MARY ,THE MOTHER OF JESUS BORN
SEPTEMBER 8,20 B.C
கடவுளான இயேசு மரியா
(பிறப்பு செப்டம்பர் 8,20 BC )
கடவுளான இயேசு மரியா (பிறப்பு செப்டம்பர் 8,20 BC )வின் வழியாக பிறந்ததால் இவர் கடவுளின் தாய் என கத்தோலிக்கர்களால் ஏற்கப்படுகின்றார்
கத்தோலிக்க திருச்சபையில் மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கமானது கத்தோலிக்க மரபு, மறையுண்மைகள் மற்றும் விவிலிய அடிப்படையிலானது.[2]
கடவுளான இயேசு மரியாவின் வழியாக பிறந்ததால் இவர் கடவுளின் தாய் என கத்தோலிக்கர்களால் ஏற்கப்படுகின்றார். கி.பி 431இல் நிகழ்த எபேசு பொதுச்சங்கத்திலிருந்து இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வரையும், அதனைக்கடந்தும் மரியா கடவுளின் தாய் எனவும், திருச்சபையின் தாய் எனவும் போற்றப்படுகின்றார். திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் தனது மீட்பரின் தாய் (Redemptoris Mater) என்னும் சுற்றுமடலில் மரியாவை திருச்சபையின் தாய் என அழைத்துள்ளார்.
மரியாவின் வாழ்வு[தொகு]
புனித கன்னி மரியாவின் வாழ்வு பற்றிய தகவல்கள் பழங்கால கிறிஸ்தவ மரபின் அடிப்படையில் இங்குத் தரப்படுகிறது.
குழந்தைப் பருவம்[தொகு]
எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான யோவாக்கிம் (சுவக்கீன்), அவரது மனைவி அன்னா (அன்னம்மாள்) இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியா (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.
மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாவை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். மரியா ஆலய கல்வி சாலையில் எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியா ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.
இயேசுவின் அன்னை[தொகு]
தாவீது அரசரின் வழிமரபினரான மரியாவுக்கு பதினான்கு வயதானபோது, அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. எருசலேமில் இருந்த தாவீது குலத்து இளைஞர்கள் அனைவரும் சுயம்வரத்திற்கு அழைப்பு பெற்றனர். அவர்களில் தச்சுத் தொழிலாளரான யோசேப்பை இறைவன் தேர்ந்தெடுத்தார். மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமணம் நடைபெற்றது. மரியாவைத் தனது வீட்டில் விட்டுவிட்டு கட்டட வேலைகளுக்காக யோசேப்பு வெளியூர் சென்றார். அந்த வேளையில்தான் வானதூதர் கபிரியேல் இயேசுவின் பிறப்பை மரியாவுக்கு அறிவித்தார்; எலிசபெத் பேறுகாலமாக இருந்ததையும் தெரிவித்தார். மரியா தனது உறவினரான எலிசபெத்துக்கு உதவி செய்ய யூதேயாவுக்கு புறப்பட்டு சென்றார்.
மரியா அங்கிருந்து திரும்பியபோது மூன்று மாத கர்ப்பிணியாக நாசரேத் வந்து சேர்ந்தார். அதனால் யோசேப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. கனவில் வானதூதர் உண்மையை உணர்த்தியதால் மரியாவை யோசேப்பு ஏற்றுக்கொண்டார். அவர்கள் இருவரும் பெத்லகேம் சென்றிருந்த வேளையில் இயேசு பிறந்தார். நாற்பதாம் நாளில் அவர்கள் இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். அப்போது அங்கு வந்திருந்த இறைவாக்கினர் சிமியோன் மரியாவின் வியாகுலங்களை முன்னறிவித்தார். பின்பு மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் நாசரேத் திரும்பினர்.
திருக்குடும்பத் தலைவி[தொகு]
இயேசுவுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். அப்போது இயேசு ஆலயத்திலேயே தங்கிவிட்டார். மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அங்கும் இங்கும் அலைந்து அவரைக் கண்டுபிடித்தனர். அவர்களோடு வீடு திரும்பிய இயேசு பெற்றோருக்கு பணிந்து நடந்தார். இயேசு யோசேப்புக்கும், மரியாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். திருக்குடும்பத்தின் தலைவியான மரியா யோசேப்புக்கு நல்ல மனைவியாகவும், இயேசுவுக்கு நல்ல தாயாகவும் விளங்கினார்.மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு சிறந்த வளர்ப்பு தந்தையாகவும் இருந்த யோசேப்பு தனது முதுமையில் இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க பாக்கியமான மரணம் அடைந்தார். அதன்பின் சிறிது காலம் வரை இயேசு தச்சுத்தொழில் செய்துவந்தார்.
கிறிஸ்தவர்களின் தாய்[தொகு]
இறைமகன் இயேசு தனது முப்பதாம் வயதில், யோவானிடம் திருமுழுக்கு பெற்று தனது இறையரசு பணியைத் தொடங்கினார். இயேசுவின் பணிவாழ்வில் மரியாவும் அவரைப் பின்தொடர்ந்தார். இயேசு கிறிஸ்து செய்த முதல் புதுமையே மரியாவின் பரிந்துரையால்தான் நடைபெற்றது. இயேசுவின் பெண் சீடர்களுள் ஒருவராக மரியாவும் இருந்தார். இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மரியா பங்கேற்றார். சிலுவையின் அடியில் வியாகுலத் தாயாக நின்ற மரியாவை இயேசு தனது சீடர்கள் (கிறிஸ்தவர்கள்) அனைவருக்கும் தாயாகத் தந்தார். இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றுக்கு பிறகு இயேசுவின் சீடர்கள் அனைவரும் மரியாவின் வழிகாட்டுதலின்படியே வாழ்ந்து வந்தனர். தூய ஆவி திருத்தூதர்கள்மீது பொழியப்பட்ட வேளையில் மரியாவும் அவர்களோடு இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தார். திருத்தூதர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க சென்றபின் திருத்தூதர் யோவானின் பாதுகாப்பில் மரியா வாழ்ந்து வந்தார்.
