டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.
BORN OCTOBER 2,1908
நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நுபலுக்கு முன்னுரை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக்கொண்டேன். நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதிவிடு வேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.
டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே,நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட எனக்கு, டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.
ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நுபல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடிய வில்லை.
பிற பணிகளை ஒதுக்கிவிட்டு, அன்றும், அடுத்த நாளும் நுபல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. நுபலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.
எஸ்.வையாபுரிப்பிள்ளை, ‘தினமலர்’ இதழை செப்., 6, 1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால், றிதினமலர்றீ இதழை வரவேற்றார். அன்று சாதாரண நிலையில் உருவான, ‘தினமலர்’ திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.
டி.வி.ஆர்., பத்திரிகை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந் தன்மை முதலியவற்றை முத்து கிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.
‘தினமலர்’ தோன்றுவதற்கு முன் டி.வி.ஆர்., ஆற்றிய அரிஜனத் தொண்டு, நாகர்கோவில் நகரத்திற்கு குடிநீர் கொண்டுவந்தது, இரயில் பாதை அமைத்தது, கட்டாயக் கல்வி அமல் செய்ய உதவியது, இலக்கிய விழாக்கள் எடுத்தது முதலியவற்றை முத்து கிருஷ்ணன் சுருக்கமாக விவரித்துள்ளார்.
குழந்தையே முதியவர்களின் தந்தை, என்ற கொள்கையைச் சமூக இயலார் வற்புறுத்துவதுண்டு. டி.வி.ஆரின் பிற்கால பண்புகளில் பெரும்பாலானவற்றை அவருடைய குழந்தை அல்லது இளமை பருவத்திலேயே காண இயலும். டி.வி.ஆர்., தத்து எடுக்கப்பட்ட குழந்தை. அவருடைய உறவினர் பெரும் சொத்தின் உடமையாவார். அவர்தான் டி.வி.ஆரை தத்து எடுத்து வளர்த்தார். அந்த சொத்துக்கள் அனைத்தையும் பிற்காலத்தில் விற்று, தினமலர் வளர்ச்சிக்கு முதலீடு செய்தார். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு இந்தச் செயல் எவ்வளவு மன உளைச்சல் தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
சுதந்திரம் பெறுவதற்கு முன்னும், பின்னும் இருவகையாக தலை வர்கள் உருவாயினர். அரசாங்கத்தை எதிர்த்து இயக்கம் நடத்தி, இன்னலும், சிறை வாசமும் அனுபவித்து உருவான அரசியல் தியாகத் தலைவர்கள் ஒரு வகையினர்; அவ்வகையில், தமிழ்நாட்டில் இராஜாஜி, காமராஜர் முதலியவர்களைக் கூறலாம். மற்றொரு சாரார், சமுதாயத் தொண்டு, அரிஜன முன்னேற்றம், தொழிற்சாலைகளைத் தோற்றுவித்து பல்லாயிரவர்களுக்கு வேலை வாய்ப்புத் தருவது, குடிதண்ணீர், போக்குவரத்து முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல், விதவை விவாகம், கல்விப்பணி முதலியவற் றில் ஈடுபட்டுச் சமுதாயத் தலைவர்களாக உருப்பெற்றனர்.
அதற்கு ஈ.வே.ராமசாமிப் பெரியார், டி.வி.ஆர்., போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம். மகாராஷ்டிரத்தில் திலகர் அரசியலிலும், ரானடே சமூக நலனிலும் தலைமை தாங்கினர். காந்தியடிகள் இந்த இரண்டு துறையிலும் தலைமையிடத்தைப் பெற்றார். ஆனால், அரசியல் தரும் அதிகாரம் முதலிய பவிசுகளைப் பெற மறுத்து விட்டார்.
சமுதாயத் தலைவர்கள், மக்கள் மாற்றத்திற்கு அரசியலாரின் துணையை நாட வேண்டியிருந்தது. இராஜாராம் மோகன் ராய், பிரிட்டிஷ் அரசின் ுணையுடன்தான் சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்தார். டி.வி.ஆரும் குடிதண்ணீர், இரயில் அமைப்பு முதலியவற்றிற்கு அரசு உதவியை முதலில் நாடினார். றிதினமலர்றீ பத்திரிகை வலுவுடைய செய்தித்தாளாக மாறியதும், அரசியல் தலைவர்கள் டி.வி.ஆரின் தயவை நாடினர். சமூக மாற்றத்திற்கு அரசியல் ஆதரவு, ‘தினமலர்’ வழியாக டி.வி.ஆருக்கு எளிதாக கிடைத்தது; இது பெரும் சாதனை. டி.வி.ஆர்., என்ற மனிதர் இன்றும் என் மனத்திரையில் பளிச்சிடுகிறார். சராசரி உயரம், சற்று பருமனான தேகம். அதிக கறுப்பில்லாத மாநிறம். நெற்றியில் சுருண்டு வளைந்து கிடக்கும் முடிக்கத்தை. வெள்ளை அரைக்கைச் சட்டை, ஆடரம்பரமில்லாத வேட்டி, சிரித்த முகம். றிசெய்தது குறைவு; அதை நினைத்துப் பெருமைப்பட கூடாது. செய்ய வேண்டியது அதிகம்; அதையும் உடனே செய்கறீ என்பதே டி.வி.ஆர்., முழங்கும் மந்திரச் சொல்.
வி. அய். சுப்பிரமணியம்,
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் திருவனந்தபுரம் துணை வேந்தர்.
சர்வதேச திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனர்.
No comments:
Post a Comment