S.V.RENGA RAO ,LEGEND OF TELUGU/TAMIL CINEMA BORN 1918 JULY 3-1987 JULY 18
கண்ணியமான அப்பா பாத்திரத்தில் நடித்த எஸ்.வி.ரங்கராவ் BORN JULY 3,1918
நாம் 60 வயது கதாநாயகர்கள் 18 வயது கதாநாயகிக்கு ஜோடியாக நடிப்பதைப் பார்த்து ரசிக்கும் நம்ப ரசிக பெருமக்களுக்கு நான் சொல்லும் இந்த செய்தி கொஞ்சம் புதுசு.
1950 களில் தொடங்கி 60 70 களில் கண்ணியமான அப்பா பாத்திரத்தில் நடித்த எஸ்.வி.ரங்கராவ் தன் வாழ்நாளில் முதுமையே பார்த்ததில்லை. ஆம் அவர் மறைந்த போது அவருக்கு வயது 56 தான்.. திரு எம்.ஜி.ஆரை விட வயதில் இளையவர் ஆனால் அவருக்கு தந்தையாக பல படங்களில் நடித்தவர்.
அந்த காலக்கட்டத்தில் அப்பா வேடங்களில் நடித்த திரு நாகைய்யா,போன்றவர்கள் அழுது நம்மையும் அழ வைத்த போது தன்னுடைய கம்பீரமான நடிப்பாலும் ஆஜானுபாகுவான சரீரத்தாலும் நம் தமிழ் ரசிகர்களை தம்பால் இழுத்தவர்.
இந்த மாதிரி தந்தையோ மாமனாரோ நமக்கு அவரைப்போல இருக்க மாட்டாரோ என ஏங்க வைத்தவர்,தெலுங்கு தேசத்தில் பிறந்தாலும் தமிழை டப்பிங் இல்லாமல் சுத்தமாக உச்சரித்ததாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தனி இடம் பிடித்தவர்.
தெலுங்கு படங்களை இயக்கி விருது பெற்றவர்
அந்த காலத்தில் பட்டதாரிகள் நடிக்க வருவது குறைவு.திரு ரங்கராவ் அவர்கள் ஒரு பட்டதாரி..
ஒரு நடுத்தர வயதினரை மாயாபஜாரில் யார் யார் நடித்தார்கள் என்று கேட்டுபாருங்கள் யாரும் அதில் நடித்த ஜெமினி சாவித்திரியை சொல்ல மாட்டார்கள். டக்கென்று ரங்கராவ் என்று தான் சொல்வார்கள்..
.
சில படங்களில் அவருடைய கதாப்பாத்திரம் அதில் நடித்த கதாநாயகரையும் மிஞ்சி விடும்.. மாமனார் மருமகள் பாசப்பிணைப்பை உணர்த்திய நானும் ஒரு பெண் அதில் ஒன்று அன்னை திரைப்படத்தில் மனைவியை புரிந்துக்கொண்ட கணவன் பாத்திரமாகட்டும், வளர்ப்பு தந்தை மகனிடம் கொட்டும் பாசத்தை உணர்த்திய படிக்காத மேதையாகட்டும் ரங்கராவை தவிர யாரும் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்க முடியாது. கண்கண்ட தெய்வம் மற்றும் அன்புச்சகோதரர்கள் படங்களில் தோன்றிய அண்ணனை நாம் மறக்கமுடியுமா? இப்படி எத்தனையோ திரைப்படங்கள்.
உண்மையை சொல்லுங்கள்,இரண்ய கசிபு என்றால் யார் ஞாபகம் உங்களுக்கு வருகிறது.அந்த ஆஜானுபாகுவான ராஜாவுக்கு பொருத்தமானவர் யார். ஆங்கில புலமை மிகுந்த அவர் நிறைய ஷேக்ஸ்பியர் நாடகத்தில் நடித்துள்ளார்.
கைகொடுத்த தெய்வத்தில் சாவித்திரிக்கு தந்தையாக நடித்து நம் கண்களை குளமாக்கியவர் சர்வர் சுந்த ரத்தில் சிறிய வேடத்தில் தோன்றினாலும் தன் நகைச்சுவை நடிப்பால் நம்மை குலுங்க குலுங்க சிரிக்கவைத்தார்..
முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பிபிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்கள்ஒண்ணாக''
-‘அன்புச் சகோதரர்கள்' படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்கா ராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு பாசமானஅண்ணனாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.
இவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கதாபாத்தி ரங்கள் அத்தனையும் மனித வாழ்க்கையில் மறக்க முடியாத ஒதுக்க முடியாத உன்னத உறவுகளை கொண்டதாக இருக்கும். நல்லகணவன், பாசமான அண்ணன், அன்பான அப்பா, மறக்க முடியாத மாமனார், கம்பீரமான தாத்தா, கௌரவமான போலீஸ் அதிகாரி, ஊர் போற்றும் மனிதர், கொடூரமான வில்லன், மற்றும் மந்திரவாதி, புராண, இதிகாச கதாபாத்திரங்கள் என்று அத்தனை வேடங்களையும் ஏற்று சிறப்பாக நடித்தார்.
இவருக்காக பல கதாபாத்திரங்கள் உருவாக்கப்ப ட்டன. சில கதாபாத்திரங்கள் இவர் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என இவரைத் தேடி வந்திரு க்கின்றன. அப்படிப்பட்ட உன்னத கலைஞர் சிறந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ். இவர் தமிழ், தெலுங்கு என்று இருநூறுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அத்ததனைப் படங்களும் பிரபல மான சூப்பர் ஹிட்டான படங்களாகும்.
விஜயா வாஹினி தயாரித்த ‘பாதாள பைரவி' (1951) படம்தான் எஸ்.வி.ரங்காராவ் நடித்து அறிமுகமான முதல் தமிழ்ப் படம். இதில் மந்திரவாதியாக வேட மேற்று நடித்தார். ‘மாயாபஜார்' படத்தில் கடோத்கஜ னாக காமெடி கலந்த வேடத்தில் நடித்தார். ‘சம்பூர்ண இராமாயணம்' படத்தில் இராவணனாக நடித்தார். ‘மிஸ்ஸியம்மா' படத்தில் வாடகைக்கு வருபவ ர்களிடமும் பாசம் காட்டும் வீட்டு உரிமையாளர் வேடத்தில் நடித்தார். ‘கற்பகம்' படத்தில் அப்பா வாகவும், நல்ல மாமனாராகவும் இருமாறுபட்ட தோற்றத்தில் நடித்தார். நானும் ஒரு பெண் படத்தில் கருமைநிறம் கொண்ட மருமகளை வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் நல்ல மாமனாராக நடித்தார். ‘கைகொடுத்த தெய்வம்' படத்தில் வெகுளிப்பெண் (சாவித்ரி)யை பெற்றெ டுத்துவிட்டு அவஸ்தைப்படும் தந்தையாக நடித்திருந்தார். ‘அன்னை' படத்தில் நடிப்பின் இலக்கணம் பி.பானுமதிக்கு ஜோடியாக நடித்தார்.
எங்கள்வீட்டுப் பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆரின் மாமனாராக நடித்தார். ‘படிக்காத மேதை' படத்தில் உலகம் தெரியாத ஒரு அப்பாவி மனிதனுக்கு அன்பைக் காட்டும் மாமாவாக நடித்தார். ‘நீதிக்குப்பின் பாசம்' படத்தில் கௌரவமான உயர் போலீஸ் அதிகாரியாகவும், பிள்ளைகளுக்கு பிரியமான தந்தையாகவும், மனைவிக்கு அன்பான கணவ னாகவும், வேறுபாடுகளைக் காட்டி நடித்தார். ‘கண் கண்ட தெய்வம்' படத்தில் தன்னைச் சார்ந்து வாழும் அன்பான தம்பிக்கு நல்ல அண்ணனாகவும், அவரது குடும்பத்திற்கு பாதுகாவலராகவும் நடித்திருந்தார். ‘அன்னை இல்லம்' படத்தில் சிவாஜிக்கு தந்தை யாகவும், மனைவி எம்.வி.ராஜம்மாவிற்கு நல்ல கணவராகவும் நடித்திருந்தார்.
விஜயா சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர்.நடித்த ‘நம்நாடு' படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதும் வில்லனாகவும், ‘ராஜா' படத்தில் கொடூரமா ன வில்லனாக சிவாஜியுடன் மோதுபவராகவும் நடித்திருந்தார். இப்படி பலபடங்களில் பல்வேறு விதமான வேடங்களை ஏற்று தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டு க்களைப் பெற்றார் எஸ்.வி.ரங்காராவ். டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷணன் தனது படத்தில் எஸ்.வி. ரங்கராவ் தான் நடிக்க வேண்டும் என்பதற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கவிருந்த ஒரு பெரிய படத்தை இயக்குகின்ற வாய்ப்பையே இழந்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களும், டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களும் தொடர்ந்து தங்களது படங்களை வெற்றிப் படங்களாக்கி வெற்றி வலம் வந்து கொண்டிருந்த காலகட்டமது. இருவரும் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டு மென்று விரும்பினார்கள். எம்.ஜி.ஆர். அவர்களும் கதை கேட்டார். அதற்காக அப்போது ரெடி பண்ணி வைத்திருந்த ‘கற்பகம்' படத்தின் கதையைப் போய் சொன்னார் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
எம்.ஜி.ஆரும் முழுமையாக கதையை கேட்டுவிட்டு நடிக்கச் சம்மதித்தார். அதன்பிறகு மற்ற கேரக்டர்க ளில் யார்? யார்? நடிப்பது என்று கலந்து பேசினார்கள். அப்போது டைரக்டர் கே.எஸ்.ஜி. ‘கற்பகம்' படத்தில் வரும் மாமனார் கேரக்டரில் நடிகர் எஸ்.வி.ரங்காரா வை நடிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதற்கு எம்.ஜி.ஆர்.அவர்கள் மற்ற கேரக்டர்களுக்கு உங்கள் விருப்பபடி யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் மாமனார் கேரக்டரில் டி.எஸ்.பாலையா மட்டும் நடிக்கட்டும் என்றார். அதற்கு கே.எஸ்.ஜி. யோசித்து சொல்வதாக வீட்டிற்கு வந்துவிட்டார். வந்த சில நாட்கள் யோசித்துவிட்டு இந்த மாமனார் கேரக்டருக்கு எஸ்.வி.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்னை மன்னித்துவிடுங்கள் என்றார் டைரக்டர்.
எம்.ஜி.ஆரும் நீங்களும் என்னை மன்னித்துவிடுங்கள் இந்தப் படத்திற்கு வேறு யாரையாவது கதாநாய கனாகப் போட்டு படத்தை எடுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால்தான் ‘கற்பகம்' படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆர்.அவர்கள் டி.எஸ்.பாலையாவை சிபாரிசு செய்ததற்கு காரணம், ஆரம்ப காலத்தில் கதாநாய கனாக நடிப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு படத்தில் டி.எஸ்.பாலையாவும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அப்போது பாலையா அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடிக்கட்டும், நானும் மற்றொரு கேரக்டரில் இணைந்து நடிக்கிறேன் என்று எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்கு நன்றிகடன் செலுத்தும் விதமாகத்தான் அவரை சிபாரிசு செய்திருக்கிறார் என்பது பின்னாளில் தெரிய வந்தது.
நடிகர் எஸ்.வி.ரங்காராவ் 3.07.1918 ஆம் ஆண்டு எஸ்.கோட்டீஸ்வரராவ் - நரசம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஆந்திராவிலுள்ள நுஜ்வித் என்ற கிராமம் தான் இவருடைய பிறப்பிடமாகும். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆண்கள், பெண்கள் என்று 11 பேர். மனைவி பெயர் லீலாவதி தேவி, மகன் (அமரர்) கோட்டீஸ்வரராவ், மகள்கள் விஜயலட்சுமி, பிரமிளாதேவி. இருவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பி.எஸ்.ஸி.பட்டப்படிப்பை முடித்ததும் காக்கி நாடாவிலுள்ள யங்மேனஸ் ஹேப்பி கிளப்பில் சேர்ந்து தெலுங்கு மொழி, வசன உச்சரிப்பு, குச்சுபிடி நடனம், நாட்டியம், நாடக நடிப்பு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். இந்தப் பாசறையில் சேர்ந்து பயிற்சி பெற்று வெளிவந்து. பின்னாளில் புகழ் பெற்றவர்கள் அஞ்சலிதேவி, இயக்குனர் பி.புல்லை யா , இசையமைப்பாளர் ஆதி நாராயணராவ். எஸ்.வி.ரங்காராவ் படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்க ள், நிர்வாகத்தினரிடமிருந்து ஒழுக்கமான மாணவர் என்று நற்சான்றிதழ் பெற்றிருக்கிறார். இவர் ‘சதுரங்கம்', பாந்தவியா' (தமிழில் வெளிவந்த கண்கண்ட தெய்வம்) போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
எஸ்.வி. ரங்காராவ் அவர்கள் சினிமா ஆசையில் சென்னை வந்தபோது ஜெமினி ஸ்டுடியோவிற்கு போய் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஆர். கணேஷ் (இவர் பின்னாளில் ஜெமினிகணேசன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்) என்பவரிடம் தான் முதன் முதலில் வாய்ப்பு கேட்டிருக்கிறார். எந்த வாய்ப்பும் இப்போது இல்லை என்று திருப்பி அனுப்பியி ருக்கிறார். எஸ்.வி. ரங்காராவ், திருவேலிக்கேணி, தியாகராயர் நகரில் (அபிபுல்லா ரோடு) தான் தனது இறுதிக் காலத்தில் குடும்பதாருடன் குடியிருந்தி ருக்கிறார். 1946ஆம் ஆண்டு ‘விருதினி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகரானார்
எஸ்.வி.ரங்காராவ். அவர் கடைசியாக நடித்த படம் சிவாஜி நடித்த ‘சிவகாமியின் செல்வன்' (1974) சுமார் 28 ஆண்டுகள் திரைப்படத் துறையில் தனது கலைப்ப பயணத்தை தொடர்ந்த ரங்காராவ் 18.07.1987 ஆம் ஆண்டு காலமானார்.
பிரபல சினிமா நடிகர் எஸ் .வி.ரங்காராவ் 1918 ஜூலை 3 இல் பிறந்தார்
மிஸ்ஸியம்மா – அந்தக் கால இளமையான ஜெமினி கணேசன் – சாவித்திரி ஜோடி, மற்றும் கே.சாரங்கபாணி, கே.ஏ.தங்கவேலு ஆகியோர் நடித்த நகைச்சுவை படம். எஸ்.வி.ரங்காராவிற்கு பள்ளிக்கூடம் நடத்தும், கண்ணியமான பணக்கார கனவான் வேடம். அவருக்கே உரிய ஜிப்பா, அங்கவஸ்திரம், கைத்தடியோடு வருவார். இவரது பள்ளியில் பிள்ளைகளுக்கு, பாடம் சொல்லிக் கொடுக்க பி.ஏ படித்த தம்பதியினர் வேண்டும் என்று விளம்பரம் செய்வார். வேலையில்லாத படித்த பட்டதாரிகளான ஜெமினியும், சாவித்திரியும் கணவன் மனைவி போல நடித்து வருவார்கள். ஆசிரியர் பணி செய்வார்கள். பின் நிஜமாகவே கல்யாணம் செய்து கொள்வார்கள். “வாராயோ வெண்ணிலாவே” என்ற இந்த படத்தில் வரும் மறக்க முடியாத பாடல் காட்சியில் எஸ்.வி.ரங்காராவும் வருவார்.
எங்க வீட்டுப்பிள்ளை – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடித்த் இந்த படத்தில் , சரோஜாதேவிக்கு பணக்கார அப்பாவாக வந்து அசத்துவார். தனது ஒரே செல்ல மகளான சரோஜாதேவியுடன் மாப்பிள்ளை பார்க்க எம்,ஜி.ஆர் வீடு வருவார்; நம்பியார் முன் வீட்டில் நடக்கும் கூத்துக்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆரை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று வாயார அழைப்பார்.
படிக்காத மேதை – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் இந்த படத்தில் ரங்காராவ் – கண்ணாம்பா தம்பதியினரின் பிள்ளைகளோடு, ரங்கன் என்ற விசுவாசமுள்ள ஒரு வளர்ப்பு மகனாக சிவாஜி கணேசன் வருவார். வீட்டில் ஒரு வேலைக்காரனுக்கும் மேலாக உழைப்பார். எதனையும் எதிர்பாராத, பாரதி கண்ட “கண்ணன் என் வேலைக்காரன்” என்ற பாடலின் பாத்திரப் படைப்பே இந்த ரங்கன் எனலாம். ஒரு சூழ்நிலையில் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு, சிவாஜியை, ரங்காராவே வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார். ஆனாலும் வெளியேறிய சிவாஜியை நினைத்து நினைத்து துடிப்பார். அந்த துயரத்திலேயே அவர் இறக்கும் காட்சியில் ரங்காராவ் காட்டும் முகபாவங்கள், நடிப்பை இன்னொருவர் செய்ய முடியாது. உள்ளத்தை உருக்கும் இந்த பாடல் “ எங்கிருந்தோ வந்தான்
நானும் ஒரு பெண் – ஒரு பெண் கறுப்பாக பிறந்து விட்டதனாலேயே, இந்த சமூகத்தில் எவ்வளவு அவதிக்கு உள்ளாகிறாள் என்பதை உணர்த்தும் படம். கறுப்பு பெண்ணாக மேக்கப் போட்டு விஜயகுமாரி பாத்திரத்தோடு ஒன்றி நடித்த படம். விஜயகுமாரிக்கு பாசமுள்ள மாமனாராக எஸ்.வி.ரங்காராவ்நடித்தார். ஜனாதிபதி விருது பெற்ற படம். இதிலும் இவரது நடிப்பு சோடை போகவில்லை.
மாயாபஜார் – இன்றும் அதிக ரசிகப் பெருமக்களால் ரசிக்கப்படும் படம். மகாபாரத கிளைக்கதை ஒன்றினை வைத்து எடுக்கப்பட்டது. இதில் எஸ்.வி.ரங்காராவ் கடோத்கஜனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் வரும், ”கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்.” என்ற பாடலை இன்றைய டீவி சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்ப்பக் காணலாம்.
பக்த பிரகலாதா - கடவுள் உண்டா? இல்லையா? அன்று தொடங்கிய விவாதம் இன்றும் தொடர்கிறது. இந்த படத்தில் கடவுள் இல்லை என்ற இரணியகசிபு என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்து தனது திறமையைக் காட்டியவர் நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள்.
அன்புச்சகோதரர்கள் என்று ஒரு படம். இதில் எஸ்.வி.ரங்காராவ் மூத்த சகோதரராக நடித்து இருப்பார்; தனது தம்பிகளுக்காக கல்யாணமே செய்து கொள்ளாத கேரக்டர். இளைய சகோதரர்களாக மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன். ஜெய்சங்கர் ஆகிய மூவரும் நடித்து இருப்பார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த, இவர்களது குடும்பம் எப்படி சிதறுகிறது என்பது கதை. அண்ணன் தம்பிகள் பாசக் கதை. இதில் வரும்
முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
என்ற (சகோதரர்கள் நால்வரும் பாடும்) பாடல் மறக்க முடியாத ஒன்று. படத்தின் பிற்பகுதி சோகம்னா சோகம், அவ்வளவு சோகம். எஸ்.வி.ரங்காராவ் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, நெஞ்சை கனக்கச் செய்து விடுவார்.
ஒரு தெலுங்கு – தமிழ் டப்பிங் படத்தில் இவரை ஒரு மந்திரவாதியாக பார்த்ததாக நினைவு. படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. இன்னும் நான் பார்த்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் நடித்த படங்களைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். படிக்கும் உங்களுக்கு “போர்” அடிக்கலாம். எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
எஸ்.வி.ரங்காராவ் அவர்களுக்கு, ஆந்திராவில் , விஜயவாடா நகரில் மார்பளவு சிலை வைத்துள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தமது பேட்டி ஒன்றில் ”எஸ்.வி.ரங்காராவ் மாதிரி ஒரு நடிகர் அவருக்குப் பிறகு வரவில்லை. அவர் மாதிரி நடிகர்கள் வராதது வேதனையளிக்கிறது. எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் மாதிரி ஆயிரம் பேர் உருவாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பழைய தமிழ் சினிமா குறித்து வலைத்தளத்தில் சுவாரஸ்யமாக எழுதுபவர் திரு R P ராஜநாயஹம் அவர்கள். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள் (1950களில், 1960களில், 1970களின் முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்”
No comments:
Post a Comment