Saturday, 9 December 2017

BIKINI ,MOST WANTED SWIM -SUIT IN WORLD



BIKINI ,MOST WANTED SWIM -SUIT IN WORLD






பிகினியை எல்லோருக்கும் தெரியும். பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள். ஆனால் அந்த உடை எப்போது பிறந்தது என்று தெரியுமா.?

பிகினி உடை பிறப்பு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர் லூயிஸ் ரியார்ட்தான் முதன் முதலில் பிகினி உடையை வடிவமைத்து 1946ம் ஆண்டு ஜூலை 5ம் தேதிதான் பிகினி பிறந்த தினமாகும். பாரீஸில் உள்ள பிரபலமான நீச்சல் குளமான பிஸின் மாலிட்டர் என்ற இடத்தில்தான் இந்த பிகினி உடையை முதன் முதலில் அவர் நீச்சல் குளத்தில் இறக்கினார். அப்போது பிரபலமாக இருந்த மிச்சலின் பெர்னார்டினி என்ற மாடல் அழகிதான் உலகின் முதல் பிகினி உடையை அணிந்து பெருமை பொங்க காட்சி அளித்தார்.
பிகினி என்ற பெயர்[மூலத்தைத் தொகு]
பிகினி என்ற பெயர்எப்படி வந்தது தெரியுமா...? நீச்சல் உடையை முதன் முதலில் லூயில் ரியார்ட் அறிமுகப்படுத்திய வாரத்தின் தொடக்கத்தில் பசிபிக் கடலில் உள்ள பிகினி அடால் என்ற இடத்தில் அமெரி்ககா அணு ஆயுத சோதனையை நடத்தியிருந்தது. அந்த சோதனையை நினைவு கூறும் விதமாக தனது நீச்சல் உடைக்கு அவர் பிகினி என்று பெயர் வைத்து விட்டார்.

மாடல் அழகி[மூலத்தைத் தொகு]
முதலில் தனது நீச்சல் உடையை அணிந்து போஸ் தருவதற்கு உரிய மாடல் அழகி கிடைக்காமல் கஷ்டப்பட்டாராம் ரியார்ட். காரணம், யாருமே அப்போது அந்த டூ பீஸ் உடையை போட்டுக் கொள்ள தயங்கினராம். இதையடுத்தே மிச்சலினை அணுகினார். அவரும் ஒத்துக் கொள்ளவே முதல் பிகினிக்கு ஏற்ற உடல் கிடைத்த சந்தோஷத்தை அடைந்தார் ரியார்ட். கிட்டத்தட்ட நிர்வாணம் என்று சொல்லக்கூடிய வகையில் மிச்சலின் அணிந்த பிகினி உடை இருந்தது. இருந்தாலும் அதை சற்றும் கூச்சமில்லாமல் போட்டுக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் முன்பு தோன்றினார் மிச்சலின். முதன் முதலில் அறிமுகமான அந்த நீச்சல் உடை எடுத்த எடுப்பிலேயே ஹிட் ஆகி விட்டது.[1]



ஆதரவு[மூலத்தைத் தொகு]

ஆண்களும், பெண்களும் அந்த உடைக்கு பெருத்த ஆதரவு கொடுத்தனர். இந்த உடையைப் பாராட்டி கிட்டத்தட்ட 50,000 கடிதங்கள் வந்ததாம் ரியார்டுக்கு. இருப்பினும் ஐரோப்பிய பெண்கள் அதற்கு முன்பே பிகினி போன்ற உடைகளை அணிந்து வந்தவர்கள்தான். 1930களில் குளிக்கப் போகும்போது மேலும், கீழும் மறைக்கும் வகையிலான துணிகளை அணிந்துதான் ஐரோப்பிய பெண்கள் குளிப்பார்களாம். அதேசமயம், அந்த உடை கவர்ச்சிகரமானதாக இல்லை. தொப்புள் தெரியாத வகையில், அந்த உடை இருக்குமாம். அமெரிக்காவிலும் கூட இரண்டாம் உலகப் போரின்போது நீச்சல் உடை போன்ற டூபீஸ் உடைகளை அமெரிக்கப் பெண்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

உலக அங்கீகாரம்[மூலத்தைத் தொகு]
முதல் பிகினி உடையை ரியார்ட் அறிமுகப்படுத்திய பின்னர் ஐரோப்பிய நாடுகளில் அந்த உடையைப் போட்டுக் கொண்டு கடற்கரைகளில் குளிப்பது அதிகரித்தது. இருப்பினும் அமெரிக்காவில் 1960 வரை பொது இடங்களில் இதுபோன்ற டூ பீஸ் உடைகளைப் போட கடும்எதிர்ப்பு இருந்தது. அதன் பிறகுதான் படிப்படியாக நிலைமை மாறி அமெரிக்கர்களும் பிகினிக்குள் புக ஆரம்பித்தனர்.




