Sunday, 15 October 2017

KITCHEN TIPS


KITCHEN TIPS
சமையல் டிப்ஸ்   


* சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது, சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டால், பாகு முறுகாமல் இருக்கும்.
* கடலை மாவை நெய் விட்டு லேசாக வறுத்து, பின், மைசூர் பாகு செய்தால், மணம் தூக்கலாக இருக்கும். நெய்யில், கடலை மாவை குழைத்து, சர்க்கரை பாகில் விட்டால், வாயில் கரையும் அளவுக்கு, பதமாக இருக்கும்.
* இரண்டு பங்கு பாசி பருப்பு, ஒரு பங்கு கடலைப் பருப்பு என்ற விதத்தில் அரைத்து செய்தால், மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும், மைசூர்பாகு.
* லட்டு பிடிக்கும் போது, ஏதாவது பழ எசென்சை சிறிது விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* போளி செய்யும் போது, மைதா மாவுடன், சிறிது பால் பவுடரும் சேர்த்து பிசைந்தால், போளி மிருதுவாக இருக்கும். போளிக்கு, கடலைப்பருப்பு பூரணம் செய்யும் போது, வெல்லத்துக்கு பதில் பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால், போளி மெல்லியதாக, வெண்மையாக, ருசியாக இருக்கும்.
* கேழ்வரகை ஊற வைத்து அரைத்து, பால் எடுத்து அல்வா செய்யலாம். இது, கோதுமை அல்வாவை விட ருசியாக இருக்கும். அல்வா செய்யும் போது, ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து, அல்வா மிக்சுடன் கலந்து செய்தால், கண்ணாடி போல் பளபளப்பாக, சுவையாக இருக்கும். 
* குலாப் ஜாமூன் மிக்சுடன் பொடித்த முந்திரி தூள் மற்றும் பாதாம் தூள் சேர்த்து பிசைந்து செய்தால், சுவையாக இருக்கும், குலாப் ஜாமூன்.
* ரவா லட்டு செய்யும் போது, கால் பங்கு பால் பவுடரை கலந்து செய்தால், சுவையாக இருக்கும்.
* வெல்லப்பாகு வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி நெய்யில், தூளாக்கிய வெல்லத்தை போட்டு கிளறினால், பதமான பாகு வரும்.
* பாதுஷா செய்யும் போது, மாவில் ஒரு சிட்டிகை ஆப்பச் சோடாவுடன், சிறிதளவு டால்டாவை சூடு செய்து பிசைந்தால், பாதுஷா மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment