Sunday 17 September 2017

KARUKURICHI ARUNACHALAM ,DIVINE MUSICIAN



KARUKURICHI ARUNACHALAM ,DIVINE MUSICIAN




திருநெல்வேலி, பிரபல நாதஸ்வர கலைஞர், காருகுறிச்சிஅருணாசலத்தின் சொந்த கிராமத்தில், அவரது சிலை யை சுற்றி, புதர் மண்டி கிடக்கிறது. 'அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்' என, கிராமத்தினர்வலியுறுத்தி உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்துள்ளது காருகுறிச்சி கிராமம். மறைந்த பிரபல நாதஸ்வர கலைஞர் அருணாசலம் பிறந்த ஊர். அவரது தந்தை பலவேசம், கோவிலில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார்.
சினிமா துறைஅங்குள்ள பண்ணையார் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நாதஸ்வரம் வாசிக்க, கூறை நாடு நடேச பிள்ளை என்ற நாதஸ்வர வித்வான்வந்திருந்தார்.அவருக்கு தரப்பட்ட மரியாதையை பார்த்த பலவேசம், தாமும் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள விரும்பினார். அது முடியாமல் போகவே, தன் மகன் அருணாசலத்தை, சிறு வயதில் அதற்காக பழக்கினார்.

திருவாவடுதுறை ராஜரத்தினத்திடம், தன் மகனை நாதஸ்வரம் கற்க அனுப்பி வைத்தார். குருகுல வாசம் போல, அவரிடம் இசையை கற்றுத் தேர்ந்த அருணாசலம், பின்னாளில் சினிமா துறையிலும் கோலோச்சினார்.கொஞ்சும் சலங்கை என்ற படத்தில், எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாதஸ்வரம் வாசித்துள்ள, சிங்காரவேலனே தேவா' என்ற பாடல் மிகவும் பிரபலம்.சென்னை தமிழிசை சங்கத்தின் இசை விழாவில், அருணாசலத்தின் நாதஸ்வர கச்சேரியை, வானொலி நிலையம், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பியது.


அருணாசலத்தின் கச்சேரிக்குப் புகழ் பெற்ற தவில் கலைஞர்கள் கும்பகோணம் தங்கவேல், வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர், தவில் வாசித்துள்ளனர்.அவருக்கு சங்கீத கலாநிதி விருதை, அரசு வழங்கியது. காருகுறிச்சியை விட்டு, கோவில்பட்டிக்கு புலம் பெயர்ந்த அருணாசலத்தின் வீட்டு கிரக பிரவேச நிகழ்ச்சியில், நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும், வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறிய சம்பவம், இன்றளவும் காருகுறிச்சியில் பெருமையாக பேசப்படுகிறது.
கோரிக்கை

காருகுறிச்சி கிராமத்தின் முகப்பில், நாதஸ்வரத்தை கையில் பிடித்தாற் போல, அருணாசலத்தின் சிமென்ட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை பராமரிப்பின்றி, சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. அவரது பூர்வீக வீட்டையும் யாரோ வாங்கி விட்டனர்.காருகுறிச்சியில், அனேக மாக எல்லோரது வீடுகளிலும், அருணாசலம் நாதஸ்வரம் வாசிக்கும் படமோ, அவர் நேரு, காமராஜ் போன்றோருடன் இருக்கும் கருப்பு, வெள்ளை படங்களோ சுவற்றில் இடம் பிடித்திருக்கின்றன.

1907ல் பிறந்து, 1964ல் மறைந்த இசை மேதைக்கு, காருகுறிச்சியில் நினைவிடம் அமைக்க வேண்டும்என்பதே, அந்த ஊர் மக்களின் கோரிக்கை.மேலும், 'அங்கு, அவரது இசைத்தட்டுகள், பழைய புகைப்படங்கள் போன்றவற்றை, காட்சிப்படுத்த வேண்டும்; அதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும், காருகுறிச்சி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment