Monday, 11 December 2017

CHENNAI FLOODED 2015 DECEMBER 1-5



CHENNAI FLOODED 2015 
DECEMBER 1-5




தமிழகத்தில், வெள்ளப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட, 17 லட்சம் பேர், நிவாரணமுகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது,அரசுக்கு மாபெரும் சவாலாக இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு மாதமாக கொட்டி தீர்த்த கன மழையால், நான்கு முறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள், பெரிதும் பாதிக்கப்பட்டன.
*வெள்ளத்தில் சிக்கிய, 17.64 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 6,605 நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்; வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, 600 படகுகள் பயன்படுத்தப்பட்டன; பாதிக்கப்பட்டவர்களுக்கு, 1.28 கோடி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன.* இதுவரை நடத்தப்பட்ட, 27 ஆயிரத்து, 362 மருத்துவ முகாம்களில், 27.23 லட்சம் பேருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. உடனடி நிவாரணமாக, 67.47 கோடி ரூபாய், 1.11 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.* அக்., 1ம் தேதி முதல், நேற்று வரை, 347 பேர் மழையால் இறந்துள்ளனர்; 3,889 கால்நடைகள் இறந்துள்ளன;

1.16 லட்சம் குடிசைகள் சேதம் அடைந்துள்ளன
* கால்நடைகளுக்காக, 4,983 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 14.19 லட்சம் கால்நடைகளுக்கு,சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது
* மீட்புப் பணியில், 12 ராணுவ குழு, 48 தேசிய பேரிடர் குழு; 400 கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள், விமானப் படையின் ஐந்து ஹெலிகாப்டர்கள், கடலோர காவல் படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான, தலா, இரண்டுஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன * பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 590 டன் பால் பவுடர் வினியோகம் செய்யப்பட்டது. பெண்களுக்கு, 4.05 லட்சம், 'சானிடரி நாப்கின்' வினியோகம் செய்யப்பட்டன
* மாணவர்களுக்கு, 99 ஆயிரத்து, 631 புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம்; 29 ஆயிரத்து, 234 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளன. மாற்று ரேஷன் கார்டு, 3,837 பேருக்குவழங்கப்பட்டு உள்ளது* நிவாரண முகாமில் தஞ்சமடைந்தவர்களுக்கு, அரசு சார்பில், உணவு, பாய், போர்வை, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டன. மொத்தம், 17 லட்சம் பேர், தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து, முகாமில்
தஞ்சமடைந்தனர்.தண்ணீர் வடிய துவங்கி உள்ளதால், வீடு திரும்ப துவங்கி உள்ளனர். தண்ணீர் வடியாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள், முகாம் வாழ்க்கையை தொடர்கின்றனர். முகாமில் இருந்து வீடு திரும்பினாலும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது, அவர்களுக்கு பெரும்சிரமமாக இருக்கும். அரசு உதவி செய்தால் மட்டுமே, வாழ முடியும் என்ற நிலைக்கு
தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு, 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.
இது போதுமானதல்ல என்பதால், பெரும்பாலானோர் முகாமில் இருந்து வெளியேற தயங்குகின்றனர். உரிய உதவிகளை அரசு செய்தால் மட்டுமே, இயல்பு வாழ்க்கைக்கு அவர்களால் திரும்ப முடியும்.எனவே, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்து உள்ளது.முகாம்களை மூட அதிகாரிகள் ஆர்வம்:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், இயல்பு நிலை திரும்பி வருவதால், முகாம்களை மூட, அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதன் விளைவாக, முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படுகின்றன. வரும் 14ம் தேதி, பள்ளி கள் திறக்க வேண்டியுள்ள தால், பள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது, 2,600 முகாம்கள் மட்டுமே செயல்படுகின்றன. இவையும், சில நாட்களில் மூடப்படும் என, தெரிகிறது.


குடும்பத்தோடு சென்னை வெள்ளத்தில் சிக்கிய ‘ரஜினி முருகன்’ நாயகி கீர்த்தி சுரேஷ்

சென்னை: மழைக்கு ஆலமரம் தெரியுமா, அரச மரம் தெரியுமா.. கிடைத்த வழியெல்லாம் போக மட்டும்தானே தெரியும். அந்த வகையில் சென்னையை வாரிச் சுருட்டிய சமீபத்திய மழை வெள்ளத்தில் சிக்கி சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் பல விஐபிகளும் கூட தவித்துப் போய் விட்டனர். அப்படிப்பட்டவர்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். ஸ்ரீதிவ்யாவுக்கு "திரெட்டனிங்" தரும் வகையில் வேகமாக வளர்ந்து வருபவர் மலையாளத்து கீர்த்தி சுரேஷ். அந்தக் காலத்து "ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்" புகழ் மேனகாவின் மகள். ரஜினி முருகன், இது என்ன மாயம் ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி சமீபத்தில் சென்னையை மிரட்டிய வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாராம். நல்லவேளையாக பத்திரமாக மீண்டு வந்து விட்டாராம். அவர் மட்டுமல்ல அவரது பாட்டியும் கூட வெள்ள அபாயத்திலிருந்து மீண்டுள்ளாராம்.

நானும் பாதிக்கப்பட்டேன்... சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மழை வெள்ளத்தில் நானும் எனது குடும்பத்தினரும் கூட சிக்கிக் கொண்டோம். இதை விவரிக்க வார்த்தையே இல்லை.
பாட்டிக்கு ஆபரேஷன்... எனது பாட்டிக்கு சென்னை மியாட் மருத்துவனையில் அறுவைச் சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தோம். டாக்டர்களும் நாள் குறித்து விட்டனர். இதற்காக பாட்டி, அம்மாவுடன் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தனர். நான் வீட்டில் மற்றவர்களுடன் தங்கியிருந்தேன். 
கனமழை... அதற்கு முதல் நாளே கன மழை ஆரம்பித்து விட்டது. விடாமல் பெய்த மழையால் நாங்கள் சற்று கவலை அடைந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் அப்போது அது நடந்தது.
வீட்டுக்குள்ளும் புகுந்தது... ஆம் வீட்டைச் சுற்றி திரண்டு வந்த தண்ணீர் அப்படியே வீட்டுக்குள் புகுந்து விட்டது. வேகமாக நீர்மட்டம் உயரவும் தொடங்கியது
கரண்டும் இல்லை.. இதையடுத்து ஒவ்வொரு அறையாக ஓடி ஓடி முக்கிமானவற்றையெல்லாம் பத்திரப்படுத்த ஆரம்பித்தோம். ஆளாளுக்கு ஓடினோம். கரண்ட் வேறு இல்லை. இன்வெர்ட்டர் குறைந்து கொண்டே வந்தது.

மாடியில் தஞ்சம்... முடிந்தவரை முக்கியமானவற்றையும், கொஞ்சம் துணிகளையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடினோம். அங்கு இரண்டே மெழுகுவர்த்தி துணையுடன் இரண்டு நாட்களைக் கழித்தோம்.
திகில் அனுபவம்... தீவு போல இருந்தது அது. இப்படி ஒரு அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டதே இல்லை
பாட்டி நலம்... இந்த நிலையில்தான் அமமாவிடம் இருந்து போன் வந்தது. ஆபரேஷன் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். மேலும் பாட்டி நலமாக இருப்பதாகவும் சொன்னார்.

வெள்ளத்தை பார்வையிட்டவன்லாம் யாரு ?
ஏரியைஎல்லாம் பட்டா போட்டு காசு பாத்த நம்ம பயதான்

No comments:

Post a Comment