Tuesday, 10 October 2017

GURUDUTT , ASIAN ALL TIME TOP 25 ACTORS BORN 1925, JULY 9 - OCTOBER 10,1964

GURUDUTT , ASIAN ALL TIME TOP 25 ACTORS
BORN 1925, JULY 9 - OCTOBER 10,1964



குரு தத் (Guru Datt) மறைவு அக்டொபர் 10




உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த இந்தித் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட குரு தத் (Guru Datt) பிறந்த தினம் இன்று (ஜூலை 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பெங்களூரில் பிறந்தவர் (1925). தந்தை முதலில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் ஒரு வங்கியில் வேலை செய்தார். தாயார், ஒரு பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

l மகனின் இயற்பெயர், வசந்தகுமார் சிவசங்கர் படுகோனே. படிப்பதற்காக கொல்கத்தா சென்ற இவர் அங்கேயே வளர்ந்ததால் வங்காளியாகவே அறியப்பட்டார். பின்னர் இவரது பெயர் குரு தத் என மாற்றப்பட்டது. சிறு வயது முதலே, திரைப்படங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

l கொல்கத்தாவில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறந்த மாணவராகத் திகழ்ந்தாலும் பொருளாதார நிலை காரணமாக கல்லூரி செல்ல முடியவில்லை. 16 வயதில் வருடம் 75 ரூபாய் உதவித் தொகை பெற்று, இசைக் கலைஞர் ரவிசங்கரின் அண்ணன் அல்மோராவில் நடத்தி வந்த இந்தியப் பண்பாட்டு மையத்தில் நடனம், நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் 5 வருடங்கள் பயிற்சி பெற்றார்.

l 1944-ல் புனேயில் உள்ள பிரபாத் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தார். சிறிய வேடங்களில் நடித்ததுடன் உதவி இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் தேவ் ஆனந்த், ரஹ்மான் ஆகியோரின் நட்பு இவருக்குக் கிடைத்தது.

l இவர்கள் இருவரின் நட்பு சினிமா உலகில் இவருக்கென்று ஒரு இடத்தை வசப்படுத்துவதற்கு உதவியாக இருந்தது. ‘இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் சிறு கதைகள் எழுதினார். அந்த சமயத்தில்தான் புகழ்பெற்ற ‘ப்யாஸா’ திரைப்படத்தின் கதையை எழுதினார். கஷ்மகஷ் என்ற பெயரில் இவர் எழுதிய இந்தக் கதை திரைப்படத்துக்காக ‘ப்யாஸா’ என்று மாற்றி அமைக்கப்பட்டது.

l 1951-ல் தேவ் ஆனந்த் நடித்த ‘பாஸி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து ‘ஜால்’ படம் வெளிவந்தது. இவரது இயக்கத்தில் அடுத்து வெளிவந்த ‘பாஸ் (Bass)’ படத்தில் நடிகனாக அறிமுகமானார். இவரது ‘ஆர்-பார்’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தயாரித்தும், இயக்கியும் நடித்தும் புகழ்பெற்றார்.

l ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர். 1957-ல் வெளிவந்து அபார வெற்றி பெற்ற ‘ப்யாஸா’ இவரது மாஸ்டர்பீஸ் என்று புகழப்பட்டது. இவரது திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றன. 50-க்கும் குறைவான திரைப்படங்களையே தயாரித்தாலும் இவை பாலிவுட்டின் பொற்காலத் திரைப்படங்களாகக் கருதப்படுகின்றன.


l இவரது ‘ப்யாஸா’ மற்றும் ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படங்கள் அமெரிக்காவின் டைம்ஸ் மற்றும் சைட் அண்ட் சவுண்ட் ஆகிய இதழ்கள் தனித்தனியே வெளியிட்ட சிறந்த 100 படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றன.

l 1959-ல் வெளிவந்த இவரது ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு படங்களை இயக்கவில்லை. சொந்த வாழ்வில் பல துயரங்களால் அவதியுற்ற இவர் ஒன்றிரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

l ஒருமுறை இவரை காப்பாற்றியது இவரது நண்பர், தேவ் ஆனந்த். இந்தியாவின் துன்பவியல் சினிமாக்களின் நாயகனாக அறியப்படுபவரான குரு தத், 1964-ல் 39-ம் வயதில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அது தற்கொலை இல்லை என்றும் அதிகமாக மது அருந்தியதாலும் அளவுக்கு மீறி தூக்க மாத்திரை விழுங்கியதாலும் மரணமடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இவரது மரணம் இந்திய சினிமாவின் ஈடுசெய்ய முடியாத இழப்பு.




