ASHOK KUMAR , HINDI ACTOR
FROM -AFTER SILENT ERA
குமுத்லால் கங்குலி மற்றும் தாதமணி என்று அழைக்கப்படும் நடிகர் அசோக்குமார் 1911 அக்டோபர் 13 இல் பிறந்தார் . இவர் 1988 இல் தாதாசாஹெப் விருதும் ,1999 இல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார் .இவை இரண்டும் சினிமா உலகில் உயரிய விருதாகும் . இவர் குணசித்திர நடிகர் ,வில்லன் ,கதாநாயகன் என்று எல்லா பரிணாமங்களிலும் நடித்துள்ளார்
பிறப்பும் , வளர்ப்பும்
அசோக்குமார் வங்காள ப்ரெசிடென்ஸி பகுதியில் பகல்பூரில் குமுத்லால் என்ற இயற் பெயரில் பிறந்தார் . இவர் வழக்கறிஞர் ஆனா தந்தை குஞ்சிலால் கங்குலிக்கும் , கவுரிதேவிக்கும் மூத்த மகனாய் பிறந்தார் . இரண்டு வருடம் கழித்து பிறந்த தங்கை சதிதேவி சஷாதர் முகர்ஜிக்கு மிக சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார் .அடுத்து பிறந்த தமையன் பெயர் அனூப் குமார் 15 வருட இடை வெளியில் 1926 இல் பிறந்தார் . இதை அடுத்து மூன்று வருடத்தில் அபாஸ் என்ற கிஷோர் குமார் 1929 இல் பிறந்தார்
சொந்த வாழ்கை
அக்கால வழக்கப்படி மிக சிறிய டீன் ஏஜ் பருவத்திலேயே ஷோபா என்பாரை திருமணம் செய்தார் . இது பெற்றோர்களால் நடத்தப்பட்ட திருமணம் ஆகும் . இந்த திருமணம் மகிழ்ச்சியாகவும் , கோட்பாட்டுக்குள் அடங்கியதாயும் நடுத்தர வாழ்க்கையையே பின்பற்றி யதாகவும் அமைந்தது . இவர்களுக்கு அனூப் கங்குலி என்ற மகனும் , பார்தி படேல் , ரூபா வர்மா , ப்ரீத்தி கங்குலி ஆகிய மகள்களும் அடுத்தடுத்து பிறந்தனர்
. அரூப் குமார் பேஸுபான் என்ற படத்தில் நடித்தார் .இப்படம் தோல்வி அடைய பின்னர் ஒரு கார்ப்பரேட் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார் .பார்தி படேல்படேல் என்பாருக்கு வாழ்க்கைப்பட்டு அனுராதா படேல் என்ற மகள் உள்ளார் .இவரும்ரூ சினிமாவில் நடித்துள்ளார் .
அனுராதா படேல் நடிகர் கான்வல்ஜீத் சிங்கிற்கு வாழ்க்கைப்பட்டுள்ளார்.
பெற்றோர் விருப்பத்தை மீறி இரண்டாவதாய் ஹமீது ஜாப்பிரி என்ற முஸ்லிமை மணந்தார் இதன் மூலமாக ஷாஹீன் ஜாப்பிரி என்ற மகள் பிறந்தார். இவரே சல்மான் கானின் முதல் காதலி
ரூபா வர்மா என்ற இரண்டாவது மகள் தேவன் வர்மா என்ற காமெடி நடிகருக்கு வாழ்கை பட்டுள்ளார் . ப்ரீத்தி கங்குலி,என்ற மூன்றாவது மகள் 1970 மற்றும் 1980 களில் பல படங்களில் சிரிப்பு நடிகை யாக நடித்துள்ளார் .இவர் திருமணமே செய்து கொள்ளாமல் 2012 இல் இறந்தார்
ஆரம்ப வாழ்க்கையும் , சினிமா நடிகர் ஆன வரலாறு
குமுத்லால் கல்கத்தா ப்ரெசிடெண்சி கல்லூரியில் கல்வி பயின்றார் .அவர் வழக்கறிஞர் வேலைக்கு படித்தாலும் அவரது கவனம் முழுவதும் சினிமா மீதே சென்றது .எனவே பம்பாய்க்கு சென்று தன மைத்துனருடன் பாம்பே டாக்கீஸில் லேப் உதவியாளராக பணி புரிந்தார் .
குமுத்லால் கங்குலி ஒரு ஆய்வக உதவியாளராக மகிழ்ச்சியாக பணிபுரிந்தார், 1936 ஆம் ஆண்டில் மும்பை டாக்கீஸ் தயாரிப்பு ஜீவன் நையா . அப்போது நட்சத்திரமான தேவிகா ராணி நடிகர் நஜ்முல் ஹாசன் என்ற கதாநாயகனுடன் நடித்தார் . தேவிகா ராணி யின் கணவர் ஹிமான்சு ராய் அப்படத்தின் தயாரிப்பாளர் . என்றாலும் நஜ்முல் ஹாசனுடன் காதல் வயப்பட்டு தேவிகாரணி அவருடன் ஓடி விட்டார் . பின்னர் சில நாட்களில் தேவிகாராணி கணவருடன் திரும்ப வந்து விட்டார் .பழைய கதாநாயகன் நஜ்முல் ஹாசன் நடிக்க மறுத்து விட்டார் . எனவே கதாநாயகனுக்கு உரிய லட்சணங்கள் இல்லாது பார்வைக்கு சுமாராக இருந்த குமுத்லால் அசோக்குமார் என்ற பெயர் மாற்றப்பட்டு அப்படத்தின் கதாநாயகனாக மிளிர்ந்தார் .
சிகரத்தை தொட்ட அசோக்குமார்
அதே ஆண்டில் தேவிகாராணி யுடன் நடித்த அச்சுத கன்யா 1936 இல்வெளிவந்து நன்றாக ஓடியது
ஜென்மபூமி , 1936
இஸ்சாட் , 1937
சாவித்திரி , 1937
வசான் ,1938
நிர்மலா 1938
என்று தொடர் வெற்றியை தேவிகாராணி யின் நிழலில் அனுபவித்தார் .
பின்னர் லீலா சிட்னிஸ் படங்களில்
கங்கன் , 1939
பாந்தன் , 1940
ஆசாத் , 1940
ஜுலா , 1941
என்று தொடர் வெற்றி கண்டு இந்தி படத்தில் ஒரு நிலையான அந்தஸ்தை 5 வருடங்களில் பெற்றுவிட்டார்
1943இல் வெளிவந்த கிஸ் மத் மாபெரும் வெற்றி அடைந்தது .
எங்கு சென்றாலும் ரசிகர் கூட்டம் மொய்த்தது . சில சமயங்களில் ரசிகர் பி பாட்டாளத்தை தடியடி நடத்தி கலைத்த வரலாறும் உண்டு
இவ்வாறு சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்
இறப்பு
இவர் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 10 இல் ௯௦ வயதில்தி டீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் . அப்போது அடல் பிகாரி வாஜ்பாய் நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் என்று பாராட்டினார்
No comments:
Post a Comment