பிகினி என்பது பெண்கள் அணியும் டூபீஸ் நீச்சலுடை. இதில் ஒரு பீஸ் ப்ரேஸியர் போல் மேலே மார்பிலும் மற்ற பீஸ் பேண்டீஸ் போல் கீழே இடுப்பிலும் அணிவர். பிகினி அணியும் பெண்கள் அந்தரங்கங்கள் மற்றும் அவை சார்ந்த பிர‌தேசங்களின் ரோமங்களை மழித்த‌கற்றி விடுகின்றனர். இதற்கு பிகினி வேக்ஸிங் என்று பெயர்.

கிமு 1600ல் கிரேக்க‌ மினோயன் நாகரிகத்தின் சுவற்றோவியங்களில், தாழிகளில் பெண்கள் டூபீஸ் உடையில் காட்சியளிக்கின்றனர். கிபி 100ம் ஆண்டைச் சேர்ந்த சிலையில் கிரேக்க பெண் கட‌வுள் வீனஸ் பிகினியில் காட்சியளிக்கிறார். கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த Villa Romana Del Casaleன் ரோமானிய மொசைக்களில் எட்டு பெண் அத்லெட்கள் பிகினிய‌ணிந்து விளையாடும் ஓவியம் இடம் பெற்றிருக்கிறது.


இதற்கு பிறகு பிகினி 19ம் நூற்றாண்டின் மத்தியில்தான் மறுபடி எட்டிப்பார்க்கிறது. 1890களில் விக்டோரியன் காலத்துப் பெண்டிர் பொதுவில் பிகினி அணிய கூச்சம் கொண்டு பல தந்திரோபாயங்களைக் கையாண்டிருக்கின்றனர். குளியல் இயந்திரம் என்ற உடைமாற்றும் அறைகொண்ட மரவண்டி அதில் முக்கியமானது (இன்றைய நடிகைகளின் கேராவன்களுக்கு ஒப்பானது). குளிக்கும் பெண் சாதாரண உடையில் வண்டியில் ஏறுவாள். குதிரை (சமயங்களில் மனிதர்கள்‌) வண்டியை கடலுக்குள் இழுத்துச் செல்லும். அவள் அந்த வண்டிக்குள்ளேயே பிகினிக்கு மாறி கடலுக்குள் இறங்குவாள். இவ்வாறு ஆண்களின் பார்வையிலிருந்து சுலபமாய்த் தப்பித்தார்கள்.

1907ல் ஆஸ்திரேலிய மௌனப்பட நடிகை மற்றும் நீச்சல் வீராங்கனையான அன்னெட் கெல்லர்மேன் போஸ்டனின் ரெவரே பீச்சில் இறுக்கமான ஸ்லீவ்லெஸ் நீச்சலுடை அணிந்துவந்த காரணத்துக்காக கைதுசெய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பெண்கள் நீச்சலுடை அணிந்து வருகிறார்களா என போலீஸ்காரர்கள் அளந்து சோதிப்பது அப்போது அமெரிக்க‌ பீச்களில் சகஜமான காட்சியாக இருந்தது.


1913 ஒலிம்பிக்கில் கார்ல் ஜேண்ட்சென் விளையாடும் போது வசதியாக இருக்கும் பொருட்டு இறுக்கமான ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட் என‌ டூபீஸ் உடையில் கலந்து கொண்டார். 1915ல் மல்லியாட் என்ற ஒன்பீஸ் உடை (தற்போது ஜிம்னாஸ்டிக்ஸ் பெண்கள் அணிவ‌து போன்றது) அமெரிக்க பெண்கள் மத்தியில் பிரபலமானது.


1930களில் ஐரோப்பிய பெண்கள் முதன்முதலாக டூபீஸ் நீச்சலுடை அணிந்தனர். ஹால்டர் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் கொண்ட அதில் இரு பீஸ்களுக்குமிடையே இடுப்புன் சிறுபகுதி மட்டுமே கீற்று போல் தீற்றலாய்க் காட்சியளிக்கும். தொப்புள் தெரியாது. மேக் சென்னெட்டின் Bathing Beauties, டோரதி லாமோர் நடிந்த Hurricane, My Favorite Brunette ஆகிய படங்களிலும், 1948ல் வெளியான Life இதழின் அட்டைப் படத்திலும் இந்த சைவ பிகினி இடம் பெற்றது. அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் உடைகளின் ரேஷன் முறை புழக்கத்தில் இருந்த சமயம் தான் இந்த வகை பிகினி உள்ளே நுழைந்தது. 1940களின் ஆரம்பத்தில் அவா கார்ட்னர், ரீடா ஹேவொர்த், நானா டர்னர் போன்ற ஹாலிவுட் நடிகைகள் அமெரிக்க பீச்களில் இந்த நீச்சலுடையில் வலம் வருவது சகஜமாக இருந்தது.


ஐரோப்பாவிலோ போர் காரணமாக கடற்கரைகள் செறிச்சோடிக் காட்சியளித்தன. இதனால் நீச்சலுடைகளில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. போர் முடிந்த 1946ன் கோடைக்காலத்தில் தான் அங்கே மீண்டுமொரு சுதந்திர உணர்ச்சி மெல்ல ஊடுருவியது. Nuts என்ற ஆண்கள் பத்திரிக்கை ஆசிரியர் டொமினிக் ஸ்மித் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் “போருக்கு பின் பூமியில் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பக் கொண்டு வரும் ஒரு சங்கதி மனிதகுலத்துக்குத் தேவைப்ப‌ட்டது. அது தான் பிகினி” என்கிறார். போருக்குப் பின்னர் பிகினி ஆராய்ச்சி களை கட்டியது.


ஜேக்ஸ் ஹெய்ம் என்ற ஃப்ரெஞ்சு டிசைனர் சிறிய நீச்சலுடை ஒன்றை உருவாக்கி அதற்கு atome என்று பெயர் இட்டார் (அணு என்பதற்கான பிரெஞ்சுச் சொல் அது). தன் தயாரிப்பை “உலகின் மிகச்சிறிய குளியல் உடை” என விளம்பரம் செய்தார்.


இதற்கு மூன்று வாரங்களுக்குப்பின் ஜூலை 5, 1946ல் ஃபிரெஞ்சு டிசைனர் லூயி ரியர்ட் என்பவர் மற்றொரு சிறிய நீச்சலுடையை “உலகின் மிகச்சிறிய குளியல் உடையை விட சிறியது” என்ற போட்டி விளம்பரத்துடன் அறிமுகப்படுத்தினார்.


நிறையப் பேர் மறுத்த பின் மிகுந்த சிரமத்துக்கிடையே மிச்சலின் பெர்னார்டினி என்ற பெண்ணை மாடலாகப் பிடித்து, இதை அணியச்செய்து பிஸ்கின் மொலிடர் என்ற பாரிஸின் புகழ்பெற்ற நீச்சல்குளத்தில் புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் வெளியிட்டார். அது மிகப்பெரிய ஹிட். 50,000 வாசகர் கடிதங்கள் வந்தன அதற்கு!


அமெரிக்கா அப்போது தான் பசிஃபிக் பெருங்கடலிலிருக்கும் மார்ஷல் தீவுகளில் பிகினி அடோல் என்ற இடத்தில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தி, பரபரப்பாக மீடியாக்களில் அடிபட்டுக் கொண்டிருந்த சமயம். அதையொட்டியே ரியர்ட் தன் சிறிய‌ நீச்சலுடைக்கு பிகினி என்று பெயரிட்டார். நவீன நீச்சலுடை பிறந்தது.


ரியர்டின் வியாபாரம் பெருகியது. பிகினி தயாரிப்பு நிறுவனங்கள் புற்றீசலாய்ப் பெருகின. “ஒரு நல்ல பிகினி என்பது ஒரு திருமண மோதிரத்தினுள் சுலபமாய் நுழைத்து வெளியே எடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்” என்றார் ரியர்ட்.


ஃப்ரெல் கோல் என்ற அமெரிக்க டிசைனர் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் “ஃப்ரெஞ்சுப்பெண்களுக்கு குட்டையான கால்கள், அதனால் அவர்கள் கால்களை நீளமாய்க் காட்டும் நோக்கிலேயே பிகினிக்கள் உருவாக்கப்பட்டன” என்றார்.