What would Baharen Phir Bhi Aayengi had looked like if Guru Dutt had lived? Here is a sample.





















Dutt died during the movie’s production in 1964, forcing a reshoot. These rare photographs, courtesy Guru Dutt’s late son Arun Dutt, give us glimpses into what the film might have originally looked like if it had been completed with its original leading man.




Sometime in 1963 or 1964, production began at Guru Dutt Films on what was tentatively titled Production No 9. The film’s cast included Dutt, Mala Sinha, Tanuja, Rehman, Johnny Walker and Deven Verma. Dutt was heavily influenced by the films of New Theatres when he was growing up in Kolkata in the 1930s. Thus, it is only natural that he decided to adapt one of their classics, the Hindi-Bengali bilingual President/Didi (1937). The adaptation’s director was to be Shahid Lateef, the husband of Urdu writer Ismat Chugtai. The original film was set in a cotton mill, while the movie that was eventually titled Baharen Phir Bhi Aayengi had a newspaper office as its backdrop.
















The plot combines social commentary with a love triangle. Newspaper editor Amita (Mala Sinha) fires her reporter Jiten (Guru Dutt) after an expose on corrupt builders, only to realise later that he had been right along. She hires him back and promotes him to news editor while secretly falling in love with him. However, Jiten is in love with Amita’s younger sister, Sunita (Tanuja). Meanwhile, Jiten runs afoul of the newspaper’s promoters with his continuing exposes of corruption.
















Eleven unedited reels of Baharen Phir Bhi Aayengi were completed, including sequences at Amita’s office and the song “Aapke Haseen Rukh Pe”, when Dutt died on October 10, 1964. The movie was re-shot with Dharmendra taking over Dutt’s role. Baharen Phir Bhi Aayengi was released in 1966. It was advertised as Guru Dutt’s last offering but it flopped miserably.

Although Lateef’s name was listed as the official director, it is said by insiders that the movie was actually completed by its writer, Abrar Alvi, and Dutt’s brother, Atmaram.





Although nobody associated with the film we spoke to would confirm it, there is a possibility that Guru Dutt also had a hand in shooting the song “Woh Hanske Mile Humse”, featuring Mala Sinha. The play of light and shade, the sweeping crane and delicate tracking shots, and the judicious use of close-ups are all indicate of Dutt’s signature filmmaking style.

வசந்த் குமார் சிவசங்கர் படுகோனே (9 ஜூலை 1925 - 10 அக்டோபர் 1964), என்றறியப்பட்ட குருதத் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். 1950 மற்றும் 1960 களின் பியாஸ்ஸா, ககாஸ் கே பூல் , சாஹிப் பீபி அவுர் குலாம், சௌத்வின் கா சாண்ட் போன்ற படங்கள் எல்லா சினிமா படங்களிலும் எப்போதுமே மென்மையான 100 படங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன .ஒழுங்காக வகுத்துக்கொள்ளாத வாழ்கை நெறியினால் எல்லாவற்றையும் இழந்து தற்கொலை செய்து கொண்டார்



பிறப்பும் ,வளர்ப்பும்[மூலத்தைத் தொகு]
குருதத் தின் இயற்பெயர், வசந்தகுமார் சிவசங்கர் படுகோனே. தந்தை சிவசங்கர் ராவ் படுகோனே விற்கும் தாய் வசந்தி படுகோனேவிற்கும் மைசூரில் 1925 ஜூலை 9 இல் பிறந்தார் . தந்தை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆகவும் ,தாய் குடும்பத்தை பராமரித்தும் வந்தார் .தாயார் கொஞ்சம் எழுத்தாற்றல் மிக்கவர் .இவருடன் ஆத்மராம் ,தேவிதாஸ் ஆகியோர் உடன் பிறந்தவர்கள் .உடன் பிறந்த தங்கை லலிதா லாஜ்மி . லலிதா மகள் கல்பனா லாஜ்மி என்ற சினிமா பட இயக்குனர் என்பது குறிப்பிட தக்கது . சிறு வயதில் பெற்றோருடன் பிணக்கு கொண்டு கல்கத்தா விற்கு சென்று ஆரம்ப கல்வியை அங்கேயே கற்றார். சிறந்த மாணவராகத் திகழ்ந்தாலும் பொருளாதார நிலை காரணமாக கல்லூரி செல்ல முடியவில்லை. 16 வயதில் வருடம் 75 ரூபாய் உதவித் தொகை பெற்று, இசைக் கலைஞர் ரவிசங்கரின் அண்ணன் அல்மோராவில் நடத்தி வந்த இந்தியப் பண்பாட்டு மையத்தில் நடனம், நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் 5 வருடங்கள் பயிற்சி பெற்றார்.

