Thursday, 12 October 2017

ஷாஜகானின் கடைசி காலம் - பேராசிரியர் பி.என்.ஓக்.


ஷாஜகானின் கடைசி காலம் 
பேராசிரியர் பி.என்.ஓக்.





ஷாஜஹானின் ஆட்சியின் கடைசிகாலகட்டம் அது.ஔரங்கசீப் ஆட்சி அரங்கேறியது.
தன் தந்தையை சிறை வைத்தார் ஔரங்கசீப்.
ஆக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஷாஜகானுக்கு மாற்று உடைகளும், எழுதும் உபகரணங்களும் மறுக்கப்பட்ட காலம்.அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் அகற்றப்பட்டன.
“பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம்” என்னும் முதுமொழிக்கேற்ப ஷாஜகானை காவலாளிகள் கூட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர். மகனான ஔரங்கசீப் மதித்தால்தானே காவலர்கள் மதிப்பதற்கு. வெறுப்பின் உச்சகட்டத்திற்கு போன ஷாஜகானுக்கு பாலைவனச்சோலையாக இருந்தது 

தன் மகளான ஜஹனாராதான்.மகன் மதிக்காது போனாலும் தன் மகள் ஜஹனாரா வாவது தமக்கு சிறையில் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது ஷாஜகானுக்கு. பெரும்பாலான பொழுதை தொலைவில் தெரியும் தன் காதல்மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலையே கண்ணிமைக்காமல் பார்த்து தன் நிலை எண்ணி கவலையுற்று, நோய்வாய்ப்பட்டார். புனித குர் ஆன் படிப்பதற்குமட்டுமே ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

(மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்).
கடைசிகாலத்தில் மறுபடியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த ஷாஜஹானால், படுக்கையை விட்டு எழுந்து நடமாட முடியவில்லை.
அந்த நிலையிலும் தன் சகோதரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஔரங்கசீப்,ஆளுயர கண்ணாடி ஒன்றை ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்க்கவசதியாக வைப்பதற்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.
ஜனவரி 22,1666 அன்று ஷாஜஹானின் எழுபத்து நாலாம் வயதில்,ஜஹனாரா பேகம் தன் தந்தையின் சிறைக்குள் நுழையும் நேரம் ,ஷாஜஹானின் மூச்சு நின்றிருந்தது. தன் உயிர் பிரிந்த வேளையிலும் ,அவரின் தலை தாஜ்மஹாலைப் பார்க்க வைக்கப்பட்டிருந்த கண்ணாடியின் பக்கமே திரும்பியிருந்தது.

தன் மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலைப் பார்த்தவண்ணம் தன் உயிரை   விட்டிருந்தார்.  முகாலயப் பேரரசராய் இருந்து ம்கனாலேயே சிறை வைக்கப்பட்ட ஷாஜஹான்.கடைசி காலத்தில் தன் மனைவியின் நினைவால் வாடிய அவர்,பெரும்பான்மையான நேரங்களை தாஜ்மஹா லைப் பார்ப்பதிலேயே செலவிட்டார்.

தன் மகளான் ஜஹனாராவிடம் கூடப் பேசவில்லை.முப்பொழுதும் மும்தாஜ் நினைவாலேயே உயிரை விட்டிருந்தார் ஷாஜஹான்.
அவரின் கடைசி ஆசை முழுக்க முழுக்க கறுப்புநிறச்சலவைக் கற்களைக்
கொண்டு,தாஜ்மஹாலை அச்சு வார்த்தாற்போல் யமுனை நதியின் மறுகரையில் தனக்காக கல்லறை கட்டப்படவேண்டும் என்பதே.
ஆனால் கருமியான ஔரங்கசீப் தன் தந்தையின் கடைசி கால ஆசையை நிராகரித்து, “அந்த வீண் செலவு எல்லாம்  தேவையில்லை, தாஜ்மஹா லிலேயே இடமிருக்கிறது”,,,என்றுசுருக்கமாய் சொல்லிவிட்டார்.
த்ந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிசடங்குக்கும் ஔரங்கசீப் நேரம் ஒதுக்கவில்லை.ஜஹனாராதான் தந்தையின் மறைவிற்கு வருந்திய வாரிசு …. ஔரங்கசீப் ஆணையின்படி ஷாஜஹானின் உடல் யமுனை நதியோர காதல் சின்னமான தாஜ்மஹாலில், தன் மனைவியருகிலேயே ஷாஜஹான் அடக்கம் செய்யப்பட்டார்.

பாதுஷாவாய் இருந்து ,பின் தன் மனைவியை இழந்து,மகனாலேயே சிறை வைக்கப்பட்ட ஷாஜஹானும்,மும்தாஜும் உடலளவிலும் கூடப் பிரியாமல்,ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு செய்து ஔரங்கசீப் தெரிந்தோ,தெரியாமலோ தாஜ்மஹால் நிலையாய் இருக்க காரண்மாய் இருந்தார். இன்றளவும் புகழ்பெற்றுள்ள காதல் சின்னமான தாஜ்மஹால் கம்பீரமாய் நின்றுகொண்டு இருக்கிறது.
ஆனால் அதன் பிண்ணனியில் பல வேதனையான நிகழ்வுகள் ஷாஜஹானோடு புதைக்கப்பட்டிருக்கிறது.

பளிங்குக் கல்லால் ஆன இந்த கல்லறை மாளிகையின் வரலாற்றுப் பிண்ணனி , ஷாஜஹான் ,,மற்றும் மும்தாஜ் இவர்களின் இருண்ட பக்கங்கள்தான்…… தாஜ்மஹாலைப் பார்க்கும் ஒரு நிமிடம் அந்தக். கல்லறைகளின் மௌனமான மொழியால் நமக்கு உணர்த்துவது என்ன?
யமுனை ஆற்றின் கரையில் தன்னகத்தே பல துயரங்களைச் சுமந்து கொண்டு பளிங்குக்கல் மாளிகையில் இரு ஆத்மாக்கள் மௌனமாய் உறங்குகின்றன.

கம்பீரமாய் தாஜ்மஹால்..காதலின் சின்னமாய். முகலாயமன்னர்  ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ”தாஜ்மஹால்” என்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் தாஜ்மஹால் என்பது ”தேஜாமஹாலயா” என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தாஜ்மஹால் குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.  முன்பு ”தேஜாமஹாலயா” என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர்  ரிவிக்கிறார்,ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ”பாத்ஷாநாமாவில்”,ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.

பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம். ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்றஇந்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் எனப்படும் புருசோத்தம் நாகேஷ்ஓக் 1917 ம் ஆண்டு மார்ச் 2 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்.தாஜ்மஹாலின் உண்மை வரலாறு உட்பட பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 2007 ம்ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 90.தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் மறைந்து விட்டாலும் சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன.தாஜ்மஹாலை நேரில் பார்த்திருக்கிறீர்களா?… பாருங்கள் உங்களுக்கு எந்த வயதாக இருந்தாலும் காதல் பற்றிக்கொள்ளும்.





No comments:

Post a Comment