Sunday 10 December 2017

SUJATHA ,MALAYALAM ACTRESS BORN 1952 DECEMBER 10



SUJATHA ,MALAYALAM ACTRESS 
BORN 1952 DECEMBER 10





சுஜாதா (திசம்பர் 10, 1952 - ஏப்ரல் 6, 2011) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.

பிறப்பு[மூலத்தைத் தொகு]
சுஜாதா, 1952-ம் ஆண்டில், டிசம்பர் 10-ந் தேதி, இலங்கையில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர், கேரள மாநிலம் காலே. அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார்.

வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

1977-ம் ஆண்டில் சுஜாதா, ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். திவ்யா, டாக்டருக்கு படித்து இருக்கிறார்

திரைப்படத்துறையில்[மூலத்தைத் தொகு]
`போலீஸ் ஸ்டேஷன்' என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், `தபஷ்னி' என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் `அவள் ஒரு தொடர்கதை' படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

நடித்த படங்கள்[மூலத்தைத் தொகு]
அவர்கள்,
கடல் மீன்கள்,
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது,
மயங்குகிறாள் ஒரு மாது,
அமைதிப்படை,
விதி,
வில்லன்,
நட்புக்காக,
வரலாறு
அந்தமான் காதலி
பலப்பரீட்சை,
பரீட்சைக்கு நேரமாச்சு
உழைப்பாளி,
பாபா

தெலுங்கு, தமிழ், மலையாளர் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி உள்ளிட்ட வேடங்களில் சுஜாதா நடித்துள்ளார்.
`வரலாறு' படத்தில், அஜீத்குமாரின் அம்மாவாக நடித்து இருந்தார். அதுதான் அவர் நடித்த கடைசி படம். அதன்பிறகு சுஜாதா நடிக்கவில்லை.
மறைவு[மூலத்தைத் தொகு]

இருதய நோயால் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. 6-4-2011 பிற்பகல் 2.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மரணம் அடைந்தார்[2].

No comments:

Post a Comment