Monday 11 December 2017

SONIA GANDHI , THE MOST DANGEROUS POLITICIAN BORN IN ITALY 1946 DECEMBER 9





SONIA GANDHI ,
THE MOST DANGEROUS POLITICIAN 
BORN IN ITALY 1946 DECEMBER 9






சோனியா காந்தி (ஹிந்தி:सोनिया गांधी; இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்தார். இவர் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரும் மறைந்த இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியின் மனைவியும் ஆவார்.[2] அவர் ஆளுங்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும், மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் உள்ளார்.

இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபரான அவர், 2004ல் போர்பஸ் [3] பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் மூன்றாவது இடம் வகிப்பவராகவும் மற்றும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் ஆறாவது இடம் வகிப்பவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.[4] மேலும் டைம்பத்திரிகையும் இவரை 2007 [5] மற்றும் 2008 ஆண்டுகளில் உலகில் உள்ள 100 அதிகச் செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.[6]

ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
சோனியா காந்தி பிறந்த இடம்: 31, மினி ஸ்ட்ரீட் - லூசியான (விசென்சா) - இத்தாலி
இத்தாலியில், வெனிடோப்பிரதேசத்தில், 30 கிலோ மீட்டர் தொலைவில் விசென்ஸாவில், உள்ள லூசியானா எனும் ஒரு சிறுகிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்த அவர், டுரின் என்ற நகருக்கு அருகில் உள்ள ஆர்பாஸனோவில், பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் தன் வளரிளமைப் பருவத்தை ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயில்வதில் கழித்தார். [7] ஒரு கட்டிட ஒப்பந்தக்காரரான அவர் தந்தை, 1983ல் மரணமடைந்தார்.[7] அவரது அன்னையும் மற்றும் இரு சகோதரிகளும் இன்னமும் ஆர்பாஸனோவில் வசித்து வருகின்றனர்.[8]

1964ல், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் அவர் ஆங்கிலம் கற்கச் சென்றார். அங்கு அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்த ராஜிவ் காந்தியை 1965ல், ஒரு கிரேக்க உணவகத்தில் சந்தித்தார்.[9] [10] சோனியாவும் ராஜிவ் காந்தியும் 1968ல் மணம்புரிந்து கொண்டனர், அதைத்தொடர்ந்து அவர் தனது மாமியாரும் அப்போதைய பிரதம மந்திரியுமான இந்திரா காந்தியின் இல்லத்திற்குச் சென்றார்.[10]
இந்த தம்பதிகளுக்கு , ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர். செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தைச் சார்ந்திருந்த போதிலும் ராஜிவ் ஒரு ஏர்லைன் விமானியாக பணிபுரிய, சோனியா தன் குடும்பத்தைக் காக்கும் பணியை மேற்கொண்டார்.[11] 1980 ஜூன் 23ல் தனது இளைய சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தமையால் ராஜிவ் 1982ல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்தாலும், சோனியா தனது குடும்பத்தின் மேல் உரிய கவனத்தை தொடர்ந்து செலுத்திவந்தாரே தவிர பொதுமக்களிடம் அனைத்துத் தொடர்பையும் விலக்கியே வைத்திருந்தார்.[12]

அரசியல் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
பிரதம மந்திரியின் மனைவி[மூலத்தைத் தொகு]
இந்தியப் பொதுவாழ்வில் சோனியா காந்தியின் ஈடுபாடு அவரது மாமியார் படுகொலைக்குப் பிறகும் மற்றும் அவரது கணவர் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுமே தொடங்கியது. பிரதம மந்திரியின் மனைவியாக அவரது அதிகாரப் பூர்வ உபசரணியாக அவர் செயல்பட்டார் மற்றும் ஏராளமான மாநில விஜயங்களில் அவர் உடன் சென்றார்.1984ல், அமேதியில் ராஜிவை எதிர்த்து அவரது தம்பி மனைவியான மேனகா காந்தி தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட்ட போது சோனியா தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் களமிறங்கினார்.
காங்கிரஸ் தலைவர்[மூலத்தைத் தொகு]