விண்ணக அரசி[தொகு]
மரியாவின் மரண காலம் நெருங்கி வந்ததும், திருத்தூதர்கள் அனைவரும் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எருசலேம் நோக்கி விரைந்தனர். தோமா தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் மரியா மரணம் அடைந்தார். யூத வழக்கப்படி மரியாவின் உடலை திருத்தூதர்கள் விரைவில் அடக்கம் செய்துவிட்டனர். தாமதமாக எருசலேம் வந்து சேர்ந்த தோமா, மரியாவிடம் இறுதி ஆசீர் பெற முடியாமல் போனது குறித்து மனம் வருந்தினார். எனவே அவரது முகத்தையாவது ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்பினார்.
திருத்தூதர்கள் அனைவரும் மரியாவை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்றனர். கல்லறை திறக்கப்பட்டது; ஆனால் உள்ளே மரியாவின் உடல் இல்லை. விண்ணக நறுமணம் அங்கே வீசியது. இறைமகன் இயேசு தனது அன்னையின் உடலை அழிவுற விடாமல், மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார் என்று திருத்தூதர்கள் நம்பினர். பின்பு அன்னை மரியா தோமாவுக்கு காட்சி அளித்து, தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதிசெய்தார் என்று மரபுவழி செய்திகள் கூறுகின்றன.
மரியாவின் காட்சிகள்[தொகு]
முதன்மைக் கட்டுரை: மரியாவின் காட்சிகள்
உலக வரலாற்றில் புனித கன்னி மரியாவின் நூற்றுக்கணக்கான காட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஏழு காட்சிகள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.
எண் | காலம் | இடம் | திருக்காட்சியாளர்கள் | மரியாவின் சிறப்பு பெயர் |
---|---|---|---|---|
1 | கி.பி. 46 ஆகஸ்ட் 22 | எருசலேம், இஸ்ரேல் | திருத்தூதர் தோமா | விண்ணேற்பு அன்னை |
2 | கி.பி. 352 ஆகஸ்ட் 4 | ரோம், இத்தாலி | செல்வந்தர் ஜான், திருத்தந்தை லிபேரியஸ் | பனிமய அன்னை |
3 | கி.பி. 1061 செப்டம்பர் 24 | வால்ஷின்காம், இங்கிலாந்து | ரிசல்ட்டின் தே பவர் செஸ் | வால்ஷின்காம் அன்னை |
4 | கி.பி. 1531 டிசம்பர் 9-12 | குவாடலூப்பே, மெக்சிக்கோ | யுவான் டியகோ, யுவான் பெர்னார்டினோ | குவாதலூப்பே அன்னை |
5 | கி.பி. 16ஆம் நூற்றாண்டு | வேளாங்கண்ணி, இந்தியா | பால்க்கார சிறுவன், மோர் விற்கும் சிறுவன், ஒரு செல்வந்தர் | ஆரோக்கிய அன்னை, வேளாங்கண்ணி மாதா |
6 | கி.பி. 1858 பிப்ரவரி 11 - ஜூலை 16 | லூர்து, பிரான்ஸ் | பெர்னதெத் சூபிரூஸ் | லூர்து அன்னை, அமலோற்பவ அன்னை |
7 | கி.பி. 1917 மே 13 - அக்டோபர் 13 | பாத்திமா, போர்ச்சுக்கல் | லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ | பாத்திமா அன்னை, செபமாலை அன்னை |
அன்னையின் விழாக்கள்[தொகு]
முதன்மைக் கட்டுரை: மரியாவின் விழாக்கள்
கத்தோலிக்க திருச்சபையில் கொண்டாடப்படும் மரியன்னை விழாக்களின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.
எண் | பெருவிழா நாட்கள் | விழா நாட்கள் | நினைவு நாட்கள் | விருப்ப நினைவு நாட்கள் |
---|---|---|---|---|
1 | ஜனவரி 1: கன்னி மரியாஇறைவனின் தாய் | மே 31: மரியா எலிசபெத்தை சந்தித்தல் | ஆகஸ்ட் 22: கன்னி மரியா விண்ணக அரசி | பிப்ரவரி 11: தூய லூர்து அன்னை |
2 | மாஅர்ச் 25: இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு | செப்டம்பர் 8: மரியாவின் பிறப்பு | செப்டம்பர் 15: புனித வியாகுல அன்னை | மே 13: தூய பாத்திமா அன்னை |
3 | ஆகஸ்ட் 15: மரியாவின் விண்ணேற்பு | அக்டோபர் 7: புனித செபமாலை அன்னை | ஜூன்/ஜூலை: மரியாவின் மாசற்ற இதயம் | |
4 | டிசம்பர் 8: மரியாவின் அமல உற்பவம் | நவம்பர் 21: மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் | டிசம்பர் 12: தூய குவாதலூப்பே அன்னை |
No comments:
Post a Comment