பிரான்ஸில் பிகினி பரவினாலும் பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிகினி தடைசெய்யப்பட்டது. வாடிகனில் பிகினிய‌ணிவது பாவம் என்று அறிவிக்கப்பட்டது. 1951ல் லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டிக்குப்பின் உலகெங்கிலும் பிகினி தடை செய்யப்பட்டது. 1950களின் இறுதி வரை அமெரிக்க பீச்களில் பிகினி காணுவது அரிதாகவே இருந்தது. 1960களின் மத்தியில் ஹிப்பிகள் கலாசாரம் வரும் வரை பிகினி அமெரிக்காவில் எதிர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.


எஸ்தர் வில்லியம்ஸ் என்ற நடிகை பல‌ படங்களில் நீச்சலுடையில் தோன்றினார். மார்கிட் ஃபெல்லெகி என்ற ஆடை வடிவமைப்பாளர் பிகினி டிசைன்களில் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். Catalina என்ற பிகினி தயாரிப்பு நிறுவனம் ஜிஞ்சர் ரோஜர்ஸ் மற்றும் மர்லின் மன்றோ ஆகியோரை விளம்பர மாடல்களாகப் பயன்படுத்தியது.


1957 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்த‌ நடிகை ப்ரிகிட்டி பார்காட் ஃபிரான்ஸ் கடற்கரைகளில் பிகினியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. 1960ல் பாப் பாடகர் ப்ரயன் ஹைலேண்ட் “Itsy Bitsy Teenie Weenie Yellow Polka Dot Bikini.” என்ற பாடலின் மூலம் பிகினியை பிரபலம் ஆக்கினார். 1962. Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பெல்ட்டுடன் கூடிய‌ வெண் பிகினி அணிந்து நடிகை உர்சுலா ஆன்ட்ரஸ் தோன்றிய காட்சி மிகப் பிரபலம். (2001ல் இந்த பிகினி 61,500 டாலர்களுக்கு ஏலம் போனது. நாற்பதாண்டுகளுக்குப் பின் இதை நினைவூட்டும் வண்ணம் Die Another Day படத்தில் ஹேல் பெர்ரி இதே மாடல் நீச்சலுடையை அணிந்து நடித்தார்).


1962ல் Playboy பத்திரிக்கை அட்டைப்படத்தில் பிகினி மாடலை அச்சிட்டது. 1963ல் அன்னெட்டி ஃபுனிசெல்லொ பிகினி அணிந்து Beach Party, How To Stuff a Wild Bikini ஆகிய படங்களில் தோன்றினார். அதே ஆண்டில் Beach Boys குழு California Girls, Surfin’ Safari போன்ற பிகினியை விதந்தோதும் பாடல்களைப் பாடி வெளியிட்டது.


Sports Illustrated இதழ் தான் முதன் முதலில் பிகினியை அட்டைப்படத்தில் போட்ட வெகுஜனப் பத்திரிக்கை. 1964ன் குளிர்காலத்தில் எந்த முக்கிய விளையாட்டுகளும் இல்லாது போக, அதன் ஆசிரியரான‌ ஆன்ட்ரே லாகுவரே ஃபேஷன் நிருபர் ஜூல் கேம்ப்பெல் என்பவரை பக்கங்கள் நிரப்ப ஏதாவது விஷயம் செய்து தரச்சொல்லிக் கேட்க, அவர் பேபட் மார்ச் என்ற பிகினி மாடலை அட்டைப்படத்தில் போட்டார்.


1966ல் வெளியான One Million Years B.C. படத்தில் கற்கால குகை வாசிப் பெண்ணாக‌நடிகை ராக்குவல் வெல்ச் மிருகத்தோலால் ஆன பிகினி அணிந்து தோன்றினார்.




பிகினியானது மெல்ல மெல்ல அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ப் பரவியது.


1964ல் ரூடி கெர்ன்ரீச் என்பவர் மோனோகினியை அறிமுகப்படுத்தினார். மார்புகள் மறைக்காமல் ஸ்ட்ராப்கள் கீழாடையுடன் இணைக்கப்பட்ட ஒன்பீஸ் உடை இவை.


1967ல் இந்தியாவில் முதன்முதலாக ஷர்மிளா தாகூர் An Evening in Paris படத்தில் பிகினியில் நடித்தார், Filmfare இதழின் அட்டைக்கு பிகினியில் போஸ் கொடுத்தார்.


