Monday, 11 December 2017

JEYALALITHA ,THE BRAVE WOMAN














JEYALALITHA ,THE BRAVE WOMAN


கர்நாடகத்தில் பிறந்த பெருமைமிகு தமிழச்சி. கன்னடர்களை ஜெயலலிதா கையாண்டது எப்படி ?
“நான் ஒரு தமிழ் பெண். கன்னடப் பெண் அல்ல” என தன்னை சுற்றி நின்றபடி மன்னிப்பு கேட்டு போராட்டம் நடத்திய கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்து பேசினார்.
கடந்த செப்டம்பர் 2012. தற்போதைய சூழலை போன்றே காவிரி விவகாரம் மிகவும் சூடுபிடித்திருந்த தருணம் அது. காவிரி நடுவர் மன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்றிருந்தார். அப்போதைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அம்மாநிலத்தின் நீர் பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இரு மாநிலங்களுக்குமிடையே நதி நீரை பங்கு வைக்கும் கூட்டம் என்பதால், அந்த அறையில் இனம் புரியாத இறுக்கமான சூழலே நிலவியது. பொம்மை அந்த இறுக்கமான சூழலை உடைக்க விரும்பினார். ஜெயலலிதாவிடம் தன்னை கன்னடத்திலேயே அறிமுகம் செய்து கொண்டார்.
விரைவிலேயே இருவரும் கன்னடத்திலேயே பரஸ்பரம் பேசத் துவங்கினர். அப்போது அவரிடம் பேசிய ஜெயலலிதா “ நான் நடிகை சரோஜா தேவியிடம் கன்னடத்தில் அடிக்கடி பேசிக்கொள்வது வழக்கமாக கொண்டிருந்தேன். தற்போது எனக்கு கன்னட மொழியே மறந்து போய்விட்டதை போல் உள்ளது.” என்றார்.
ஆனால், சாதாரண நிலையில் உள்ள உரையாடலை தவிர்த்து, பணி நிமித்தமான உரையாடல் வரும் போது ஜெயலலிதா தனது நிலையில் விடாப்பிடியாகவே இருந்தார். காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் இருக்க பொம்மை தரப்பில் ஜெயலலிதாவை நிர்பந்திக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் அப்போது தோல்வியில் முடிந்தது.

ஜெயலலிதாவின் பிறந்த இடம் கர்நாடகாவும், கன்னட மொழி மீது பரிவும் அவருக்கு இருந்தாலும் அவர் தன்னை ஒரு தமிழ் பெண்ணாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். அவரது தமிழ் அடையாளத்தை அவரது அரசியல் எதிரிகள் பலமுறை கேள்விக்குட்படுத்தியது உண்டு. ஆனால், அரசியலில் அவர் நுழைவதற்கு முன்னரே தான் யார் என்பதை தெளிவாகவே அவர் அடையாளப்படுத்திக் கொண்டார்.
கர்நாடக மாநிலம், மைசூருக்கு அருகே மாண்டியாவில் 1948 இல் பிறந்தவர் ஜெயலலிதா. திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தமிழ் வைஷ்ணவ ப்ராமின் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
தனது இளம் வயதில் ஒரு கைதேர்ந்த நாட்டிய மங்கையாக, நாட்டியக் குழுவில் இருந்த ஜெயலலிதா, மைசூரு தசரா விழாவில் நாட்டிய நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டார். மைசூரு என்ற மாநிலத்தின் பெயரை கர்நாடகா என மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் பதட்டமான சூழல் நிலவிய 1970 ஆம் ஆண்டு காலக்கட்டம் அது.
ஜெயலலிதாவின் நலம்விரும்பிகள் பலரும் அந்த தசரா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து உடல் நிலை காரணம் சொல்லி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலிருந்து பின்வாங்கினார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து விகடன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தான் கர்நாடகத்தில் பிறந்து கன்னடத்தில் தெளிவாக பேசத் தெரிந்தாலும் கூட தான் முழுமையான தமிழன் தான் எனக் கூறினார்.
இந்த பேட்டி கன்னட அமைப்பினருக்கு ரசிக்கும்படியாக அமையவில்லை. கன்னட அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான வாட்டாள் நாகராஜின் கட்சியானது ஜெயலலிதா ஒரு கன்னட பெண்ணாக இருந்த போதும் கூட, தனது நடன நிகழ்ச்சியை ரத்து செய்தார் எனக்கூறி கண்டனம் தெரிவித்தது.
இந்த நிகழ்வானது, பிரபல கன்னட இயக்குனர் பிஆர் பந்துலு தனது ‘கங்கா கௌரி’ என்ற கன்னட சினிமாவை தமிழில் மறு உருவாக்கம் செய்வதற்காக ஜெயலலிதாவை தொடர்பு கொண்ட சில நாட்களிலேயே நடந்தது.
அப்போதெல்லாம் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் சென்னையில் வைத்து மட்டுமே நடந்து வந்தன. ஆனால், செலவினை குறைக்க வசதியாக மைசூருவில் வைத்து அந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த பந்துலு திட்டமிட்டார். ஆனால், குறிப்பிட்ட அந்த தசரா நடன நிகழ்ச்சியும், சினிமா ஷூட்டிங்கிற்கான தேதியும் கிட்டதட்ட ஒரே நாட்கள் என்பதை ஜெயலலிதா கவனிக்க தவறியிருந்தார்.