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் அவரது அரசுமுறை விஜயம் டிசம்பர் 2008.
அவரது கணவர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டப் பிறகு அவர் பிரதம மந்திரியாக மறுத்தமையால், காங்கிரஸ் கட்சியானது பி.வி நரசிம்மராவை தலைவராகவும் தொடர்ந்து பிரதம மந்திரியாகவும் தேர்வு செய்தது. எனினும், அடுத்த சில வருடங்களுக்கு, காங்கிரஸின் எதிர்காலம் ஊசலாட்டம் காணவே 1996 தேர்தல்களில் அது தோல்வி கண்டது. பல மூத்தத் தலைவர்கள் மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், நாராயண் தத் திவாரி, அர்ஜூன் சிங், மம்தா பானர்ஜி, ஜி.கே. மூப்பனார், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் அப்போதைய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்த
பி.வி.நரசிம்மராவை, சீதாராம் கேசரியை வெளிப்படையாக எதிர்த்து கட்சியை விட்டு வெளியேறியதால், காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாகச் சிதறியது.
கட்சியின் தொய்வுற்ற எதிர்கால நிலைகளை புதுப்பிக்க வேண்டி, 1997ல் கல்கத்தா வருடாந்திரக் கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராகி அடுத்த ஆண்டு 1998ல் அதன் கட்சித் தலைவரானார்.[13]
அடிப்படை உறுப்பினராக 62 நாட்கள் ஆகியதும், அவரையே கட்சியின் அவைத்தலைவராக்க வலியுறுத்தப்பட்டது. அவர் லோக்சபா தேர்தல்களில் பெல்லாரி, கர்நாடகா, மற்றும் 1999ல் உத்திரப் பிரதேசத்தில் அமேதி என்ற இடங்களில் போட்டியிடலானார், பெல்லாரியில் பிஜேபியின் அனுபவமிக்கத் தலைவர், சுஸ்மா சுவராஜைத், தோற்கடித்தார். 2004, 2009-ல் அவர் உத்தரப்பிரதேசத்தில் ராய்பரேலியிலிருந்து லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்கட்சி தலைவர்[மூலத்தைத் தொகு]

சோனியா காந்தி பில் கிளிண்டன் உடன் அவரது விஜயம் 2000
1999ல் பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிஜேபி-ஏற்படுத்திய என்டிஏ(தேசிய ஜனநாயக முன்னணி) அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் அரசமைத்த போது, அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில், அவர் என்டிஏ அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2003ல் கொண்டுவந்தார். அவர் காங்கிரஸ் தலைவராக பத்து வருடங்களுக்குத் தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற நிலைச்சான்றை (ரெக்கார்டு) சாதித்துக் காட்டினார்.
2004 தேர்தல்களும் பின்விளைவும்[மூலத்தைத் தொகு]

2004 பொதுத்தேர்தல்களில், சோனியா காந்தி ஒரு நாடுதழுவிய பிரசாரம் செய்ததில், குறுக்கு-மறுக்குக் கட்டமாக, ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என்ற கோஷத்தை பிஜேபி-ஏற்படுத்திய தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) எழுப்பிய 'இந்தியா மிளிர்கின்றது' என்ற கோஷத்திற்கு எதிரிடையாக எழுப்பினார். அப்பொழுது பிஜேபியை "யாருக்காக இந்தியா மிளிர்கின்றது?" என்று மறுதலையாக வினவினார். தேர்தலில், அவர் உத்திரப்பிரதேச ராய்பரேலி தொகுதியில் இருந்து பெரும்வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். என்டிஏயின் தோல்வியைத் தொடர்ந்து, அவர்தான் அடுத்த இந்தியாவின் பிரதம மந்திரி என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டார். மே பதினாறாம் நாள், இடதுசாரிகளின் ஆதரவுடன் 15-கட்சி கூட்டணி அரசாங்கத்தை நடத்த அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தொடர்ச்சியாக அவ்வரசாங்கம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) என்ற பெயரிடப்பட்டது.

தேர்தலுக்குப் பின்னர், தோற்ற என்டிஏ அவரை 'அந்நியப் பிறப்பு' என்று எதிரிடையாகக் கிளர்ச்சி செய்தது. மற்றும் மூத்த என்டிஏ தலைவர் சுஷ்மா சுவராஜ் அவர்கள், சோனியா காந்தி பிரதமரானால், தலையை மொட்டை அடித்துக் கொள்வதாக அச்சுறுத்தியோடு நில்லாமல் "தரையில் படுத்துறங்குவேன்" என்றும் கூறினார்.[14] என்டிஏ அவர் பிரதம மந்திரி பதவிக்கு நிற்க பல சட்ட பூர்வமான காரணங்கள் தடையாக இருந்ததாக உரிமை கோரியது.[15] அவர்கள் சுட்டிக்காட்டியது, குறிப்பாக, 1955 இந்திய குடி உரிமைச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஆகும், அதன்படி, அவர்கள் 'ஏற்றெதிரிடை' (கொண்டு கொடுப்பது செய்வது) உட்பொதிந்த கருத்தென்று உரிமை கோரினார்கள். இதை மற்றவர்கள் கூடாதென வாதிட்டதால்[16] இறுதியில்உச்ச நீதி மன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து சோனியா காந்தி பிரதமராக சட்டப்படி எந்த தடையுமில்லை என தீர்ப்பு வழங்கியது.

ஒரு சில நாட்களுக்குப் பின்னர், சோனியா காந்தி லோக் சபாவின் காங்கிரஸ் பாராளுமன்றத் தலைமைப் பொறுப்பேற்க மறுத்ததால், மற்றும் அப்படி செய்தமையால், பிரதம மந்திரி பதவியே வேண்டாம் என்று புறக்கணித்தார். பெருவாரியான இந்திய மக்கள் அவரது நிலையை பழமையான இந்தியப் பாரம்பரியமான முடிதுறத்தலுக்கு ஒப்பிட்டனர், ஆனால் அதேசமயம் எதிர்க்கட்சியினர் அது ஒரு அரசியல் தந்திரம் என்று சாடினர்.[17]
யுபிஏ கூட்டத்தலைவர்.[மூலத்தைத் தொகு]
சோனியா காந்தி இந்திய பொருளாதார உச்சி மாநாடு பேசுதல் 2006
மே பதினெட்டாம் நாள், அவர் பிரசித்தி பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர். மன்மோகன் சிங் பெயரை பிரதம மந்திரி பதவிக்காகப் பரிந்துரைத்தார்.