1960களின் இறுதியில் பிரான்ஸின் கடற்கறையான ஃப்ரெஞ்ச் ரிவியெரா ஸ்ட்ரிங் பிகினி என்ற மிகச்சிறிய நீச்சலுடை பரவலாக‌ முக்கியக் காரணமாக இருந்தது. 1970களில் அமேஸான் காடுகளின் பழங்குடியினத்தவர் அணியும் ஆடையை ஒட்டி பிரேஸிலில் ரியோ, செயிண்ட் ட்ரோபெஸ் ஆகியோரால் தாங் பிகினி அறிமுகம் செய்யப்பட்டது. பிருஷ்டத்தை மறைக்காது முழுக்கக் காட்டும் வகையில் இவை


கயிறால் அமைந்தவை. 1980களில் தாங் பிகினிக்கள் அமெரிக்காவில் நுழைந்தது.


1976ல் ஃபாரா ஃபாவ்செட் அணிந்த ஒன்பீஸ் பிகினி பிரபலம். 1983ல் பீச்களிலிருந்து வெளியே வந்து விண்வெளியில் பிகினி நுழந்தது. Star Wars: Episode VI – Return of the Jedi படத்தில் இளவரசி லெயாவாக‌ நடிகை கேரி ஃபிஷர் பிகினிய‌ணிந்து நடித்தார். 1989 முதல் 1999 வரை மிகப்பிரபலமான‌ Bay Watch டிவி சீரியல் ஒளிபரப்பானது. பமீலா ஆண்டர்சென் இதன் மூலம் புகழ்பெற்றார். 1997ல் கேப்ரியல் ரீஸ் பிகினி அணிந்து பீச் வாலிபால் விளையாட்டை பிரபலமாக்க விளம்பரங்களில் நடித்தார்.


2006ல் சச்சா பேரான் கோஹென் என்பவர் ஆண்களுக்கான பிகினியான மேன்கினி என்பதை அறிமுகப்படுத்தினார். சுமாராய் விற்றது. 2009ல் கேட்டி பெர்ரி புகழ்பெற்ற பச்சை பிகினியில் தோன்றினார். 2010ல் சேவோபௌலோ பேஷன் நிகழ்வில் ஈவா ஹெர்ஸொகோவா லெதர்பிகினியை முதன்முறையாக வெளியுடையாக அணிந்து வந்தார். 2011ல் நடிகை கைனெத் பால்ட்ரோ தன் இரு குழந்தைகளுடன் சிக்கென்ற உடலுடன் பிகினியில் இருந்த படங்கள் வெளியாகி மத்திம‌ பெண்கள் மத்தியில் பொறாமையைக் கிளப்பியது. 2012ல் கேட் அப்டன் Sports Illustrated அட்டைப்படத்தில் மிக மிக மிகச் சிறிய‌ பிகினியில் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


2006ல் சூஸன் ரோசென் தயாரித்த 150 கேரட் வைரங்கள் பதிக்கப்பட்ட பிகினி உலகின் மிக விலை அதிகமானதாகும் – விலை 20 மில்லியன் பவுண்ட்கள்.


நுமோகினி, ஸீகினி, டேங்கினி, கேமிகினி, தாங்கினி, ஹிகினி, மினிமினி,மைக்ரோ டியர்ட்ராப், ஸ்லிங்ஷாட் எனப் பலவகை பிகினி இன்று புழக்கத்தில் இருக்கின்றன.‌


மற்ற உடைகளின் கவர்ச்சியானது அவை வெளிக்காட்டும் பகுதிகளில் இருக்கிறது. ஆனால் பிகினியின் கவர்ச்சியோ அது மறைத்திருக்கும் இடங்களில் இருக்கிறது!







A Brief History of the Bikini

How the tiny swimsuit conquered America.

