Sunday, 10 December 2017

KOOVAM RIVER - IMPORTANCE


KOOVAM RIVER - IMPORTANCE



பக்கிங்ஹாம் கதை என்ன?
கூவம்தான். இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்

உலகின் சொர்க்கபூமியான சிங்கப்பூரைப்போல செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் ‘பக்கிங்ஹாம் கர்நாட்டிக் கால்வாய்.’ 1806-ம் ஆண்டில் சென்னை எண்ணூர் டு பழவேற்காடு (கடல் முகத்துவாரம்) வரையில் கடல் வழி வணிகத்தை தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தோண்டப்பட்டதே இந்த பக்கிங்ஹாம் கால்வாய். பழவேற்காட்டில் இருந்து மெள்ள நகர்த்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் பள்ளம், ஆந்திராவின் விஜயவாடா வரை நகர்ந்து, கிருஷ்ணா நதியின் பாதை வரை கொண்டு செல்லப்பட்டு இணைக்கப் பட்டது.

1886-ம் ஆண்டில் அன்றைய மதராசப்பட்டினத்தில் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒருபுறம் வேலையின்மையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மக்களுக்கும் கூலி, வேலைக்கும் உத்தரவாதம் என்ற அடிப்படையில் பக்கிங்ஹாம் கால்வாயை இன்னும் நீளப்படுத்தும் வேலை இதன் மூலம் மக்களுக்குக் கொடுக்கப் பட்டது. தமிழ்நாட்டின் விழுப்புரம் டு விசாகப்பட்டினம் வரையில் பக்கிங்ஹாம் கால்வாயை மதராஸிகள் தோண்டிக்கொண்டே போனார்கள் (800 கி.மீ்).

கூவம் ஊருக்கு நடுவே உருண்டு திரண்டு வந்தாலும் முடிவில் இயல்பாக கடலை அடைந்தது எப்படியோ, அப்படி இல்லாமல் கடலை ஒட்டியதுபோல இயல்பாக கரையையொட்டி பக்கிங்ஹாமை அமைத்துக் கட்டினர் பிரிட்டிஷார். அதற்கு முதல் காரணம், கடலின் உவர் நீரை கால்வாயில் எளிதில் நிறைத்துக்கொள்ளலாம். இரண்டாவதாக ஊர் நடுவே எளிதில் ஊர்ந்து தரைமுகமாக துறைமுகங்களை நிலை நிறுத்திக்கொள்ளலாம்.

வடக்காக பக்கிங்ஹாம் 17 கி.மீ தூரம், மத்திய சென்னை வாட்டத்தில் 7 கி.மீ தூரம், தெற்கு மார்க்கமாக 24 கி.மீ தூரம் என 48 கி.மீ தூரத்துக்கு சென்னையில் மட்டுமே பக்கிங்ஹாம் கால்வாயின் இயக்கம் இருக்கிறது.

2011-ம் ஆண்டில் சென்னை டு முட்டுக்காடு வரையில் 100 மீட்டர் அகலம், 10 மீட்டர் ஆழத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயைத் தோண்டிச் சீரமைக்க முடிவானது. இதைச் செய்தாலே ஆந்திரா டு தமிழ்நாட்டின் வட மாவட்டம் வரையில் கடல் வழி வர்த்தகம்போல கால்வாய் வழியிலான வர்த்தகம் சாத்தியப்படும். சரக்குக் கப்பல்கள் பயணத்தை எளிதாக்க முடியும். சென்னை முதல் குமரி வரையில் பக்கிங்ஹாம் ரூட்டிலேயே டூரிஸத்தை வளப்படுத்தி, அதன் மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்ட முடியும் என்பதோடு, நீர்வழி வர்த்தகத்தையும் பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் செயல்படுத்தலாம் என்பதே இந்த கால்வாயின் சிறப்பம்சம்.

அதேபோன்று உள்ளூர் வணிகத்துக்கும் இந்த கால்வாய் வழிப் பயணம் பெருத்த லாபத்தை ஈட்டித் தருவதோடு, தொழில் வணிக முதலீட்டாளர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்து உள்ளே வரவழைக்கும்.

ஆந்திராவின் வாசிராபாத், பொல்லாவரம், காக்கிநாடா, விஜயவாடா, மசூலிப்பட்டினம், ஓங்கோல், நெல்லூர் வழியாக நகர்ந்து பழவேற்காடு ரூட் பிடித்து திருவான்மியூர், திருப்போரூர், மாமல்லபுரம் தொட்டு விழுப்புரத்தின் மரக்காணம் வரையில் சரக்குக் கப்பல்களை சாதாரணமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் மிகப் பெரிய உள்ளூர் வணிகத்தின் உயிரோட்டத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயை விட்டால் வேறு மார்க்கம் உருவாக இன்னும் ஒரு நூற்றாண்டு பிடிக்கலாம்.

கூவத்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளையே எதிர்கொள்ள முடியும். பக்கிங்ஹாம் கால்வாயால் வர்த்தகத்தை வளர்த்தெடுத்து, தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும். ஆனால் கூவமும் பக்கிங்ஹாமும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும், கழிவுகளின் மடியிலும் கிடக்கும் வரை மனிதன் தப்பித்து வாழவோ, வருமான வளம் பெறவோ வாய்ப்புகள் இல்லை.


`மக்களால் நாங்கள், மக்களுக்காக நாங்கள்...’ என்று மாறி மாறிச் சொல்லும் ஆட்சியாளர்கள் கூவத்தையும், பக்கிங்ஹாம் கால்வாயையும் மீட்டெடுக்க இதுதான் சரியான நேரம். ஆனால் அதேதான்...
செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?
ஓடுறதுக்கு வேற ஊரு கிடையாது!



கூவத்தின் சீரழிந்த வரலாற்று கதை 

திருவள்ளூர் மாவட்டம், கேசாவரம் எனும் சிற்றூரில் ‘கல்லாறு’-வின் கிளை ஆறுதான் கூவம். `திருவூறல்’ என்றும் `தக்கோலம்’ என்றும் வழங்கப் படும் சைவத் திருத்தலத்தின் மடியில் பிறந்து, அங்கிருந்து சென்னையின் பெரும் பகுதிகளின் வழியாகப் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஊரின் ஊடே ஊடுருவிச் செல்லும் வெண்மை நிறச் சாலையைப் போன்று 50 ஆண்டுகளுக்கு முன் கூவம் வெண்மை பளிச்சிடும் நதியாக இருந்திருக்கிறது.

கடலில், ஆற்றில், ஏரியில் இன்னபிற நீர்நிலைகளில் கிடைக்காத, கூவத்திலேயே உருவாகி மக்கள் பயன்படுத்தக்கூடியதான 70 வகையான மீன் வகைகள் கூவத்தின் நீராதாரச் சொத்து. ஆனால், கடலின் ஆதரவோடு முகத்துவாரப் பகுதிகளில் மட்டுமே அதாவது 30 சதவிகிதப் பகுதிகளில் மட்டுமே இப்போது மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. எஞ்சிய 70 சதவிகிதப் பகுதியானது `உயிரினங்கள் வாழத் தகுதியற்றவை’ என அறியப்பட்டுள்ளது மீன்பிடித் தொழிலோடு வளைந்து நெளிந்து பயணிக்கும் கூவத்தின் அழகான நீர்வழிப் பாதையில் படகுப் போட்டிகளும் நடந்திருக்கின்றன. 

கூவத்தின் மீதான மேம்பாலங்கள் இல்லாத காலங்களில் ஆற்றைக் கடந்து செல்லும் மரப்பலகைகளை மீனவர்களே வலுவாக அமைத்து, அதன் மீது அமர்ந்து வலை வீசியும், தூண்டில் போட்டும் மீன்களைப் பிடித்து வாழ்ந்துள்ளனர். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையானது 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கைத்`தறி' மூலம் துணிகளை நெய்து வாழும் நெசவாளர்களின் வாழ்விடம். இந்தப் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணம் கூவம். `தறி' நெய்யும் வேலைக்குப் பயன்படுகிற அதிகப் படியான நீரை அவர்கள் ஊருக்கு நடுவில் ஓடிய கூவத்தில் இருந்தே எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். நெசவாளர்கள் வாழ்ந்த இந்த `தறிப்பேட்டை'தான் பின் சிந்தாதிரிப்பேட்டையானது.

சைவத்தலம் (தக்கோலம்) ஒன்றில் இருந்து வட மாவட்டத்தில் உருவான ஒரே நதி கூவம் என்பதால், `கூவாத்தம்மன்’ (பின்னாளில் அதுவே `கூழ் வார்த்தம்மன்’ என்று வசதிக்கு ஏற்ப மாறிப் போனது) என்று கூவம் ஓடுகிற பாதைகளில் எல்லாம் அம்மன் கோயில்கள் உருவாகின. அந்த கோயில்களின் பயன்பாட்டுக்கு கூவம் நதிதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கூவத்தின் நீர் வாட்டமும், அதன் வளமான தன்மையும் இயல்பாய் அதன் கரையோரங்களில் பச்சை வயல்களை வளர்த்துக் கொடுத்தது. லம்பாடி இனத்தவர்கள், நாடோடிகள், குறவர் இன மக்கள் இந்தக் கரைப் பகுதிகளில் (கரைகளை சீரழிக்காமல்) கூடாரம் அமைத்து, போகிற போக்கில் தங்கிச் சென்றனர். 

