SHEENA BORA MURDER CASE HISTORY
ஷீனா போரா கொலை வழக்கும் ,தீர்ப்பும்
இந்திராணி பொது வரலாறு
அசாம் மாநிலம் கௌகாத்தி யை பூர்வீகமாக கொண்டவர் இந்திராணி. இளம்வயதில் திருமணம் ஆகாமலேயே அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான தாகக் கூறப்படுகிறது. அதில் மூத்த பெண் ஷீனா போரா. இரண்டாவது மகன் மிகைல் போரா . பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொலையை திறம்பட மறைத்ததோடு மிகப் பெரிய, சினிமாக்களையும் மிஞ்சும் விதமான கதைகளையும் புனைந்து தனது கணவர் பீட்டர் முகர்ஜி உள்பட உலகத்தையே நம்ப வைத்து பெரிய மோசடி செய்தார் இந்திராணி முகர்ஜி என்பது அம்பலமானது.
இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் கொல்கத்தா வைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் கன்னாவை இந்திராணி திருமணம் செய்தார். அவர்களுக்கு வித்தி என்ற பெண் உள்ளார்.
பின்னர் சஞ்சீவ் கன்னாவிடம் இருந்து பிரிந்த இந்திராணி பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செயல் இயக்குநராக இருந்த பீட்டர் முகர்ஜியை 2002-ல் திருமணம் செய்தார். இருவரும் இணைந்து 1996-ல் தனியாக ஊடக நிறுவனத்தை தொடங்கினர். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் 50 முன்னணி பெண் தொழிலதிபர்களில் ஒருவராக இந்திராணி உருவெடுத்தார். பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தபோது தனது முதல் இரண்டு குழந்தைகள் ஷீனா போரா, மிகைல் போரா ஆகியோரை தன் னுடன் பிறந்த சகோதர, சகோதரி என்று அறிமுகம் செய்துள்ளார்.
முறைகேடான காதல் விவகாரம்
இதை அறியாத பீட்டர் முகர்ஜி யின் மகன் ராகுல் முகர்ஜியும் ஷீனா போராவும் காதலித்துள்ளனர். இதனை இந்திராணியும் குடும்பத்தி னரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். கடந்த 2012 ஏப்ரலில் ஷீனா போரா திடீரென மாயமானார். ஆனால் அவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டதாக குடும்பத்தின ரிடமும் உறவினர்களிடமும் இந்திராணி தெரிவித்துள்ளார்.
பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2–வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இவ்வழக்கை விசாரித்துவரும் மும்பை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதிக்கு இந்திராணியின் முன்னாள் கார் டிரைவரான ஷாம் ராய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஷீனா போரா கொலை தொடர்பாக தனக்கு தெரிந்த உண்மைகளை கோர்ட்டில் தெரிவிக்க விரும்புவதாகவும் தனக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
மர்ம தொலைபேசி அழைப்பு
இந்நிலையில் திடீர் திருப்பமாக மும்பை போலீஸாருக்கு அண்மை யில் வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி கொலை செய்து எரித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தொலைபேசி அழைப் பால் உஷாரான போலீஸார், இந்திராணி, அவரது டிரைவர் ஷியாம் ராய், முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவை சில மாதங் களாக ரகசியமாக கண்காணித்து விசாரித்தனர். இதில் ஷீனா போரா கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி இந்திராணி, ஷியாம் ராய், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது இன்று சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொலை மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றப்பிரிவின்கீழ் இந்த குற்றப்பத்திரிகையில் மேற்கண்ட மூவரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஷீனா போராவை கொலை செய்ததாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சய் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். கார் டிரைவரான ஷியாம் ராயிடம் மும்பை போலீஸார் வேறு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியபோது, அவர் ஷீனா போராவை கொலை குறித்த தகவல்களை தெரிவித்தார். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பான 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ போலீஸார் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் இந்திராணி முகர்ஜி, சஞ்சய் கன்னா, ஷியாம் ராய் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிக்கையில் 150 பேரின் வாக்குமூல ங்களும், 200 ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
டிரைவர் வாக்குமூலம்
கடந்த 2012 ஏப்ரல் 24-ல் ஷீனா போராவை அவரது காதலர் ராகுல் முகர்ஜி தனது காரில் இந்திராணி யின் மும்பை பாந்த்ரா வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங் கிருந்து ராகுல் கிளம்பிய பிறகு ஷீனா போராவுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை இந்திராணி கொடுத்துள்ளார்.
அதை குடித்த ஷீனா மயங்கி சரிந்தார். பின்னர் இந்திராணி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் சேர்ந்து ஷீனாவை காரில் கொண்டு சென்றுள்ளனர். ராய்காட் காட்டுப் பகுதிக்கு சென்று ஷீனாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது முகத்தை சிதைத்து தீ வைத்து எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல்களை டிரைவர் ஷியாம் ராய் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள் ளார். அவர் கூறிய தகவல்கள் உண்மைதானா என்பது குறித்து தனியாக விசாரணை நடக்கிறது. இந்திராணியின் கடந்தகால வாழ்க்கையை பார்க்கும்போது கவுரவ கொலைக்கு வாய்ப்பில்லை என்று போலீஸார் கருதுகின்றனர். அப்படியிருக்கும்போது எதற்காக கொலை செய்யப்பட்டார், பணப் பிரச்சினை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திராணியிடம் விசாரணை
இதற்காக வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக் கும் இந்திராணியிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெறுகிறது. இதேபோல ஷீனா போராவின் காதலர் ராகுல் முகர்ஜியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. ஷீனா போராவின் ஒரே சகோதரர் மிகைல் போரா குவாஹாட்டியில் வசித்து வருகிறார். அவரையும் போலீஸார் மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர்.
சஞ்சீவுக்கு போலீஸ் காவல்
இதனிடையே இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா நேற்று மும்பை பாந்த்ரா மெட் ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 31 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதி மன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை ரகசிய இடத்துக்கு அழைத் துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் ஆய்வு
ஷீனா போரா எரித்துக் கொல்லப் பட்ட ராய்காட் மாவட்டம் பென் வனப்பகுதியில் போலீஸார் நேற்று ஆய்வு நடத்தினர். அதில் ஷீனாவின் உடல் எச்சங்கள் கிடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறியபோது, கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
ஷீனா போரா அமெரிக்கா சென்ற தாகக் கூறப்பட்டபோது ராகுல் முகர்ஜி தேடாதது ஏன்? இந்திராணி யின் கடந்தகால வாழ்க்கை பீட்டர் முகர்ஜிக்கு தெரியாதா? பெற்ற தாயே ஏன் மகளை கொலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு மர்மமுடிச்சுகளை அவிழ்க்க மும்பை போலீஸார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மகள் கையெழுத்தில் போர்ஜரி
ஷீனா இறந்தபிறகு, அவர் வேலை செய்த நிறுவனத்துக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார் இந்திராணி. அதில் தனது மகள் ஷீனாவின் கையெழுத்தை போர்ஜரி செய்து போட்டு அனுப்பியி ருக்கிறார். அதோடு, ஷீனா குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கும் வீட்டு வாடகை ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஒரு கடிதம் அனுப்பியி ருக்கிறார் இந்திராணி. அதிலும் ஒருவர் மூலம் போலியாக ஷீனா கையெழுத்தை போட வைத்திருக்கிறார் இந்திராணி. இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளன
மகள் அல்ல... பேத்தி
ஷீனாவின் பள்ளிச் சான்றிதழ்களில் பெற்றோர் பெயர்களாக தாத்தா, பாட்டி பெயர் உள்ளது. தாய் இந்திராணி, தந்தை சித்தார்த் தாஸ் என்றுதான் இருக்க வேண்டும். ஆனால், உபேந்திர குமார், துர்கா ராணி போரா என உள்ளது. இருவருமே இந்திராணியின் பெற்றோர், இறந்துபோன ஷீனாவின் தாத்தா, பாட்டி. இது குறித்து 80 வயதாகும் உபேந்திர குமார் கூறும்போது, ஷீனா எனது மகள் அல்ல, பேத்தி. பள்ளி சான்றிதழ்களில் உள்ள விவரம் தவறு என மறுத்திருக்கிறார்.
இந்திராணியின் எஸ்எம்எஸ்
ஷீனா 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்த பிறகும் அவரது போனை ஓராண்டு வரை இந்திராணி பயன்படுத்தி வந்தார். அமெரிக்கா செல்வதாகவும் தன்னை மறந்துவிடுமாறும் காதலன் ராகுல் முகர்ஜிக்கு எஸ்எம்எஸ் அனுப்பியதும் இந்திராணிதான். இந்த குறுந்தகவல் ஷீனா காணாமல்போன 2 நாட்களுக்குப் பிறகு தனக்கு வந்ததாக, ராகுல் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் ஷீனா
ஷீனா உயிரோடுதான் இருக்கிறார் என காட்ட வேண்டும் என்பதற்காக, அடிக்கடி ஷீனாவின் போனில் இருந்து அவரது நண்பர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பியிருக்கிறார் இந்திராணி. ஷீனா இறந்தபிறகு, வந்த ஒரு பிறந்த நாளில் கோவாவில் ஷீனா பிறந்த நாளைக் கொண்டாடுவதுபோல் ஒரு போட்டோவையும் அப்லோடு செய்திருக்கிறார் இந்திராணி. அது பழைய போட்டோ.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி, பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொலை மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றப்பிரிவின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திராணி, தன் கணவர் பீட்டர் முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் அனுமதிக் கோரியுள்ளார். விவாகரத்து வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி, பீட்டர் முகர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment