ERWIN ROMMEL , THE FOX OF THE DESERT COMMITED SUICIDE ON HITLER 1944 OCTOBER 14
இர்வின் ரோமெல் (Erwin Johannes Eugen Rommel, 1891,நவம்பர் 15 – 1944,அக்டோபர் 14) 'பாலைநிலக் குள்ளநரி' என அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படையில் பீல்டு மார்ஷல் என்ற பதவியில் இருந்தவர்.
இளமை[மூலத்தைத் தொகு]
ஜெர்மனியிலுள்ள சுவாபியா என்னுமிடத்தில் கி.பி. 1891 - ஆம் ஆண்டு நவம்பர் 15 - ஆம் நாள் பிறந்தவர் இர்வின் ரோமெல். ஸ்டுட்கார்ட் என்னும் நகரத்திலிருந்த இராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். 1910 - ஆம் ஆண்டு ஜெர்மனி படையில் சேர்ந்தார். முதல் உலகப்போரில் பங்கேற்று பதவி உயர்வு பெற்று படையின் துணைத்தலைவராக உயர்ந்தார். போருக்கு பின் நாஜிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர், போட்ஸ்டாம் போர்க் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது அரசின் ஆணையை ஏற்று ஆசிரியர் பணியைத் துறந்து பிரான்ஸ், ஆஸ்திரியா, போலந்து நாடுகளில் முக்கிய ராணுவப் பொறுப்புகளை ஏற்றார்.
இரண்டாம் உலகப் போர்[மூலத்தைத் தொகு]
வட ஆப்பிரிக்க போர் முனைகளில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த இத்தாலி படையினருக்குத் துணையாக ஜெர்மானியப் படைகளின் தலைவராக 1941 -ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். டாங்கிப் படைகளைக் கொண்டு போர் செய்வதில் ரோமெல் தனித்திறமையை வெளிப்படுத்தினார். 1942 - ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆங்கிலப் படைகளை எகிப்தின் அல் அலாமீன் பகுதியிருந்து விரட்டியடித்தார்.
பின்னர் ரோமல் தலைமையிலான படைகள் எகிப்திலிருந்து விரட்டப்பட்ட போது, இவர் படைகளுடன் துனீஷியாவுக்குத் தப்பிச் சென்றார். இவரை நேசப் படையினர் பாலைநிலக் குள்ளநரி என்று வர்ணித்தனர். வட ஆப்பிரிக்காவில் ஜெர்மனி தோற்பது உறுதியான போது 1943 - ஆம் ஆண்டு ஹிட்லரின் ஆணைபடி இவர் பெர்லின் திரும்பினார். சிறிது காலம் இத்தாலியில் அச்சு நாடுகளின் படைகளுக்கு தலைமை தாங்கினார். பிரான்சின் நார்மாண்டி கடற்கரையில் நடைபெற்ற போரில் படுகாயமடைந்தார். ஜெர்மனி தொடர்ந்து போரில் ஈடுபடுவதால் பயனில்லை என்று ஹிட்லரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.
இறுதிக்காலம்[மூலத்தைத் தொகு]
1944 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹிட்லரை கொலைசெய்ய சதி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்கு உடன்பட வேண்டும் அல்லது நஞ்சுண்டு சாக வேண்டும் என்ற ஆணையைத் தொடர்ந்து, நஞ்சு உண்டு மரணமடைந்தார்.
No comments:
Post a Comment