கூவம் நதிக்கரையை ரசித்தபடி நடைப்பயிற்சி மேற்கொண்ட செல்வந்தர்கள் கூடாரங்களில் இருந்தவர்களை விரட்டிவிட்டு அங்கே நிரந்தரப் படகு வீடுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

காலப்போக்கில் படகு வீடுகள் கான்கிரீட் பங்களாக்களாக மாறின. செல்வந்தர்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய வறியவர்களும் அங்கே குடிசைகள் அமைக்க, மக்களின் வாழ்விடமாகியது கூவம்.
வீடுகளில் இருந்தவர்கள் பெரிய சைஸ் குப்பைத் தொட்டியாக கூவத்தைப் பயன்படுத்த... கரையோர ஏழை மக்கள் தங்கள் அன்றாட 'உள்ளே-வெளியே' விஷயங்களுக்கு கூவத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். 

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கும் தன்மை கொஞ்சமும் இராத பிளாஸ்டிக் கழிவுகளும் கூவத்துக்கு வந்து சேர்ந்தன; இப்படித்தான் கூவம் சீரழிய ஆரம்பித்தது.


அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளும் முடிவுகளும்

`கூவம் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் 1967-72-ம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்ட வடிவை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கொண்டுவந்தார். அது கூவத்தில் விழுந்த கல்லாக, குறுகிய காலத்திலேயே அமுங்கிப் போனது.

செல்லூர் ராஜுவின் முன்னோடி கருணாநிதி 



1973-74 இல் கூவம் மணக்கிறது என்று மூடை மூடையாய் கெமிக்கல் மூடையை கொட்டினார் நம்ம கோமாளி தலைவர் 
-
அதில் நிறைய படகுகளும் விடப்பட்டன -தினத்தந்தியில் மாதகணக்கில் முழுப்பக்க விளம்பரங்கள் -


வாருங்கள் ..வாருங்கள் ..என்று 
-
படகு சவாரி செய்தவர்களில் பலர் படகிலையே வாந்தி எடுத்தனர் -கொசுக்கடிக்கு ஆளாயினர் 

-
பார்த்தார் சாணக்கியர் -வண்டலூரில் இருந்து ஒரு முதலையை பிடித்து கூவத்தில் போட்டார் -அரண்டனர் மக்கள் 
-






அப்புறம் படகாவது ...கூவமாவது

2001-ம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவால், 1,200 கோடி ரூபாயில் மத்திய அரசின் நிதியுதவியோடு, ‘சென்னை நதி நீர் பாதுகாப்புத் திட்டம்’ என்ற பெயரில் மீண்டும் கூவம் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. இது கூவத்தில் போடப்பட்ட இரண்டாவது கல்.

2008-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஓடுகின்ற ‘சான்-அன்டோரியோ’ நதியின் பராமரிப்பை, சீர்மிகு பயன்பாட்டை நேரில் கண்டு அதன்படி கூவத்தை மேம்படுத்த ஒருமுறையும், பின்னர் 2009-ம் ஆண்டில் கூவம் சீரமைப்பு எப்படி சாத்தியம் என ஆய்ந்தறிய சிங்கப்பூருக்கு ஒரு முறையும் துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் போய் வந்தார். இது கூவத்தில் போடப்பட்ட மூன்றாவது கல்.

2012-ம் ஆண்டில் ஜெயலலிதா, ‘சென்னை நதி நீர் பாதுகாப்புத் திட்டம்’ கைவிடப்படுவதாக அறிவித்து, கையில் இருந்த நான்காவது கல்லை கூவத்தில் போடாமல் நிறுத்திக்கொண்டார். ஆனால், அந்த முடிவை 2013-ம் ஆண்டில் அவரே மாற்றிக்கொண்டார்.
`கூவம் ஓடுகிற பாதையில் 105 இடங்கள், பக்கிங்ஹாம் கால்வாய் ஓடுகிற பாதையில் 183 இடங்கள், அடையாற்றில் 49 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப் பட்டு தெளிவான நீரோட்டத்துடன் பயணிக்க 300 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். `முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு ஒதுக்கப்படும். பின்னர், 163 கோடி ரூபாய் முதலீட்டில் 158 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு செயல்படுத்தப்படும்’ என்றும் அறிவித்தார் ஜெயலலிதா.

2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கூவத்தைச் சுத்தப்படுத்துதல், சேத்துப்பட்டு ஏரி புனரமைப்பு பணிகள், கூவம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம், மீள் குடியமர்வு, சாலைகள் உள்ளிட்ட இதர ஏழு பணிகளுக்காக 3,800 கோடி ரூபாயை ஒதுக்குவதாகவும், அதற்கென 2,000 கோடி ரூபாயை கடன் பெறுவது என்றும் முடிவெடுத்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்தார். ` ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ இந்தத் திட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும்’ என்றும் தெரிவித்த ஜெயலலிதா, இந்த நிதியாண்டிலேயே அதற்காக 500 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறார்.
இது மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுகளின் கையில் இருந்த ஐந்தாவது கல்லை மீண்டும் போடவைத்திருக்கிறது.

2004-ம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின்போது, பொங்கியெழுந்த கடலின் நீர்த்தாரையை ஒரு வடிகாலாக வெளியில் இருந்து உள்வாங்கிக் கொண்டது கூவம்தான். இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்.




எந்தெந்த ஆட்சியாளர்களோ திட்டம் போட்டும், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும்  செய்ய முடியாத வேலையை இயற்கை ஓரிரு  நாட்களில் செய்து முடித்துவிட்டது.  #ஒரு கூவம் நதியாகி விட்டது

‘கூவத்தைப் பார்த்தீங்களா... எப்படி சுத்தமாகிடுச்சு. இதைச் சுத்தப்படுத்தப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கப்போறதா சொன்னாங்க. ஆனா ஒரு பைசா செலவு இல்லாம மழையே சுத்தப்படுத்திட்டுப் போயிடுச்சு’ - பாலங்களின் மேல் இருந்து கூவம் நதியைப் பார்த்து பிரமிக்கிறார்கள் சென்னைவாசிகள்.
இந்த மழை வெள்ளம், கூவம் கரையோரத்தின் பல்லாயிரம் மக்களைப் பரிதவிக்கவிட்டிருக்கிறது. பல உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது. நதியின் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊரெல்லாம் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. ஆனால், இதன் மறுபக்கமும் இருக்கிறது. கூவம் நதியில் தண்ணீர், அதன் உண்மையான நிறத்துடன் பாய்ந்துசெல்லும் அதிசயத்தை இந்தத் தலைமுறை இப்போதுதான் பார்க்கிறது.
கறுப்பு நிறச் சாக்கடை இல்லை; துர்நாற்றம் நிரம்பிய கழிவுகள் இல்லை. ஒரு பாவத்தைப்போல எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு, கூவம் மறுபிறப்பு எடுத்திருக்கிறது. அதற்காக தாமிரபரணி தண்ணீர்போலத் தூய்மையாக ஓடுகிறது எனப் பொருள் இல்லை. ஆனால் கூவத்தில் இப்போதுதான் ஒரு நதியின் சாயல் பளிச்சிடுகிறது.
கூவம் மட்டுமல்ல... அடையாறும் அதன் அசல் நிறத்தை மீட்டு எடுத்திருக்கிறது. சென்னை நகருக்குள் பாய்ந்தோடும் பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகிய மற்ற நீர்வழித்தடங் களிலும் பாய்ந்து ஓடுகிறது நீர். இது எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதுதான் இப்போது நம் முன்னே இருக்கும் கேள்வி. ‘குறைந்தபட்சம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த நிலைமை நீடித்தாலே அதிசயம். அதற்குள் மறுபடியும் சாக்கடையையும் கழிவு நீரையும் திறந்துவிட்டு பழைய மாதிரி மாற்றிவிடுவார்கள்’ என்பதுதான் பெரும்பாலானோரின் அச்சம்.

கூவம் நதியின் பிறப்பிடம் தொடங்கி, அது கடலில் கலக்குமிடம் வரையிலும் முற்றிலுமாகத் தூய்மையாகி இருக்கிறது. எந்தெந்த ஆட்சியாளர்களோ திட்டம் போட்டும், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் செய்ய முடியாத வேலையை இயற்கை ஓரிரு நாட்களில் செய்து முடித்துவிட்டது. இதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போது நமக்கு முன் உள்ள சவால்!




No comments:

Post a Comment