Sunday, 15 October 2017

DEEPAVALI TIPS





DEEPAVALI TIPS


ஐ.எஸ்.ஐ., உரிமம் பெற்ற, தரமான பட்டாசுகளை பார்த்து வாங்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிக்கும் போது, பட்டாசு பெட்டியை மூடி வைப்பது அவசியம்.

* பட்டாசு வெடிக்கும் போது, காலில் செருப்பும், கெட்டியான காட்டன் உடையும் அணிந்திருப்பதுடன், அருகில், வாகனங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
* குழந்தைகள், கம்பி மத்தாப்பு மற்றும் புஸ்வாணம் கொளுத்தும் போது, வாழைமட்டையை கைப்பிடியாக பயன்படுத்த வேண்டும். 
* ஒரு பக்கெட் தண்ணீர் நிரப்பி, எரித்த பட்டாசுகளை அதில் போட வேண்டும்.
* மக்கள் கூட்டமாக உள்ள இடம், இட நெருக்கடி மற்றும் குறுகிய பாதை போன்ற இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது.

* பெரியவர்களின் உதவியின்றி, குழந்தைகள், தனியாக பட்டாசு வெடிக்க கூடாது.
* பட்டாசுகளை, சட்டை பாக்கெட்டில் வைத்து, ஒவ்வொன்றாக எடுத்து வெடிக்க கூடாது; ஆபத்து.
* பட்டாசு வெடிக்கவில்லை எனில், அதை கையில் எடுத்து, பரிசோதிக்க கூடாது. வேறொரு பட்டாசை எடுத்து வேறு இடத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.
* வெடிகளை கையில் எடுத்து, நேரடியாக விளக்கில் கொளுத்தி எறியக் கூடாது.

* மிகவும் தளர்வான மற்றும் பாலியஸ்டர் ஆடைகளை அணியக்கூடாது; தீப்பட்டால், வேகமாக பரவும் அபாயம் உண்டு. 





* ராக்கெட் போன்ற வாண வேடிக்கைகளை, திறந்த மைதானத்தில் சென்று வெடிக்க வேண்டும்.


No comments:

Post a Comment