடையின் முகப்பில் சாக்லெட் இருக்கும். இதனால் அனைவருக்கும் இது பிடிக்கும். இந்தியாவில் தயாராகும் சாக்லேட் மிக ஆரோக்கியமானவை பிரபலமானவை. வெளிநாட்டிலிருந்து வரும் சாக்லேட்டும் மக்கள் விரும்பும் வகையில் இருக்கும். பசிக்காக குழந்தைகள் அழுவது உண்டு ஒரு சாக்லேட் கொடுத்தால் அழுகை நின்றுவிடும்.
டீன் ஏஜில் அன்பை பரிமாறுவதற்கும்
முதுமையில் குழந்தை தன்மை தென்படுவதற்கும் சாக்லேட் உன்னதமான ஒரு பொருளாக காணப்படுகிறது.
இன்று சாக்லேட் தினம்!
உலகம் முழுவதும் இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
கொரோனா தாக்கம் ஒருபுறமிருக்க மறுபுறம் பொதுஜனங்கள் வீட்டில் தனிமையாக பொழுதைக் கழிக்கின்றனர். தொலைபேசி வாயிலாக இவர்களை தொடர்பு கொண்டபோது இவர்கள் பகிர்ந்து கொண்டவை சாக்லேட் ஆக இனித்தது.
வைரஸ் தாக்கி குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனால் கூட சாக்லேட் கொடுத்த தான் வழி அனுப்புகிறார்கள்.
சாக்லேட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு உலகளாவிய பொருள்.
வாசகர்கள் பதிவுகளை இங்கே வெளியிடுவதில் பெருமை கொள்கிறது தினமலர்.
நாகர்கோவில் கன்யாகுமரி மாவட்டம்
வணக்கம் குட்டீஸ்!
எனக்கு சாக்லேட்னா ரொம்ப பிடிக்கும்.
எனக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் பிடிக்கும்.
எங்க பிரண்ட்ஸ் பர்த்டே கேக் சாக்லேட் தருவாங்க. நானும் அவங்க பர்த்டேக்கு கொடுப்பேன். என் பேரண்ட்ஸ் நிறைய சாக்லேட் வாங்கி தருவாங்க.. எனக்கு பிடிச்சது டைரிமில்க். ஹேப்பி..மீன்ஸ் சாக்லேட். ஹாப்பியா இருங்க. ஹாப்பி சாக்லேட் டே!
எங்க நேட்டிவ் பிளேஸ் நெல்லை.. எங்க டாடி ஓசூரில் ஒர்க் பண்றாங்க. எங்க அம்மா சாக்லேட் பிரியராக்கும்.எங்களுக்கும் சாப்பிட்டு நிறைய தருவாங்க. எங்க பர்த்டேக்கு பைவ் ஸ்டார் டைரி மில்க் நிறைய கிடைக்கும். எங்க பிரண்ட்ஸ் தருவாங்க. எங்க ஆச்சிக்கும் சாக்லேட் கொடுப்போம்.. எங்க தாத்தாக்கு நிறைய கொடுப்போம் ரெண்டு எடுத்துகிடுவாங்க..
ஹாப்பி சாக்லேட் டுடே..
சாக்லேட் இருக்கு உங்களுக்கு வேணுமா!
விஹாஷ்னி.. மஹஸ்ரீ ஓசூர்
இலக்யா, கேடிசி நகர், நெல்லை
ஹாப்பி சாக்லேட் டுடே!
சாக்லெட் எனக்கு ரொம்ப பிடிக்கும் பிறந்தநாள், புதுவருட பிறப்பு.... எந்த விழா என்றாலும் கண்டிப்பாக சாக்லேட் இடம்பெறும், எனது தோழிகளுக்கு பிறந்த நாள் என்றால் எந்த வகையான சாக்லேட் கொண்டுவருவார்கள் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பேன், எனக்கு Dairy milk சாக்லெட் ரொம்பபிடிக்கும்,.. சாக்லேட் சொன்னவுடன் என்னமா சிரிக்கிறேன்னு பாருங்க!!! ஹா ஹா..
கவின் , கேடிசி நகர் , நெல்லை
சாக்லெட் ரொம்ப பிடிக்கும், ஸ்கூலுக்கு செல்லும் போது ஸ்னாக்ஸ் சாக்லெட்தான் கொண்டு செல்வேன், சாக்லெட்டிற்காவே பிறந்தநாள் கொண்டாடுவேன், அந்த அளவிற்கு சாக்லெட் மீது ஆசை, five star, kit- kat சாக்லெட் விரும்பி உண்பேன், எங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்கள் எனக்காக சாக்லெட்டுதான் வாங்கிவருவாங்க..
என்கிட்ட நிறைய சாக்லேட் இருக்கு. அட்ரஸ் கொடுங்க அள்ளித்தரவா!!!
எப்பூடி...
இன்று சாக்லெட் தினம் அனைவருக்கும் சிக்லெட் தின வாழ்த்துக்கள் , சாக்லெட் எனக்கு ரொம்ப பிடிக்கும், எத்தனை வயதானாலும் சாக்லெட் சாப்பிடலாம், அதன் சுவை அருமையாக இருக்கும், சாக்லெட் சேர்ந்துள்ள கேக் உணவு பொருட்களை விரும்பி
சாப்பிடுவேன்..
சின்ன வயசுல எங்க அம்மா நிறைய தருவாங்க... ஹாப்பி சாக்லெட்..டே..
தேங்க்ஸ் தினமலர்..
அஜ்ரின் மரியா அருமனை கன்னியாகுமரிமாவட்டம்
சாக்லேட்னா யாருக்கு தான் பிடிக்காது.. எனக்கு நிறைய பிராண்ட் சாக்லேட் பிடிக்கும். டுடே சாக்லேட் டே.... விஷ் யூ ஆல்.. அப்படின்னு சொல்லிக்கிட்டே.அஞ்சு நிமிஷத்துல வரஞ்ச ஒரு கார்ட்டூன் அட்டைய எடுத்தாங்க.
ரொம்ப அழகா பேசி வாழ்த்து சொன்னாங்க. உங்க அப்பா எனக்கு நிறைய சாக்லேட் தர மாட்டாங்க. ஆரோக்கியம் முக்கியம்ல்ல.. இருந்தாலும் எனக்கு பிடிக்கும். கேட்டா தருவாங்க. நீங்க சொல்லிதான் சாக்லேட் தினம் தெரியும்.பள்ளிக்கூடம் போனா ப்ரண்ட்ஸ்க்கு பண்ணலாம்.
வீட்ல தனியா இருக்கோம். தினமலர் ஆன்லைன் வழியா விஷ் பண்ணிட்டா போச்சு..ஹேப்பி ப்ரண்ட்ஸ்
No comments:
Post a Comment