CHINA DEPENDS ONLY ON EXPORTS
சீனப் பொருளாதாரத்தை அச் சுறுத்தும் விஷயங்கள் பல உண்டு. தயாரிப்புப் பொருட் கள் உள்ளூர் சந்தையில் அதிகம் விலை போவதில்லை. இதன் காரண மாக வெளிநாட்டு மார்க்கெட்டை மிகவும் அதிகமாக நம்பவேண்டிய நிலை.
உலக நாடுகள் தங்கள் இறக்கு மதியைக் குறைத்துக் கொண்டால் சீனாவுக்கு மிகப்பெரிய அடி விழும். முன்னொரு காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்கு முன்) தன்னிறைவு பெற்ற நாடாக, பிற நாடுகளை எந்த விதத்தி லும் சார்ந்திருக்காத பொருளாதாரத் தைக் கொண்ட தேசமாக இருந்த சீனா, இன்று தன் ஏற்றுமதியை நம்பித்தான் பொருளாதாரத்தை நிற்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவைப் போல சீன மக்கள் தங்கள் சேமிப்பை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடியாது. வீடுகள் வாங்குவதில் அரசுக் கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. தங்க நகைகளிலோ அவர்களுக்கு ஆர்வம் இல்லை. எனவே, வங்கிகளில் பணத்தை சேமிப்பதுதான் சீனர்களின் வழக் கம். எந்த சீன வங்கியாவது திவாலா னால் அதன் தாக்கம் மிகவும் பயங்கர மானதாக இருக்கும்.
தகவல் பரிமாற்ற சுதந்திரம் இல்லாதது இன்னொரு சிக்கல்.
சீனாவில் செய்தித் தணிக்கை மிகவும் அதிகம். எனவே பலவித செய்திகளை குறிப்பாக சீன அரசுக்கு எதிரான விமர்சனங்களை சீனாவில் உள்ள மக்களால் படிக்க முடியாது.
இதற்கு எதிராகச் செயல் படுகிறது கிரேட் ஃபயர் என்ற அமைப்பு. சீனாவில் உள்ளவர்கள் தங்கள் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு உண்டாகும் தடைகளை தகர்க்க உதவுகிறது. அதாவது தடுக்கப்பட்ட தகவல்களை இதன் மூலம் பார்க்க முடியும். சீன அதிகாரிகள் இது குறித்து கடந்த சில மாதங்களாகவே அழுத்தமாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்கிறார்கள்.
அரசியல் ரீதியாக சிக்கல்களை உண்டாக்கக் கூடியவை எனக் கருதும் பல வலைதளங்களைத் தடை செய்திருக்கிறது சீன அரசு. இந்த முயற்சியை ‘Great Firewall’ என்று குறிப்பிடுகிறார்கள்.
இதன் விளைவாக ‘கிரேட் ஃபயர்’ என்ற அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக, தடைசெய்யப் பட்ட செய்திகளை மற்றும் விமர் சனங்களை அமேசான் மற்றும் வேறு சில பெரும் வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. சீன அரசுக்கு இதில் பெரும் சங்கடம். காரணம் அமேசான் மற்றும் மேற்படி நிறுவனங்கள் வணிக ரீதியாக சீனாவோடு தொடர்பு உடையவை. அந்த நிறுவனங்களின் வலைதளங்களை முடக்கினால் அது சீனாவின் வணிக உறவுகளை பாதிக்கும்.
கிரேட் ஃபயர் அமைப்புக்கான நிதி சீன மக்களிடமிருந்துதான் வரு கிறது. அமெரிக்க அரசின் ஆதரவு கொண்டது இந்த அமைப்பு.
சில கோணங்களில் முரண் களின் மூட்டை என்றும் சீனாவைக் கூறலாம். சீனாவின் தலைசிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவர் லாவோத்ஸே, உலகைத் துறந்து வாழச் சொன்னவர். சடங்குகளை வெறுத்தவர். கன்ஃபூஷியஸும் இவரும் சமகாலத்தவர்கள். ஒரு முறை லாவோத்ஸேவை சந்தித்த போது, ‘’பழமையான சடங்கு களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று கன்ஃபூஷியஸ் கேட்க, ‘’இந்தப் போலி விவகாரங் களில் எந்தப் பலனுமில்லை” என்று பளிச்சென்று சொன்னார் லாவோத்ஸே.
ஆனால் நடப்பது என்ன? சீனர்களில் கணிசமானவர்கள் மாலை நேரம் ஆகிவிட்டால், தங்கள் வீட்டுக்கு முன் காகிதங்களை கொளுத்துவார்கள். பலரது வீடு களில் தெருப்பக்கமாக உள்ள சுவர்களில் வண்ண காகிதங்கள் ஒட்டப்பட்டிருக்கும். இதெல்லாம் எதற்காக? பேய்களும், பிசாசுகளும் தங்களை நெருங்காமல் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான்.
அமெரிக்க வீண்வெளி வீரரை ‘அஸ்ட்ரனாட்’ என்பார்கள். ரஷ்ய விண்வெளி வீரரை ‘காஸ்மனாட்’ என்பார்கள். சீன அரசு தனது விண்வெளி வீரரை ‘டைகோனாட்’ என்று அழைக்கிறது. ‘டைகாம்’ என்றால் சீன மொழியில் விண் வெளி என்று அர்த்தம். விண் வெளி ஆராய்ச்சிகளில் மிக முன்னேற்றம் கண்டுள்ள சீனாவில் அதன் சமீபத்திய விண்வெளி சாத னையைக்கூட அத்தைப்பாட்டி கதை ஒன்றுடன் இணைத்து சந்தோஷப் படும் சீனர்கள் இருக்கிறார்கள். சீனாவில் ஒரு கதை மிகப் பிரபலம். மந்திரசக்தி உள்ள ஒரு பாட்டி, சக்திவாய்ந்த ஒரு திரவத்தைக் குடித்துவிட்டு மேலெழும்பி நிலாவுக்குப் போய் அங்கேயே தங்கி விட்டாளாம். அவளைத்தான் ‘சந்திர தேவதை’ என்கிறார்களாம். இந்தக் கதையைக் குறிப்பிட்டு விண் வெளியைத் தாண்டும் விருப்பம் எங்களுக்கு கல்தோன்றி மண்தோன் றாக் காலத்துக்கு முன்பே உண்டு’ என்று கூறி மகிழ்கிறார்கள்.
இப்போதும்கூட பல சீன நகரங்கள் பரிதாபமாகத்தான் உள்ளன. சூழலியல் பற்றிய உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.
தென்சீனக் கடல் மிகவும் பரந்தது. பசிஃபிக் சமுத்திரம் சுமார் 15 லட்சம் சதுர மைல்களைக் கொண்டது. இதில் உள்ள தீவுகள் மிகவும் சிறியவை. ஒவ்வொரு தீவிலும் 50 கட்டடங்கள்தான் இருக்க லாம்.
என்றாலும் சமீப வருடங்களில் இந்த குட்டித் தீவுகள் முக்கியமாக பகாசா எனும் தீவு, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மொத்த தென்சீனக் கடலுமே தன்னுடையதுதான் என்கிறது சீனா. எனினும் வேறு ஐந்து நாடு களும் அந்தக் கடலின் பல்வேறு பகுதிகளை சொந்தம் கொண்டாடு கின்றன. சீனாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தப் பகுதியில் செல்லும் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் படகுகளை சுட்டுத்தள்ளி விடுவோம் என்று எச்சரிக்கிறது.
தென்சீனக் கடல் என்பது ஒரு முக்கியமான கடல் வழி. அதுமட்டு மல்ல கணிசமான பெட்ரோலியக் கிணறுகள் இந்தப் பகுதியில் இருப் பதாக கருதப்படுகிறது.
எனினும் கம்யூனிஸ்ட் கட்சிக் குள் சமீபத்தில் அங்கு ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆட்சி பலவீனமடைந்து வருவ தாக சிலர் கருதுகிறார்கள். மா சே துங், டெங் ஜியோபிங் போன்ற வர்களுக்குப் பிறகு கட்சியினரை ஒன்றிணைக்கும் அசாத்திய சக்தி கொண்டவர்கள் அங்கு இல்லை. முந்தைய அதிபர் ஹு ஜிந்தாவோ ஊடகங்களுடன் கருத்து பரி மாறிக் கொள்வதை முடிந்த வரை தவிர்த்தார். தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் ஓரளவு தலைமை பண்புகளைக் கொண்ட வராக இருக்கிறார். எனினும் மா சே துங், டெங் ஜியோபிங் போன்றவர்களோடு இவரை ஒப்பிட முடியாது.
சீனாவின் எல்லா முக்கிய முடிவு களையும் எடுப்பது கம்யூனிஸ்ட் கட்சிதான். ஆனால், நாட்டில் 80 சதவீதமாக உள்ள விவசாயிகளில் ஐந்து சதவீதம்பேர்தான் இந்தக் கட்சியின் உறுப்பினர்கள். சீன மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி பெண்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை வெறும் பத்து சதவீதம் மட்டுமே.
எல்லோருமே நகரங்களுக்கு வந்துவிட்டதால் சீன கிராமங்கள் வெறிச்சோடத் தொடங்கிவிட்டன. இளைய தலைமுறையினர் பொரு ளாதார முன்னேற்றம் என்கிற பெயரில் நம் ஆத்மாவை மேலை நாடுகளிடம் விற்கிறோம் என்று குரல் கொடுக்கத் தொடங்கி யிருக்கின்றனர். பணக்காரருக்கும், ஏழைக்கும் நடுவே உள்ள வித்தி யாசம் அதிகரித்துக் கொண்டே போகும்போது பொருளாதார முன்னேற்றம் எப்படிச் சாத்தியம் ஆகும்? இந்தக் கேள்வி பரவலாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது.
சுதந்திரம் என்பதற்கான ஏக்கக் குரல் அழுத்தமாக ஒலிக் கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இளைய தலைமுறை குரல் கொடுக்கிறதே தவிர, பல்லா யிரக்கணக்கான தொழிலாளிகள் இன்னும் ஒருசேர எதிர்க்க வில்லை. அதுவரை ஆட்சியாளர் கள் கவலைப்படாமல் இருக்கலாம்.
No comments:
Post a Comment