திரைப்பட வரலாற்றாளரும், செய்தி தொடர்பாளருமாக இருந்த ஆன்ந்தன் 10 பத்திரிக்கையாளர்களை ஒன்று திரட்டி ‘கங்கா கௌரி’ சினிமாவின் படப்படிப்பு குறித்த செய்தியை சேகரிக்க சென்னையிலிருந்து மைசூருக்கு சென்றார். அவர்கள் அங்கு சென்ற ஒரு நாளைக்கு பின், கன்னட அமைப்பின் ஒரு பிரிவினர் ஜெயலலிதாவை கண்டித்து படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் குவிந்தனர்.
கூடவே வாட்டாள் நாகராஜனின் கட்சியினர் சுமார் 100 பேர் திரண்டு ஸ்டுடியோவிற்குள் நுழைய முயன்றதுடன், ஜெயலலிதா மன்னிப்பு கோர வேண்டும் என கோஷமிடவும் செய்தனர்.
அந்த ஸ்டுடியோவில் 12 அடி உயரத்திற்கு நுழைவாயில் கதவுகள் அமைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றில் ஏறி பிரிமியர் ஸ்டுடியோவின் வளாகத்திற்குள் நுழைந்தனர்.
“ஒவ்வொருவரும் தங்கள் கையில் விதவிதமான ஆயுதங்களை கையில் வைத்தபடியே மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர்.” என ஆனந்தன் அந்த நிகழ்வை குறித்துக் கூறினார். தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலுவும், ஜெயலலிதா மற்றும் சென்னையிலிருந்து வந்த 10 பத்திரிக்கையாளர்களும் அந்த ஸ்டுடியோவின் இரண்டாவது மாடியிலிருந்த ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்தனர். “ நாங்கள் எல்லாரும் ( எல்லா பத்திரிக்கையாளர்களும்) போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததும் ஒரு மூலையில் அவரை சுற்றி நின்றிருந்தோம்”. அவர்கள் கன்னடர்களை குறித்து பேசிய கருத்திற்கு மன்னிப்புக் கோரிய போது, பதட்டத்தை தணிக்க அவர்கள் கூறியபடி மன்னிப்பு கேட்கும்படி பந்துலு ஜெயலலிதாவின் அருகில் சென்று கேட்டுக் கொண்டார்.

அப்போது “ நான் ஒரு தமிழ் பெண். ஒரு கன்னட பெண்ணல்ல” என சத்தமாகவே கூறியதுடன், போராட்டக்காரர்கள் தன்னை சுற்றி நின்ற போதும் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
ஆனால் எதுவுமே நடந்துவிடவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் ஜெயலலிதா தமிழில் கத்தியது தான். போராட்டக்காரர்களால் அவர் என்ன பேசினார் என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை.அன்றையதினம் ஜெயலலிதாவின் தைரியத்தை கண்டு தான் வியப்படைந்ததாக ஆனந்தன் கூறினார்.
இதனை தொடர்ந்து கர்நாடகாவை சேர்ந்த இயக்குனர் சாமி, தமிழர்களை தங்கள் மாநிலத்தில் அழைத்து வந்து அவர்களை தாக்குவது பெருத்த அவமானத்தை உண்டாக்கும் என விளக்கி கூறவே, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் மைசூரிலிருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதா, அன்றைய தினம் தன்னை பாதுகாத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Jayalalithaa

No comments:

Post a Comment