சினிமா மோகமும் ,வாழ்க்கையும்[மூலத்தைத் தொகு]
1944 இல் தொலைபேசி ஆபரேட்டர் வேலை கிடைத்ததை உதறி தள்ளினார் .. 1944-ல் புனேயில் உள்ள பிரபாத் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தார். சிறிய வேடங்களில் நடித்ததுடன் உதவி இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் தேவ் ஆனந்த், ரஹ்மான் ஆகியோரின் நட்பு இவருக்குக் கிடைத்தது. ‘1947 இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் சிறு கதைகள் எழுதினார். அந்த சமயத்தில்தான் புகழ்பெற்ற ‘ப்யாஸா’ pyasaa திரைப்படத்தின் கதையை எழுதினார். கஷ்மகஷ் என்ற பெயரில் இவர் எழுதிய இந்தக் கதை திரைப்படத்துக்காக ‘ப்யாஸா’ என்று மாற்றி அமைக்கப்பட்டது. ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர். 1957-ல் வெளிவந்து அபார வெற்றி பெற்ற ‘ப்யாஸா’ இவரது மாஸ்டர்பீஸ் என்று புகழப்பட்டது. இவரது திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றன. 50-க்கும் குறைவான திரைப்பட ங்களையே தயாரித்தாலும் இவை பாலிவுட்டின் பொற்காலத் திரைப்படங்களாகக் கருதப்படுகின்றன. இவரது ‘ப்யாஸா’ மற்றும் ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படங்கள் அமெரிக்காவின் டைம்ஸ் மற்றும் சைட் அண்ட் சவுண்ட் ஆகிய இதழ்கள் தனித்தனியே வெளியிட்ட சிறந்த 100 படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றன. 1959-ல் வெளிவந்த இவரது ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு படங்களை இயக்கவில்லை.

சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
புகழ்பெற்ற பின்னணி பாடகி கீதா தத்தை மூன்றாண்டுகளாய் காதலித்து வந்தார் . நிச்சயதார்த்தம் நடந்த நிலையிலும் கீதா வின் குடும்ப எதிர்ப்பு இருந்து வந்தது .1953 ஆம் ஆண்டில்கீதாராய்சவுதரியை மணந்தார்,


குருதத் ஒரு மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையை கொண்டிருந்தார். , சினிமாவேலை சம்பந்தமாக ஒரு கடுமையான ஒழுக்கநெறியாளர் இருந்தார், ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் முற்றிலும் ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்ந்தார் . திருமணத்திற்கு முன்னரே வஹீதா ரஹ்மானுடன் தொடர்பில் இருந்ததும் இவரது திருமணம் தடைபட்ட தற்கு ஒரு காரணம் ஆகும் .திருமணத்திற்கு பின்பும் இந்த தொடர்பு நீடித்ததால் தான் ,மனைவி கீதா இவரை விட்டு நீங்கினார் .மித மிஞ்சிய புகை பிடித்தலும் , மிதமிஞ்சிய குடிப்பழக்கமும் இவரது ஆயுளை குறைக்க செய்தது . எவ்வளவு நெருக்கமான நண்டராக இருந்தாலும் ,சொந்த விஷயங்களை ஒரு போதும் வெளியிடாதவர் குருதத் . சொந்த வாழ்வில் பல துயரங்களால் அவதியுற்ற இவர் ஒன்றிரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.ஒருமுறை இவரை காப்பாற்றியது இவரது நண்பர், தேவ் ஆனந்த். இந்தியாவின் துன்பவியல் சினிமாக்களின் நாயகனாக அறியப்படுபவரான குருதத், 1964-ல் 39-ம் வயதில் தற்கொலை செய்துகொண்டார். இருவரும் இறந்த








No comments:

Post a Comment