Saturday, 14 October 2017

SIVASANGARI - TAMIL WRITER BORN OCTOBER 14,1942


SIVASANGARI - TAMIL WRITER 
BORN OCTOBER 14,1942




சிவசங்கரி (பிறப்பு ஒக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.

எழுத்துலகில்[மூலத்தைத் தொகு]

இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர். இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு பரிசு[மூலத்தைத் தொகு]

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎வழங்கப்படும் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு கிடைத்தது.[1][2][3][4]

இவரது நாவல்கள்[மூலத்தைத் தொகு]

எதற்காக? - 1970
திரிவேணி சங்கமம் - 1971
ஏன்? - 1973
சியாமா - 1973
நண்டு - 1975
நதியின் வேகத்தோடு - 1975
மெள்ள மெள்ள - 1978
47 நாட்கள் - 1978
அம்மா, ப்ளீஸ் எனக்காக. - 1979
ஆயுள் தண்டனை - 1979
வளர்த்த கடா - 1979
இரண்டு பேர் - 1979
ஒரு மனிதனின் கதை - 1980
பிராயச்சித்தம் - 1981
போகப்போக - 1981
நெருஞ்சி முள் - 1981
தவம் - 1982
திரிசங்கு சொர்க்கம் - 1982
மாலையில் பூக்கும் மலர்கள் - 1982
பறவை - 1982
பாலங்கள் - 1983
ஆயிரங்காலத்துப் பயிர் - 1983
கருணைக் கொலை - 1984
அவன் - 1985
ஒற்றைப் பறவை - 1985
அது சரி, அப்புறம்? - 1985
நூலேணி - 1985
அம்மா பிள்ளை - - 1986
மலையின் அடுத்த பக்கம் - 1987
வேரில்லாத மரங்கள் - 1987
வானத்து நிலா - 1989
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - 1989
நான் நானாக - 1990
சுட்டமண் - 1991
இன்னொருத்தி + இன்னொருத்தி - 1992
இனி - 1993

No comments:

Post a Comment