மார்ச் மாதம் 23 ஆம் நாள், சோனியா காந்தி தனது லோக்சபா பொறுப்பிலிருந்தும் மற்றும் தேசிய ஆலோசனைக் குழவின் மன்றத்தலைவர் பதவிப்பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார். லாப-நோக்குடைய அந்த தேசிய ஆலோசனைக் குழுவின் தலைமைப்பதவியில் அவருக்கு விலக்கு அளிக்கப்படப்போகிறது என்ற யூகத்திற்காக அப்படி செய்தார். 2006 மே மாதம் நிகழ்ந்த ராய்பரேலி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில் மறுமுறை பெரும்வாக்கு வித்தியாசத்தில் அதாவது 4,00,000 ஓட்டுக்களில் வெற்றிபெற்றார்.

தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவர் மற்றும் யுபிஏயின் கூட்டத்தலைவர் பொறுப்புகளில், அவர் தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இரண்டும் கொண்டுவர வேண்டி முக்கியப் பங்காற்றினார்.[18][19]
2007 ஜூலை 15 ஆம் நாள் ஐ.நா.சபை கொணர்ந்த தீர்மானத்தின் படி அவ்வாண்டு அக்டோபர் 2 ஆம்நாள், அதாவது மகாத்மா காந்தியின் பிறந்தநாளை சர்வதேச அஹிம்சை தினம் என்று அனுசரித்த வேளையில் அவர் ஐ.நா சபையில் உரையாற்றினார்.[20]
அவரது தலைமையின் கீழ், இந்தியாவில் மறுபடியும் காங்கிரஸ்-ஏற்படுத்திய-யுபிஏ 2009 பொதுத்தேர்தல்களில் ஒரு
அறுதிப்பெரும்பான்மை பெறக்கூடிய அளவில், அதுவும் மன்மோகன் சிங்கே பிரதம மந்திரி என்ற நிலையில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 206 லோக்சபா இடங்களில் வென்றதே, எண்ணிக்கையில் 1991லிருந்து பெற்ற அதிகபட்ச மொத்தம் ஆகும்.
திறனாய்வு[மூலத்தைத் தொகு]
அவரது தலைமை பற்றி தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விமர்சனம் கிளம்பியது. 1999ல் மே மாதம், மூன்று மூத்த கட்சித்தலைவாகள் (ஷரத் பவார், பூர்ணோ ஏ. சங்மா, மற்றும் தாரிக் அன்வர்)அவரது அந்நிய மூலங்கள் என்பதைக் காட்டி இந்தியப் பிரதம மந்திரி ஆகும் அவரது உரிமையையே சவால்விட்டனர்.
அதற்குப் பதிலளிக்க வேண்டி, அவர் கட்சித்தலைவர் பதவியிலிருந்தே விலக முன்வந்தார் எனினும், அதன் விளவு வெகுஜன ஆதரவுப்பொங்கியது மற்றும் தொடர்ந்து மூன்று கிளர்ச்சியாளர்களும் வெளியேற்றப்பட, அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்க நேர்ந்தது.[21]
எளிமையான பழக்க வழக்கங்களில் முனைப்பு[மூலத்தைத் தொகு]
சோனியா காந்தி தனது பிள்ளைகளை பிற காங்கிரஸ் எம்.பிகளுக்கு எளிமையான பழக்க வழக்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார், அதற்கு முன்னுதாரணமாக அவர் 2009 செப்டம்பர் மாதம் 14 ஆம்நாள் புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு சிக்கன வகுப்பில் விமானப்பயணம் செய்தார். அதனால் அவர் ரூ 10,000 மிச்சப்படுத்தினார்.[22][23] எம்பிக்களின் ஊதியத்திலிருந்து (ஒரு எம்.பியின் மாத ஊதியம் ரூ 16000)20% இந்தியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கென நிதியளிக்க வலியுறுத்தினார்.
சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
சோனியா காந்தி 2009

இந்திரா காந்தியின் மூத்த புதல்வரான மறைந்த ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா ஆவார், அவரது மைந்தர் ராகுல் காந்தி, (உபி) அமேதி தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு 2004,2009ல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் மகள் பிரியங்கா காந்தி பதவிக்காக நிற்கவில்லை எனினும், காங்கிரஸ் கட்சியின் பிரசாரப்பொறுப்பு மேலாளராக பணிபுரிந்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை வகிப்பார் என்ற போதுமான ஊடக யூகங்கள் அவரைப்பற்றி உள்ளன.
Image may contain: 3 people

No comments:

Post a Comment