Friday, 4 November 2016

AURANGAZEB , LAST POWERFUL EMPEROR OF MUGHUL DYNASTY BORN 1618 NOVEMBER 3


AURANGAZEB , LAST POWERFUL 
EMPEROR OF MUGHUL DYNASTY 
BORN  1618 NOVEMBER 3


நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.
ஔரங்கசீப்



ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். 
ஔரங்கசீப்
மயிலாசனத்தில் அமர்ந்தபடி ஔரங்கசீப்.
Flag of the Mughal Empire (triangular).svg 6ஆம் முகலாய அரசர்
ஆட்சிக்காலம்31 ஜூலை 1658 – 3 மார்ச் 1707
முடிசூடல்13 ஜூன் 1659, செங்கோட்டைதில்லி
முன்னையவர்ஷாஜகான்
பின்னையவர்முதலாம் பகதூர் சா
பட்டத்து அரசி (மனைவி)தில்ராஸ் பானு பேகம்
பிற மனைவியர்நவாப் பாய் பேகம்
தில்ராஸ் பானு பேகம்
பேகம் உதயபுரி
வாரிசு
முகமது சுல்தான்
முதலாம் பகதூர் சா
அசாம் ஷா
சுல்தான் முகமது அக்பர்
முகமது காம் பாக்ஷ்
சேப்-உன்-நிசா
சினாத்-உன்-நிசா
முழுப்பெயர்
அபு முசாபர் முகையுதீன் முகமது அவுரங்கசீப்
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
{{{posthumous name}}}
மரபுதைமூரியர்
தந்தைஷாஜகான்
மரபுதைமூரியர்
தாய்மும்தாசு மகால்
அடக்கம்குல்தாபாத், அவுரங்காபாத்
சமயம்இசுலாம்
இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ஆலம்கீர் எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. 


Mughal Empire under Aurangzeb shown in red borders

இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்

சகோதரப்போர்[தொகு]

கி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. 

A painting from circa 1637 shows the brothers (left to right) Shah Shuja, Aurangzeb and Murad Baksh in their younger years.

அவுரங்கசிப்பின் சகோதரர் தாராஷிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த அவுரங்கசிப் தன் சகோதரர் தாராஷிகவுடன் போரிட படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தரஷிகோவும் ஷாஜகானும் அவரை எதிர்த்து படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஆரங்கசீபுக்கு ஆசி வழங்கியது.


Sepoys loyal to the Mughal Emperor Aurangzeb maintain 
their positions around the palace, at Aurangabad, in 1658. 

மிக மோசமாக தோல்வியை சந்தித்து டெல்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் டெல்லி விரைந்தது அவுரங்க்சீபின் படை. டெல்லியில் தாரஷிகோவின் படையை சின்னாப்பின்னப்படுத்தினார் 


Aurangzeb becomes emperor.

அவுரங்கசீப். தாரஷிகோ படுதோல்வியடைந்து சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானை சிறைபிடித்தார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீராக முடிசூட்டிக்கொண்டார்.


அவுரங்கசீப் தனது அரசவையில்
இப்போரில் அவுரங்கசீப் வெற்றி பெற்று ஆக்ரா கோட்டைக்குள் நுழைந்து தாராவை விரட்டியடித்தார். ஷாஜகானையும் அடிபணியச் செய்தார். ஆக்ரா கோட்டையில் அந்தப்புறப்பகுதியில் ஷாஐகானை சிறைவைத்தார். ஆனால், அவுரங்கசீப் தமது தந்தையை மோசமாக நடத்தவில்லை. அடுத்த எட்டு ஆண்டுகள் ஷாஜகான் தனது மகள் ஜகனாராவின் அன்பான சேவையில் காலத்தை கழித்தார். 1666ல் ஷாஜகான் இறந்தார். அவரது உடல் தாஜ்மஹாலில் மும்தாஜின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 


பேரரசர் ஆலம்கீர்[தொகு]

அவுரங்கசீப் தனது அரசவையில்

இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமரிசனத்திற்கு உட்பட்டதாகும். தனது ஆட்சியை கந்தகாரிலிருந்து தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினார்.

ஆலம்கீரின் வரலாறு

திறமைமிக்க முகலாய அரசர்களில் அவுரங்கசீப்பும் ஒருவர். அவர் ஆலம்கீர் அல்லது உலகை வெல்பவர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார். முதல் பத்தாண்டுகள் அவர் மேற்கொண்ட படையெடுப்புகள் யாவும் வெற்றியில் முடிந்தன. சிறுசிறு கிளர்ச்சிகளை அவர் நசுக்கினார். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் பிற்பகுதியில் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஜாத்துக்கள், சத்நாமியர்கள் மற்றும் சீக்கியர்களும்கூட அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அக்கிளர்ச்சிகள்யாவும் அவுரங்கசீப்பின் கடுமையான சமயக்கொள்கையின் எதிர்விளைவுகளேயாகும்

மராட்டியரும் இராசபுத்திரரும்[தொகு]
இராசபுத்திரர் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் அவுரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால் மராட்டியர் நட்டை பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியை சிறை பிடித்தார். 


The Mughal Army under the command of Aurangzeb recaptures Orchha in October 1635.
சம்பாஜியின் மகனான சாகுவை கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழக்த்தில் இருந்த செஞ்சி கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளை பிடிக்க எண்ணி முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.

தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு[தொகு]

தென்தென்னிந்தியாவின் நிலப்பகுதிகளை தக்காண பீடபூமி என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலைத்தொடர்களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தார்.1698-பிப்ரவரி 7-இல், அவுரங்கசீப்பின் தளபதி, சூல்பிகார் கான் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக (நவாப்) ஆக்கினார். 


A painting from Padshahnamadepicts Prince Aurangzeb facing a maddened war elephant named Sudhakar.[5]

வெற்றிக் கொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகராக ஐதராபாத் என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், அதிபராக(நிஜாம்=நிசாம்) இருந்து ஆட்சி செய்தவர்களே, ஐதராபாத் நிசாம்கள் என அழைக்கப் பட்டனர். செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய தமிழகம், ஆந்திரம், கன்னட மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்தால், ஜீல்பிகார் கான் கர்நாடக நவாபு என்றே அப்போது அழைக்கப்பட்டார்.பின்னர், 1710 ஆம் ஆண்டில், ஆளுநராக (நவாப்) வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்கு பதிலாக, ஆற்காட்டை தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, ஆற்காட்டு நவாபு என அழைக்கப்பட்டார்.

Aurangzeb seated on a golden throne holding a Hawk in the Durbar. Standing before him is his son, Azam Shah.
இத்தகைய சிறப்பான ஆட்சி மேலாண்மை காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியை கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை ஒருங்கிணைந்த முதல் பேரரசர் என்ற வரலாற்றுப் புகழை அடைந்தார்.

தக்காணக் கொள்கை 

முகலாயரின் தக்காணக் கொள்கை அக்பரின் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. காந்தேஷ், பீரார் ஆகியவற்றை அக்பர் கைப்பற்றினார். அகமது நகரில் மாலிக் ஆம்பருடன் ஜஹாங்கீர் போரிட்டார். ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் தக்காண ஆளுநராக இருந்த அவுரங்கசீப் தீவிரமான தக்காணக் கொள்கையை பின்பற்றினார். 

Aurangzeb seated on the Peacock Throne.
முகலாயப் பேரரசராக பொறுப்பேற்றவுடன் அவுரங்கசீப் தமது ஆட்சிக்காலத்தில் முதல் இருபத்தியைந்து ஆண்டுகள் வடமேற்கு எல்லைப்பகுதியில் கவனம் செலுத்தினார். அத்தருணத்தில்தான் மராட்டிய அரசர் சிவாஜி வடக்கு மற்றும் தெற்கு கொங்கணப்பகுதியில் தனக்கென ஒரு தனி அரசை ஏற்படுத்திக்கொண்டார். 

சொந்த வாழ்க்கை[தொகு]


ஆலம்கீரின் வரலாறு

’ஆலம்கீர்’ எனில் பெர்சிய மொழியில் ‘பிரபஞ்சத்தை வெல்லப் பிறந்தவன்’ என்று பொருள். 1695ல் அவுரங்கசீபை நேரில் பார்த்த இத்தாலியைச் சேர்ந்த பயணி ’கேர்ரி’ என்பவர் எழுதியுள்ள குறிப்புகளின்படி அவுரங்கசீப் அதிக உயரம் இல்லை. அவரது மூக்கு பெரியது. கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு. எளிமையான தோற்றம். ‘நிக்கோலா’வின் கூற்றுப்படி, அவுரங்கசீப் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிக அலங்காரங்கள் கிடையாது. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிவார். அவையும் விலை உயர்ந்த்து இல்லை.

Dagger (Khanjar) of Aurangzeb (Badshah Alamgir).
“ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார்.இஸ்லாத்தினை நன்றாக கடைபிடித்த ஒரே முகலாயமன்னர் இவர் மட்டுமே.எந்த சூழ்நிலையிலும் ஐந்து வேளையும் தொழ த‌வரியதில்லை அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை.

1707ம் ஆண்டு வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீபின் உயிர் பிரிந்தது. அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய உயில் காட்டுகிறது:


அவுரங்கசீப்பின் உயில்[தொகு]

நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.



தன் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற‌ முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள். (முகலாயர்கள், நூலாசிரியர் -முகில், பக். எண் 307-312).


என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்.








No comments:

Post a Comment