This holiday weekend, Americans will be cavorting on the beach, many of them in swimwear that covers as little as possible. In 2006, Julia Turner traced the history of the bikini to explain its exploding popularity. The article is reprinted below.
Micheline Bernardini, 1946.
Micheline Bernardini, 1946.
Photo courtesy Wikimedia Commons
Sixty years ago, the world’s first bikini made its debut at a poolside fashion show in Paris. The swimsuit is now so ubiquitous—and comparatively so demure—that it’s hard to comprehend how shocking people once found it. When the bikini first arrived, its revealing cut scandalized even the French fashion models who were supposed to wear it; they refused, and the original designer had to enlist a stripper instead. The images below illustrate how the bikini slowly gained acceptance—first on the Riviera, then in the United States—and became a beachfront staple.
When the bikini was unveiled in 1946, it was by no means the first time that women had worn so revealing a garment in public. In the fourth century, for example, Roman gymnasts wore bandeau tops, bikini bottoms, and even anklets that would look perfectly at home on the beaches of Southern California today.
Image of the "bikini girls" mosaic at the Piazza Armerina in Sicily.
Image of the “bikini girls” mosaic at the Piazza Armerina in Sicily.
Photo courtesy Wikimedia Commons
At the turn of the 20th century, though, such displays would have been unthinkable. Female swimmers went to extraordinary lengths to conceal themselves at the beach. They wore voluminous bathing costumes and even made use of a peculiar Victorian contraption called the bathing machine, essentially a small wooden or canvas hut on wheels. The bather entered the machine fully dressed and donned her swimming clothes inside. Then, horses (or occasionally humans) pulled the cart into the surf. The bather would disembark on the seaside, where she could take a dip without being observed from the shore.
Woman perching on the edge of a bathing machine at an Ostend, Belgium, beach.
Woman perching on the edge of a bathing machine at an Ostend, Belgium, beach.
Photo by Topical Press Agency/Getty Images
Annette Kellerman circa 1905.
Annette Kellerman circa 1905.
Photo by Hulton Archive/Getty Images
In the decades that followed, the seaside dress code loosened up considerably. In 1907, Australian swimmer and silent-film star Annette Kellerman—a vocal advocate of more hydrodynamic swimwear—was charged with indecent exposure for appearing on Boston’s Revere Beach in a form-fitting, sleeveless tank suit. The ensuing high-profile legal scuffle led beaches across the nation to relax their swimwear restrictions. By 1915, American women commonly wore one-piece knitted maillots.
Oddly enough, the two-piece swimsuit—which usually consisted of a structured halter top and modest bottom that covered the navel, hips, and derrière—arrived with much less fanfare than the bikini. By the early ‘40s, film stars including Ava Gardner, Rita Hayworth, and Lana Turner were all wearing the two-piece, and it was seen frequently on American beaches. Why were the inches of skin above the bellybutton so much less controversial than those below it? Hollywood’s Hays production codes allowed two-piece gowns but prohibited navels on-screen. That meant the rib cage earned a ho-hum reputation, but the bellybutton was uncharted territory.
Ava Gardner, Hollywood California, 1941.
Ava Gardner, Hollywood, Calif., 1941.
Photo by SNAP/Zuma Press
In the 1940s—as Kelly Killoren Bensimon details in The Bikini Book—attractive women were known as “bombshells,” and anything intense was “atomic.” So, when two Frenchmen independently designed skimpy alternatives to the two-piece in the summer of 1946, both suits got nuclear nicknames. The first designer, Jacques Heim, created a tiny suit called the atome. The second, Louis Reard, introduced his design on July 5, four days after the United States had begun atomic testing in the Bikini Atoll. In a rather bold marketing ploy, Reard named his creation le bikini, implying it was as momentous an invention as the new bomb.
Thanks to its provocative name and cut, the bikini made international headlines. Photos of Micheline Bernardini, the stripper Reard had enlisted to model it, circulated across the globe. But in the United States, women—including actresses in movies like 1947’s My Favorite Brunette and the model on this 1948 cover of Life magazine—stuck with the traditional two-piece.
Poster of My Favorite Brunette, 1947.
Poster of My Favorite Brunette, 1947.
Image courtesy Everett Collection
In 1950, Time interviewed American swimsuit mogul Fred Cole and reported that he had “little but scorn for France’s famed Bikini bathing suits,” because they were designed for diminutive Gallic women. “French girls have short legs,” he explained to Time. “Swimsuits have to be hiked up at the sides to make their legs look longer.”
Brigitte Bardot
Brigitte Bardot at the 6th International Cannes Film Festival, 1953.
Photo by LIDO/SIPA
Whether or not the thong ever makes it out of the lingerie drawer, though, the bikini is here to stay. Still, like most sexagenarians, it’s gotten a bit tame: It still has the power to titillate, but it’s lost the power to shock.
Just three summers later, though, the bikini had established a beachhead on these shores. This was in large part because of the increasing popularity of the private pool, which gave women a secluded place to test out the new look. A Neiman Marcus buyer classified the bikini as “a big thing” for 1960. Brian Hyland also had a hit that year with the song “Itsy Bitsy, Teenie Weenie, Yellow Polka Dot Bikini,” which takes on new meaning when you realize the swimsuit was still catching on at the time. No wonder the song’s protagonist was “afraid to come out of the water.”
Bikini beach scene, 1965.
Bikini beach scene, 1965.
Photo by Michael Irwin/Rex Features

No comments:

Post a Comment